Thirukkural திருக்குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
கொல்குறும்பும் இல்லது நாடு.
(குறள்எண்:735)
குறள் விளக்கம்
மு.வ : பல வகை மாறுபடும் கூட்டங்களும்,
உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில்
பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
சாலமன் பாப்பையா : சாதி,
சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட
இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு
உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப்
போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.
Thirukural » Porul
|
Comments
Post a Comment