Sunday, October 25, 2009

செம்புலப் பெயல்நீர்அவனோ (தலைவன்), நாகரிகப் - பண்பாட்டின் இருப்பிடமாம் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்; அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளால் உயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும் புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழ்வாங்கு வாழக் கருதுபவன்.அவளோ (தலைவி), வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமிர்ந்த நன்னடை கொண்டவள்.இத் தலைவன் யார்? அவன் பெயர் என்ன? எச் சமயத்தைக் - குலத்தைச் சார்ந்தவன்? என்ன மொழி பேசுபவன்? என்பன போன்ற அவனைக் குறித்த தகவல் எதுவும் அத் தலைவிக்குத் தெரியாது; அதுபோலவே அவளைப் பற்றிய தகவல் - செய்தியும் அவனுக்குத் தெரியாது. இருப்பினும், அவனும் அவளை நோக்கினான்; ஆரணங்காம் அவளும் அவனை மெல்ல நோக்கினாள். ஆம்! அவ்விருவர்தம் கண்களும் கலந்து பேசின. உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட மாறிப்புக்கு இதயத்தால் இருவரும் கூடினர்.இவ்வாறு, மதத்தால், குலத்தால், மொழியால், மாநிலத்தால் வேறுபட்ட அவ்விருவரும் அன்பினால் கண்டுண்டனர். ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்துகொண்டார்கள். அவனும், அவள்மேல் கொண்ட காதலால், ""அன்னமே! உன்னைவிட்டு என்றும் பிரியமாட்டேன்; ஒருவேளை உன்னைப் பிரிய நேரின் உயிர் தரியேன், இது சத்தியம்'' என்று அவளிடம் உறுதி அளித்தான்.அவளும், ""அன்பரே! இப்பிறப்பு நீங்கி மறு பிறப்பு வாய்க்கினும் நீங்களே என் கணவர்; நான் ஒருத்தியே உமது நெஞ்சிலே குடியிருக்க உரியவள்!'' என்று பேரா அன்பினை வெளிப்படுத்தினாள். எவ்வாறெனில், தன் மனதைக் கவர்ந்த கள்வனை - சொன்ன சொல் பிழையாத வாய்மையாளராக - காலம் உள்ளளவும் தன் நெஞ்சிற்கு இனியவராக - என்றும் என் தோளைப் பிரியாதவராக இருப்பாரென்று அவன்மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்தாள். இவ்வாறு, இருவரும் அன்புக்கு ஊறு ஏற்படாவண்ணம் இரண்டு ஆண்டுகள் உள்ளத்தளவில் பழகினர்!""தானே அவளே தமியர் காணக்காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்''என்னும் இறையனார் அகப்பொருள் (சூ.2) கூற்றிற்கேற்ப மனமொத்த காதலராக இருவரும் திகழ்ந்தனர். இருப்பினும், அவர்களின் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், தன் தலைவன் தன்னைத் தவிக்கவிட்டுப் பிரியப்போகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தலைவி மிக வருந்தினாள். அச் செய்தியால் அதிர்ச்சியுற்ற அவளது செயல்பாட்டிலே மாற்றம் இருந்ததைக் குறிப்பால் உணர்ந்தான் தலைவன். அதனால் அவனது மனதில் கலக்கம் ஏற்பட்டது. ஆகவே, அவன், அவளிடம் வைத்த அளவிலாக் காதலை அவளுக்கு உணர்த்த முற்படுகிறான். ""என்பால் அன்பு அகலாத மங்கையே! என் தாயும் உன் தாயும் நாம் பழகுவதற்கு முன் எத்தகைய உறவினர்? அவ்வாறே, என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவு முறையினர்? போகட்டும், இப்பொழுது பிரியாமல் அன்பு பாராட்டும் நானும், நீயும் எவ்வண்ணம் அறிந்திருந்தோம்? ஆம்! நம் பெற்றோரும் முன்பின் அறியாதவர்; ஏன், நாம் இருவரும் இதற்குமுன் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகியதுண்டா? இருந்தும், நம்மிடையே ஏற்பட்ட இவ்வுறவு, நம்மாலன்றி ஊழ்வினையின் வலிமையால் - தெய்வத்தின் அருளால் நாம் இன்று இணைந்திருக்கிறோம், இல்லையா? இப்பிணைப்பு எத்தகையது என்பதை நீ அறிதல் நலம்.நீலவானில் கோல நிலா ஒளிக் கற்றைகளை அள்ளிவீசி மண்ணுலகின் காரிருளையும் ஓட்டுகிறது. அந்நிலவையும் மறைத்துக்கொண்டு கருமேகங்கள் அவ்வானில் உலா வருகின்றன; மலைச் சிகரங்களையும் முத்தமிட்டுச் செல்கின்றன. இடையிடையே மாந்தரை அதிரவைக்கும் இடியும் மின்னலும் தோன்றி வேடிக்கை காட்டுகின்றன. அம் மேகங்கள் மழையைப் பொழிகின்றன. அப் பெயல்நீர் செம்மண் நிலத்தில் படிகிறது. ஆம்! கறுத்த மேகம் பெய்த மழைநீர் செம்மண்ணில் விழுந்ததும் அம் மண்ணின் செந்நிறத்தைப் பெறுகிறது. அதுமட்டுமா? அம் மண்ணின் தன்மையாகிய சுவையையும் பெற்று உருமாறிவிடுகிறதல்லவா அம் மழைநீர்? கருமணிப் பாவையே! அப் பெயல்நீர் போலவே நம்முடைய இரு நெஞ்சமும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே! அவ்வாறிருக்க, உன்னை நான் எப்படிப் பிரியவோ, மறக்கவோ முடியும்? ஆமாம், உன்னைவிட்டு ஒரு நொடியும் பிரிந்து அகலேன் என்பதை உன் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துகொள்'' என்று சொல்லி, தன் மனதிற்கு உகந்தவளைத் தேற்றுகிறான்.போலியான புகழை விரும்பும் மாந்தர் பலர் இம் மண்ணகத்தில் இருக்க, தேனிலே ஊறிய இப் பாடலைப் பாடிய புலவர் தம் பெயரைக் குறிக்காமலேயே சென்றுவிட்டார்!செம்புலப் பெயல் நீர்' - இவ் உவமையின் அழகுதான் என்னே! புலனல்லாதன புலப்படுத்தப் பயன்படுத்தப்படுவதுதானே உவமை! இந்த உவமையின் வாயிலாகப் புலவர்தம் கற்பனைத் திறனையும், காதலின் நுட்பத்தைப் புலப்படுத்தும் பான்மையையும் நம்மால் உணரமுடிகிறதன்றோ!திருவள்ளுவரும் இவ் உவமையின் சீர்மை கருதி, "நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும்' (452) என்றும், "நிலத்தொடு நீரியைந் தன்னார்' (1328) என்றும் தம் இரு குறட்பாக்களில் இந்த உவமையைக் கையாண்டுள்ளமை ஈண்டு குறிக்கத்தக்கது. இனி, தேன் பிலிற்றும் அப்பாடலைக் காண்போம்.""யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே''(குறு-40)இக் குறுந்தொகை (40) பாடல் நம்மை இன்பத்தில் திளைக்கச் செய்கிறதல்லவா?
பரிபாடலில் உவமைச் சிறப்புகள்!இயற்கை இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த பண்பட்ட மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நம்மையும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமைந்தவை சங்க இலக்கியங்கள். இயற்கை நிகழ்வுகளைப் பொருத்தமான உவமைகளைக் கொண்டு காட்சிப்படுத்துவதில் சங்கப் புலவர்கள் நிகரற்றவர்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் என்ற நூலில், வையை ஆறு பற்றிய உவமைச் சிறப்பு படித்து இன்புறத்தக்கது.பரிபாடல் தொகுப்பில் இன்று நமக்குக் கிடைத்துள்ள 22 பாடல்களில் வையை ஆறு பற்றிய பாடல்கள் ஏழு. பரிபாடல் திரட்டிலிருந்து 3 பாடல்கள்தான் கிடைத்துள்ளன. வையை ஆற்றைப் பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்களில் பல்வேறு உவமைகள், வையை ஆற்றின் சிறப்பை வெளிப்படுத்துவதோடு, பாண்டிய மன்னனின் வீரம், கொடைச்சிறப்பு, தலைவன், தலைவியர் தம் காதல் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, படிப்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தும் பயன்மிகு செய்திகள் பலவற்றையும் பட்டியலிட்டுச் செல்கின்றன.வையை பற்றிய பாடல்களில் வையை ஆற்றைப் பிற இயற்கைக் காட்சிகளோடு ஒப்பிடுதல், தலைவன், தலைவியரின் செயல்களோடு ஒப்பிடுதல், பாண்டிய மன்னனோடு ஒப்பிடுதல் ஆகிய நோக்கிலேயே பெரும்பாலான உவமைகள் அமைந்துள்ளன.வையை ஆற்றின் பெருக்கைப் பாடிய புலவர் பலர். அவர்களுள் மையோடக்கோவனார் பாடிய பாடலில் வையை ஆறு பெருக்கெடுத்து வரும் நேரத்தில் மகளிரும், பாணரும் பல்வேறு இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்கின்றனர். வையை நீர் இரு கரைகளிலும் மோதி அடித்துக்கொண்டு பேரோசையுடன் வருகிறது. இவ்வோசை இடியுடன் மேகம் முழங்குவதை,""உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்''(வை.7வரி-82)என்ற வரிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.மற்றொரு பாடலில், மலையிலிருந்து இறங்கி வரும் அருவி, நிலத்தை அடைகிறது. ஆற்றில் நீராட வந்த மகளிர் கூந்தலில் இருந்து நீக்கிய வாடிய மலர்களையும், மைந்தர்தம் மார்பில் சூடியிருந்த பூக்களையும் வையை அடித்துச் செல்லும் காட்சியை,""மின் ஆரம் பூத்த வியன் கங்கை நந்தியவானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல்''(வை-16, வரி-36,37)என்னும் நல்வழிசியாரின் பாடல் அடிகள், வையை ஆறு வானிலிருந்து வரும் கங்கை ஆற்றை ஒத்து விளங்குகிறது என்னும் பொருத்தமான உவமை வாயிலாகச் சுட்டுகிறது.மேகங்கள் கறுத்து இடைவிடாத மழையைப் பொழிய, வையையாறு பெருக்கெடுக்கிறது. மழை மிகுதியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வையை பல்வேறு மரங்களையும் அடித்துக்கொண்டு புயல் வேகத்தில் ஓடுகிறது. இக்காட்சியைப் புலவர் நல்வழுதியார்,""நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்வளிவரல் வையை வரவு''என்ற வரிகளில், வையை ஆற்றின் விரைவை எடுத்துக்கூறும் நோக்கில், கடல் பொங்கிவருவதைப்போல என்னும் உவமையைக் கையாண்டுள்ளமை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிறப்புடையது.வையை ஆற்று நீர்ப்பெருக்கின் சிறப்பைக் கூற வந்த புலவர்கள், வையை நதியை மக்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறுதலும் உண்டு. நல்வழுதியாரின் பின்வரும் பாடல் வரிகள், மதுரை மக்கள் புகழும் படியாகப் பாய்ந்து வரும் வையையின் வெள்ளப்பெருக்கைக் காண எண்ணற்ற மக்கள் குவிகின்றனர். வையை வெள்ளம் அதிகரித்து, இரு கரையின் உயரத்தைவிட நீரின் அளவு உயர்ந்து காணப்படுகிறது. இதனை,""....... வையை நீர், வையைக்கரைதர வந்தன்று, காண்பவர் ஈட்டம்நிவந்தது, நீத்தும் கரைமேலா நீத்தம்கவர்ந்தது போலும், காண்பவர் காதல்''(வை-12, வரி-32-35)என்ற வரிகளில், வையையின் வெள்ளம் கரைக்கு மேல் உயர்ந்த செயலை, நீர்ப்பெருக்கைக் காண வந்த மக்களின் ஆசை வெள்ளத்தை ஒத்தது எனக் குறிப்பிட்டு, மக்களின் ஆசைப்பெருக்கை வையை நதிப்பெருக்கொடு உவமித்துக் கூறியிருப்பது சிறப்புடையதாகும்.தலைவி, தலைவனிடம் பல்வேறு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி ஊடல் கொள்வதும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு தலைவன், தலைவியின் ஊடலைத் தணிக்கப் பல்வேறு முறைகளை மேற்கொள்ளும் பொருட்டு விரைந்து செயல்படுதலும் இயல்பு. தலைவனின் இச்செயலை வையையின் வெள்ளப்பெருக்குடன் ஒப்பிடுகிறார் புலவர்.""உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து''(வை-7, வரி-36-37)என்ற வரிகளில், ஆற்றில் பாயும் வையை வெள்ளம், தலைவியின் விரைவான ஊடலைத் தணிக்க முயலும் தலைவனின் விரைவான செயலை ஒத்திருந்தது என உவமித்துள்ளார்.இதுபோன்று மேலும் சில பாடல்களில் வையை ஆறு உவமித்துப் பாடப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது.
நல்வழிதாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி.(பா-30)அரசே! ஒவ்வொருவரும் முன் செய்த வினையின் பயன்களை, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் விதித்த ஊழ்வழியே தாம் அனுபவிப்பார். தீமை செய்தவரை நம்மால் என்ன செய்ய முடியும்? ஊரார் அனைவரும் ஒன்று திரண்டு மறுத்தாலும் விதியின் பயனை விலக்க முடியாது.
இந்த வார கலாரசிகன்தமிழ் வளர்ச்சிக்கு உகந்த படைப்புகள் வெளிவர நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அச்சிட்டு வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவி அளித்து வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் தர விதிகளுக்கு உள்பட்டு தகுதியுடைய எழுத்தாளர்களின் படைப்புகள் நிதி உதவி பெறுவதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 25 எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் வெளியிடப்படுகின்றன. அதேபோல, தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் முப்பது துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நூல்களுக்கு வழக்கமான நூலக ஆணைகள் தவிர, பொது நூலகங்களுக்குச் சிறப்பாணைகளாகவும் கூடுதல் எண்ணிக்கையில் பரிசு நூல்களின் பிரதிகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகள் வழங்கப்பட்ட நூல்களுக்குக்கூடப் பொது நூலகத் துறையில் நூலக ஆணை விடுபட்டுள்ளன. தரமான நூல்கள் என, தமிழ்வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட்டு, அதன் மூலம் வெளியாகும் நூல்களில் பல நூல்கள் நூலகத்துறையால் தேர்வு செய்யப்படுவதில்லை. நிதி உதவி அளிக்க, நாங்கள் தேர்வு செய்ததாலேயே அந்த நூல்களை நூலகத்துறை வாங்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை என்கிறது தமிழ் வளர்ச்சித் துறை. தமிழ்வளர்ச்சித் துறை நிதி உதவி மூலம் வெளியானவை என்று நூல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறைகள் இல்லை என்கிறார்கள் நூலகத்துறையினர். தரமானவை என்று தமிழ் வளர்ச்சித் துறை தேர்வு செய்து, நிதி உதவி அளிக்கும் படைப்புகளும், சிறந்த நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கப்பட்ட நூல்களும் நூலகத் துறையால் நிராகரிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் படைப்பாளர்கள். நல்ல நூல்கள் நூலகங்களுக்குச் சென்றடைந்தால்தானே மக்களுக்குப் பயன்படும்!******சிறந்த பாடல்களைக் காப்பதும் தொகுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அவற்றைச் சேர்ப்பதும் கற்றவர் செய்ய வேண்டிய பணிகள் என்ற எண்ண ஓட்டம் முன்பே இருந்தது கண்டு வியக்க வேண்டி உள்ளது. சொல்லப்போனால், சங்க இலக்கியமேகூட ஒரு தொகைநூல் தானே! அப்படிப்பட்ட ஒரு பணியைத்தான் சைவ சமயத்துக்கு நம்பியாண்டார் நம்பி செய்தார். பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் பதினோரு திருமுறைகள்வரை அவர்தான் தொகுத்தார். அவருக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண்டாவதாகச் சேர்த்து அதைப் பிற்காலச் சான்றோர் நிறைவு செய்தனர். பன்னிரு திருமுறைகள் வரிசையில் முதல் மூன்றும் சம்பந்தர் பதிகங்கள். நான்கு, ஐந்து, ஆறு ஆகிய திருமுறைகள் நாவுக்கரசரின் பதிகங்கள். ஏழாவது சுந்தரர் பாடியது. ஏறக்குறைய எட்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த மூவர் பதிகங்களே "தேவாரம்' எனப்படும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாவது திருமுறையுள் வைக்கப்பட்டன. பத்தாம் திருமுறை என்று போற்றப்படும் திருமூலர் பாடிய திருமந்திரம், பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் இரண்டும் தனியாசிரியர்கள் பாடிய தனி நூல்கள் என்ற சிறப்பிடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறையும், பதினோராம் திருமுறையும் தனியான அருளாளர்கள் பாடியவை அல்ல. பலருடைய பாமாலைகளின் தொகுப்புகளாக உள்ளன. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்கள் ஒன்பதின்மர். அவர்கள் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் முதலியோர் ஆவர். ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப் போற்றப்படுகிறது. இந்நூலுள் 28 திருவிசைப்பா பதிகங்களும் ஒரு திருப்பல்லாண்டுப் பதிகமும் அடங்கியுள்ளன. பாடல்கள் மொத்தம் 301. பாடப்பட்ட தலங்கள் 14. இதில் உள்ள 28 பதிகங்களும் 10 அகத்துறையில் அமைந்தவை. மூன்றில் ஒரு பங்கு பதிகங்கள் (10) கருவூர்த்தேவரால் பாடப்பட்டவை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்து "இராமலிங்கம் அபிராமி' அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக முனைவர் கி.சுப்பிரமணியன் (ஐ.கே.எஸ்.), ஒன்பதாம் திருமுறையை எடுத்துக் கொண்டார். அந்த உரைகள் இப்போது தொகுக்கப்பட்டு ""நீறணி பவளக் குன்றம்'' என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பத்து தலைப்புகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது வெறும் ஒன்பதாம் திருமுறை ஆய்வு நூல் அல்ல. அப்படியே சாறு பிழிந்து தரப்பட்டிருக்கும் கையேடு!******புதிய தீபாவளி மலர்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஏதோ குறைகிறதே என்று நெஞ்சில் ஒரு நெருடல். இந்த வருடம் "கல்கி' தீபாவளி மலர் வரவில்லையே என்கிற ஆதங்கம்தான் அந்த நெருடலுக்குக் காரணம். "கல்கி' தீபாவளி மலர் என்று சொன்னதும் பொறி தட்டியது. 15 ஆண்டுகளுக்கு முந்தைய "கல்கி' தீபாவளி மலரில் பொன்மணி வைரமுத்து, "வாசிப்பு' என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதை நினைவில் நிற்கிறது. அதற்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்திருந்த படமோ கண்ணில் நிற்கிறது. பொன்மணி அவரது பெயர் மட்டுமல்ல. அவர் எழுதியிருந்த கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் பொன்மணி! அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள் இதோ-நானொன்றும்நாதஸ்வரம் வாசிக்கவோபுல்லாங்குழல் வாசிக்கவோபிரியப்படவில்லை-நூல் வாசிக்கும் ஆசைமட்டும்நாள்தோறும் வளர்கிறது.கதைகவிதைகட்டுரைஎதுவாயிருப்பினும்மகிழ்ச்சி-சிறகுகட்டிக்கொள்ளும்மகிழ்ச்சி!சற்றுமுன் தின்ற பசும்புல்லைஆசுவாசமாய் அசைபோடும்பசுவைப்போல்படித்ததை நினைக்க நினைக்கஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு விநோதம்-படைத்தவன்சொன்னதைச் சொல்லும்;சொல்லாததையும் சொல்லும்.வாசிப்புபுறத்தில் மறப்புஅகத்தில் விழிப்பு!வாசிப்பு - தனிமைத்தவம்தாய்மடிவானமழைஆழ்கடல்ஊன்றுகோல்ஞானதீபம்தேவகானம்தலைதொட்டு ஆசீர்வதிக்கும்தும்பிக்கை!வாசலுக்கு வெளியேவிரியும் நீலவானம்;என்விருப்பத்திற்குரிய வேப்பமரம்;ஒருகையில் தேநீர்இன்னொருகையில் புத்தகம்-இதைவிடவா ஒரு வாழ்க்கை?!
கருத்துக்கள்

பொன்மணியார் கவிதை அற்புதம். இதனைத் தக்க நேரத்தில் நினைவு கூர்ந்து எழுதியிருப்பது கலாரசிகனின்.இலக்கிய உள்ளத்தைக் காட்டுகிறது. இக கவிதை மூலம் தமிழரிடையே நல்ல,தரமான புத்தக வாசிப்பு மிகுமானால் போதும். தமிழர்கள் உயர்ந்து விடுவர்.

By விஜய திருவேங்கடம்
10/25/2009 11:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Saturday, October 10, 2009

நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி ..

நாம் தாயக விடுதலைக்கு ஆற்றியது என்ன என்பதை நாமே உணர்ந்து நம்பிக்கையுடன் துணை புரிந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும். தமிழீழம் உருவாகும்...

நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி இதை தற்போது வாழ்பவர்களும் செல்லியுள்ளார்கள் நன்றாக வாழ்ந்து முடிந்தவர்கள் மற்றும் வறுமையுடன் வாழ்க்கையைமுடித்தவர்கள் கூட அதிகம் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.சிறியவர்கள் கூட பலர் நம்பிக்கைபற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.

நம்பிக்கை என்பது என்ன அர்த்தத்தினை உள்ளடக்கியது என்னும் கேள்ளி பலரிடம் இன்று காணப்படுகின்றது.குறிப்பாக இன்று தமிழ் மக்கள் குறிப்பாக புலம் பெயர் உறவுகள் ஆகிய நாங்கள் நம்பிக்கை பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டிய காலம் பற்றி புரிந்துகொண்டுள்ளது எந்த அளவு என்னும் ஒரு விடைகாண முடியா வின ஒன்று தோன்றியுள்ளது.ஆனால் அதற்கு விடைகாண எம்மால் மாத்திரம் தான் முடியும் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாது.

எம்மில் நம்பிக்கை அற்றவர்கள் எவரிலும் நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது பலஇடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அவதானிக்கப்பட்டும் உள்ளது நாமும் அவதானித்துள்ளளோம்.தம்மில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் எவருக்கும் பணிந்து போகமாட்டார்கள் என்பது நாங்கள் எங்கள் வாழ்க்கையூடாகதெரிந்துவைத்துள்ளது.இதற்கு நல்ல உதாரணங்களை நாம் தாயகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் இன்றும் பெற்றுக் கொண்டுள்ளோம் இனியும் பெற்றுக் கொள்வோம்.அதாவது தன் நம்பிக்கை உள்ள ஒருவனை இலகுவில் பிறர் தம் வசப்படுத்தி விடமுடியாது என்னும் உண்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் உணர்ந்து கொண்டுள்ளோம் உணராதவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.நம்பிக்கை பற்றிய அதாவது தன்நம்பிக்கை பற்றி தெளிவான படம் எப்போதும் ஒரு இக்கட்டான காலநிலையில் தான் தெளிவாகப்புலப்படும் அதுவரை அது புலப்படாது மறைந்து தான் காணப்படும்.

அதை நாம் கடந்த மாதங்களில் நன்றாக உணரக்கூடியதாக உள்ளது.அந்ந வகையில் தாயகம் இன்று மிகப் பெரும் நெருக்கடியில் உள்ளபோது அவர்களின் தன் நம்பிக்கை தமது இலட்சியத்தின் மீதான தளராத நம்பிக்கை என்பனவற்றினை வெளிச்சம் போட்டு வெளியுலகுக்கு காட்டியுள்ளது.அதாவது தன்னம்பிக்கை உள்ள அவர்களை நெருப்பில் வறுத்தும் சிலவற்றை அடைய முடியாது தவிக்கின்றனர் சிறீலங்கா படைகளுக்கும் அரசுக்கும் ஏன்இந்திய சில வெளிநாட்டு அரசுகளுக்கும் இது விரும்பத்தகாத அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது.பற்ருறுதி என்னும் பொருளுக்கு உதாரணங்களுடன் கூடிய விளக்கங்களை தந்தும் நிற்கின்றது. எமது தாயகமமும் அதன் விடுதலைப்போராட்டம் மற்றும் மக்கள் சக்தி.

தன்நம்பிக்கை உள்ள ஒருவன் இலகுவில் பிறர் வசப்படமாட்டான் என்பதற்கு அமைய அவர்கள் பிறர் கருத்துக்களை அதிகம் பொருட்படுத்தார்.ஆக்கபூர்வமானவற்றினை மட்டும உள்வாங்கி மற்றவற்றினை கருத்தாளர் வெளியேற முன்னர் விட்டு விடுவார்கள் அது போலதான் நல்ல நம்பிக்கை உள்ளவர் இலகுவில் தளர்ந்து துவண்டு போகார். எவ் துன்பம் வரினும் அவர்களில் ஒரு வேகம் தெரியும் புது வியூகங்கள் புலப்படும் இறுதிவரை துன்பத்தில் இருந்து மீள உழைக்கும் வெறி அவர்களிடத்தில் இருக்கும் இதுவும் இன்று தாயகத்தில் நேரடியாக நாம் காணக்கிடைக்கின்ற அரிய காட்சிகள். அதாவது தன்நம்பிக்கை எம்முள் அடங்கியுள்ள முழு சக்தியையும் ஆட்சி செய்யும் ஒரு மிகப் பெரிய சக்தி என்பது உணர முடிகின்றது.

வாழ்க்கையில் வென்றவர்ளும் சரி உலக அரங்கில் உள்ள பல்வேறு துறைகளில் வென்றவர்களும் சரி நம்பிக்கை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நம்பிக்கை மூலம் தாம் தெரிந்து கொண்டது உணர்ந்து கொண்டது அறுவடை செய்தது என்பன பற்றி அடிக்கடி கூறுவதை நாம் கேட்டுள்ளோம்.குறிப்பாக தமது வெற்றிக்குப்பின்னால் உள்ள காரணிகள் பலவற்றில் எல்லோரும் பொதுவாகச் சொல்லும் காரணி தன்னநம்பிக்கை.ஏனவே வெற்றிக்கனியை பறிக்க ஆசைப்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியது தன்நம்பிக்கை என்பது தெளிவு.

இதில் அடுத்து தமிழர் என்னும் வகைக்குள் அடங்கும் எங்களின் இன்றைய நிலை என்ன எம்மில் இன்று இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் என்ன.அதாவது நாமும் ஒரு வேட்கையை சுமந்துள்ளவர்கள் இவ்வளவு காலமும் சுமந்து வந்தவர்கள் இனியும் சுமக்கவுள்ளவர்கள் அதாவது எமது அந்த வேட்கையின் இறுதி வடிவத்தினை காணும் வரைக்கும் அந்த வேட்கையை சுமக்க வேண்டியவர்கள் சுமக்க ஆசைப்பட்டவர்கள்.அதாவது இறுதி வெற்றி வரைக்கும் அந்த வேட்கையை அடைவதற்கான பாதையில் இருந்து விலகாது எம்மை எமது பாதையில் செலுத்துவதற்கு நாம் கொடிருக்க வேண்டியது என்ன என்பது பலருக்கு புரிந்துள்ளது ஆனால் இன்னும் சிலருக்கு புரியவில்லை.

அதாவது இன்றைய தாயகத்தின் போக்கு அல்லது தாயகத்துக்கான தமிழர் போராட்டம் என்பன இன்று நேற்று துளிர் விட்டதல்ல இது ஒரு தொடர் பேராட்டம் இரு சந்ததிகள் கடந்து விட்ட போராட்டம்.உலக நியதிகளுக்கு அமைய வெற்றி தோல்விகளை கண்டு அதில் இருந்து மீண்டெழுந்த போராட்டம்.பல களங்கள் கண்டு அதில் தம்மை ஈடுபடுத்தி புடம் போட்டு பட்டை தீட்டி செதுக்கி எடுத்து வழர்ந்துள்ள போராட்டம்.எவரின் உதவியின்றி தானாக வழரும் காட்டு மரம் போல் வழர்ந்த போராட்டம். சிலர் உரிமை கோராலாம் அதாவது நடக்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு நடைபயில கற்றுக் கொடுத்தவர்கள் அந்த குழந்தையின் வாழ்க்கை பணயம் முழுவதும் தாம் உதவியதாக கூறுதலுக்கு ஒப்பானதே அவர்களின் கூற்று அதாவது ஆரம்பத்தில் கூப்பிட்டு உதவி செய்து விட்டு இறுதிவரை உதவி செய்துள்ளதாக கூறுவது இதில் அடங்கும்.அவர்கள் செய்துள்ள உதவி கடா வளர்த்து பலி கொடுப்பதற்கு ஒப்பானது இது பலருக்கு ஏன் எமக்கும் கூட பிந்தித்தான் புலப்பட்டது. அதாவது தான் சண்டியன் எனக்காட்ட காசுகொடுத்து ஆளை அடிப்பதற்கு ஒப்பானது.அவர்கள் எமக்கு செய்த உதவி.

இவ்வாறு விதைப்பது எல்லோரும் செய்யலாம் அதை வளர்ப்பவர்தான் விவசாயி அவ்வாறு வளர்ந்து நிற்கின்ற மரம் கனி தரும் என்று எவ்வாறு நம்புகின்றோமோ அது போலத்தான் இன்றெமது விடுதலைப்போராட்டமும் மெல்ல மெல்ல நடைபயிலும் குழந்தை போல நடந்து இன்று ஓட்ட வீரன் குசைன் போல் போன்று நிற்கின்றது.மற்றவர்களுக்கு விலைபோகாது மற்றவர்கள் எங்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தாது பன்படுத்த அனுமதியாது நிற்கும் எமது போராட்டத்தினை விற்றுவிடவும் அதை தமக்கும் தமது நலனுக்காக உருட்டும் பகடைக்குமாக வேண்டிவிடத்துடிப்பவர்கள் மத்தியில் இன்று எமது போராட்டம் சிக்கி நிற்கின்றது.

அவர்களின் செயற்பாடுகளால் தாயகம் இரத்ததில் உறைந்துள்ள நிலையில் எம்மவர்கள் அதாவது புலம் பெயர் வர்க்கத்துள் அடக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அமெரிக்க ஆசிய மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலியக்கண்டத்தினுள்ள அடங்கியுள்ள எம்மவர்கள் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர்களின் எதிர் காலம் தங்கியுள்ளது என்னும் நிலைக்குள் வந்து நிற்கின்றது.இந்தச்சந்தர்ப்பத்தில் எம்மில் பலரின் கருத்துக்கள் சமர்களத்தில் உள்ள எமது மக்களை போரளிகளை செந்தணலில் இடுவது போன்று உள்ளது.குறிப்பாக போராட்டத்தினை விமர்சிப்பதும் அதன் நியாயத் தன்மையை கேள்விக்குரியாக்குவதற்கு உதவவுதாக உள்ளது.

அதாவது இன்றுவரை போராட்டத்தினை நேசித்தவர்கள் மற்றும் நேசித்ததாக காட்டி கொண்டவர்கள் பலர் போராட்டத்தினை விமர்சிப்பது எதிரிக்கும் எதிரிக்கு ஊதுகுழலாக தொழிற்படும் புல்லுருவிகளுக்கும் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு நாளும் போராட்ட ஆதரவாளியாக கருத்து தெரிவித்து வந்தவர்கள் கட்சிதாவுவது போன்று தாவிக் கொண்டுள்ளதும் சிங்கள பேரினவாதத்தின் கருத்துக்கள் சிலவற்றினை மட்டும் உள்வாங்கி அவற்றினை ஊதிப் பெருப்பித்து கொள்கை அற்று அலைபவர்கள் கருத்துக்ககளை முதன்மை படுத்துவதுதான் இதில் முக்கியமானது.போராட்டத்திற்கு காலக்கெடு வைப்பது இதில் கடந்த சில நாட்களாக நோக்கப்பட்டு வரும் மிக முக்கிய விடயம்.அதாவது தமிழீழ விடுதலைப்போராட்டம் 30 வருடத்தினை எட்டி விட்டதாகவும் எவ்வளவு காலத்துக்கு இன்னும் நீடிக்க போகின்றது என்னும் கவலையில் உள்ளதாக காட்டிக் கொள்பவர்கள் இதில் முக்கியமானவர்கள் உண்மையில் யுத்தப்பகுதியில் தமது உறவுகள் சிக்கி நிலை தெரியாது உள்ளவர்கள் இவ்வாறு எண்ணுவது இயல்பானது ஆனால் வேறு சிலருக்கு இந்தக்கவலை ஏன்வந்தது என்றால் அவர்கள் அதிகரித்துள்ள சிறீலங்காவின் பரப்புரை மற்றும் கருத்து சிதைவு யுக்திகள் தான்.

அடுத்து போராட்டம் மீதும் தாயகக்கோட்பாடு மீதும் சுய நிர்ணய உரிமை மீதும் அவர்கள் கொண்டுள்ள விளக்க குறைவு மற்றும் கருத்து சிதைவு என்பன பலரை இன்று பலவாறு சிந்திக்க வைத்துள்ளது.எனது வீடு எனது நிலம் எனது வயல் எனது குழந்தை எனச்சிந்திக்க முயல்பவர்கள் எமது மண் எமது தாயகம் எமது இனம் எமது உறவுகள் என சிந்திக்க மறுப்பதும் அவர்களை சிந்திக்க விடாது தடுப்பதும் தான் இன்று;எம்மவர் தளம்பல் நிலைக்கு காரணம ஒரு கருவுற்ற பெண் தன் குழந்தையை காண 10 மாதம் காத்திருக்கின்றாள் யானை அதை விடக்கூட வேறு சிறு மிருகங்கள் குறைவு பறைவைகள் பொதுவாக 40 நாள்.இங்கு எல்லாம் இனவிருத்தி தான் செய்கின்றது. ஆனால் அவற்றின் நிறையுடலி உருவாக எடுக்கும் காலம் வேறு வேறு .இதைப்போன்றது தான் எமது போராட்டமும்.நாமும் விடுதலைப்போராட்டம் தான் செய்கின்றோம் இதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள்.எமது இனமும் விடுதலைக்குத்தான் போராடுகின்றது.

விடுதலையின் இறுதியில் எமக்கென்று ஒரு தனித் தாயகத்தினை பிரசவிப்பதற்காக போராடுகின்றோம். புதிய தமிழ் ஈழத்தினை பிரசவிக்க போராடுகின்றோம். ஆனால் ஒருவரையும் சாயாமல் ஒருவர் கையையும் பாராமல் நமக்கு நாம் உதவி இறப்பிலும் சரி பிறப்பிலும் சரி நாம் தாம் நமக்கு என்னும் வகையில் நமது போராட்டம் நகர்கின்றது.இதை நாம் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

அதாவது உலகின் பதிய உயிர் ஒன்று பிறப்பதற்கே காலங்கள் வேறு அதன் தேவைகள் வேறு ஆகின்றபோது ஒரு நாடு பிறக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என சிந்திக்க வேண்டும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.ஒரு பிரசவத்துக்கு 10 மாதங்கள் எடுக்கும் அந்த பிரசவத்தில் ஒரு தாய் 80 வீதம் செத்துப்பிளைக்கின்றாள் என்பது வைத்தியர்கள் கூறுவது. அப்படியான ஒன்றைச் செய்யும் தமிழ் தாய்மார்களே.அதாவது தாய்மை என்னும் பேற்றை அடைய புதியதொரு தமிழ் தலை முறையைஉருவாக்க உயிர் கொடுக்க உங்களின் உயிரை பணயம் வைக்க துணியும் 10 மாதம் காத்திருக்கும் வேதனைகள் மற்றும் வலிகளைச் சுமக்கும் உங்களுக்கு தெரியும் புதிய பிரசவம் எவ்வளவு வலிகள் தடைகள் நிறைந்தது என்று அதற்கு நீங்கள் கூறும் காரணம் அவ்வாறு வலிகள் தடைகள் தாண்டி வருவதால் தான் எமக்கு குழந்தைகளில் பாசம் அதிகம் என்று ஏன் எங்கள் போராட்டமும் வலிகள் தடைகள் கண்டு நிற்கும் போது உங்களுக்கு அதன் மீதான நேசமும் பாசம் மற்றும் நம்பிக்கை கூடக்கூடாது..

இன்று தீபெத் போராட்டத்தினை பாருங்கள் கடந்த 1959ஆண்டுதொலைத்துவிட்ட தமது சுய நிர்ணயத்தினை இன்றும் அவர்கள் பெறவில்லை அவர்கள் அதை பெற தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் மட்டுமல்லாது அண்மைய நாட்களில் குறிப்பாக சீனாவின் ஒலிம்பிக் நாட்களில் அவர்கள் காட்டிய வேகம் பற்றி சிந்திக்க வேண்டும்.தூங்கியவர் மாதிரி இருந்த அவர்கள் திடீர் என்று விழித்து சீனாவுக்கு தலையிடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.இதில் இருந்து ஒன்று புரிதல் இலகு விடுதலைக்கு கால அவகாசம் கிடையாது விலை கிடையாது. இன்று அவர்கள் சாத்வீக வழியில் மட்டும் போராடி வருகின்றார்கள் இயலாத போக அவர்களும் ஆயுத வழியில் இறங்கிவிடத்தயாராகின்றார்கள்..

13 வருடம் கடுமையாக போராடித்தான் அமெரிக்கா கூட தனது சுதந்திரத்தின் முதல் அத்தியாயத்தினை அடைய முடிந்தது.அதாவது 1775 முதல் 1788 போராடித்தான் அவர்கள் அதை அடைந்தார்கள்.இந்த சண்டையில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உதவியது ஆ.னால் எமது போராட்டத்தினை எண்ணிப்பாருங்கள். எமது போராட்டத்துக்கு யார் உதவி? சரி இன்று அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு உதவியவர் நிலை என்ன அவர்கள் இந்தியா போன்று இருந்திருந்தால் இன்றைய அமெரிக்கரிகளின் நிலை என்ன.அப்போது அதாவது அமெரிக்க சுதந்திர போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மகுட வாக்கியத்தில் ஒன்று சுதந்திரம் என்பது இலகுவாகவோ அன்றி உடனடியாகவோ கிடைப்பதில்லை என்பதாகும்.
இது அவர்கள் அன்றுஅனுபவித்து சொன்னது அதனால் தான் இன்று அவர்கள் உலகை ஆழும் வர்கத்தினுள் தம்மை அடக்கியுள்ளார்கள்..

இது எதைக்காட்டுகின்றது அமெரிக்கர்களின் தன்நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இல்லையா இன்றும் அவர்களிடத்pல் உள்ள அமெரிக்கர் என்னும் வெறி. இதே போல் இன்று எம்மில் பலர் தெரிந்து வைத்துள்ள மேற்கு கரை கிளர்ச்சி எத்தனை வருடங்களாக எத்தனை தலைவர்களை கண்டு நடந்து வருகின்றது.1950 க்கு முன்னர் ஆரம்பித்து இன்றுவரை அது தொடர்கின்றது தாக்குவதும் பின்னர் சமாதானம் எனக் காலம் களிப்பதுமாக அவர்கள் இன்னும் சோராமல் இருக்கின்றார்கள்.இதே போல்தான் எதியோப்பிய எரித்திரிய யுத்தம் பல ஆண்டு காலம் நடந்துள்ளது இறுதியில் 1998 முதல் 2000 வரைக்கும்; அவர்கள் எல்லையில் மோதினார்கள் அவர்களின் 70000 பேர் இறந்துள்ளார்கள்.இவ்வாறு சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் பெற்றுக் கொள்ள முடியாதது.

காலணித்துவத்தில் இருந்து ஏன் எம் முன்னோர்கள் உடனடியாக விடுதலை அடையவில்லை.அதாவது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியை விடுவோம் பிரித்தானியர்கள் வந்தது 1795 இல் வந்திறங்கியவுடன் எம் முன்னோர் போராடி நாட்டை காலணி ஆதிக்கத்தில் இருந்து மீட்கவில்லை.அங்கும் தப்பான புரிந்துணர்வுகள் விலைபோகல்கள் இருந்துள்ளது.இது ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான சிந்தையை மழுங்கடித்திருந்தது இது ஏறத்தாள ஒரு நூற்றாண்டு நீடித்தது பின்னர் இந்தியாவில் புரட்சிகள் வீறு கொள்ள அது இலங்கையையும் பாதித்தது.அதனால் தான் விடுதலைக்காக சற்றேனும் உழைக்க வேண்டும் என்னும் எண்ணம் எம் முன்னவருக்கு வந்துள்ளதை யாலும் மறுக்க முடியாது.

அது போலத்தான் இன்றும் எமது விடுதலையில் விலைபோகல்கள் தவறான புரிதல்கள் தளம்பல்கள் தொடர்வதால் விடுதலை பற்றிய வேட்கை இன்னமும் முற்று முழுதாக நிரம்பல் அடையவில்லை. அது நிரம்பல் அடையும் போது இறப்புக்கள் இழப்புக்கள் ஒருவர் கண்ணுக்கும் அதாவது விடுதலை வேட்கையில் நிரம்பல் அடைந்தவர்கள் கண்ணுக்கு பொரிதாக தெரியாது அது தான் தபயகத்திற்கும் புலம் பெயர் எங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு.அவர்கள் இழப்புக்கள் வரினும் ஈழம் அடைந்தால் அதுக்காக நாம் உழைக்க தயார் என்னும் நிலைக்கு சென்று விட்டார்கள் அதாவது கிட்டத்தட்ட விடுதலை முக்தி நிலைக்கு அவர்கள் சென்று விட்டடார்கள்.

அவர்கள் இதை எட்டக்காரணம் சிறீலங்கா அரசின் அட்டூளியங்கள். நாம் ஏன் இன்னும் அதை அடையவில்லை அதாவது புலம் பெயர் நாங்கள் ஏன் இன்னும் அடையவில்லை என்றால் நாம் அதை நேரடியாக அனுபவிக்கவில்லை அல்லது முன்னர் அனுபவித்த அனைத்தையும் நாம் மறந்து விட்டோம் அல்லது மறக்க தூண்டப்பட்டுள்ளளோம்.அதாவது எம்மில் எம் இனத்தில் போராட்டத்தில் போராளிகளில் மீதான எமது நம்பிக்கையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்பயணத்தில் நம்பிக்கை மிக முக்கியமானது. தலைவர் மற்றும் தளபதிகளுக்கு நம்பிக்கை தளபதிகள் மீத போராளிகளுக்கு நம்பிக்கை போராளிகள் மற்றும் அனைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை.மக்கள் மீது ஒட்டு மொத்த போராளிகளுக்கும் நம்பிக்கை என்னும் ஒரு வட்த்தில் இது காணப்பட வேண்டும்.இல்லையேல் போராட்டம் முழுமையடையாது.

இன்று புலம் பெயர் எம்மில் பலரிடம் இந்த நம்பிக்கை தளர்வுற்றுள்ளதை காணலாம் இது திட்டமிட்ட சிறீலங்காவின் நடவடிக்கைகள் மற்றும் பரப்புரைகள் என்பனவற்றின் விழைவுகள் என்பது மறுக்க முடியாதது.புலம் பெயர் நம்மில் பலர் அதாவது 90 வீதமானவர்கள் அன்றும் சரி இன்றும் சரி எமது உயிரை பணயம் வைத்து உடைமைகளை அடவு வைத்து காடு கடந்து பல நாடு கடந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் புகலிடம் தருவார்கள் என்னும் நம்பிக்கையில் புலம் பெயர்ந்து வந்துள்ளவர்கள்.அந்த நம்பிக்கையின் அறுவடையை இன்று அனுபவித்துக் கொண்டுள்ளவர்கள்.இவ்வாறு ஒரு இனம் தெரியாத் தைரியத்துடனும் கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலையிலும் இங்கு வந்த நாங்கள் இன்று தாயகத்தினை நம்ப போராளிகளை நம்ப போராட்டத்தினை நம்ப ஏன் தயங்குகின்றோம் என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது.சமாதானம் பேசும் போது நம்பிநோம் யுத்தத்தின் ஆரம்பத்திலும் நம்பினோம் கிளிநொச்சி வீழும் வரை நம்பினோம் தற்போது சற்று துவள்கின்றோம் காரணம் பல கூறப்படலாம். ஆனால் தன்நம்பிக்கை அதாவது எமது பேராட்டத்துக்கு நாம் உதவுவோம் இறுதிவரை நாம் கைகொடுப்போம் முடியுமான வரை உதவுவோம் என்னும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் எவரும் எதையும் சாட்டை செய்யது தமது காரியங்களில் கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள் அதாவது தாயக சுதந்திரத்தினையும் சுய நிர்ணய உரிமையையும் நிலைநாட்ட அதை உலகிற்கு புரியவைக்க புரிந்துணர்வுடன் அவர்கள் கடமையாற்றிக் கொண்டுள்ளார்கள்.இதன் ஊடாக அவர்கள் தமிழ் சமூகத்துக்கே நன்மை செய்கின்றார்கள் இது மட்டுமல்ல மொத்த துன்பமும் சூழ்ந்து நிற்க தாயகத்தில் எம்மவர்கள் களமாடுபவர் களமாட பின்களத்தில் நிற்பவர் நிற்க சாவிலும் நாம் வாழ்வோம் என் தமது வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள்.அதாவது இடுக்கண்ணுக்கு அஞ்சாது நிற்கின்றார்கள்.முயற்சியே கண்ணாக கொண்டு நிற்கின்றார்கள்..இதை வள்ளுவர் குறள்களில் கூறுகின்றார்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர். அதாவது துன்பத்தை கண்டு அஞ்சாதவர்கள் துன்பங்களுக்கே துன்பத்தை கொடுப்பர் ஏன்று 2000 வருடங்களுக்கு முன்னர் வள்ளுவர் கூறிச் சென்றிருக்கின்றார்.எனவே நாமும் அவர்களுடன் கை கோர்ப்போம் அவர்களை ஊக்கப்படுத்துவோம்.துன்பத்தில் இருந்து மீண்டு அவர்கள் துன்பற்களுக்கு துன்பம் கொடுக்க ஒரு நாள் ஏற்படுத்திக் கொள்ள உழைப்போம்உலகில் அநீதிகளும் அநியாயங்களும் என்றும் வென்று வந்தால் இன்று உலகம் இருக்காது.இவற்றிக்கு அமைய நாம் தொடர்ந்து தாயகத்திற்கு கை கொடுத்து விடுதலையின் அறுவடைக்கு உதவ வேண்டும்.இடையில் கைவிட்டு அவர்களை தவிக்க விடாது தொடர்வோம் எம் பணியை வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. அதாவதுஒரு செயலை அரைகுறையாக விட்டவரை உலகம் கைவிடும். எனவே ஒரு செயலை செய்யும் போது அச் செயலை தொடர்ந்து செய்யாது தவிர்த்தலை தவிர்த்து அதில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.இதனை புரிந்து நேற்று வரை நாம் தாயக விடுதலைக்கு ஆற்றியது என்ன என்பதை நாமே உணர்ந்து இன்னும் பல மடங்கில் நாம் துணை புரிந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும். தமிழீழம் உருவாகும்.


பாமினி


ஈழ மண்

ஈழ மண் எங்களின் சொந்த மண்
அதை தன் சொந்தமென்று
யார் சொன்னவன்

நம் மண்ணின் உள்ளே வந்து பார்
வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்

எம் முன்னே காசுக்காய் காட்டியே
கொடுத்தாலும் கடத்தித்தான்
நடு காட்டில் விட்டாலும்
எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும்
எம் மண்ணின் விடுதலை காண்போம்

கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும்
குண்டை மழையாக பொழிந்தாலும்
நம்மை பெற்ற அன்னை மண்னை
நாம் மறந்து போகமாட்டோம்

அமைதியாய் பதுங்குது புலி
அது பாய்ந்திடும் போது தெரியும்
உனக்கு அதன் வீரம்

பாமினி
தமிழா

தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆளவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்

விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்

போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம்
வாழ்கையில் வட்டம் உண்டேல்
அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு

நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு
இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து
வெற்றிகள் உனை வந்து சேரும்
தோல்விகள் தனியென மறையும்
நீயும் இப் பூமியில் வாழவே
தோற்றவனாய் சாவதற்கு அல்ல

பாமினி
கலங்காதே தமிழா

எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும்
கலங்காதே தமிழா
தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு படிக்கல்

உதிர்ந்துதான் போனாய் என்று ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் பாய்ந்தோடும் ஆறாய் சேரும்
வானத்து நீர் வீழ்ந்துதான் பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்

தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும் பறக்க விட்டு விடு உன் புத்தியை

புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்
பயத்தினால் நடுங்கணும் அவர்கள்

தமிழா இரவும் பகலும் உண்டேல் அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால் சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும் அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்

இரை தேடி தோற்ற புலி பசியாலே படுத்து செத்தது உண்டா?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் வெற்றிக்காய் நீ உழைத்தால்
அது உன்னை அரியாசனத்தில் இட்டு மகுங்கள் சூட்டிடும்

நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்

ஓடும் நீருக்கு தடை இட்டால் அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்

தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு

விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு

"புதுக்கவிதை' ஒரு சொல் - ஓயாத விவாதம்!"புதுக்கவிதை'-இச் சொல் சரிதானா என்றொரு விவாதம் அவ்வகைக் கவிதைகள் தோன்றத் தொடங்கிய காலந்தொட்டே இருந்துவருகிறது. மரபுக் கவிதைகளை பழைய கவிதைகள் என ஒரு சாரார் அழைத்ததன் விளைவுதான் சந்தங்கள் இன்றி எழுதப்பட்ட கவிதைகள் "புதுக்கவிதைகள்' என அழைக்கப்படலாயிற்றோ என எண்ணத் தோன்றுகிறது. புதுமையுடன் படைக்கப்படும் கவிதைகள் அனைத்துமே புதுக்கவிதைகள்தான். வடிவத்தைப் பொருத்த அளவில் குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் இப்போது புதுக்கவிதைகள் என அழைக்கப்படும் கவிதைகளுக்கு நிகராகவே உள்ளன. ஆனால், சுண்டக் காய்ச்சிய பாலைப்போல, ரத்தினச் சுருக்கமாய் சொற்களைக் கையாண்டு புதுப்புது கற்பனைகளும், உவமைகளும் இழையோடும் விதமாக இயற்றப்பட்ட குறுந்தொகைப் பாக்களை புதுக்கவிதை என்ற பிரிவில் பட்டியலிடுவதை நம்மால் ஏற்க இயலாது. காரணம், புதுக்கவிதை என்றால், அது நீள சொற்றொடரை இஷ்டம்போல ஒடித்து, சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற பிம்பமே நம் நினைவுக்கு வரும். இன்றைக்குப் புதுக்கவிதைகள் என, பெயரளவில் அழைக்கப்படும் கவிதைகளில் பெரும்பான்மையானவை விடுகதை பாணியில் எழுதப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளாகவும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய உவமைகளின் தொகுப்புகளாகவுமே அமைந்துள்ளன. மேலும், அவை சுருங்கச் சொல்லி வாசகனை சிந்தித்துப் பார்த்து சிலாகிக்க வைக்கும் திறன் அற்றவையாகவும் உள்ளன. தற்போது ராமாயணமும் மகாபாரதமும்கூட சந்தமில்லா கவிதை வடிவில் (வசன கவிதை) எழுதப்பட்டு எளிமையாக்கப்பட்டுவிட்டன. இது பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தேனை மடமடவெனக் குடிப்பதுபோலத்தான். அவற்றின் தமிழ் மூல நூலை நாமே வாசித்து, புரிந்துகொண்டு, ஆராய்ந்து பார்ப்பது தனிச்சுவை. அதற்கு ஈடு இணையில்லை. இது, நாமே வளர்க்கும் மலர்த் தோட்டத்தில் தேன்கூடு அமைத்து அதிலிருந்து கிடைக்கும் அடைகளைப் பிழிந்து சொட்டுத்தேனைச் சுவைப்பதுபோல. இரண்டுமே தேன்தான். எனினும் இரண்டுக்கும் தனித்தனிச் சுவை உண்டல்லவா? மரபுக் கவிதை என அழைக்கப்படும் சந்தக் கவிதைகளுக்கு முறையான இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பாடல்களையும் சந்தக் கவிதையாகக் கொள்ளலாம். ஆனால், புதுக்கவிதைகளுக்கோ இதுபோன்ற எதுவும் தெரிந்திருக்கத் தேவையில்லை. நினைத்ததை நினைத்தபடி எழுதினால் போதும் என்றாகிவிட்டதால், புதுக்கவிதைகள் தற்போது புற்றீசல்கள்போல படையெடுத்து வருகின்றன. என்றாலும், அவற்றிலும் புதிய உவமை, புதிய சிந்தனைகள், புதிய சொற்சேர்க்கைகளுடன் காலத்தை வென்று நிற்கும் கவிதைகளும் இருக்கின்றன. "சொல் புதிது, பொருள் புதிது' என்றார் பாரதியார். அதன்படி பார்த்தால் புதிதாக, புதுமையாகச் சொல்லப்படும் கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதைகள்தான். நமது வசதிக்கு ஏற்ப வேண்டுமானால் சந்தக் கவிதை, சந்தமில்லா கவிதை எனப் பிரித்துக் கொள்ளலாம்.

நல்வழிமரம் பழுத்தால் வெüவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாருமங் கில்லை - சுரந்தமுதம்கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்உற்றார் உலகத் தவர்.(பா-29)மரத்தில் பழம் பழுத்திருந்தால் வெüவாலை வாவென்று கூவியழைப்பவர் எவரும் அங்கில்லை. அவை, தாங்களாகவே வந்து சேரும். கன்றினையுடைய பசுவானது பாலினைத் தருவது போல, தம்மிடம் உள்ளதை பிறருக்குக் கொடுப்பாரானால், உலகினர் தாமாகவே வந்து உறவினராவர்.
இந்த வாரம் கலாரசிகன்கடந்த வாரம் எழுதும்போது, இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தொடர்பு விட்டுப்போய்விட்ட அந்த நண்பரைப் பற்றிய தகவலை அன்பர் அ. நீலகண்டன் மதுரையிலிருந்து தெரிவிக்கிறார்.மதுபோதைக்கு அடிமையாகி, தான் யார் என்பதையே மறந்துவிட்ட நிலையில், மதுபோதை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் தொழிற்பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாராம் திருமலைராஜன்."அவரிடம் நான் பேசினேன். பழைய நினைவுகள் ஏதும் அவரிடம் இல்லை. தான் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தது, கவிதைப் புத்தகங்கள் எழுதியது போன்ற விவரங்கள்கூட மற்றவர்கள் சொல்லித்தான் தனக்குத் தெரியும் என்றும், தனக்கு நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். அவர் எழுதிய இரண்டு கவிதைத் தொகுப்புகளான "பாலைவன ராத்திரிகள்' "ஒரு புயலின் ஆரம்பம்' ஆகியவற்றையும், திரையுலகம் பற்றிய "திரைக்கலை - சில சிந்தனைகள்' என்கிற புத்தகத்தையும் என்னிடம் தந்து, இவையெல்லாம் நான் எழுதியதாக உறவினர்களும் நண்பர்களும் தந்தவை என்றும் கூறினார்.தற்போது கையெழுத்துப் போடவே தடுமாறும் இவரா இவ்வளவு அருமையான படைப்புகளைப் படைத்துள்ளார் என்று ஆச்சரியமாக இருந்தது. கனவுத் தொழிற்சாலையில் தனது கனவுகளையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது புரிந்தது. தற்போது, திருமலைராஜன் நல்ல உடல் நலம் மற்றும் மனநிலையோடு புத்துயிர் பெற்று மதுரை அழகர்கோயில் அருகில் உள்ள சேவா நிலையத்தில் இருந்து வருகிறார். அவருக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை' என்று எழுதியிருக்கிறார் அன்பர் நீலகண்டன்.அன்பு நண்பா! உனக்கு எங்களைப் பற்றிய நினைவுகள் அழிந்து போயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு உன்னுடன் அளவளாவி மகிழ்ந்த நாட்கள் பசுமையாகவே நினைவிருக்கின்றன.******மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்ல நூல்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மறுபதிப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான நூல் "ஸ்ரீதிலகர் விசாரணை' அல்லது 1908-ம் வருஷத்துக் "கேசரி' "இராஜ நிந்தனைக் கேஸ்' என்கிற புத்தகம்.சுதந்திரப் போராட்டத்தின் வேகம் அதிகரித்து வந்த நேரம் அது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் பாலகங்காதர திலகர். அவர் தனது "கேசரி' பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ராஜதுவேஷக் குற்றமுடைய கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணை மிகவும் பரபரப்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 1908 ஜூலை 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது.அந்த வழக்கு விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் தானே மிகத் திறமையுடன் வாதிட்டார் லோகமான்ய திலகர். அவர் 21 மணி 10 நிமிடங்கள் தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார். வழக்கு முடிவில் திலகருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது."கேசரி' பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த திலகர் வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த "சுதேசமித்திரன்' துணை ஆசிரியர் தி.சி. வில்வபதி செட்டியார் தொகுத்து 1909-இல் ஒரு நூலாக வெளியிட்டார். அப்போது அந்த நூலின் விலை வெறும் 12 அணா. அதாவது, முக்கால் ரூபாய். இன்றைய கணக்கில் சொல்வதாக இருந்தால் 75 காசுகள்.தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்தின் உதவியுடன் இந்த நூலை நல்லி குப்புசாமி செட்டியார் சார்பில் மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள் ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகத்தார். இந்தப் புத்தகத்தில் காணப்படும் திலகருடைய வாதங்கள் அவரைப் பற்றிய பிரமிப்பை மேலும் அதிகப்படுத்துகின்றன.திலகருக்குத் தண்டனை அளிப்பதற்கு முன்னால், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?' என்று நீதிபதி தேவார் கேட்டபோது திலகர் அளித்த பதில் என்ன தெரியுமா?"எல்லாம் கடவுள் செயல். என் நாட்டார் படும் அவதிகளைக் கண்டு புண்ணாக வெந்து கதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் கண்மறைவாகக் கஷ்டப்பட்டுக் கொண்டாயினும் சிறையில் கிடப்பதே மேலாகும்.ஹிந்து - மகமதியர்கள் நீரும் நெருப்புமானாலும் இரண்டும் ஒன்றுகூடி எப்படி உலகத்தை ஒன்றுபடுத்தி வருகிறதோ, அவ்வாறே இவ்விரு வகையினரும் ஒன்றுகூடியேதான் இந்தியா உயர வேண்டும் என்பதை இன்னும் அறியாதிருப்பது மிக்க விசனகரமானதே!'திலகர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட மேலான ஒரு சான்று தேவையா?******கவிஞர் பாலாவின் மரணம் என்கிற அதிர்ச்சியில் இருந்து தமிழ் இலக்கிய உலகம் மீள இன்னும் பல காலம் ஆகும். அவர் நாடறிந்த நல்ல கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்பதற்கெல்லாம் மேலாக எல்லோருக்கும் நல்லவர் என்பதுதான் கவிஞர் பாலாவின் சிறப்பு.1946-இல் சிவகங்கையில் பிறந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்றவர் கவிஞர் பாலா. "மணிக்கொடி' எழுத்தாளர்களைப் போலவே "வானம்பாடி' கவிஞர்களும் தங்களுக்கென ஒரு தனித் தடம் பதித்தவர்கள். கோவையில் இருந்து வெளியான "வானம்பாடி' இதழ் தமிழகத்துக்கு அளித்த கொடை பல சமுதாய சிந்தனை உள்ள கவிஞர்கள். அந்த வரிசையில் இடம்பெற்றவர்களில் கவிஞர் பாலாவும் ஒருவர்."வானம்பாடி' பற்றிக் குறிப்பிடும்போது பாலா சொல்வார் - "தூய இலக்கியவாதிகளையும், மொழிவெறி, இனவெறிக் கும்பலையும் எதிர்த்து நிற்குமாறு காலச்சூழலால் நிர்பந்திக்கப்பட்ட ஓர் இளம் தலைமுறைக் கவிஞர் அணிதான் "வானம்பாடி' கவிதை இயக்கம்.முன்பே குறிப்பிட்டது போல பாலாவின் நட்பு வட்டம் மிகமிகப் பெரிது. பாலாவைப் பற்றி பளிச்சென்று சொல்வதாக இருந்தால், கவிஞர் மேத்தாவை துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. அவர் பாலாவின் "திண்ணைகளும் வரவேற்பறைகளும்' கவிதைத் தொகுப்புக்குத் தந்திருக்கும் முன்னுரையில் குறிப்பிடுவார் - "பாலா - விமர்சகர்களில் ஒரு தராசு முள்! கவிஞர்களில் ஒரு நவகவிஞன்! மனிதர்களில் ஒரு மாமனிதன்! பாலாவின் நட்பை உணர முடியுமே தவிர உரைக்க முடியாது... பாலாவின் படைப்பைப் பாராட்ட முடியுமே தவிர எடைபோட இயலாது.'கடந்த மாதம் 22-ஆம் தேதி பாலா என்கிற கவிதை காற்றில் கலந்துவிட்டது. சற்றேறக்குறைய ஒரு வாரகாலம் பாலாவின் உடல் கண்ணாடிப் பேழையில் கண்களை மூடி நிரந்தரத் துயிலில் வைக்கப்பட்டிருந்தது. எதற்காக தெரியுமா? அழுது துடித்த நண்பர்கள் அனைவரும் வந்து இறுதியாகத் தரிசிப்பதற்காக!புதுக்கோட்டையில், பிறப்பால் அமைந்த உறவுகள், தம் உணர்வுகளை ஒடுக்கி பாலாவின் நண்பர்களுக்கு முக்கியத்துவம் தந்து பொறுத்திருந்தனர். 27-ஆம் தேதி இறுதியாக கவிஞர் பாலாவின் மேனியை எரியூட்டிவிட்டு, "எந்த ஒரு நண்பரும் வருத்தப்பட்டுவிடக் கூடாது. திடீர்னு பாலா காணாமல் போய் விட்டாரே என்று நினைத்து விடக்கூடாதே என்றுதான் இத்தனை நாள், இத்தனை மணி நேரம் அப்பாவைப் பாதுகாத்து வைத்திருந்தோம் - இது கூடாது என்பவர்களையும் மீறி!' - பாலாவின் புதல்வர் சரத்கார்த்திக் சொன்னபோது, எல்லோரது இதயங்களும் நெகிழ்ந்தன.கவிஞனுக்கு ஏது மரணம்? அவன்தான் கவிதையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறானே... மறக்க முடியுமா கவிஞர் பாலாவின் "திண்ணைகளும் வரவேற்பறைகளும்' என்கிற கவிதைத் தொகுப்பை? அதிலிருந்து சில வரிகள் - முடியுமா இந்த வரவேற்பறைகளில் ஒரு வழிப்போக்கன் வழிநடைக் களைப்பிற்கு ஆதரவாய் அமர? முடியுமா இந்த வரவேற்பறைகளில் ஒரு தொலை தூரப் பயணி ஒரு செம்பு நீரோ ஒரு வாய் மோரோ தாராளமாய் இருந்து பருக? முடியுமா இந்த வரவேற்பறைகளில் வாழ்க்கையில் பழுத்ததோர் தாத்தாவோ பாட்டியோ ஒரு முகம் தெரியா மனிதரை உட்கார வைத்து ஊர்க் கதை முதல் வீட்டு வம்பு வரை பேச? திண்ணைகள் இடித்து வரவேற்பறை கட்டும் நண்பரே நம் உள்வெளி நாகரிகத்தில் வாழ்க்கை அலங்காரமாகி விட்டது! மனிதம் தான் மூளியாகி விட்டது!

Wednesday, October 7, 2009

Know the Etymology: 138
Place Name of the Day: Tuesday, 06 October 2009


Agncha'nath-thaazhvu/ Agncha'nanthaazhvu

அஞ்சணத்தாழ்வு/ அஞ்சணந்தாழ்வு
Añcaṇattāḻvu / Añcaṇantāḻvu

Agncha’nam+thaazhvu
Agnchuva’n’nam+thaazhvu


The low-lying land of the Arab Muslim / West Asian trade guild Agnchuva’n’nam

Agncha’nam Probably from Agnchuva’n’nam: A West Asian or Arab Muslim trade guild that was operating in South and Southeast Asia in the medieval centuries and was issuing inscriptions in Tamil and Telugu (9th-13th centuries CE, Glossary of Tamil Inscriptions); Agnchuva’n’nap-pea’ru: An honour associated with the said trade guild (Tamil inscription c.1000 CE, GTI); Hagnjamana, Hagnjuman, Agnjuman: Trade guild, chamber of commerce (Persian); Anjuna: A coastal settlement of Arab traders in Goa, dating back to 12th century CE (Today’s Anjuna Beach).
Thaazhvu Also Thaazh, Thaa’l: A low-lying land, a common affix in Eezham Tamil place names; Thaazh: (adjective) low-lying (Changkam and modern Tamil); Thaazhvu, Thaazh-nilam: (noun) low-lying land (Thivaakaram 5:221 and Pingkalam 4:41 lexicons)


Anchuva’n’nam is the name of a medieval trade guild that was operating in the southern parts of India, island of Sri Lanka and in Southeast Asia.

The inscriptions of this trade guild, largely in Tamil and in a few instances in Telugu, are dated between 9th and 13th centuries CE.

From the inscriptions it is deduced that it was a trade guild of the people of West Asian origin, predominantly Arab Muslims.

The term Agnchuva’n’nam is considered to be the Tamilized form of Hagnjamana / Hagnjuman / Agnjuman, which in Persian and Arabic means trade guild or chamber of commerce.

In the opinion of Prof Y. Subbarayalu the guild identity seemed to have collectively included Arabs, Jews, Christians and Parsees of West Asian origin, but Arab Muslims figured more prominently than others.

They were operating in harmony with the local Saiva and Vaishnava guilds of that period (Indrapala, 2006, p325).

The earliest inscription in Tamil, referring to Agnchuva’n’nam, is dated to 849 CE and comes from Kerala, which was an early centre of Arab Muslim trade activities (Trivancore Archaeological Series, II, pp 67-68). Another Tamil inscription dated to c 1000 CE refers to the name of a member of this trade guild as Issooppu (Yusuf) I’rappaan (Epigraphia Indica III, p 11).

Such inscriptions evidence how Arab Muslim traders in southern parts of South Asia adopted Tamil as their language of communication right from early times.

The place name Anjuna in Goa, a coastal place known today as the tourist resort Anjuna Beach, is also said to have got its name from a settlement of Arab traders dating back to 12th century CE.

Evidence for the operations of the Anchva’n’nam trade guild in the island of Sri Lanka, comes from a Telugu inscription of Vishakapatnam dated to 12th century CE (Subbarayalu and Shanmugam 2002). The inscription refers to an Agnchuva’n’nam settlement in Maathoaddam (the ancient and medieval emporium at Maanthai in Mannaar).

West Asian influences in the kingdom of Jaffna are known by a variety of sources. According to Ibn Battuta, who visited the island in mid 14th century, the king of Jaffna was able to speak to him in Persian language. Some rare specimens of the genre of the Cheathu coins of the kingdom of Jaffna, bear legend in Arabic and Devanagari, readable as Rakum, which means money in Arabic (collections of Prof P. Pushparatnam of University of Jaffna).

Agncha’nath-thaazhvu in Jaffna was probably a settlement or a land belonging to the Agnchuva’n’nam trade guild in the suburbs of the medieval city of Nalloor, in the times of the Kingdom of Jaffna or even earlier.

According to historical records and literature, Muslims who had a settlement in Nalloor were evacuated to present day Choanaka-theru in Naavaan-thu’rai, during Dutch times.

Agncha’nath-thaazhvu is about one km southwest of Nalloor and was a vacant land for sometime. During the early part of 20th century Rev. Gnanapiragasar established a settlement here for people of lower echelons of the society and also built a church.

Thaazhvu or Thaazh / Thaa’l is a common affix in Tamil place names meaning a shallow land. It is a word of Changkam as well as modern Tamil usage.

“Nilam thaazh marungkin the’nkadal” (நிலம் தாழ் மருங்கின் தெண்கடல்: the sea at the side of sloping land, Natti’nai, 356:1). In the old Tamil lexicons, Thivaakaram and Pingkalam, Thaazh as well as Thaazhvu are synonyms of Pa’l’lam (low-lying land).

In Eezham Tamil place names it may come as a suffix as in the case of Agnchanath-thaazhvu or may come as a prefix as in the place name Thaazhvu-paadu in Mannaar.

Agncha’nath-thaazhvu is a locality within Jaffna city limits and it covers the stretch of Kasthooriyaar Road, between Naavalar Road junction and Neeraaviyadi junction. The name is often pronounced as Agncha’nanthaazhvu.

First published: Tuesday, 06 October 2009, 12:10