Saturday, July 18, 2009

கலையற்ற உலகம், பண்பாடற்ற பாலைவனம் - முனைவர் வெ.இறையன்பு

இந்த வாரம் கலாரசிகன்திங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி. கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்னபோது, என்னை நானே கிள்ளிவிட்டுக் கொண்டேன். முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன்?அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் "தமிழ்மணி' பகுதியில் வந்த "இந்தவாரம்' எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் விடுத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.""கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டிருந்தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழிபெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லையென்றால், ஆங்கில மொழிபெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்!'' என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்து விட்டது.இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரானால் பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால், அது எப்படி முடிகிறது?ராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு, சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறது? பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால்? தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும்!அந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லை!*******""சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்'' என்கிற வரிகளைப் பலரும் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டி எழுதியும் பேசியும் வருகிறார்கள். பரவலாக, இது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் என்றுதான் எல்லோரையும் போல நானும் சிறிது நாள்கள் முன்புவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.சமீபத்தில், ஒசூர் சென்றிருந்தபோது, நான் சந்திக்க நேர்ந்த "கவிமாமணி' தேனிரா பாண்டியன் "தமிழ் - செம்மொழி ஏன், எப்படி?' என்கிற புத்தகத்தின் பிரதியை என்னிடம் தந்தார். அதைப் படித்தபோதுதான் தெரிந்தது "ஈழக்கவிஞர்' முனைவர் .சச்சிதானந்தன் எழுதிய கவிதை வரிகள்தான் இவை என்பது.யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித் துறையில் பிறந்த கவிஞர் சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீத கிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர். 1954-இல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "ஆனந்தத் தேன்' வெளிவந்திருக்கிறது. கவிதைகள் மட்டுமன்றி "அன்னபூரணி' என்ற புதினத்தையும், பழைய அரசியல் தலைவர் வன்னியச் சிங்கத்தின் வரலாறையும் எழுதியுள்ளார். இவருடைய "யாழ்ப்பாணக் காவியம்' போன்ற பல கவிதைகள் அச்சேறாமல் இருக்கின்றன என்கிற தகவலைத் தருகிறார் "கவிமாமணி' தேனிரா.கவிஞர் சச்சிதானந்தன் பற்றிய இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி, இவர் மனநிலை திரிந்து வவுனியா பகுதியில் அலைந்து கொண்டிருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னால் பலரும் பார்த்துப் பரிதாபப் பட்டார்களாம்.அவரது கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்,
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா
கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்
செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா
கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.
தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்ர்றான்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.

******நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எனது கண்கள் தன்னைப்போல புத்தக அலமாரி எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்கத் தொடங்கி விடுகின்றன. சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் "இசை விழுது' என்று தலைப்பிட்டு .தமிழ்ச்செல்வன் தொகுத்திருந்த "ஒரே ஒரு ஊர்ல...' புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. எழுத்தாள நண்பர் தேனுகா வீட்டுத் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.சமீபத்தில் "அருட்செல்வர்' பொள்ளாச்சி என்.மகாலிங்கம் வீட்டுத் திருமணத்திலும் "சித்ர பாலன்' என்கிற புத்தகத்தை மணவிழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் இருந்து சில காட்சிகளைச் சித்திரங்களாகத் தீட்டி, பாடல்களுடன் வடிவமைத்திருக்கும் அழகே அழகு.இப்படி பல திருமணங்களில் புத்தகங்களை விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகத் தரும் வழக்கம் பரவ வேண்டும். இதன் மூலம் இல்லம் தோறும் நூலகம் ஏற்படும் என்பது மட்டுமன்றி, நமது இளைய தலைமுறையினருக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படவும், தொடரவும் வாய்ப்பாகக் கிடைக்கிறது.சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் தருவதற்குப் பதிலாக, புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவது என்கிற நல்ல வழக்கத்துக்கு வித்திடுபவர்களுக்கு, தமிழின் சார்பில் எனது நன்றி உரித்தாகுக!
கருத்துகள்
கலைஞரிடம் மிகுதியாகக் குறை காண்பவர்கள் கூட ஒத்துக்கொண்டு பாராட்டும் செய்திகள் அவரது கடுமையான உழைப்பும் இலக்கிய ஈடுபாடும். இதனை இவ்வாரக் கலைச் சுவைஞனின் செய்தி மெய்ப்பிக்கினறது. எல்லாம் படித்தறிந்து எலலாம் வல்லராய்த் திகழும் கலைஞர் தமிழ் ஈழ மக்களின் துன்பங்களை உணர்ந்து அவலங்களை நீக்கவும் முயல்வாராக! கலைஞரைக் குறிப்பிட்டதாலோ என்னவோ கவிஞர் சச்சிதானந்தத்தின் அருமையான கவிதையை இடம் பெறச் செய்துவிட்டார். மேலும், சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்று சொன்ன கவிஞர் பாவேந்தர் அல்லர் என அறிந்தவர்களில் பலரும் கூடக் கவிஞர் சச்சிதானந்தன்தான் என்று அறியாமல் யாரோ இலங்கைக் கவிஞர் சொன்னார் என்ற அளவில் நினைவில் வைத்திருப்பர். அனைவரும் அறிய அருமைக கவிஞர் சச்சிதானந்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கலைச்சுவைஞருக்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2009 4:54:00 AM

பொடிக்கவிகள்தமிழில் கொடிக்கவி உண்டு; சீட்டுக்கவியும் உண்டு; பொடிக்கவி என்று உண்டா? எனும் கேள்வி, தலைப்பைப் பார்த்தவுடன் எழுவது இயற்கைதான். உண்மையில் பொடிக்கவிகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன.மனிதர்கள் வெவ்வேறுவிதமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதிலும் கவிஞர்களுக்கென்றே சில நூதனப் பழக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றுள் மூக்குப்பொடி போடும் பழக்கம் ஒன்று. மூக்குப்பொடிப் போடும் பழந்தமிழ்க் கவிராயர்களுள் ஒருவர், பழனிப்பதியில் வசித்த மாம்பழக்கவிச்சிங்க நாவலர். கவி பாடுவதில் வல்லவர்.இவர், ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தில், மன்னர் பொன்னுசாமித்தேவர் முதலியோர் இருக்கும் அவையில், தமிழ் குறித்துப் பேசும்போது, எவரும் அறியாத வண்ணம், வெகு சாமர்த்தியமாய்ப் பொடி டப்பியில் இருந்து பொடியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம்.ஒருநாள், அவரது பொடிடப்பியை, மன்னர் எடுத்து வைத்துக்கொள்ள, அறியாத புலவர் பொடிடப்பியைத் தேடத் தொடங்கினார். அதனைக் கண்ணுற்ற மன்னர், ""புலவரே பிரசங்கத்தின் இடையில், நீங்கள் தேட முயன்ற காரியம், இன்னதெனச் சொல்லுக'' என்றதும், ""புரவலர் பெருமானே, உமது அருமைச் சமூகத்தில் அஞ்சாது அறிவிக்கும் அளவிற்கு, அது அத்துணைப் பெரிய காரியம் இல்லை'' என்றார் புலவர்.உடனே மன்னன், ""அது, "பொடி'க்காரியமோ?'' என்றார். "ஆம்' என்றார் புலவர். மன்னன், ""முருகனின் மீது ஒரு வெண்பாவில் ஐந்து பொடி வருமாறு பாடினால், தங்களின் காரியத்தை அனுகூலப்படுத்தலாம்'' என்றார். உடனே புலவர், ""கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்வெற்பர் தருங்கொம் பொடிசை தெய்வத்தையல் - விரும்புபுய வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள் தேன்பொடியார் பூம்பதந் தந்தே''என்று பாடிமுடித்தார் புலவர். கரும்பொடி, கைப்பொடி, தருங்கொம்பொடி, வான்பொடி, தேன்பொடி என ஐந்து பொடிகள் அடங்கிய பாடலின் பொருள் இதுதான். ""கரும்பை ஒடித்துத் தின்னும் (மா) யானைகள் அஞ்சும் படியாக வீசும் "பொடிசில்' என்னும் ஒருவிதக் கையாயுதத்தைக் கொண்ட மலைக்குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளி தேவியுடன், இசைந்த தெய்வ குஞ்சரி விரும்பும் பன்னிரு புயங்களைக் கொண்டவரே, வானைப் பொடிக்கின்ற - சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவேலரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை ஆண்டருள்'' என்று பொருள்.இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் பொன்னுசாமித் தேவர், தங்கத்தால் அமைந்த நவரத்தினம் பதித்த விலை உயர்ந்த பொடிடப்பி ஒன்றினைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தார்.இதுபோல், இன்னொருவரது வரலாற்றிலும் மூக்குப்பொடி சிறப்பிடம் பெறுகிறது. அவ்வரலாற்று நிகழ்வு பின்வருமாறு:உ.வே.சா.வுக்கு குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியப்பணி கிடைக்க உதவிய வித்துவான் தியாகராசச் செட்டியார், பொடி போடும் பழக்கம் உடையவர். அவரது மாணாக்கர், சோமசுந்தரம் பிள்ளை என்பவர், திருவானைக்காவில் ஒரு பொடிக்கடை வைத்திருந்தார். அவர் நடத்தி வந்த பொடிக்கடைக்குக் கூட்டம் அதிகம். சுடச்சுடப் புதுப்பொடியை வாங்கிப் போடுவதற்கென்றே பலர் அங்கே கூடுவார்கள். பொடி தரும் லாபத்தின் ஒரு பகுதியைச் சிவ தருமத்துக்கெனச் செலவிட்டு வந்தார் சோமசுந்தரம்.தினமும் காவிரியில் குளித்துவிட்டுத் திரும்பும் தியாகராசச் செட்டியார், இவரது கடைக்கு வருவது வழக்கம். வேலைக்காரன் ஒருவன், ஒருமுறை பொடிப்பட்டை ஒன்றை இவரருகில் வைத்துவிட்டு, போட்டுப் பார்ப்பதற்காக வேறொரு பட்டையிலும் கொண்டுவந்து கொடுப்பான். செட்டியார் அதையும் போட்டுக் கொண்டு சற்று நேரம் ஒன்றும் போசாமல் இருப்பார். அந்தப் பொடியின் இனிமையை வேறொரு தடையும் இன்றி அனுபவிப்பதுதான் அந்த மெüனத்தின் காரணம்.இந்தச் சூழலில்தான், செட்டியாரைப் பார்ப்பதற்கு வருகிறார் உ.வே.சா. அதுசமயம் நடந்த காட்சியை அவர் பின்வருமாறு விளக்குகிறார், பாருங்கள்.""செட்டியார், சோமசுந்தரம் பிள்ளையின் கடையில் உட்கார்ந்தார். நானும் அருகில் அமர்ந்தேன். பொடியின் மணம் மூக்கைத் துளைத்தது. வேலைக்காரன் ஒரு பொடிப் பட்டையை செட்டியாரிடம் சமர்ப்பித்தான். அந்தப் பட்டையைப் பக்குவப்படுத்துவதற்கே ஒரு தனித்திறமை வேண்டும்போல் இருந்தது. அந்தப்பட்டை உள்ளே இருந்த பொடியின் மணம் சிறிதாவது வெளியே போகாதபடி வெள்ளை வாழை நாரால் இறுக அடிமுதல் நுனிவரையில் நெருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அந்த நாரைச் சுற்றியிருப்பதிலே ஓர் ஒழுங்கு காணப்பட்டது. பொடி போடாதவர்களும், அந்தப் பட்டையின் அழகை உத்தேசித்து, அதை வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றும். பொடிக்கடை சம்பிரதாயப்படி தியாகராசச் செட்டியார் போட்டுக் கொள்வதற்குப் புதுப்பொடியை நீட்டிய வேலைக்காரன் எனக்கும் கொடுக்க வந்தான். அதன் அருமையை அறியத் திறனில்லாத நான், ""வழக்கமில்லை'' என்று சொல்லிவிட்டேன். அவ்விடத்தில் பேசிக்கொண்டிருந்த நான், ""பொடியின் இனிமையை நுகர்ந்த புலவர் ஒருவர் முன்பு ஒரு பாடல் இயற்றியிருக்கிறார்'' என்று கூறி, ""ஊசிக் கழகு முனைமுறி யாமை; உயர்ந்த பர தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்; திரள்நகில்சேர் வேசிக்கழகு தன் மேனி மினுக்கல்; மிகப்பெருத்த நாசிக்கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே''என்ற பாடலைச் சொன்னேன்'' உடனே, சோமசுந்தரம்பிள்ளை இந்தப் பாடலை மறுபடியும் கேட்டு இன்புற்றார். இதனைக் கேட்ட செட்டியார் ""இந்தச் செய்யுள் பொதுவாக அல்லவோ இருக்கிறது? நம் சோமசுந்தரத்தையும் இவர் கடைப்பொடியையும் சிறப்பித்து ஒரு பாடல் செய்யலாமே!'' என்றார். பின்னர் தியாகராசரும், உ.வே.சா.வும் இணைந்து ஒரு பாடலைப் பாடினர். அப்பாடல்,""கொடியணி மாடம்ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்தபொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே!''என்பதாக அமைகிறது. இப்பாட்டைத் தனியே அச்சிட்டுப் பல இடங்களில் ஒட்டச் செய்ததோடு, எல்லோருக்கும் கொடுத்து வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.சராசரி மனிதருக்குத் தும்மலைத் தரும் மூக்குப்பொடி, புலவர்களுக்குக் கவிதைகளை அல்லவா தந்துவிட்டிருக்கிறது. புரவலர்களையும் இணைத்துத் தங்கத்தில் பொடிடப்பி செய்துதரச் செய்திருக்கிறதே!
நல்வழிசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம் - வையத்துஅறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கின்றுவெறும்பானை பொங்குமோ மேல். (பா-17)இவ்வுலகில் அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து, செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில், அடுப்பிலேற்றிய வெறும் பானை பொங்காதது போல, தாம் முன்னர் அறம் செய்யாத தீவினைப் பயனே காரணம் என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் பெருஞ் செல்வம் வந்து சேராது.

Monday, July 13, 2009

Galle / Kaali

காலி
Gālla / Kāli

Galle / Kaali

The rocks
The rocky place

Kal also Kallu: Stone, rock (Tamil, Changkam Diction and modern. It is the same in all other Dravidian languages such as Kannada, Telugu, Malayalam, Tulu etc. Dravidian Etymological Dictionary 1298); Also means hill, hillock (Changkam Diction, Pingkalam Lexicon); Comes as a place name suffix to mean a rocky place, found in the names of hills, hillocks and in the names of places that gained their names because of such hills, hillocks etc (Changkam Tamil usage, also found in Malayalam, Kannada Telugu and Tulu place names); Gal (plural), Gala (singular): Stone, rock (Sinhala); Gala is found as a suffix in the place names of rocky places, hills, hillocks etc similar to the usage of Kal / Kallu in Dravidian languages (Sinhala, see column on Bambaragala)


Location of Galle / Kaali
Location of Galle / Kaali [Satellte image courtesy: Google Earth]


Galle is the name of a major harbour city and a historic place of colonial importance in the Southern Province of Sri Lanka.

Even though the anglicized way of pronunciation sounds somewhat like 'goal', the place name in Sinhala is written and pronounced as 'gaalla'. In Tamil the place is called Kaali.

The earliest recorded reference to this harbour comes from the Moroccan traveler Ibn Battuta who visited the place in mid 14th century and he calls it Qali.

Gaalla and Gala stand for rocky places, hills and hillocks in Sinhala. The place name Ke-galle in Sabragamuwa Province and the name Pidurutala-gala for the highest mountain in the island are just two examples for citation here. There are thousands of other place names, mostly ending but also sometimes beginning with Gala, and are associated with rocks, hills and hillocks in Sinhala toponymy.

Obviously, Galle, Gala and Gal in Sinhala are of Dravidian etymology and are cognates of Kal and Kallu of Tamil and other Dravidian languages (DED1298).

Earliest references to naming rocky / hilly places with the component of Kal can be found in the Changkam Tamil literature. Kal-naadan is a common reference to a person coming from a hill-settlement in the Ku’rignchith-thi’nai (hill-tract literature) of the Changkam corpus.

Similar to the large number of place names with the Gal / Gala component in the island of Sri Lanka, thousands of place names with Kal / Kallu (sometimes pronounced as Gal / Gallu), can be found in South India, especially in the Western Ghats.

Galle (Gaalla) is a rocky promontory having a bay ideal for a natural harbour facing the Indian Ocean in the southern coast of Sri Lanka. It was a commanding harbour even before the colonial times, in the Arab – Chinese trade route.

Tamil, Persian and Chinese seem to be the lingua franca of the pre-colonial trade of this cosmopolitan harbour, as testified by a tri-lingual inscription of Chinese origin found in this harbour and is kept in the Colombo Museum at present.

Trilingual inscription of Galle
The trilingual inscription in Tamil, Chinese and Persian (in Arabic script) found in Galle and now in the National Museum, Colombo.
Galle Fort
The inner entrance of the Dutch fort of Galle, photographed in 1903 [Photo courtesy: lankapura.com]
Dutch Fort at Galle
A part of the Dutch Fort at Galle [Photo courtesy: foundinceylon.com]
In its text it was dated to 1409 to commemorate the second visit of the Chinese admiral Zheng He and was erected in Galle harbour in 1411. The fact that this stone inscription was prepared in China in the three languages before its erection in Galle suggests that there were scribes in China at that time to write in Tamil and Arabic. (The Persian part of the inscription was written in Arabic script.)

While the Chinese part of the inscription speaks of donations to the shrine of Buddha in the mountain of the island, the Tamil part mentions similar alms to the temple of ‘Thenavarai-Naayanaar’ (probably the temple of Siva at Devinuvara, the present day Dondra Head) and the Persian part in Arabic script lists equal donations to a place of worship of Muslims.

During this expedition, Zheng He took the king of Kotte (Colombo) as prisoner, along with the tooth relic, to the Ming Emperor of China in Nanjing. The king was later released on condition of paying tribute, which the rulers of Kotte paid for the next forty years.

Recognizing the strategic importance of Galle, the Portuguese and the Dutch built forts here. Galle was the first place in the island to be visited by the Portuguese in 1505 and after capturing it from the rulers of Kotte, the Portuguese started building a fort here in 1588. The Dutch who captured it from the Portuguese in 1640 made it a massive fort. The fort today is a UNESCO World Heritage site and is one of the best-preserved colonial fortifications of the world.

The place name Gaalla and its Tamil equivalent Kaali are interesting examples how the Dravidian root that rendered the term to Sinhala, became in turn Tamilized. Because, the word Kaali directly deriving from Kal is unusual to Tamil word formation. The process is somewhat similar to the Tamilization of Sinhala place names ending with Gala as Kalai, even though originally Gala is a cognate of Kal.

Galle is today the fourth largest city in Sri Lanka and is the capital of the Southern Province.

Galle Fort map closeup
Details of the Dutch Fort constructed at the rocky promontory called Galle and the town inside it [Satellite image courtesy: Google Earth]

Some related place names:

Sinhala:
Ke-galle (District headquarters, Kegalle district, Sabragamuwa Province), Tan-galla (Hampantota district, Southern Province), Pidurutala-gala (Nuwara Eliya district, Central Province), Monera-gala (Moneragala district, Uva Province), Ra-galla (Nuwara Eliya district, Central Province), Gal-Hinna (Kandy district, Central Province)

Eezham Tamil:
Thoa’nik-kal (Vavuniyaa district, Northern Province); Puli-paayntha-kal (Ampaa’rai district, Eastern Province), Kaladdi (A common place name for stretches of land having rocky outcrops, Jaffna district, Northern Province)

Tamil Nadu:
Kallup-paddi (Rocky village, Sivagangai district), Hogena-kal (Smoky rocks, because of the number of waterfalls, Kannada / Tamil, Dharmapuri district), Thi’nduk-kal (Rock seat, Thi’ndukkal district)

Kannada:
Aane-kal (Elephant hill, Bangalore district), Mud-gal (Muthu-kallu, The old hill, Raichchur district), Rotti-kallu (Sakleshpur), Jeanu-kallu (Honey hill, Charmadi)

Tulu:
Karkala (Kaar-kaalaa > Kari-kallu, The dark hill, Dakshina Kannada district)

Malayalam:
Eda-kallu-guddaa ( Kodagu / Malayalam, Kerala, bordering Goorg district of Karnataka), Paa’ndiyan-kallu (Kasaragode district), Illikkal-kallu, Man-kallu, Mudi-kallu, Koonu-kallu (Kottayam district),

Telugu:
Waran-gal (Waarang-gal > Woru-kallu, The single rock / hill, Warangal district)
Appendix: translated text of the trilingual inscription
[Courtesy: www.lankalibrary.com]

The inscription was found in 1911 by the Public Works Department, near the turn to the Cripps Road in Galle. It had been used as a slab for a culvert, with its face downwards. (JRAS (CB) No. 64, 1911, pp. 129-130). The first attempt at its reading was published by E W Perera in the Spolia Zeylanica, Vol. 8, 1912. pp.l22-132.

It was thereafter published by S. Paranavitana, (later Prof.), in the Epigraphia Zeylanica Vol. III 1933, pp.331-341.

The translations given here are from the latter publication.

Tamil Version

(Lines 1-6) " Hail! ..The great king of Cina, the supreme overlord of kings, the full-orbed moon in splendour, having heard of the fame of the Lord, presents [the following] as offerings, in the hands of the envoys Cimvo and Uvincuvin to the sacred presence of the Lord Tenavarai Nayanar in the kingdom of Ilanga.

(6-13) (And he also) causes this utterance to be heard. ‘All living beings who exist in this world are being protected, in happiness, by the compassion of the Lord. Men, whencesoever they come thither, have their obstacles [to happiness] removed through the divine grace of the Lord of Tenavarai. So, [the following] are presented as offerings to the Lord of Tenavarai; to wit, gold, silver, tulukki, silk, sandalwood and oil for anointing.

[13-22] The various offerings in detail, are:- one thousand kalancus of gold, five thousand kalancus of silver, fifty pieces of tulukki of different colours, four pairs of banners embroidered with gold thread and (adorned with crystal?) two pairs of the same red in colour, five copper vessels of antique copper for keeping incense, five black stands, ten copper vases for holding flowers, ten black stands, five wick-holders for standing brass lamps, five black stands, six pairs of lotus flowers made of wood and gilt, five gilt caskets for putting agil in, ten pairs of wax candles, two thousand five hundred katti of oil and ten pieces of sandalwood.

[22-24] These included in the list as enumerated are given as offerings to the sacred presence of the Lord Tenavarai Nayanar.

The second month of the seventh year of Yunlo."

[Paranavitana at p.334 : Tenavarai is the Tamil form of the Sinhalese Devinuvara; fn. 4, p.336: Ilanga: Lanka, i.e. Ceylon]

Chinese version. C. Translation by Mr. Edmund Backhouse of Pekin, as published in the Spolia Zeylanica, 1912.]

His Majesty, the Emperor of the Great Ming dynasty has despatched the eunuchs Ching-Ho, Wang Ching-Lien, and others to set forth his utterance before Buddha, the World Honoured one, as follows:

’Deeply do we reverence you, Merciful and Honoured One, whose bright perfection is wide-embracing, and whose way of virtue passes all understanding, whose law enters into all human relations, and the years of whose great Kalpa (period) are like the sand of the river in number, you whose controlling influence ennobles and converts, whose kindness quickens, and whose strength discerns, whose mysterious efficacy is beyond compare!

Whereas Ceylon’s mountainous isle lies in the south of the ocean, and its Buddhist temples are sanctuaries of your gospel, where your miraculous responsive power imbues and enlightens. Of late, we have dispatched missions to announce our mandate to foreign nations, and during their journey over the ocean they have been favoured with the blessing of your beneficient protection. They escaped disaster or misfortune and journeyed in safety to and fro. In everlasting recognition of your supreme virtue, we, therefore, bestow offerings in recompense, and do now reverently present before Buddha, the Honoured One, oblations of gold and silver, gold embroidered jewelled banners of variegated silk, incense burners, and flower vases, silks of many colours in lining and exterior, lamps and candles with other gifts, in order to manifest the high honour of our worship. Do you, Lord Buddha, bestow on them, your regard!"

List of Alms bestowed at the shrine of the Buddhist temple in the Mountain of Ceylon as offerings.

1000 pieces of gold; 5000 pieces of silver; fifty rolls of embroidered silk in many colours; fifty rolls of silk taffeta in many colours; four pairs of jewelled banners, gold embroidered, and of variegated silk; two pairs of the same picked in red; one pair of the same in yellow; one pair in black; five antique brass incense burners; five pairs of antique brass flower vases picked in gold on lacquer, with gold stands; five pairs of yellow brass candle-sticks, picked in gold on lacquer, with gold stand; five yellow brass lamps picked in gold on lacquer, with gold stands; five incense vessels in vermilion red, lacquered gold picked on lacquer, with gold stands; six pairs of golden lotus flowers; 2500 catties of scented oil; ten pairs of wax candles; ten sticks of fragrant incense.

The date being the seventh year of Yung-Lo marked Chich’ou in the sixty years cycle, on Chia Hsu day of the sixty days cycle in the second moon being the first day of the month. A reverent oblation".

The Persian version [Translation by Mr. Ghulam Yazdani, MA, Director of the Archaeological Department of H E H the Nizam’s Dominions of Hyderabad.] [MB. Dots... indicate worn out and undecipherable letters]

[Lines] 1)... 2) The great king... by royal order... Ming 3).. has been sent to pay homage .. 4) .. to seek help and ... 5) ... 6) ... it is known ... 7) ... for ... 8) and these miracles ... 9) ... has been sent ... 10) ... is known ... to pay his respects 11) ...embroidered cloth, incense burners, flower baskets ... and lamp oil 12) ... for kind favours has sent these presents, so that 13) ... Light of Islam. 14) ... the presents are as detailed below. 15) Gold one thousand ’Misqal" ... Silver five thousand ’Misqal’... embroidered articles fifty in number. 16) ... fifty in number ... embroidered articles four ... altogether two pairs. 17) one pair yellow ... one pair ... incense burners of copper, five in number. 18) stand of copper, five in number ... five pairs ...red stands with gold work. 19) antique lamp stands five in numbe

First published: Tuesday, 30 June 2009, 04:31

Sunday, July 12, 2009

பிறந்த நாளல்ல, மறுபிறவி!இதோ இன்னொரு விடியல், இன்னொரு காலைப்பொழுது, என் வாழ்க்கையின் குத்தகை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஹழ்ல்ங்க்ண்ங்ம் என்பார்கள் லத்தீன் மொழியில். இதன் பொருளாவது, இன்றைய தினத்தைக் கெட்டியாக (உடும்புப் பிடியாக) பிடித்துக்கொள் என்பதாகும். ""உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு'' என்றார் வள்ளுவர். அப்படித்தான் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறோம். இதில் வருடம் ஒருமுறை பிறந்தநாள் கொண்டாட என்ன இருக்கிறது? இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நம் வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்பதைக் கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ""என் ஆயுள் காலம் எவ்வளவு எஞ்சியுள்ளது எனத் தெரியாத நிலையில் இன்று நான் உயிருடன் இருப்பதே மாபெரும் பரிசு. பணமோ, புகழோ வேண்டாம். இவை எல்லாமும் மற்றும் எதுவுமே உயிர்க்கு சமமில்லை'' என்கிறார் வள்ளலார் பெருமான். இதையெல்லாம் ஏன் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்றைக்கு பலர் பல லட்சங்களையும் கோடிகளையும் வாரி இறைத்து தங்களுக்குத் தாங்களே புகழ் தேடிக்கொள்கின்றனர். அப்படித் தேடிக்கொள்ளும் புகழில் ஒன்றுதான் வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடும் "பிறந்தநாள்' விழா. மேல்தட்டு மக்கள் கோடிகளையும் லட்சங்களையும் "பிறந்தநாள்' என்ற பெயரில் விரயம் செய்கிறார்கள் என்றால், நடுத்தர மக்கள் ஆயிரங்களை விரயம் செய்கின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் வர்க்கத்தினரிடம் சென்று, ""உங்கள் பிறந்த தினம் எப்போது?'' என்று கேட்டால், ""யாருக்குத் தெரியும்? என்னோட ஆத்தா அதைச் சொல்லாமலேயே போயிட்டா'' என்று அப்பாவித்தனமாகச் சொல்வதை இன்றும் கேட்க முடிகிறது. இப்படி தன்னுடைய பிறந்த நாள், நட்சத்திரம், மாதம், வருடம் கூடத் தெரியாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் அவர்களை விட நாம் "பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், வள்ளுவர், புத்தர், கம்பர், பாரதி இப்படிப் பல மேதைகளும் ஞானிகளும் அறிஞர்களும் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியா புகழ் பெற்றார்கள்? அவர்கள் பெற்ற புகழ் இறவாப் புகழல்லவா? தம்முடைய பிறந்தநாளை பிறர் கொண்டாட வாழ்ந்தவரே, வாழ்பவரே உண்மையில் இறவாப் புகழின் உச்சியில் வைத்து எண்ணப்படுபவர். தனக்குத் தானே பிறந்தநாள் கொண்டாடும் அவலம் மேலை நாடுகளைப் போல இப்போது தமிழரின் பண்பாடு, கலாசாரம், மரபு கூறும் தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தீபத்தை ஏற்றி வைத்து, வாயால் ஊதி அணைத்து, ஒளிமயமான பிறந்த தினத்தை இருள்மயமாக்கி சூன்யமாக்குவது. பிறந்த நாளன்று சிலர் கோயிலுக்குச் சென்று தங்களது பெயரில் அர்ச்சனை செய்கின்றனர், சிலர் ரத்த தானம் செய்கின்றனர், வேறு சிலர் அன்னதானம் செய்கின்றனர். இவைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிறந்தநாள் கொண்டாடுவதுதான் நாகரிகம் என்பதுபோல, தங்களது இல்லங்களில் கேக் வைத்து தீபத்தை ஏற்றி, வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடும் அபத்தமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். நல்லதை நினைத்து, நல்லதைச் செய்பவருக்கு எல்லா நாளும் மகிழ்வான நாள்தான். ஈனப் பிறவியான எலி ஒன்று, அறியாமல் ஒரு தீபத்தை தனது மூக்கினால் தூண்டிவிட்டதன் பயனாய், அது அடுத்த பிறவியில் மிகப்பெரிய அரசனான மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது என்பதை புராணங்கள் கூறுகின்றன. ""ஒரு தீபத்தை ஏற்றினால் எத்தனை புண்ணியமோ, அதுபோல ஒரு தீபத்தை, அதுவும் வாயால் ஊதி அணைக்க ஏழு தலைமுறைக்குப் பாவம் தொடரும்'' என்றும் வேதங்கள் கூறுகின்றன. அப்படி விளக்கை அமர்த்த வேண்டுமானால், பசும்பால் கொண்டோ, பூவைக் கொண்டோதான் அமர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன. பிறந்த தினம் எதற்காகக் கொண்டாட வேண்டும்? அது ஒரு தாயின் மறுபிறவிக்கான வேதனை இல்லையா? அவள் ஒரு மகவைப் பெற்றெடுக்க மறுபிறவி எடுத்த நாளல்லவா? அது அவள் பிறந்த நாள்தானே. அன்று அவளை வணங்கி அவள் ஆசியைப் பெற்று அவளைத் தானே போற்ற வேண்டும்? இதைவிடுத்து நாமே நமக்குப் பிறந்தநாள் கொண்டாடிக் கொள்கிறோமே இது என்ன அபத்தம்? நம்மைப் பெற்றெடுப்பதற்காக தாய் அனுபவித்த மரண வேதனையை இப்படியா மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது? தாய் நமக்காக மறுபிறவி எடுத்த நாளில் பல தீபங்களை அணைத்து கொண்டாடி மகிழ்வது எத்தனை பெரிய கொடுமை. அக்னியை இவ்விதம் வாயினால் ஊதி அணைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும். மன நிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது? இந்தப் பிறவி, தாய்க்கு மட்டுமல்ல; இனி அடுத்தடுத்த பிறவி வாய்த்தால் அந்தத் தாய்க்கும் நான் மரண வேதனையைத் தந்துவிடக்கூடாது; அதனால் எனக்குப் பிறவியே வேண்டாம் என்கிறார் பட்டினத்தடிகள் ஒரு பாடலில். ""மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்; வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னம்ஓர் அன்னைக் கருப்பைஊர் வாராமல் கா'' நான் பிறந்த நாளே கொண்டாட மாட்டேன்; எனக்குப் பிறந்தநாள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லியும் எழுதியும் மேடையில் முழங்கியும் வருபவர்கள்தான் ஆண்டு தவறாமல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் என்ற வேதனையைவிட, தீபத்தை அணைத்துக் கொண்டாடுகின்றனர் என்பது வேதனையிலும் வேதனை.
கருத்துக்கள்

this article is really a eye opener for big celebrity people. my thougt and this article is coinside, thanks to dinamani

By marimuthu
6/26/2009 4:23:00 PM

This article is really touch my heart...In future i will not celebrate my birthday...Only get the blessing with my mother......

By Vignesh
6/25/2009 11:41:00 AM

"Dinamani" is only news paper is having social and puplic awareness message article....Really superp....Keep it up.......Ganesh Gurukkal

By Vignesh
6/25/2009 11:16:00 AM

My thought coincide with the author. but the quotes from thirukkural, vallalar, and pattinathar are excellant. hats off mam.

By Ganapathy
6/13/2009 11:21:00 PM

Very good article, I am happy to see this in Dinamani. Most of the paper are giving only commercial articles except Dinamani. Thanks to Dinamai. This article should send to all the politicians in Tamil Nadu

By somasundaram
6/13/2009 9:27:00 PM

good article i want discous with you send mail to me manjula ganiameen@gmail.com

By jani
6/13/2009 2:33:00 PM

very good article your angle is my angle - r.saravanan

By r saravanan
6/13/2009 11:26:00 A

Saturday, July 11, 2009

மதிசூழ் மீனும் கண்ணுமிழ் கழுகும்அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தாய்ப்பாசம். மனித குலத்திலாவது தாய், தான் பெற்றெடுத்த பிள்ளைகள் தன்னைப் பிற்காலத்தில் காப்பாற்றுவர் எனக் கருதி கூடுதல் அக்கறையுடன் வளர்ப்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவை இனங்களில் அந்த எதிர்பார்ப்பே இல்லை. எனவே, அவையிடத்தில்தான் தாய்ப்பாசம் முழுக்க முழுக்க பிரதிபலன் பாராதது என உறுதியாய்ச் சொல்லலாம். கண்ணில் விழுந்த காட்சியை, தான் மட்டும் நினைத்து மகிழாமல் நிலையான கலை மூலம் அதை நிலைபெறச் செய்வோரே கலைஞர்கள். ஒரு வினாடியைத் தன்னுள் பதுக்கிவைத்து, பார்க்கும் நேரமெல்லாம் காண்போரின் நெஞ்சுக்குள் நினைவலைகளை நிரப்புவன புகைப்படங்கள். கவிதை, ஓவியங்கள் போன்ற கலைகளும் அவ்வாறே! படிக்கும்தோறும், பார்க்கும்தோறும் பரவசப்படுத்துவன. அவ்வாறு படிக்கும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான, புலவரின் கண்பட்ட பொன்னான காட்சிகள் பல "நெடுந்தொகை' எனப்படும் "அகநானூறு' முழுவதும் அழகு செய்கின்றன. அவற்றில், காட்டுப்பூனை தன் குட்டிகளிடம் காட்டும் தாய்ப்பாசத்தையும், பருந்து தன் குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொணரும் இணையற்ற தாய்ப்பாசத்தையும் எடுத்தியம்புகின்றன இரு பாடல்களின் இடைப்பட்ட சில வரிகள். வனத்தில், சுற்றி முள்வேலி அமைக்கப்பட்ட குடில். முற்றத்தில் மெல்லத் தழுவிச் செல்லும் தென்றலில் புலால் நாறுகிறது. அங்கு, குட்டிகளை ஈன்று சில நாள்களே ஆவதால் மெலிந்து காணப்படும் காட்டுப்பூனை ஒன்று படுத்துக்கிடக்கிறது. அதைச் சுற்றி பூளைப் பூவைப்போல அடர்த்தியான மயிரையுடைய அதன் குட்டிகள் கிடக்கின்றன. அழகிய ஓவியம்போன்ற இக் காட்சியைக் காண்கிறார் புலவர் மதுரை மருதன் இளநாகனார். அடுத்த வினாடி, அவர் மனத்திரையில் முன்னொரு நாள் வானில் கண்ட வண்ணக் காட்சி, அது வன்னக் (அழகான) காட்சியும்கூட. மதியும் அதைச் சூழ்ந்துள்ள விண்மீன்களும் அவரது மனத்திரையில் வந்து செல்கின்றன. ஒரு கணம்தான். புலவர் மனது வனக் காட்சிக்கும், வானக் காட்சிக்கும் முடிச்சுப் போடுகிறது. அந்தக் காட்சி அழியா காவியமாகிறது இப்படி.""ஈர்முள் வேலிப் புலவுநாறு முன்றில் எழுதி அன்ன கொடிபடு வெருகின் பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை மதிசூழ் மீனின் தாய்வழிப் படூஉம்...'' (பா-297)எனத் தொடர்கிறது அப் பாடல்.கொடிபடு வெருகின் அன்பை விளக்கிய பாடலைப் பார்த்தோம். இதோ, பருந்தின் தாயன்பைக் கூறும் பாடல். இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக் கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும் கணவிர மாலை இடூஉக்கழிந் தன்ன புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண்ணுமிழ் கழுகின் கானம்... (பா-31)வறட்சியின் ஒரு குறியீடாக தீய்ந்துபோன சுற்றுப்புறத்துக்கு இடையே, இலைகள் இல்லாமல் சில கிளைகளுடன் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள "யாமர'த்தின் (ஒருவகை மரம்) உச்சியில் உள்ள கிளையில் கூடு கட்டிய பருந்து, முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தது.இளங்குஞ்சுகளின் மெல்லிய வாயைப் புண்படுத்தாதவாறு அவற்றுக்கு ஏற்ற மென்மையான உணவுப் பொருளைத் தேடித் தருவதே இப்போது தாய்ப் பருந்தின் தலையாய பணி; அதனால் திசையெலாம் பறந்து திரிகிறது.பாலை வழியே செல்லும் வழிப்போக்கர்களை ஆறலைகள்வர்கள் அம்பால் கொன்றனர். அப் பிணங்களைச் சுற்றி செவ்வரிமாலைகள் இட்டுவைத்தாற்போல ரத்தம் உறைந்துகிடக்கிறது. அருகே வந்து அமர்கிறது தாய்ப் பருந்து. இந்த உடல்களில் எந்த உறுப்பை தனது இளங்குஞ்சுகளுக்கு இன்று உணவாக்கலாம் என உற்றுநோக்குகிறது.உடலின் வெளிப்புறத்தில் தெரியும் உறுப்புகளில் கண்கள்தான் மிகவும் மென்மையானவை. இதை இயற்கை கொடுத்த அறிவின் மூலம் அறிந்துள்ள அப் பருந்து, பிணங்களின் கண்களைக் கொத்திக் கவர்ந்து சென்று தன் குஞ்சுகளின் வாயில் உமிழ்ந்து உண்ணச் செய்கிறது. கண்ணில் பட்டதற்காக கண்ட உணவுப் பொருளையும் கொத்திச் செல்லாமல், கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் தன் குஞ்சுகளுக்கு ஏற்றது "கண்' உணவுதான் என அது எண்ணியதோ என்னவோ? புலவர் மாமூலனாரின் கண்கள் இக் காட்சியை அருந்துகின்றன. மனது அசைபோடுகிறது.
பொருட்குற்றம் தவிர்ப்போம்அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.உலகுக்கே அன்னையாக விளங்கும் உமையம்மையைப் பற்றிக் கூறும்போது, மாணிக்கவாசகர், "பைந்நாகப் படவேரல்குல் உமை' என்றும், சுந்தரர், "இழைநுழை துகில் அல்குல் ஏந்திழை' என்றும் திருநாவுக்கரசர், "துடியிடை பரவை அல்குல் கொண்டை கொப்பளித்த கோதை' என்றும் குறிப்பிடுவதால், அல்குல் என்னும் சொல்லுக்கு முன்பு கூறிய பொருள் முற்றிலும் பொருந்தாது.தலைவன், தலைவி அணிந்துகொள்ள மலர்களையும் தழைகளையும் தோழியிடம் கொடுக்கிறான். ""இத்தழைகள் எம் ஊரில் இல்லாததால் இவற்றைத் தலைவி தன் அல்குலில் அணிந்து கொண்டிருப்பதை எங்கள் வீட்டார் பார்த்தால் பல குற்றம் வரும்'' என்று கூறி தோழி ஏற்க மறுக்கிறாள்.""மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலய வெற்பா நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையின் நன்னுதலாள் அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றி பல்குற் றமும்வரும் யாங்கள் வாங்கேம் பசுந்தழையே!''(தஞ்சைவாணன் கோவை-98) இல்லத்தில் உள்ளவர்கள் சாதாரணமாகப் பார்க்கக் கூடிய உறுப்பாக இங்கு அல்குல் குறிக்கப்படுவதால், அது பெண்ணின் இடுப்புறுப்பு என்பது தெள்ளத்தெளிவு. அகலிகையை ஏமாற்றி இன்பம் துய்த்த இந்திரனைச் சபித்த கெüதம முனிவர், ""ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி உனக்குண் டாக''என்றுதான் கூறினாரே தவிர, அல்குல் என்று கூறவில்லை.திருமணக்கோலத்தில் வந்த ராமனைக் காணப் பெண்கள் திரண்டிருக்கின்றனர். பின்னால் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் நிற்கும் பெண்களின் கூந்தலும் கொங்கைகளும் அல்குலும் ராமனை மறைக்கின்றன. அவற்றுக்கு இடையே இருந்த வழியாக அவர்கள் ராமனைக் கண்டு களித்தனர் என்று கம்பர் கூறுவதும் இக்கருத்தினையே வலியுறுத்துகிறது. ""கருங்குழல் பாரம் வார்கொள் கனமுலை கலைசூழ் அல்குல் நெருங்கின மறைப்ப ஆண்டோர் நீக்கிடம் பெறாது விம்மும் பெருந்தடங் கண்ணி காணும் பேரெழில் ஆசை தூண்ட மருங்குலின் வெளிக ளூடே வள்ளலை நோக்கு கின்றாள்'' ஒரு தலைவியிடம் அவளது தோழி வினவுகிறாள், ""வானத்தில் ஆடும் மயிலைப்போல் நீ ஆடுதற்கு நீ அமர்ந்துள்ள இந்த ஊஞ்சலை உன் அல்குலைப் பற்றி வேகமாக ஆட்டி விடட்டுமா?'' என்கிறாள். ""விசும்பாடு ஆய்மயில் கடுப்ப யானின்று பசுங்கால் அல்குல் பற்றுவனன் ஊக்கி செலவுடன் வருகோ தோழி'' (நற்றிணை-222)ஊஞ்சலை ஆட்டுவோர், பின்னிருந்து ஊஞ்சலில் அமர்ந்திருப்பவரின் இடுப்புப் பகுதியைப் பிடித்து உந்துவதுதான் இயல்பானது. இவ்விடத்திலும் அல்குல் என்னும் சொல் இடுப்பு என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.வையை ஆற்றை வருணிக்கும் போது இளங்கோவடிகள், ""கொடுங்கரையாகிய அல்குலையும், வாலுகமாகிய முலையினையும் இதழாகிய சிவந்த வாயினையும், கயலாகிய கண்ணினையும், அறலாகிய கூந்தலினையும் முல்லையாகிய நகையினையும் உடைய பூங்கொடி'' (புறஞ்சேரியிறுத்த காதை-159-169) என்று கூறுகிறார். அல்குலை ஆற்றின் கரைகளுக்கு ஒப்பிட்டதால் அது இரண்டு பக்கங்களிலும் இருக்கக் கூடிய பகுதி என்பது தெளிவு. இச்சொல், பெண்ணின் இடையில் இருந்து முழந்தாள் வரையிலும் உள்ள பக்கவாட்டுப் பகுதியைக் குறிப்பது.மன்னனுக்குக் கொடுப்பதற்காக கள்ளைப் பொற்கலத்திலே சுமந்து வருகிறாள் ஒரு பெண். கள் குடத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவள் அல்குல் தளர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் குடம் சுமந்து வரும்போது அச்சுமை அவர்களது இடையை ஆதாரமாகக் கொண்டு தன் பாரத்தை அவர்களது இடுப்பில் இறக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ""நாவஞ்சும் முள்ளெயிற்று மகளிர் அல்குல் தாங்கா அசைஇ மெல்லென கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி அமிழ்தென மடுப்ப மாந்தி'' (புற-361) சீதையைத் தன் தாயாகவே ஏற்றுக்கொண்ட அனுமனிடம் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறும்போது, ராமன் கூறியதாக ஒரு பாடல் உள்ளது. ""வார்ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்கு லாள்தன் தாரஆழிக் கலைசார் அல்குல் தடங்கடற் குவமை தக்கோய்! பார்ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனிவென் றோங்கும் ஓர்ஆழித் தேரும் ஒவ்வா உனக்குநான் உரைப்பது என்னோ?''ஒரு பெண்ணுக்குரிய அடையாளமாக, அதுவும் ஒரு பக்தனிடம், "அல்குல்' என்ற சொல் கூறப்படுவதால் அது பெண்குறி என்று கொள்ள முடியாது. இதுகாறும் கூறியவற்றால், அல்குல் என்பது பெண்ணின் இடுப்புப்பகுதி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெள்ளத் தெளிவாகிறது. இனி தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் பெண்ணின் இடுப்புப் பகுதியை அல்குல் என்றே குறிப்பிட்டு அச்சொல்மீது படிந்துள்ள மாசினை நீக்க வேண்டும்.
கருத்துக்கள்

செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களும் அல்குல் என்னும இடைசார் பகுதி தவறான பொருளில் கையாளப்படுவது குறித்து விளக்கியுள்ளார். கா.மு.சிதம்பரம் இங்கு சான்றுகளுடன் நன்கு விளக்கியுள்ளார். பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2009 4:30:00 AM
இந்த வாரம் கலாரசிகன்சமீபத்தில் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தபோது, ஜவகர் கல்லூரி முதல்வரும், தமிழ்ப் பேராசிரியருமான மருதூர் அரங்கராசன், தான் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய..' என்னும் நூலை அன்புப் பரிசாகத் தந்துதவினார். நல்ல தமிழ் எழுத எளியதொரு படைப்பை ஏற்கெனவே நல்கித் தமிழ்த் தொண்டாற்றியிருக்கும் மருதூராரின் இன்னுமொரு படைப்பு இந்த "யாப்பறிந்து பாப்புனைய' என்னும் நூல்."யாப்பு' அறிந்து மரபுக் கவிதை இயற்ற விரும்புவோருக்கும், "யாப்பு' அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவோருக்கும் இந்நூல் கிடைத்தற்கரிய கையேடு. நம்பகமான வழித் துணை.இந்த அற்புதமான நூலுக்கு காலம் சென்ற பேராசிரியர் தி.வே.கோபாலய்யர் ஓர் ஆய்வுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்ததும் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். அச்சில் சுமார் மூன்று பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வுரையின் தனித்துவம் என்ன தெரியுமா? அது ஒரே ஒரு வாக்கியத்தால் ஆனது என்பதுதான். ஒரு இடத்திலாவது இடிக்கவேண்டுமே. அவரது தமிழ் ஆளுமை எத்தகையது என்பதை இந்த ஆய்வுரையைப் படித்தாலே தெரியும்.பண்டித வித்வான் தி.வே.கோபாலய்யர் புதுச்சேரியில் வாழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தமிழ்க் கடல். அவரை நூற்கடல் என்று சொன்னாலும் தகும். ""தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒரு சமயம் இல்லாமல் போய்விட்டாலும் கோபாலய்யர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம். அந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர்'' என்று கோபாலய்யருக்கு புகழாரம் சூட்டுவார் முனைவர் "வைணவம்' பார்த்தசாரதி.பண்டித வித்வான் தி.வே.கோபாலய்யரைக் கொண்டு தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "தமிழ் இலக்கண பேரகராதி' ஒரு தன்னிகரற்ற தமிழ்க் கொடை. தி.வே.கோபாலய்யர் "தினமணி' நாளிதழுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதைப் படித்தாலே போதும், அந்தத் தமிழ்க் கடலைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி-""ஆங்கிலம் கலந்து பேசினால்தான் பெருமை என்று தமிழ் மக்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களைப் போல இல்லாமல், இங்கே தமிழே தெரியாமல் யாரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கலாம். பின்னால் வரும் தலைமுறையைத் தமிழ் படிக்க வைப்பதற்கு என்ன செய்யப் போகிறோம்?புதிதாக ஒன்றும் செய்துவிட வேண்டாம். எல்லோரும் தப்பு இல்லாமல் தமிழ் கற்றுக் கொண்டாலே போதும். அதுகூட இங்கே நடக்கவில்லையே...?தமிழ் அளவுக்கு மேம்பட்ட மொழி எதுவும் எனக்குத் தெரியவில்லை. இதர இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத சார்பு உடையன. எனினும் சொற்கள் வடமொழியாகவும் இலக்கண அடிப்படை தமிழாகவும்தான் இருக்கின்றன.தமிழை உண்மையாகப் படித்தவர்கள் யாரும் துன்பப்பட மாட்டார்கள். எவ்வளவோ கிராமங்கள் இருந்தாலும் தமிழ் என்னை நிம்மதியாக வைத்திருக்கிறது''*******"திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன். குறிஞ்சிப்பாடியில் இருந்து குறிஞ்சி வேலனை ஆசிரியராகக் கொண்டு அருந்தமிழ்ப் பணி ஆற்றிவரும் "திசை எட்டும்' தனிச்சுற்றுக்கு மட்டும் கிடைக்கும் அரிய பொக்கிஷம். தமிழ் பிரதி ரூ.40. சரி, ஆயுள் சந்தா எவ்வளவு என்று ஏன் இவர்கள் குறிப்பிடாமல் விட்டிருக்கிறார்கள்?வெளிவந்திருக்கும் இதழில் "டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகள்' பற்றி ராஜ்ஜா எழுதிய கட்டுரையும், அவரது கிரேக்கக் கவிதை சிலவற்றின் தமிழாக்கமும் வெளியிடப் பட்டிருக்கிறது.ஆங்கில இலக்கியத்தை கிரேக்கர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் டகீஸ் மென்டிரேகஸ். உலக இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்ட இந்த கிரேக்க மொழிபெயர்ப்பாளர் எழுதிய புத்தகங்களில் 14 ஆங்கில இலக்கிய மொழிபெயர்ப்புகள் அடங்கும். இலக்கிய விமர்சகராகக் கொடிகட்டிப் பறந்த டகீஸ் மென்டிரேகஸ் தனது 75 வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தத் தகவலைத் தருவதும் ராஜ்ஜாதான்.எதையுமே வித்தியாசமாகச் சொல்வதில் வல்லவரான இவர் தனது கவிதைகளில் எதுவுமே முற்றுப்பெறவில்லை என்பதும் ஒவ்வொரு வாசகரும் தான் படிக்கும்போது அக்கவிதைகளின் முடிவைத் தனது கற்பனை சக்தியினால் முடித்து வைக்க வேண்டும் என்றும் அதே வாசகன் மீண்டும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு முடிவைக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார் டகீஸ் மென்டிரேகஸ்.அவரது கவிதைகளை ஸ்டேதிங் டெஸ்பாட்டே புளோஸ் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அவற்றில் சில ராஜ்ஜாவால் தமிழுருவம் பெற்றிருக்கின்றன. படித்தேன். ரசித்தேன். இதோ உங்களுடன் பகிர்ந்தேன்...பிரிந்த உதடுகள் கூடினஇரு வெட்டுக்காயங்களைப் போலஒன்றை ஒன்று ஆற்றிக்கொள்ள.நான் உடைத்தெறிந்த கண்ணாடியில்நீ என்னைக் கண்டாய் - பல சிறு சிறு உருவத்தில்.என்னுள் பலர் இருப்பதின் பிரம்மையைஉன்னுள் உண்டுபண்ணத்தான்.ஈரம் படிந்த ஜன்னல் கண்ணாடியில்உன் விரல் ஓவியம் தீட்டியதுஅதன்பின் தான் உலகம் தெரிந்ததுநீ வரைந்த கோடுகளின் வழியாக.இரவு நேரங்களில்மீண்டும் தேடி அலைகிறேன்,பகல் நேரங்களில் உன்னுடன் விளையாடிதோற்றுப் போன வார்த்தைகளை.மகிழ்ச்சி மென்மையானதுவெல்வெட் துணிபோல என்றாயே!பின் எப்படிநம் கைநிறைய முட்கள்?இங்கிருந்த சைப்ரஸ் மரங்கள் என்னவாயிற்று?அவை வெட்டப்பட்டதோடுநாற்காலிகளாகவும் ஆகிப் போயின.துக்கம் அனுசரிக்க எத்தனையோ வழிகள்.