Posts

Showing posts from September, 2019

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 செப்தம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல்.  (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும் நிலவார் நிலமிசை மேல்.] வாழ்நாட்கு = வாழும் நாள்களுக்கு; அலகு ஆ(க) = அளவிடும் கருவியாக; வயங்கு =(விளங்கும்) ஒளிவிடும்; ஒளி = ஒளிக் கதிர்களை உடைய; மண்டிலம் = சூரியன்; வீழ்நாள் = வீழுங்காலம்; படாது = உண்டாகாமல்; எழுதலால் = (நாள்தோறும்) தோன்றுவதால்; வாழ்நாள் = வாழும்நாள்; உலவாமுன் = முடியும் முன்னர்; ஒப்புரவு = யாவர்க்கும் உதவும் நற்செயல்; ஆற்றுமின் = செய்யுங்கள்!; யாரும் = யாவரும்; நிலமிசைமே

நாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்! இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 செட்டம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்! நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன – உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி.  (நாலடியார் பாடல் 12) பொருள் : நட்புகளும் பிணைப்பு அறுந்தன; நல்லோரும் அகன்றனர்; அன்புக் கட்டுகளும் அவிழ்ந்தன; உனக்குள்ளே ஆராய்ந்து பார். ஆழ்கடலில் கப்பல் மூழ்கும்போது கப்பலில் உள்ளோரால் ஏற்படும் அழுகுரல் ஓசைபோல் சுற்றத்தார் அழுமோசை வந்தது அல்லவா? அப்படியானால் வெறுமனே வாழ்ந்து என்ன பயன்? சொல் விளக்கம் : நட்பு=உறவாகிய; நார்=பாசங்களும்; அற்றன=நீங்கின; நல்லாரும்=மகளிரும்; அஃகினார்=அன்பிற்குறைந்தார்; அற்பு= அன்பாகிய, தளையும்=பந்தங்களும்; அவிழ்ந்தன= நெகிழ்ந்தன; உள்= உன்னுள்ளே; காணாய்=பாராய்; ஆழ்= முழுகும்; கலத்து அன்ன=கப்பலோசைபோல்; கலி= உறவினர் அழுமோசை; வந்ததே=வந்ததல்லவோ? (ஆதலால்); வாழ்தலின்= வாழ்தலினால்; ஊதியம்=ஆதாயம்; என்=என்ன; உண்டாம்=உண்டாகும்? பிறந்த மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று எண்ண வேண்டுமே தவிர வாழ்ந்த

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 செட்டம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார் .  (நாலடியார், பாடல் 18) பொருள்:  வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம் : பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை உணவுகளையும்; உண்டீரோ என்று=சாப்பிடடீர்களா எனக் கேட்டு, வரிசையால்=முறைமையாக, உள்=உள்ளத்திற்குள், நாட்டம்=ஆராய்ச்சி, கொள்ளப்படுதலால்=பிறரால் செய்யப்படுதலால், யாக்கை=உடலினது, கோள்=கொள்கையை, அறிவுடையார்=அறிவுள்ளவர்கள்l எண்ணார்= பொருளாக நினையார். ‘போலீசுகாரன் மகள்’ படத்தில்  கண்ணதாசனின் ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னா

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 செட்டம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று.  (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற உதவும் அறத்தை இளமையிலேயே செய்யுங்கள். சொல் விளக்கம்: ஆள் = தான் உயிரைப்பிரித்துக் கொண்டு போகவேண்டிய ஆளை; பார்த்து = தேடிப் பார்த்து; உழலும் = அதே வேலையாகத் திரியும்; அருள் = பரிவு; இல் = இல்லாத; கூற்று = யமன்; உண்மையால் = இருக்கின்றான் ஆதலால், தோள் கோப்பு = தோளில் சுமந்து செல்லும் கட்டுச்சோறு (ஆகிய அறத்தை), இளமையில் = இளமைப்பருவத்தில்; கொண்டு = தேடிக்கொ

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 செட்டம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு .  (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்; உண்டு=உண்டு; ஆதலால், நல்வினை= நற்செயல்களை; மற்று=இனிமேல்; அறிவாம்=அறிந்து செய்வோம்; யாம்=நாம்; இளையம்= இளமைப்பருவத்தில்தான் உள்ளோம்’; என்னாது=என்று நினைக்காது; கைத்து=கையில் செல்வம்; உண்டாம்= உண்டாயிருக்கும்; போழ்தே= காலத்திலேயே; கரவாது=மறைக்காமல்; அறம்=அறச்செயல்களைச்; செய்ம்மின்= செய்யுங்கள். ‘கனியொழிய’ என்று குறிப்பிட்டுள்ளதை இருவகைப் பொருளாக(இரட்டுற மொழிதலா

நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 செட்டம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம் கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; ‘நனி பெரிதும் வேல்-கண்ணள்!’ என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும் கோல்-கண்ணள் ஆகும், குனிந்து பொருள் : இன்று கனிந்தும் குளிர்ந்தும் விளங்கும் இளமை பின்னர் நிலைமாறிக் கெடும். ஆதலின் அழியும் இளமையை விட அழியா நற்செயல்களில் கருத்து செலுத்துக. சொல் விளக்கம்:  இளமை=இளமைப்பருவமானது; பனி=குளிர்ச்சி; படு= பொருந்திய; சோலை=சோலையில், பயன்= பலனைத்தரும்; மரம் எல்லாம்= எல்லா மரங்களிலும்; கனி=பழங்கள்; உதிர்ந்து=உதிர்ந்து; வீழ்ந்தற்று= கீழே விழுவது போலும்; (ஆதலால்), நனி=மிக; பெரிதும்=பெரிய; வேல்=வேல் போலும்; கண்ணள் என்று=கண்களையுடையவள் என்று; இவளை=இப்பெண்ணை; வெஃகன்மின்=விரும்பாதிருங்கள்; மற்று இவளும்=பின்பு இப்பெண்ணும்; குனிந்து=கூனியாகி; கோல்=வழி தெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே; கண்ணள் ஆகும்= கண்ணாக வுடையவள் இளமையில் வேல்கண்ணுடையவள் முதுமையில் பாதையில் நடந்து செல்லக் கைத்தடியைக்

தெய்வம் – சந்தானம் சுதாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 செப்தம்பர் 2019         கருத்திற்காக.. சந்தானம் சுதாகர்

நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 செப்தம்பர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு! வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி யறிவுடை யாளர்க ணில் பொருள்:  பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை. சொல் விளக்கம் : வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்; கண்ணி=மாலை; முன்னர்=தன் முன்னாக; தயங்க= அசைந்து தொங்க; மறி=ஆடு; குளகு=தழையுணவு; உண்டன்ன=உண்டு மகிழ்தல் போலும்; மன்னா=நிலைபெறாத; மகிழ்ச்சி=மகிழ்ச்சி; அறிவுடையார்கண்= நல்லறிவு உடையவர்களிடம்; இல்= இல்லை அடையாளமாக வேலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடும் மகன்என்பதால் வெறியாட்டம்ஆடுபவன் வேல் மகன் எனப்படுகிறான். ஆட்டிற்கு இருக்கும் அறியாமை போன்று