தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும்
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழிதிய 'கனிச்சாறு' இரண்டாம் தொகுப்பில் 90ஆம் பாட்டின் கடைசி எண்சீர் மண்டிலம் இது! உறுதிப்படுத்திக் கொள்ளாமல் வேறு பெயர்களில் வெளியிடுவது முறையன்று!
ReplyDeleteஊகத்தில் வெளியிட்டதல்ல. பாவாணர் கவிதை என்ற பெயரில் வெளிவந்த பாடலைப் பார்த்து எழுதியது. பாரதிதாசன், நாமக்கல்லார் பாடலைஎல்லாம் பாரதி பாடியதாகப் பல குறிப்புகள் உள்ளன. அவைபோல்தான் இதுவும் போலும்.
Delete