க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 06 October 2025 அ கரமுதல ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி ) க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் (முதல் பரிசு பெற்ற கட்டுரை) முன்னுரை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது . இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு சிறு தீவுக்கூட்டங்கள் எஞ்சியவையே. ‘ஏழகம்’ என்ற இன்றைய ‘ஈழநாடு’ (இலங்கை) அக் கடல்கோள...