Saturday, August 29, 2009

வணக்கம் ...!!!
என் மனப்பதிவும் ஒலிப்பதிவும் இது.பாருங்கள்.கேளுங்கள்.
நன்றி
தமிழ்ப்பொடியன்.
தமிழன் தலை நிமிர்ந்து நின்றான்.
இமயம் முதல் குமரி வரை கொடிகட்டிப்பறந்தான்.
பார்த்தவனுக்கும் கப்பல் ஏறி வந்தவனுக்கும் வயிறு பற்றி எரிந்தது.
கட்டபொம்மன் கைகட்டி நிற்காது தலைநிமிர்ந்து நின்றான்.
கயவர்கள் சிலர் துரோகிகள் ஆயினர்.
கூட இருந்து குழி பறித்தனர்.
அன்று தொடங்கிய துன்பம் இன்றும் தமிழனுக்கு தொடர்கதையானது.


கரிகாலன் காலத்தில் மீண்டும் தலை நிமிர்ந்தான் தமிழன்.
சிங்களவனுக்கும் பொறுக்கவில்லை.வந்தவனுக்கும் பொறுக்கவில்லை.
விடுதலை வேட்கையின் வெம்மையை தாங்கமுடியாமால்
வீணர்கள் சிலர் "பயங்கரவாதம்" என பச்சைகுத்தினர்.
வல்லாதிக்க சண்டியர்கள் வஞ்சகம் செய்து வீழ்த்தி விட்டனர்.
மண்ணைமட்டும் வெற்றி கொள்ளலாம்.
மனங்களையும் மன உறுதியையும் மழுங்கடிக்க எவனாலும் இயலாது.
இது தமிழனின் தனிக்குணம்.


மண்ணுக்குள் விதையான மறவர்களின் கனவுகளை மறவோம்.
காற்றோடு கலந்திருக்கும் கருமணிகளை மறவோம்.
உறவுகள் உயிர்கொடுத்து வழர்த்த உன்னத இலட்சியம் மறவோம்.
முட்கம்பி வேலிக்குப் பின் உறங்கும் உறவுகளையும் மறவோம்.
மொத்தத்தில் தமிழனின் தாகத்தையும் மறவோம்.


இலட்சிய நெருப்பு ஒவ்வொரு தமிழனின் மனசிலும் எரிகிறது.
அது எப்போதும் அணையா திருவண்ணாமலை ஜோதி.


ஆனால் காலம் நம்மை வஞ்சித்துவிட்டது.
கயவர்கள் சிலர் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
சர்வதேச சண்டியர்கள் சிலர் சதி செய்துவிட்டார்கள்.
மொத்தத்தில் தமிழனின் முதுகில் குத்திவிட்டார்கள்.


மேற்கு வானில் விழுவது கிழக்கில் எழும்.
எழுவதும் விழுவதும் விழுந்துஎழுவதும் எழுந்துவிழுவதும் இயற்கை.
எழுந்து கொண்டே போவது ஆச்சரியம்.!
விழுந்து கொண்டே கிடப்பது அவமானம்.!
தெளிவாக இருப்பது குழம்புவதும்,
குழம்பியது பின் தெளிவதும் இயற்கை.


இறந்தகாலம் நிகழ்காலத்தின் வழிகாட்டி.!
நிகழ்காலம் எதிர்காலத்தின் தீர்க்கதரிசனம்.!


எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிகழ்காலம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்.
இறந்தகாலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


"விடிவுகள்" பிறக்கவேண்டுமெனில் விரைவினில் "முடிவுகள்" கருத்தரிக்கவேண்டும்.
"தெளிவுகள்" வேண்டுமெனில் விரைவினில் குழப்பங்கள் கூண்டோடு கொழுத்தப்படவேண்டும்.


நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரிகிறது.
அது சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும்.
சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்குவோம்.
இலட்சியங்களை உயரத்தில் வைப்போம்-அப்போதுதான்
உயர்ந்து நிமிர்ந்து நிற்கமுடியும்.


சிலருக்கு ஒற்றுமை பற்றி பேசவே பிடிக்கும்.
ஒன்றுபட்டால் பிடிக்காது.
சிலர் பேசுவதை விட சாதித்து காட்டுவார்கள்.
ஒற்றுமை இதற்காகத்தானே இவ்வளவு நாளும் கஸ்ரப்பட்டோம்.
ஒளிரவேண்டும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று.
அதுதான் அக்கினிக்குஞ்சு.
பீனிக்ஸ் பறவை.
சாம்பலில் இருந்து சரித்திரம் எழுதுவோம்.


கடந்து வந்த பாதையில் வடுக்கள் இருந்தால்-அவற்றை
செல்லும் இந்தப்பாதையில் படிக்கட்டுகள் ஆக்குவோம்.
துன்பங்களை தாங்கும் தூண்களாக ஆக்குவோம்.


ஆடுபவனை ஆடியும்,பாடுகிறவனை பாடியும்
ஏன் நடிப்பவனுக்கு நடித்தும் கறப்போம்.
சர்வதேச சண்டியர்கள் பொய்சொன்னார்கள்,ஏமாற்றினார்கள்,நம்பிக்கை துரோகம் செய்தார்கள்.
அதனால் தமிழர்களை வென்றதாய் சொல்கிறார்கள்.
வெல்வதே குறிக்கோள் என கொண்டோருக்கு எம் "கூக்குரல்" கேட்கவேயில்லை.
தமிழனின் "விடுதலைத்தாகம்" அவர்களுக்கு விளங்கவேயில்லை.


ஆதலால் நாம் மாறுவோம்.மாற்றுவோம்.
கொண்ட இலட்சியம் மாறாமல்,கொள்கைகளை மாற்றுவதில் தப்பேதும் இல்லை.


செல்லும் பாதையும் ஒன்றுதான்,பயணிகளும் ஒன்றுதான் -ஆனால்
இப்போது நடந்து செல்லப்போகிறோம்.
அப்போதுதான் வளைந்தும் நெளிந்தும் செல்லலாம்.
ஒற்றையடிப்பாதைகள் ஊடே இலகுவாய் புகுந்து செல்லலாம்.


போராட்டத்தின் பரிமாணங்கள் மாறவேண்டும்-இது
தம்பியின் வார்த்தை,கரிகாலனின்கனவு.
கனவுகள் மெய்ப்பட நாம் கைகோர்த்து நிற்கவேண்டும்.
விடிவுகள் பிறக்க விரைந்து நடக்க வேண்டும்.
ஏனெனில் நாம் தூங்குவதற்கு முன்னர்
அதிக தூரம் செல்லவேண்டும்.
-தமிழ்ப்பொடியன்-
18.08.2009


Report this post
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்திரி சூலத்தின் மூன்று கூர் முனைகளைப் போல், 19-ஆம் நூற்றாண்டில், மூன்று மாபெரும் துறவிகள் தமிழ் மண்ணில் திகழ்ந்தார்கள். அவர்கள் ராமலிங்க வள்ளலார் (1823-1874), தண்டபாணி சுவாமிகள் (1839-1898), பாம்பன் சுவாமிகள் (1850-1929). ராமலிங்க வள்ளலாரைப் பற்றித் தமிழகம் பரவலாக உணர்ந்திருந்தது. மற்ற இருவரும் அந்த அளவுக்குப் போற்றப்படவில்லை. தண்டபாணி சுவாமிகளும் வள்ளலாரைப் போன்ற தெள்ளுதமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர்.திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை-பேச்சிமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த மாதமும் தேதியும் அறியமுடியவில்லை. இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் விழுமிய ஆற்றல் கைவரப் பெற்றார்.அந்த வயதில், "பூமி காத்தாள்' என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி' என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.சங்கரலிங்கம், முருகனின் திருவடி தொழும் அடியவர் ஆனார். மனம் உருகிப் பாடினார். ஆகவே இவர் முருகதாசர் என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ்ச் சுவாமிகள் என்றும் சிறப்பிக்கப்பட்டார்.உச்சிமுதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் "தண்டபாணி சுவாமிகள்' என்று போற்றினார்கள். பாடுதற்கு அரிய வண்ணம் பாடும் ஆற்றல் பெற்ற சரபம் (சிம்புள் பறவை) போன்று விளங்கியதால், இவர் "வண்ணச்சரபம் தண்டபாணி' சுவாமிகள் எனப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.சில துறவிகள் ஒரே தலத்தில் நிலைத்திருந்து, ஆலமரம் போல நலம் புரிவார்கள். ஒரு சில துறவிகள் பல ஊர்களுக்கும் சென்று வான்பறவை போல் உலவி, அருள் புரிவார்கள். இந்த வகையில் தண்டபாணி சுவாமிகள் தமிழ் நாடெங்கும் வலம்வந்தார். அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களிலும் கேளர மாநிலம் மற்றும் இலங்கையிலும் அவரது பாதம் பதிந்தது.துறவிகள் பற்றற்றவர்கள். முற்றிலும் இறைவழிபாட்டிலேயே பொழுதைக் கழிப்பவர்கள். ராமலிங்க சுவாமிகளும் தண்டபாணி சுவாமிகளும் சற்று மாறுபட்ட நிலையில் வாழ்ந்து, வழிகாட்டியவர்கள். சமுதாய நலனிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள். தாய்மொழித் தமிழ் மேல் தண்டபாணி சுவாமிகள் மிகுந்தப் பற்று கொண்டிருந்தார். ""இளநகைச் சிறுமியர் சொல்மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்'' என்றும், ""செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்'' என்றும், ""தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப்பவன் வெறும் புலவோனே'' என்றும் தண்டபாணி சுவாமிகள் பாடினார்.தாய்மொழியின் பெருமையைத் தரணிக்கு அறிவிக்கும் முறையில் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் ஆகிய நூல்களை இயற்றினார். முத்தமிழையும் வளர்த்தார். இயற்றமிழோடு முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். சொல்லாய்வும் செய்தார்.தமிழ்ச்சொல் "புகல்' என்பது இந்தியில் "போல்' என்று மருவிவிட்டது என்றார். அதை, ""புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்'' என்று பாடினார். (இந்தியில் ஆயிரம் தமிழ் வேர்ச்சொற்கள் உள்ளன என்று அண்மையில் ஆய்வறிஞர் ஒருவர் கூறியுள்ளார்).மேலும் ஒரு புதுமையை இவர் பதிவு செய்துள்ளார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவை பற்றிய ஐந்திலக்கணமே தமிழில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார். பின்பு ஏழாம் இலக்கணத்தையும் தந்தார். சிற்றிலக்கியங்களிலும் புதுமையைக் கையாண்டார். முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கி, வழிகாட்டினார்.திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியையும் அருளினார். இவர் லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார். "குருபர தத்துவம்' என்ற பெயர் கொண்ட தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1240 விருத்தப்பாக்களால் ஆனது.72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் "புலவர் புராணம்' என்ற நூலில் நிலைபெறச்செய்துள்ளார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும். அருணகிரிநாதர் வரலாற்றை, "அருணகிரிநாதர் புராணம்' என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.முருகனின் அடிமையாக ஒளிர்ந்த இவர், மற்ற கடவுளர்களையும் போற்றினார். வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒüவையாரையும் திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.""ஒüவையொடு வள்ளுவனும் ஆராய்ந்துரைத்த நெறிசெவ்வை யெனத் தேர்ந்தார் சிலர்''என்று கூறிப் பாராட்டினார்.தண்டபாணி சுவாமிகள் தம்காலத்துப் பெருமக்களாகிய ஆறுமுகநாவலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சபாபதி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார் போன்றவர்களுடன் பழகியவர். தனக்கு மூத்தவராகிய ராமலிங்க வள்ளலாரை மூன்று முறை சந்தித்துள்ளார்.""அருமைத் தமிழ்த் தாயுமான பிள்ளை தாமேபெருமை இராமலிங்கம் பிள்ளை''என்று பாடி, தாயுமானவரின் மறுபிறவியே ராமலிங்க வள்ளல் என்று புலப்படுத்தினார்.இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, ""நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்'' என்று கூறி மனம் வருந்தினார். கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தை அன்றே கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.துறவிகள் அரசியலின் அருகில் வருவதில்லை. ஆனால் தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,""நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்நீசர் குடை நிழலில் வெம்பித்தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்''என்று பாடினார். தனிப்பட "ஆங்கிலியர் அந்தாதி' என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டதாலும், கடும் தவத்தாலும் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் 1898-ஆம் ஆண்டு சிவபதவி அடைந்தார். அவர் படைத்தளித்த லட்சம் பாடல்களும் இன்றளவும் அவரது புகழைப் பாடிய வண்ணம் உள்ளன.
கொடிநிலை, கந்தழி, வள்ளி...!தொல்காப்பியத்தில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்று வாழ்த்து நிலைகள் சொல்லப்படுகின்றன. இம்மூன்றுக்கும் நச்சினார்க்கினியர் தத்துவார்த்தப் பொருள் கண்டுள்ளார்.இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழ்மக்கள் இயற்கை வழிபாடு செய்தார்கள் என்பதற்கு அடிப்படையாகத் துலங்கும் இம்மூன்றும், கொடிநிலை, கால மாற்றத்தால் பரிணாம வளர்ச்சி பெற்று, திருக்கோயில் கொடிமரமாக, ஏற்றப்படும் கொடியாக; "பலிக்கல்'லாக, வள்ளி, பலிக்கல்லில் படைக்கப்படும் பலியாக மாற்றம் பெற்றன என்னும் முறையில் இப்போது சிந்திக்கலாம்.இயற்கை வழிபாடாகிய மரவழிபாட்டுடன் இம்மூன்றையும் தொடர்புபடுத்தியும் பார்க்கலாம்.முதலில் கொடிநிலை - கானகத்தில் இருள்பட வளர்ந்த மரங்களின் மீது இயற்கையாகவே தழைத்துச் செழித்த கானகத்துக் கொடிகள் சுற்றிப் படர்ந்து நெடிதுயர்ந்து சென்றிருப்பது இயல்பு.இதைக் கண்ணுற்ற அக்கால மக்கள் மன உணர்வில், அப்போது அவர்களுக்குக் கிடைத்த பட்டறிவிலும், நூலறிவிலும் கொடிசுற்றிப் படர்ந்துள்ள மரங்களின் மீது தெய்வத்தன்மை பொருந்தி இருப்பதாக மதித்துக் கடவுளுக்குச் சமமாகக் கருதி வணங்கினார்கள்.இரண்டாவது - கானகத்துக் கொடிகள் சுற்றிய மரத்தின் வற்றி உலர்ந்துபோன அடிப்பகுதி. அந்த அடிப்பகுதியைப் பார்த்த அம்மக்கள் மனத்தில், பழைய மனநிலை உணர்வு காரணமாக, முன்பு கொடி சுற்றிப் படர்ந்த மரத்தைத் தெய்வத்துக்கு நிகராகக் கருதி வணங்கியதைப் போன்று, வற்றி உலர்ந்த அந்த மரத்தின் அடிப்பகுதியிலும் தெய்வம் குடிகொண்டிருப்பதாக மதித்து வழிபட்டனர்.""கடவுள் போகிய கருத்தாள் கந்தத்துஉடன் உறை பழைமையின் துறத்தல் செல்லாதுஇரும்புறாப் பெடையோடு பயிறும்பெருங்கல் வைப்பின் மலை'' (அகம்.307-12-15) ""கடவுள் நிலை பெற்றிருந்து இப்போது நீங்கிச் சென்றுவிட்ட கரிய அடிப்பகுதியை உடைய கந்தழி'' என்று அகநானூறு - நித்திலக்கோவை கூறுகிறது. இச்சான்றும் நினைக்கத்தக்கது.""கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே'' என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். "கந்தழி' என்பது, தனிப்பரம் பொருளாகிய "கந்தக் கடவுள்' எனச் சுப்பிரமணிய பராக்கிரமம் என்னும் நூலில், சகத்திரான்ம பரிபாலன மூர்த்திப் படலத்தில் ஒரு குறிப்பு வருகிறது.மூன்றாவது வள்ளி - வள்ளி என்பது கொடி. மரம் வற்றி உலர்ந்து கீழே சாய்ந்து முற்றிலும் சிதைந்துபோன நிலையில், மரத்தைச் சுற்றிப் படர்ந்து மேலே சென்ற கொடி, படர்ந்து செல்லுவதற்குப் பற்றுக்கோடு இன்றித் தரையில் பரவிக் கிடந்தது.பழைய பெருமை கருதி, இக்கொடியிலும் தெய்வம் குடிகொண்டிருப்பதாக மதித்து அவர்கள் வழிபாடு செய்தனர். இந்த இயற்கை வழிபாட்டு முறையை அறிந்த ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனப் பெயரிட்டு அவற்றையும் வழிபடத் தக்கனவாக மதித்து அழைத்தார்.""கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'' (தொல்.புற-33) கன்னிப் பெண்கள் தங்களின் திருமணம் தாங்கள் விரும்பும் வண்ணம் நிறைவேறுதல் வேண்டும் என வேண்டிப் பிறையைத் தொழுவது தொன்மை வழக்கு. அவ்வியற்கை வழிபாட்டினைப் போன்றே கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய இயற்கைப் பொருள்கள் மூன்றுக்கும் தெய்வத் தன்மை ஏற்றி வழிபட்டனர்.இயற்கையாகவே கொடிசுற்றி மேலே சென்றுள்ள மரத்தைக் கொடிநிலை எனப் போற்றி வணங்கினர் அல்லவா! இந்த வழிபாட்டுநிலை பரிணாம வளர்ச்சி பெற்றது; காலம் தோறும் படிப்படியாக வளர்ந்தது.கானகத்து இயற்கை வழிபாட்டோடு தொடர்புடைய இம்மரம்தான், நமது பண்பாட்டு வளர்ச்சியின் சின்னமாகத் தோன்றுகின்ற திருக்கோயில்களில், கால வளர்ச்சியில் "கோயில் கொடி மரமாக' வடிவம் பெற்று உயர்ந்தது. கானகத்தில், அம்மரத்தைச் சுற்றிப் படர்ந்து மேலே சென்ற கொடியே, திருக்கோயில் கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடியாக வடிவம் பெற்று உயர்ந்தது. அரசனுக்கு உரிமைப்படுத்தப்பட்ட கொடியிலும் சின்னம் அமைக்கப்பட்டது.இவ்வாறு அனுமானிப்பது மிகவும் பொருத்தமேயாகும். நடைமுறை அனுபவ அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அமையும். எனவே, தொல்காப்பியனார் கூறியுள்ள கொடிநிலையே, பிற்காலத்தில் கோயில் கொடிமரமாக உருவெடுத்தது என்று கூறுவது பண்பாட்டு வரலாற்று நோக்கிலும், சமுதாய வரலாற்று நோக்கிலும், மானிடவியல் நோக்கிலும் மிகவும் பொருந்தமாகும்.தொல்காப்பியனார், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் இம்மூன்றையும் இத்தகைய எளிய பொருளிலா கூறியிருப்பார் என்னும் ஐயவினா எழும்.""கொடி நிலையானது, அரி, அயன், அரன் என்னும் மூவர் கொடிகளும் ஒன்றனோடு உவமித்துத் தன் அரசன் கொடியைப் புகழ்தல். கந்தழியாவது, திருமால் வாணாசுரனின் சோ நகரத்து அரணை அழித்த வெற்றியைச் சிறப்பிப்பது. வள்ளியாவது, முருகக் கடவுள் பொருட்டுப் பெண்டிர் வெறியாட்டு அயர்வது''இவ்வாறு புறப்பொருள் வெண்பா மாலை (கொளு-39,40,41) தெய்வத் தொடர்புபடுத்திக் கூறியிருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பின்வரும் எளிய பொருளும் சொல்லப்படுகிறது.மாற்றாரை வென்று உயர்த்தி, கொடியின் சிறப்பினைப் பாடுதல் கொடிநிலை என்றும், மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிப்பது கந்தழி என்றும், வள்ளல் தன்மையைக் குறிப்பது வள்ளி என உரைப்பதும் வரலாற்று அணுகுமுறை, மானிடவியல் நோக்கு ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
தேசிய நூலாகட்டும் திருக்குறள்!திருக்குறள் தோன்றியது தமிழில் என்றாலும், அது, தமிழ்நாட்டையோ, தமிழ்மொழியையோ, தமிழ் இனத்தையோ, தமிழ் மன்னர்களையோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத பொதுமை கொண்டது. திருக்குறள் சுட்டும் நாட்டின் இலக்கணம் எந்த நாட்டுக்கும் பொருந்தும். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச்சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச் சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும் இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி, எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள்.கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்'' என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம் திருக்குறள்தான்.""இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக்கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும், திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும்'' என்பார் திருக்குறளுக்கு இயக்கம் கண்ட குன்றக்குடி அடிகளார்.தவஞானி ஸ்ரீஅரவிந்தர், தமிழ் கற்றதோடு, திருக்குறளின் முதல் இரு அதிகாரங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் "இந்தியாவின் ஆன்மா' என்ற நூலில் திருக்குறட் பெருமையை, இந்திய இலக்கியங்களோடு இனிது ஒப்பிட்டுப் பின்வருமாறு விளக்குகிறார்.""பிரதேச மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், காதல்-வீரப்பாடல்கள் முதலியவைகளே. ஆனால் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர ஞானியான ராமதாசரின் சமய ஒழுக்கப்பாடல்களையும், அரசியல் கருத்தமைந்த பாடல்களையும் திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளையும் குறிப்பிடலாம். அதன் கட்டுக்கோப்பிலும், எண்ணத்தின் திண்மையிலும் சொல்லாட்சித் திறனிலும் திருக்குறள் குறுவடிவில் பொதுவான உண்மைகளை வெளியிடும் கவிதை வகையில் தலைசிறந்து விளங்குகின்றது'' என்கிறார்."திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதி, தமிழச்சாதி அமரத்தன்மை உடையது' என்று பாடிய பாரதியாரின் உள்ளக்கிடக்கையோடு ஒத்துப்போகிறது அரவிந்தர்தம் திருக்குறள் பற்றிய கருத்தோட்டம். இந்தியச் சிந்தனையாளர்களோடு, ஏனைய தமிழ் ஞானிகளையும் முன்னிறுத்தித் திருவள்ளுவரைப் போற்றுகிறார் அரவிந்தர்.இந்தியர் மட்டுமன்றி, உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு உண்டு. ஐரோப்பியத் தமிழறிஞரான பெஸ்கி பாதிரியார், 1730-இல் முப்பாலான திருக்குறள் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார்.தலைசிறந்த பிரெஞ்சுமேதை எம்.ஏரியல், 1848-இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். அவருக்கு முன்பே, 1730-இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவுகூரும் அவர், திருக்குறள் ஃபிரான்சு தேசத்தின் தேசிய நூலகத்தில் இருப்பதையும் சுட்டுகிறார்.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கிராஸ் என்பாருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ் கற்றார். பின்னர், 1854-இல் ஜெர்மனியிலும், 1856-இல் லத்தீனிலும் மொழிபெயர்த்தார். எனினும், அதனால் திருப்தியுறாத அவர், ""எந்த மொழிபெயர்ப்பும் மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணரமுடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு கொண்ட தங்க ஆப்பிள் கனி'' என்று அறிவித்தார்.தமிழ்மாணவன் என்று தம்மை அழைத்துக்கொண்ட ஜி.யு.போப், 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன்வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ""குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன் இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது'' என்று திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்.இவ்வாறு, திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம் மொழிகளில், அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில் நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரிபோலி' உள்ளிட்ட 34 மொழிகளில், திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. லத்தீன், ஜெர்மன், ஃபிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம் ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும், வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இத்தகு மேன்மை கொண்ட திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகட்டும். திருவள்ளுவ நெறியில் மனிதகுலம் உயரட்டும்.
நல்வழிவேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமேபாதாள மூலி படருமே - மூதேவிசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமேமன்றோரம் சொன்னார் மனை. (பா-23)நீதி மன்றத்தில் பொய் சாட்சியம் சொன்னவரின் வீட்டில் பேய்கள் குடியேறும். சூடத்தகாத வெண்மையான எருக்கம் பூக்கள் பூக்கும். படரக் கூடாத பாதாள மூலி படரும். மூதேவி சென்று நிலையாகத் தங்குவாள். பாம்புகள் குடிபுகும். பொய்சாட்சி சொன்னவர்கள், இவ்வாறு தன் சுற்றத்துடன் அழிவர்.
இந்த வாரம் கலாரசிகன்எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும் புதுமைப் பித்தனும், தி.ஜானதிராமனும், ஜெயகாந்தனும் பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?மேலே சொன்ன வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு பெயர் கு.சின்னப்ப பாரதி. வேடிக்கை என்னவென்றால், உலக அரங்கில் அறியப்படும் இந்தத் தமிழ் எழுத்தாளர் இன்றுவரை வியாபார சஞ்சிகைகளின் நிழலில் கூட ஒதுங்கியது இல்லை என்பதுதான். வாசகர்களைத் திருப்திபடுத்தவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தை ஒரு தவமாகவும், சமுதாயக் கடமையாகவும் கொண்ட எழுத்தாளர்களின் பட்டியலில் முன்நிலை வகிப்பது யார் என்று கேட்டால், விவரமறிந்தவர்கள் கு.சி.பா. என்றுதான் கூறுவார்கள்.கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள் அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள். இவரது "தாகம்', "சங்கம்', "சர்க்கரை' "பவளாயி' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உலக இலக்கிய அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றன. இவரது "சங்கம்' என்கிற நாவல் ஆங்கிலம் தவிர ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய விமர்சகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் குவித்திருக்கிறது.""என்னைப் பொருத்த மட்டில் எழுத்து என்பதை பணம் சேர்க்கும், புகழ் ஈட்டும் சாதனமாக நான் கருதவில்லை. சாதாரண மக்களைப் பாதிக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராகவும் கெüரவமான ஒரு வாழ்வை உருவாக்கவும் போராடும் மக்கள் திரளுக்கு உதவக் கூடியதாக இருக்கும் வகையில் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன்'' என்று கூறும் கு.சி.பா.வின் நாவல்கள் ஏனோ தானோ என்று எழுதப்படுவன அல்ல என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு.ஒரு நாவலை எழுத அவர் மூன்று முதல் எட்டு ஆண்டுகள்கூட எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரது "சுரங்கம்' நாவலைப் படித்துவிட்டு ஒரு சில மணித் துளிகள் பிரமை பிடித்ததுபோல அமர்ந்துவிட்டிருந்தேன். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்தான் "சுரங்கம்'.சுரங்கத் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்த்தையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் "சுரங்கம்' நாவலின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா? நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து உலகில் எழுதப்பட்ட ஒரே ஒரு வர்க்கப் போராட்ட நாவல் சுரங்கமாகத்தான் இருக்கும்."இன்று சித்தாந்த உள்ளடக்கம் கொண்ட படைப்புகள் அருகிப் போய்விட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் அப்படிப்பட்ட படைப்புகளே இந்திய அளவில் மேலோங்கியிருந்தன' என்கிற கு.சி.பா.வின் கருத்தை முற்றுமாக வழிமொழிபவன் நான். சமுதாயச் சிந்தனை என்பது முற்றிலுமாக அழிந்து, சுய சிந்தனையும், தனிமனித மன உணர்வுகளும் மட்டுமே எழுத்துகளில் பிரதிபலிக்கும் துர்ப்பாக்கியம் மனதைப் பிசைகிறது.உலகமே போற்றிப் பாராட்டும் ஒரு படைப்பாளி நமக்கு மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூட விரும்பாமல் இருக்கிறாரே என்பதில் எனக்குள்ள ஆதங்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. கு.சி.பா.விடம் கேட்டால், அவர், ""என்னைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எனது எழுத்துகள் அல்லவா மக்களைப் போய்ச் சேர வேண்டும்?'' என்று எதிர்க் கேள்வி எழுப்புவார்.இதுவரை நீங்கள் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள் எதுவும் படிக்காமல் இருந்திருந்தால், தயவுசெய்து உடனே பாரதி புத்தகாலயத்துக்கு ஓடுங்கள். இல்லையென்றால் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பு முழுமையானதாகாது.எனக்கு இன்னொரு ஆதங்கம். உலகம் போற்றும் இந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புக்கு "ஞானபீடம்' விருது தரப்பட வேண்டாமோ? குறைந்த பட்சம் சாகித்திய அகாதெமி விருது கூடத் தரப்படவில்லையே, ஏன்? விருதுகளின் மீதான மரியாதை இதனால்தான் குறைகிறது!*******துறுதுறுப்பான இளைஞர் தி.பாலாஜி "சிகரம்' அமைப்பின் தூண்களில் ஒருவர். "தமிழன் வாழ்ந்தால் தட்டிக் கொடு; தமிழன் வீழ்ந்தால் முட்டுக் கொடு!' என்பதை முத்திரை வாக்கியமாகக் கொண்டு செயல்படும் இந்த இளைஞர், புதிய தலைமுறை மாணவர் பட்டாளத்தின் பிரதிநிதி.மாணவர்கள் சிலர் ஒரு தீபாவளித் திருநாளின்போது ஒன்றுகூடிப் பேசினார்கள். பேச்சு விவாதமானது. அப்போதுதான் தெரிந்தது, அவர்களுக்குள் அக்கினிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருந்த சமுதாய தாகம் அவ்வப்போது கவிதையாகப் பொங்கி எழுந்தது என்பதை. தங்களது நோட்டுப் புத்தகத்தில் இருந்த எண்ணச் சிதறல்களைத் தொகுத்து ஒரு கவிதைத் தொகுப்பாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியதாம். விளைவு? "அநீதி அகதி அமைதி' என்கிற கவிதைத் தொகுப்பு.சேலம் மகாராஜா பொறியியற் கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிக்கும் கு.பிரபாகரன் எழுதிய "பிஞ்சுக்கு நீதி' என்கிற தலைப்பிலான கவிதை ஒன்று அந்தத் தொகுப்பில் காணப்படுகிறது. அதிலிருந்து சில வரிகள், தாய் தந்தை அற்றவன் - மட்டும் அல்ல - தன் நாட்டில் வாழ கதியற்று - கலங்கி நிற்பவனும் அநாதை தான்! கேள்விப்பட்டேன்! அங்கேயும் மக்கள் ஓடி விளையாடுகிறார்கள் ஆனால் துரத்துவது துப்பாக்கி தோட்டாக்கள் என்று! கள்ளத் தோணியில் ஏறி கடிகார முள்ளை விட வேகமாக நாடு கடந்து அமைதியற்ற அகதியாகத் தமிழன் வருவதென்ன நீதி!

Thursday, August 27, 2009

chennai andru

செ ன் னை ப ழை ய செ ன் னை ''''மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்நவீனன்
1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது. அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும். 1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை.
இதுதவிர ட்ராம் போக்குவரத்து இருந்தது. மிக மெதுவாக செல்லும் இந்த வண்டிகளில் நடந்து கொண்டே ஏறி போகும்போதே இறங்கி பயணிப்பது மதராஸ்வாசிகளுக்கு ஒரு தனி சுகம். எழும்பூரில் இருந்து ஐகோர்ட் செல்ல டிராம்மில் கட்டணம் 2 அணா. இரு பக்கமும் கண்டக்டர் இருப்பார். மாம்பலம், தியாகராய நகர் போன்ற பகுதிகளில் வசதியானவர்கள் குடியிருப்பார்கள். இப்போதும் இருக்கும் சில பெரிய பழங்கால கட்டிடங்கள் அன்றைய நாகரிகத்தின் சின்னமாக இருந்தன. பிரபல சினிமா நடிக நடிகையர் தி.நகர், அடையாறு போன்ற இடங்களில்தான் வசித்து வந்தனர். பிற பகுதிகளில் ஓடு போட்ட வீடுகள், கூரை வீடுகள் அதிகம் இருக்கும். பல பகுதிகளில் தெருக்கள் முள் செடிகள் முளைத்து குண்டும் குழியுமாகவே இருக்கும். உயர்நீதிமன்றம் அருகேயுள்ள ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அம்பீஸ் கபே போன்ற உணவு விடுதிகள் மிகப் பிரபலம். ஒரு அணாவுக்கு இரு போண்டாவும், இரண்டு அணாவுக்கு தோசையும், 1 ரூபாய்க்கு சாப்பாடும், 2 ரூபாய்க்கு கேரியர் சாப்பாடும் கிடைக்கும். 16 அணா ஒரு ரூபாய் ஆகும். பஜ்ஜி, மைசூர் பாகு, ஜாங்கரி, கேசரி போன்ற பலகாரங்கள் மிகப் பிரபலம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை, மதராஸில் பொழுதுபோக்க மெரினா பீச்சும், சினிமா தியேட்டரும் உண்டு. மாலை நேரத்தில் பீச்சுக்கு சென்றால் மிக சுத்தமாக இருக்கும். இங்கு பெரியவர்கள் இந்திய சுதந்திரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். சினிமா தியேட்டரில் படம் பார்க்க கட்டணம் 25 காசு. ஹிந்தி, ஆங்கிலப் படம் அதிகம் போடுவார்கள். அண்ணா சிலை எதிர்புறம் மாடியில் நியூ எல்பில்ஸ்டன் தியேட்டர் உண்டு. 50 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் சாரட் வண்டியில் இங்கு படம் பார்க்க வருவார்கள். ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த காலம் அது. அதனால் நம் மக்கள் நாட்டு விடுதலையைப் பற்றிப் பகிரங்கமாக பேசமாட்டார்கள். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்வார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. "வந்தே மாதரம்' என்று சொல்லக் கூட அஞ்சினார்கள். செய்திப் பத்திரிக்கைகளில் கூட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் செய்திகள் அவ்வளவாக போடுவதில்லை. ஆனால் "தினமணி' நாளிதழ் ஆரம்பித்த உடன் இரண்டு தேசியக் கொடிகளை பத்திரிகையின் சின்னமாகத் துணிந்து பயன்படுத்தினார்கள். ராம்நாத் கோயங்கா தீவிர தேசபக்தர். அந்த உணர்வை அப்படியே தினமணி பிரதிபலித்தது. தேசிய நாளேடு என்ற தகுதியை வாசகர்களிடையே அப்போதே பெற்றது. சில நாடக நடிகர்களுக்கு தேச பக்தி உணர்ச்சி இருந்தாலும் அவற்றை மேடைகளில் வெளிப்படுத்த முடியாமல் நாடகங்கள் போட்டு வந்தார்கள். டி.கே.எஸ். சகோதரர்கள் "தேச பக்தி' என்ற நாடகத்தை மேடை ஏற்றினார்கள். பாஞ்சால சிங்கம் பகத் சிங் வாழ்க்கையை மறைமுகமாக வெளிப்படுத்திய இந்த நாடகத்தைப் போட்டபோது அதற்கு போலீசார் தடை விதித்து விட்டார்கள். நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மீண்டும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள். 1947 ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை அடைந்தபோது தெருக்களில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டதை காணமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் தீபாவளி கொண்டாடுவதுபோல் எண்ணெய் தேய்த்து குளித்து கதரில் புத்தாடை அணிந்து தெருக்களில் வெடி வெடித்து மகாத்மா காந்திக்கு ஜே என்று ஆரவாரம் செய்தார்கள். மயிலாப்பூரில் வசித்த தேசபக்த நடிகர் கே. சாரங்கபாணி போன்ற நடிகர்கள் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் ஊர்வலமாக வந்து கொண்டாடினார்கள். சுகுண விலாஸ் நாடக சபா அப்போது பிரபலம். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை அவர்கள்தான் போடுவார்கள். பிரபல நாடகக் கம்பெனிகளின் நாடகங்கள் தொடர்ந்து நடக்கும். பாய்ஸ் கம்பெனி நாடகங்களைப் பார்த்து வெளியூர்களிலிருந்து எல்லாம் வருவார்கள். தியாகராஜ பாகவதர்தான் அன்றைய சூப்பர் ஸ்டார். அவர் எப்போதாவது மவுண்ட் ரோடுக்கோ, ஜார்ஜ் டவுனுக்கோ கடைத் தெருவுக்குத் துணிமணி மற்றும் நகைகள் வாங்க வருவார். அப்படி வருவதாக இருந்தால் 15 நாள் முன்னதாக அவர் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவே போட்டது. மவுண்ட் ரோடின் இரண்டு பக்கங்களிலும் தடுப்புகள் வைக்கப்படும். அந்த அளவுக்குக் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் அவரைப் பார்க்கக் கூடும். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆயிரம் விளக்கு கபேயில் காபி சாப்பிட வந்து நான் பார்த்திருக்கிறேன். மூவிலாண்ட் என்கிற பெயர்ப் பலகையுடன் ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. ஸ்டூடியோ வாசலில் நடிகர்களை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு கூட்டம் நின்றபடி இருக்கும். இப்போதுபோல நடிகர்கள் பிகு பண்ணிக் கொள்ளமாட்டார்கள். பந்தாவே இல்லாமல் பழகுவார்கள். பிரபல நடிகைகள் தாங்களே காரை ஓட்டிக் கொண்டு போவதை வாயைப் பிளந்தபடி பார்க்கும் அப்பாவி ரசிகர்கள் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் அருகில் இருந்த ரயில்வே கேட்டில் தவமிருப்பார்கள். இப்போது அங்கே மேம்பாலம் வந்துவிட்டது. மதராஸ் இன்று சென்னையாக மாறிவிட்டாலும் ஒரு சில அன்றுபோல் இன்றும் மாறாமல் உள்ளன. உயர்நீதிமன்றத்தின் சிவப்பு வண்ணம், ஐய்யே போன்ற பேச்சு மொழிகள். அன்றுபோல் இன்றும் நடைபெறும் குழாயடிச் சண்டை போன்றவைகள் மதராசில் தனித் தன்மைகள் போலும். ஓடாத ஆறு ஒன்று சென்னையில் அன்றும், இன்றும் உள்ளது. ஆறு என்றால் தண்ணீர் ஓடும். குளத்தில் தண்ணீர் தேங்கும். ஆனால் சென்னையில் உள்ள கூவம் ஆறு நான் பார்த்த நாள் முதலாய் அன்றும், இன்றும் சாக்கடை தேங்கியே உள்ளது.
-நவீனன்
சென்னையில் முதல் ஆங்கிலேய மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் எட்வர்ட் வின்டர் என்பவரால் 1664 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வாடகை இடத்தில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை அங்கே இங்கே என்று கோட்டைக்குள் சுற்றி, பிறகு ஆர்மேனியன் தெரிவில் (அரண்மனைக்கார தெரு) பல காலம் செயல்பட்டு வந்தது. அக்டோபர் 15, 1772ல் ஜான் சுல்லிவன் என்பவரால் எழுப்பப்பட்டதுதான் இன்றைய பொது மருத்துவமனை. 1859 மற்றும் 1893ல் இந்தக் கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இப்போதும் காணப்படும் பழைய கட்டடம் "செமினார் ஹால்' என்று அழைக்கப்படும் 1835 ஆண்டு கட்டப்பட்ட பகுதி மட்டுமே. ஏனைய இடங்கள் இடித்துக் கட்டப்பட்டவைதான். இந்தியாவின் முதல் ரயில் பாதை, சிந்தாதிரிப்பேட்டை பாலத்துக்கு அருகில்தான் 1836-ல் பரிசோதனைக்காகப் போடப்பட்டது. அடுத்த வருடமே, ஏ.பி. காட்டன் என்பவரால் ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பரங்கிமலையை அடுத்த கல்குவாரிகள் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. இந்த ரெட் ஹில்ஸ் ரயில்வே என்பது காற்றழுத்தத்தாலும், மனிதர்கள் தள்ளுவதாலும் இயக்கப்பட்டதாம்! 1845-ல் மெட்றாஸ் ரயில்வே கம்பெனி எனப்படும் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1849-ல் இன்னொரு நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் தென்னகத்தின் முதல் ரயில்வே பாதையை நிறுவியது. 1853-ல் கர்னாடிக் நவாபுகளின் தலைநகரமான ஆற்காடையும், வாலாஜாபேட்டையையும் வட சென்னையிலுள்ள ராயபுரத்துடன் இந்த ரயில் பாதை இணைத்தது. சென்ட்ரல் ரயில் நிலையம், 1873-ல் வியாசர்பாடி மெட்ராஸ் பாதை போடப்பட்டபோது நான்கே நடைமேடையுடன் கூடிய சிறிய ரயில்நிலையமாகத் தொடங்கப்பட்டது. 1907 வரை சென்னையின் தலைமை ரயில் நிலையமாகத் திகழ்ந்தது ராயபுரம்தானாம். இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் ஜார்ஜ் ஹார்டிங்ஸ் என்பவரால் வடிவம் கொடுக்கப்பட்டு சிஷோம் என்பவரால் பொலிவு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் மணிகூண்டு தயாரிக்கப்பட்ட வருடம் 1874. கட்டடம் முழுமையான ஆண்டு 1900. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் அந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டன என்றாலும், ஜார்ஜ் ஹார்டிங்ஸ் கற்பனை செய்த அதே வடிவம் இப்போதும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தனிச் சிறப்பு!
-ஆசிரியர்
கருத்துக்கள்

அருமையான தொகுப்பு. பாராட்டும் நன்றியும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/28/2009 6:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

பசிக் கொடுமையிலே பரிதவிக்கிறார் பால் முகம் மாறாத ஈழத்துப் பாலகர்கள்.கால் வயிறு கஞ்சிக்கு

கடப்பாரையோடுகடும் வெயிலிலே

உணவு தேடுகின்றார்.

ஊட்டமில்லாத உணவை

நாள்தோறும் உண்பதினால்

வாட்டமான முகத்துடன்

சோட்டமாக வாழுகின்றார்

நம் பாலகர்;.

ஒட்டிய வயிறோடும்

வற்றிய கண்ணோடும்

வாழ்பவர் ஒரு பக்கம்

அறு சுவை மறந்து

ஒரு சுவையாவது

கிடைக்குமா என

ஏங்குபவர் ஒரு பக்கம்

பால் கேட்கும் பாலகனுக்கு

இதயத்தை இரும்பாக்கி

இருண்ட உலகத்தில்

உணவைத் தேடி

அலைபவர் ஒரு பக்கம்

பஞ்சம் தலை விரித்தாட

பட்டினியும் கை கோர்க்க

அடம்பன் கொடியும் உணவாகும் நிலை

தனி ஒருவனுக்க உணவு இல்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்என்றான் பாரதி.

கொடுமையில் பெரிய கொடுமைபசிக் கொடுமை

பட்டினியால் பாலகர்கள் நம் தாய் நாட்டில் பரி தவிக்க

பால் பழம் அருகிலிருந்தும்

பாபா படம் போட்டால் தான்சாப்பிடுவேன்

என்கிறதுபுலம் பெயர்ந்த குழந்தை.

சற்று சிந்திப்போம்சாவை விரட்டுவோம்

பட்டினிக்கொடுமையில்பரிதவிக்கும் எம்

உறவுகளைபலம் கொண்டு காத்திடுவோம்;

நன்றி வணக்கத்துடன்

ரத்னா.

www.tamilkathir.com


கடலோரம் பெருவனங்கள்
கரைநெடுக நெடுமரங்கள்
படல்வீடே ஈழமுகம்
பண்பாடே ஈழநிலம்

படகெல்லாம் மீன்கள்வளம்
படுகரையில் உப்பின் அளம்
குடிதோறும் தென்னைவளம்
குறும்பலா தரைதவழும்
கரையோரம் நெய்தல்நிலம்
கரைதாண்டி முல்லைவளம்
மருத நிலம் நடுநாடு

மண்மனக்கும் வயற்காடு
பழந்தமிழர் கொல்லையயலாம்
பனைமரங்கள் எல்லைகளாம்
பழம்பதியின் முதற்குறியே
பனைமரத்தின் முகவரியே
நான்குநிலம் கொண்டதனால்
நானிலமே எமதீழம்
நன்னிலத்தில் நெல்வாழை
கன்னலுக்குக் கரும்பாலை
நான்குநிலம் கொடுங்கோலாய்
அஞ்சு (ம்)நிலம் ஆனகதை
ஈழயினம் சிங்களத்தால்
ஏழையினம் ஆனகதை
அஞ்சும்நிலம் தடைமீறி
மிஞ்சிநின்ற வேரின்கதை
சிங்கத்தை வேங்கையினம்
சீறிநின்ற போரின்கதை
ஞாலமெல்லாம் எம்மினத்தை
நடுக்களத்தில் விற்றகதை
ஓலமிட்டு லட்சம்பேர்
உலைக்களத்தில் வெந்தகதை
கண்ணுள்ளார் காணவில்லை
காதுள்ளார் கேட்கவில்லை
குழந்தைகளை மீட்கவில்லை
குமரிகளைக் காக்கவில்லை
வதை தடுப்பதற்காய்
வேண்டினோம் டெல்லிக்கொடி
வதையை நிறுத்திவிட
வணங்குகிறோம் தொப்புள்கொடி
எக்கொடியும் வரவில்லை
இக்கொடியர் போர்நிறுத்த
வக்கரித்த தேர்தலிலே
வாக்களித்த தமிழர்களே
மீளவும்யாம் எண்ணுகையில்
நாளைஉயிர் யார் கையில்?
ஈழமின்று நிலச்சிறையாய்
வேலியிட்ட வெலிக்கடையாய்...
ஒருகுவளை நீருக்கும்
ஒருகவளம் சோற்றுக்கும்
எம்நிலத்தில் கையேந்தி
எம்குலத்தோர் வேகையிலும்
நம்பிக்கை தளரவில்லை
நட்சத்திரம் இருளவில்லை
நம்பிக்கை உயிர்த்தெழும்பும்
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்!

-கவிஞர் தணிகைசெல்வன்


முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன்

எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே........

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி

ஆகாயத்தாலும் ஆட்லறியாலும் அடித்து நூற்றுயிர்கள் உடல் சிதறிப் போனதும்

ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள்.

இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை,

கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய்

நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?

யார் வந்தார் எமை பார்க்க?

யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா?

நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.

மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா !

சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள்.

எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.

இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும்.

இல்லையென்றால் முத்துக்குமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,

இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,

இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி

ஈழம் முடித்தே விடுவார்கள்.

ஆனால் நாம் போராட வேண்டியதோ

இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன்

தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து

இன்று இது காட்டுத்தீயாக பரவி

தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை

உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை

நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்

உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள்

நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வது மட்டுமல்ல நாளை இருக்கவும் மாட்டோம்

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி

கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி

வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்

வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம்

எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல் கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

சாவின் மடியில் உள்ள

ஈழ தமிழன்.

www.tamilkathir.com


ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர்தந்தமுதலாம் தற்கொடைமுருகதாஸ்.

புலம் பெயர் மண்ணில் ஜெனிவாப் பெருநகரில் ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர் தந்தமுதலாம் தற்கொடையே முருகதாசே!

உன் முகமறியேன் -ஆனால்உன் உணர்வைப்புரிந்து கொண்டேன்....சாவதென்று முடிவெடுத்த எத்தனைபேர் - மறுகணமே எதையெதையோ எண்ணிதம் முடிவை மாற்றிடுவார்.

ஆனால் நீ! தன்னந் தனியனாய் இலண்டனில் இருந்து வந்திறங்கியிருக்கிறாய்...

நீதிகெட்ட உலகுபுரிந்து கொள்ளும்படி தமிழன் வரலாற்றைத் தொட்டு தடம் மாறாமல் நியாயங்களை நிரைப்படுத்தி உறைப்பாய் உரைத்து எழுதியிருக்கிறாய்....

நீ பிறப்பெடுத்த தேதமிழிற்காய் என்பதாய் உனதுயிரை ஐ.நா.வின் முன்றலிலே தீயில் எரித்து வைத்தாய்....

நீ எரிந்து போகவில்லை தமிழர் உள்ள தேசமெங்கும் விரிந்து போனாய்....

உலகின் மனச் சாட்சியில் விழுந்து விட்ட பேரிடியானாய்.....

நீ நாதியற்றுப்போய் கையறு நிலையில் மரணித்தாய் என்று எதிரியும் சொல்லமாட்டான் உனது மரணத்தால் தமிழர் படும் வேதனையை உலகிற்குச் சொல்வதற்கு பெரிதாய் ஒரு கைகொடுத்தாய்....

உண்டகையின் ஈரம் உலருமுன் இரண்டகம் புரிவோர் வாழும் உலகிலே கண்டம் கடந்து நீ வாழ்ந்திட்ட போதிலும் -உன் எண்ணம் யாவுமே -தமிழ் ஈழத்தில் நிறுத்தினாய்....

ஐ.நா. முன்றலில் மரணவேதனையில் -நீ உருண்டு புரள்கையில் உன் உடலின் தசைத் துண்டுகள் வீதிகளில் கிளிந்து சிதறிக் கிடந்ததை பார்த்த தமிழ் மக்கள் கொதித்துப் போனார்கள்.

உன்னை வணங்குகிறேன் -உன் தியாகத்தைப் போற்றுகின்றேன் ஆனால்,இனிமேலும் இது போலயாரேனும் மடிவதனை ஏற்கவில்லை....

ஏற்கனவே 04.02.2009ல் எனது உணர்வுகளைப் பதிவுசெய்தேன்....

இப்படியான சாவுகளை நிறுத்தி சரித்திரத்தை மாற்றிவிடசாதனைகள் செய்வதென்றுமுடிவெடுங்ள் என்று....

ஆனால்,யார் கண்ணிலும் காட்டாமல் எனது மட்டிலேயே பத்திரப் படுத்திவிட்டேன்....

காலம் காலமாய் அதுவே என்பழக்கமாய்ப் போனது...

இன்று கவலையடைகிறேன் அன்றே வெளியிட்டிருந்தால் உன்போன்ற ஒருவனின் மரணத்தை நிறுத்தியிருக்கலாமா?என்று.

அதனால், நன்றோ.. தீதோ... என்கருத்தை உடனே வெளியிடுவதென்றோர் முடிவிற்கு ஆளானேன்.

இதுபோல் யாரும் உரிமைக்குரல் கொடுக்கும் எண்ணம் வந்த பின்னாலே நாள் பார்த்துத் தயங்காதீர் உடனேயே செயல் வடிவாக்குங்கள்.....

களம் வெல்லப்புலம் நின்று பலம் சேருங்கள் இந்தஉண்மை மகன் இறப்பை எண்ணிவிறைப்பாகுங்கள்...

இவன்,வசதிகளைத் துறந்துவிட்டு இறப்பெய்தினான் -ஆனால் தமிழரது வரலாற்றில் உயிர்ப் பெய்தினான்.

நாமும்,தமிழ்வாழ முடிந்தவரை உழைத்தாகுவோம் - என்றும் களைப் பென்ற வார்த்தையினைப்புறந்தள்ளுவோம்....

நாளும் சோர்வகன்று சுறுசுறுப்பாய் சுழன்றாடுவோம் தமிழீழவிடியலினைப் பாடும்வரைநடந்தாகுவோம்...

www.tamilkathir.comவன்னியில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடிகளை எடுத்து விளக்கும் ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா -நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா

பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா -நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா

எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா

வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை

புகைமண்டலமாய் ஆனதெம் தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா

பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின் சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா

இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம் மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவி எங்கள் ஜாதி - இவற்றோடு காட்டில் வாழ்கிறோம் பாப்பா

தேளும் பாம்பும் புடைசூழ - நாம் நாளும் வாழ்கிறோம் பாப்பா

தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம் தலைவிதி இதுதான் பாப்பா

அகதிகளா

www.tamilkathir.comஅன்புத் தமிழகமே! வணக்கம்,இந்தக் கவிதையினை அனைவரும் படியுங்கள். இதிலுள்ள இந்தியக் காங்கிரசார் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்..

ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள்

தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!?

அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம்.

பொன்னான பூமியிலேதமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று

ஒப்பாரி ஓலமிட - ஆங்கே

கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள்.

முண்டங்களாய் பிண்டங்களாய் - எம்

தமிழன் அறுபட்ட மிருகம்போலஅங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே

அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!?

தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச்சொல்வதற்கோ

நாதிகள் தாம் ஏதுமற்ற

நிலையாச்சே இவ்வுலகில்.

அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று

பாக்கிஸ்த்தானாய்..! பங்களாதேசாய்..!!

இந்தியாவாய்..!!! பிய்த்தெடுத்த எங்கள்

பாரதமக்களினை... மதமென்றும் இனமென்றும்

பிய்த்துப் பிரித்தெடுத்து - எங்கள்

அமைதிவாழ்வைக் குலைத்தவர்கள்...குலைந்துபோச்சு

அமைதியென்று - தம்

இரும்புக் கரங்களினால் - எம்மீதுஅடிபோட்டும்

வதைபோட்டும் அடக்குவதே - எங்கள்

இந்தியப் பொதுமறைகளன்றோ..!ஆனாலும்... ஆனாலும்..

தென்னகக் குடிகள்தான் - இந்திய

மக்களின் ஒற்றுமைக் கண்களென - எங்கள்

உயிர்மூச்சாய் கோசங்களிட்டவாறே இந்தியக் கரைகளோரம் - போர்(க்)

களங்களிலே எங்களையே நாம் கரைத்தோம்... தமிழர்

எங்களைத்தான் தியாகித்தோம். எத்தனை தடவைகள்

தான்பணமெனவும் பொன் பொருளெனவும்அள்ளியள்ளி நாம் கொடுத்தோம்..!?

அதனிலும் மேலாக - தமிழ் உறவான

எங்களையே அறுத்தெறிந்துகார்க்கிலிலே தங்கள்

இன்னுயிரைதியாகங்கள் செய்தாரே தமிழர்கள்.

அன்றென்றால்...வெள்ளையன் பிடியினிலே

பல நூறு வருடங்களாய்அடிமையாய்க் கிடந்துளன்ற பாரதமண்

மீட்கத் தமிழன் கொடுத்திட்ட தியாகங்கள் கொஞ்சமா நஞ்சமா..!?

அதைப் பட்டியல் போடவும் முடியுமா..?

திருப்பூர்க் குமரன் முதல்...

திருநெல்வேலி வாஞ்சிநாதன் வரை...

பாரத சுதந்திரம் வேண்டியே - எம்மினம்

அன்று எமைத் தீயாக்கி வென்றவர்கள்.இன்றென்றால்...

சிங்களன் திமிர்புரியும் தென்னகக் கொடி மண்ணில் - எங்கள்

தொப்புள்க் கொடி உறவெல்லாம் விட்டில்ப் பூச்சிகள் போல்

எரிகுண்டின் தாக்குதலால் - தினம்

எரிந்து புகைந்து வெந்து மடிகிறதே...என்செய்வோம்..!

என்செய்வோம்..!?தடாவென்றும் பொடாவென்றும்

வடநாட்டான் சட்டத்தால்வதைபட்ட மண்ணெமதில்

அமைதிவழிப் போராட்டம்மதிப்பற்றுப் போனதுவோ..!?

இந்தியத் தென்னாட்டில்தெருத் தெருவாய்

ஊரூராய் தமிழ் ஈழ மண்மீதின்

அவலத்தைஅணைப்பதற்கு மனிதங்கள் - நாம்

மனிதப் பிணைச் சங்கிலியாய் அல்லோலப் படுகையிலும் - எங்கள்

பதாதைகளின் கோரிக்கை கோசங்கள் எல்லாமும்

அதன்மேலாய்முடியாமல் ஏம்பலித்துஎங்களையே நாமெரித்தோம் - அவைகூட

வடநாட்டான் ஆதிக்கக் காதுகளில்..!?

தென்னாட்டான் விசர்வேசம் என்றாகி - மீண்டும்

எம்மீது தடைமேலே தடைபோட்டும்

எங்களது ஈழத்து உறவுகளை அழித்தொழிக்கும் இராணுவக் குண்டர்முதல்

அத்தனை உசாத் துணைகள் வரை

சியோனிஸக் கோத்தபாயா குழுமத்திடம்

கொண்டுபோய்ச் சேர்த்து நின்றுஅழிக்கின்றார் காங்கிரசார்.

எங்கள்தொப்புள்க்கொடி உறவுகளோ...எரிந்து புகைந்து - அவர்

வெந்து மடிகிறதை... முண்டங்களாய்

பிண்டங்களாய் - எம் தமிழன்

அறுபட்ட மிருகம் போலஅங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறதை

ஏதறியாப் பாலகரும் சாகிறதை - தம்

செய்மதியால் பார்க்கிறாரே - அதில்

ஏதறியாப் பாலகரும் துடிதுடித்து சாகிறதும் தெரியலையோ?

எங்களை மட்டுமல்ல - இந்தஉலகினையும் ஏமாற்றி வைத்திருக்கும்

சியோனிஸ சிறிலங்காவும் இந்தியக்காங்கிரசும்.

மண்ணெமதில் வேண்டுமன்றோ?

தமிழ் மானமுள்ள மறத் தமிழனாய் நாமிருந்தால்

காங்கிரசுக் கட்சியென்ற சொல்லினையே

துலைத்திடுவோம்நாடெங்கள் தென்னகத்தில்.

அத்துடனே... கலர் ரீவி தரும் கருணாநிதியானாலும்

எந்தவொரு கட்சியுடன் - காங்கிரசார்கூட்டுகளை வைத்தாலும்..!?

அக் கூட்டுகளின் கட்சிகளை - நாம்முழுமையாக நீக்கிடுவோம்.! நீக்கிடுவோம்..!!

அப்படி நாம் நீக்கிடும்கால் எமைத் தமிழராகப் பெற்றெடுத்த

எதுயிர்த் தமிழ்த் தாயினுக்கு - நாம்செய்யும் பெருமையெனும் உபகாரம்.

என் வீடே வாழ்க்கையென சுவர் நான்குள் சுருளாமல்விழித்தெழுந்து வாருங்கள்.

காங்கிரசார் மூஞ்சிகளில் கரிபூசிப் புறமுதுகு காட்டிடவே!

அன்று வெள்ளையனை விரட்டினோமே

அது போல இன்று தென்னகத்தால் காங்கிரசை விரட்டிடுவோம்

அது போல இன்று எனதன்புச் சகோதர சகோதரிகளே!

உங்களது ஒப்பற்ற உயிர்களினை எரித்தாரென்ற

சேதிகளைக் கேளாமல் காங்கிரசின் பிடியிருந்து மீண்டதுவே தென்னாடு - என்ற

பார்முழுதும் சேதிகொண்டு தாருங்கள்.

அத்துடனே... மனித வாழ்வியலின் பலமான - எங்கள்

வாக்குகளைச் சரியான முறைகளிலேபயன்படுத்தித் தென்னாட்டைக் காத்திடுவோம்.

நாம் இதனை ஏற்றிங்கு எடுக்கின்றோம் திடசங்கற்பம்.

- மா.செ.-

www.tamilkathir.comஅவுஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதைவாங்கியிருக்கிறார்களாம் ‘இந்தியர்கள்’. கடந்த வாரம் கூட ஒரு ‘இந்தியர்’ கும்மாங்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.

அவுஸ்திரேலிய அரசு ‘இனவெறி'யுடன் நடந்து கொள்கிறதாம்.

அடப் பாவிகளா... ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ‘இனவெறி' என்று கூச்சல் போட்டால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மழலைகள்... பெண்கள்... முதியவர்கள்... என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும் புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே... அதனை என்னவென்று சொல்வீர்கள்? அவுஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.

அதற்கே குய்யோ... முய்யோ... என்று கூப்பாடுகள்... பிரதமரின் எச்சரிக்கை... உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்... தூதுவர்களின் கண்டனம்... வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஓலங்கள்...

இவற்றையயல்லாம் பார்த்தும் கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது.
இதற்காக வேதனைப்படவுமில்லை.
கண்ணீர் வடிக்கவுமில்லை என்பதுதான் உண்மை.
காரணம்: எதை விதைக்கிறார்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
பத்துப் பதினைந்து நாட்கள்கூட ஆகவில்லை எம் இனத்தின் தளிர்களும்... இளம் குருத்துக்களும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது, ஒருவரும் வரவில்லை.
வாயைத் திறக்கவில்லை பிரதமர்.
வாயைத் திறக்கவில்லை தூதரகங்கள்.
வாயைத் திறக்கவில்லை உள்... வெளி அமைச்சகங்கள்.
தமிழகத்தின் சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது, கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.
குடும்பம் குடும்பமாய்க் கூடி அழுதோமே நாம்.
தமிழகத்தின் தெருக்கள் தோறும் சந்தித்துக் கொண்டவர்கள், “என்னவாச்சு பிரபாகரனுக்கு?”
“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின் கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.
‘கதியற்றோருக்குக் கடவுளே துணை’ என நம்பியவர்கள் கோயில்களில் குமுறித் தீர்த்தனர்...
மசூதிகளில் மனம் வெதும்பி மண்டியிட்டனர்...
ஆலயங்களில் அழுது புலம்பினர்...
மனிதரை நம்பியவர்களோ... யுத்தத்தையே நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.
எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.
வாயும் வயிறும் எரிகிறது.
குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.
அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும் தமிழன்.
ஆனால்... அவுஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.
எமது கண்ணீரைக்கூட கேலி செய்தது வடக்கத்திய மீடியாக்கள். தமிழர்களும் அவர்களது நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி. நாம் அழுதுகொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நாம் அப்படியா இருந்தோம்?
குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம். கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.
ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தையும்... வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும் கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.
கார்கிலில் போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.
அன்று அவர்கள் அழுதபோது நாமும் அழுதோம்.
ஆனால் இன்று நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,
என்ன கொடுமை இது?
ஆனால் இந்தப் பாரபட்சம் இன்று மட்டுமில்லை, என்றும்தான்.
வளைகுடாப் போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக் கிருஷ்ணன்.
பிஜித் தீவில் குஜராத்திகளுக்குப் பிரச்சினை என்றபோது குமுறி எழுந்தது இந்திய அரசு.
ஒஸ்ரியாவில் இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக, பஞ்சாப்பே பற்றி எரிந்தது.
அடுத்த கணமே “காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடாவிட்டாலும் தன் தசை ஆடியது இந்தியப் பிரதமருக்கு.
இவற்றையயல்லாம் பார்க்கும்போது, எனக்குள் எழும் கேள்வியயல்லாம் ஒன்றே ஒன்றுதான்:
எங்களைப்பற்றி இந்தியா கவலைப்படாதபோது, எதற்காக நாங்கள் இந்தியாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?
அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி...
அது ‘மாமா’ நேரு காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’ இந்திரா காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’யின் மருமகள் காலமாக இருந்தாலும் சரி...
அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி.
ஆக
தமிழனென்று சொல்லுவோம்.
தலை நிமிர்ந்து செல்லுவோம்.
தமிழர்களது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும் பட்சத்தில்.


- பாமரன்
(தமிழக அரசியல் வார இதழ் ஒன்றில் இருந்து)தலைநிமிர்ந்து நின்ற எங்கள் தமிழ்மக்கள் தமை அழித்த கொலைகாரன்

இராசபக்சே குலம் ஒருநாள் அழிந் தொழியும்

ஒருநாளில் கொன்றொழித்தான் உயர்ஈழத் தமிழர்களில்

இருபதாயிரம்பேரை இனப்பகைவன் இராசபக்சே

இருமூன்று மாதத்தில் ஒருலட்சம் தமிழர்களைக்

குறிவைத்துக் கொன்றழித்தான் கொடும்பாவி இராசபக்சே

கொத்தணியாம் குண்டுகளால் கொடியவனாம் இராசபக்சே

எத்தனையோ தமிழர்களை இல்லாமல் அழித்தானே.

வாழத் துடிக்கின்ற ஈழத் தமிழினத்தை

கோழை இராசபக்சே கொன்றழித்து விட்டானே

இட்லருக்கு அண்ணனாகி எங்கள்தமிழ் உறவுகளைக்

கொட்டடியில் அடைத்துவைத்துக் கொடுமைபல செய்கிறானே

மனிதநேயமில்லாத மாபாவி இராசபக்சே

தனிமையிலே நின்றழுது சாவான் உறுதியிது

அவன்சாகும் ஒருநாளில் ஐயோவென் றழுவதற்கு

எவன்வருவான் நாய்,நரியால் இழுபட்டுக் கிடப்பானே

உரிமைகேட்டு நின்றதமிழ் உறவுகளைக் கொன்றழித்த

சிறுமைசேர் இராசபக்சே சீரழிந்து சாவானே.

சீர்த்தமிழ்ப் பெண் குலத்தைச் சீரழித்த இராசபக்சே

சீரழிந்து தலைவெடித்துத் தெருவில்தான் கிடப்பானே

நெஞ்சம் எரியுதடா நினைக்கையிலே பதறுதடா

கொஞ்சமோ நீசெய்த கொடுமைகள் இராசபக்சே

எந்தமிழ் உறவுகளை இல்லாமல் கொன்றழிக்க

இந்தியா உடந்தையாக இருந்ததாம் உண்மைதானோ?

உண்மை அதுவானால் உயர்மானம் காக்கின்ற

திண்மைத் தமிழர்களே! சேர்ந்திடுவோம் ஓரணியில்

இனிமேலே நாங்கள் இந்தியர்கள் இல்லையென்று

துணிவுடனே கூட்டாகச் சொல்லிடுவோம் வாருங்கள்

நாம்தமிழர் நாம்தமிழர் நாம்தமிழர் என்றுரைப்போம்

ஆம் தமிழ் உறவுகளே அணிதிரள்வோம் வாருங்கள்!

- பேராசிரியர் அறிவரசன்

நன்றி: தென்செய்தி (16.08.2009)

பிடித்தது: என்னைக் கவர்ந்த பத்து நூல்கள்உங்களைக் கவர்ந்த பத்துப் புத்தகங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால், நா.பா.வின் குறிஞ்சிமலர், தி.ஜா.வின் மோகமுள், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை போன்ற சில நாவல்களே பலரது பட்டியல்களில் இடம்பிடிக்கும். இவையெல்லாம் சிறந்த படைப்புகளே. ஆனால் நாவல்கள் மட்டும்தான் படிக்க வேண்டியவையா? சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களிலும் இசை, மதம், தொல்லியல் போன்ற பல்வேறுதுறைகளிலும் எத்தனையோ நல்ல நல்ல நூல்கள் உண்டே? அவற்றையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எப்போது? அப்படியொரு முயற்சி இது. அண்மைக் காலத்தில் நான் முழுமையாக வாசித்த புத்தகங்களில் நாவல் தவிர்த்து என் கவனத்தைக் கவர்ந்த பத்தே பத்து நூல்களின் மிகச் சுருக்கமான அறிமுகம் இதோ: 1. எழுத்து உலகின் நட்சத்திரம் தீபம் நா.பார்த்தசாரதி நா.பா.பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அவரே எழுதிய இரு கட்டுரைகளும் நூலில் உண்டு. நா.பா. அமுதசுரபிக்காகச் சுயசரிதை எழுதிய போது எழுதியவாறே மருத்துவமனையில் காலமானது பற்றிச் சொல்லும் விக்கிரமன், நா.பா.வின் பிடிவாத குணம் பலமாகவும், பலவீனமாகவும் இருந்ததை விவரிக்கும் கி.ராஜேந்திரன், சைக்கிள் கேரியரில் அமர்ந்து நா.பா.பயணம் செய்ததை நினைவுகூரும் சுப்ர பாலன்....இப்படி நூலில் தொட்ட இடமெல்லாம் சுவாரஸ்யம். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் முத்திரை பதிக்கும் நூல். 2. "மாணிக்க வீணை': ஸ்வாமிநாத ஆத்ரேயர். தற்போது கோவிந்தபுரத்தில் வாழ்ந்துவரும் முதுபெரும் எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயர் எழுதிய கதை, கட்டுரை, நாவல் அடங்கிய நூல். தி.ஜானகிராமனின் நெருங்கிய நண்பர் ஆத்ரேயர். மணிக்கொடி மரபைச் சேர்ந்தவர். சம்ஸ்க்ருத அறிஞர். கட்டும் செட்டுமான சொற்சிக்கனம் நிறைந்த நடைதான் இவரது பலம். அந்த நடையழகில் மனம் பறிகொடுத்துக் கொண்டே வாசிக்கிறோம். படிப்பவர்களைக் கீழே வைக்கவிடாமல் கட்டி இழுத்துக் கொண்டு போகும் எழுத்தாற்றல். 3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலாசிரியர் எழுத்தாளர் நாகூர் ரூமியின் நடை வசீகரம் நூலுக்குத் தூண்டில். இஸ்லாம் என்பதே சாந்தியும் சமாதானமும்தான். வன்முறையும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை (பக் 56) என்கிறார் ஆசிரியர். நடைமுறையில் சிலர் செய்யும் தவறுக்கு ஒரு முழு சமுதாயத்தைத் தாக்குதல் தகாது என்ற உணர்வை ஏற்படுத்துகிறார். மதநல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க இந்நூல் உதவும். 4. டைரி (1916.1975) : சிவகுமார் நடிகர், ஓவியர் தற்போது கம்பராமாயணப் பேச்சாளர். திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கியவர் சிவகுமார். நேரப் பற்றாக்குறையால் தவிக்கும் பிரமுகர்களில் ஒருவரான இவரிடம் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது ஆச்சரியம். சிவகுமாரின் நாட்குறிப்பு இன்னொரு காலகட்ட கண்ணாடி. இடையிடையே கண்ணைக் கவரும் புகைப்படங்கள், நூலாசிரியரே வரைந்த ஓவியங்கள், அடுத்தவர் டைரியைப் படிப்பதில் தனி உல்லாசக் குறுகுறுப்பு இருப்பது மனித இயல்பு. ஒருவர் தன் டைரியையே அச்சிட்டுத் தந்தால் சுவாரஸ்யத்திற்குக் கேட்கவா வேண்டும்? 5. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் பிரமிக்க வைக்கும் தயாரிப்பு. ஒவ்வொரு கவிஞருக்கும் அமுதோன் வரைந்த கண்ணையள்ளும் சித்திரங்கள். நாம் விரும்பி வாசித்த கவிஞர்களின் சித்திரங்கள் வரும்போது, விரல்கள் பக்கத்தைப் புரட்டாமல் தயங்கி நிற்கின்றன. அகநானூறு, புறநானூறு என நூறுநூறாய்த் தொகுக்கும் தமிழ் மரபில் தொகுப்பாசிரியர் ப.முத்துக்குமாரசுவாமி இறங்கியுள்ளார். சிலம்பொலி செல்லப்பன் அணிந்துரை, நூலின் முகப்பில் சூட்டிய சொல் மகுடம். ஜாதி, மத, அரசியல் பிரிவுகள் கடந்து கவிதை அனுபவம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நூலைத் தொகுத்திருக்கும் மனப்பக்குவம் மெச்சத்தக்கது. 6. ஐராவதி கல்வெட்டியில் மேதை ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர். தினமணி முன்னாள் ஆசிரியர். அவரைப் பற்றியும் அவர் துறைசார்ந்த அறிஞர்களின் பொதுக் கட்டுரைகளை உள்ளடக்கியும் வெளிவந்துள்ளது ஐராவதி என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டிருக்கும் நூல். வெளிதேசங்களிலும் இந்தியாவிலுமாக இருக்கும் இளைஞர்கள் சேர்ந்து நூலை உருவாக்கியிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகளைக் கேட்டு வாங்குவது எத்தனை கடினமான பணி என்பதைச் சொல்லத் தேவையில்லை. 7. ஒரு மனிதன் மகாத்மாவான கதை: கி.கஸ்தூரி ரங்கன். கணையாழி நிறுவனரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான கி.கஸ்தூரி ரங்கன் எழுதிய நூல். மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான எளிய நடை. காந்தியைப் போலவே நூலின் தயாரிப்பும் ஆடம்பரமே இல்லாமல் அமைந்துள்ளது. ஆங்காங்கே பொருத்தமான புகைப்படங்கள். காந்தியின் வாழ்வைப் படிக்கப் படிக்க ஒரு மனிதர்தானே இப்படியெல்லாம் வாழ்ந்தார், நாமும் ஏன் இப்படி வாழக்கூடாது என்ற உத்வேகம் இளைஞர்களிடையே எழும். எழ வேண்டும். 8. கோதை நாயகி இசை மார்க்கம் வை.மு.கோதைநாயகியை முன்னோடி எழுத்தாளர், பத்திரிகையாளர், சுதந்திரத் தியாகி, பேச்சாளர் என்று பலரும் அறிவார்கள். ஆனால் அவர் மிகச் சிறப்பான இசைக் கலைஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கோதைநாயகியின் மாபெரும் சிறப்பே அவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறை நிபுணர்களுக்கு இணையாகச் செயலாற்றித் தானும் அத்துறை நிபுணராகவே ஒளிவீசினார் என்பதுதான். அவர் மிகச் சிறந்த கீர்த்தனை ஆசிரியர். அவரே எழுதிய கீர்த்தனைகள் பல இதுவரை அச்சேறாமல் இருந்தன. நம் நன்றிக்குரிய பி.ராமபத்ரன் அவற்றை அவரது குடும்பத்தாரிடமிருந்து தேடித் தொகுத்து கோதைநாயகியே எழுதிய ஸ்வரக் குறிப்புகளுடன் நூலாக்கியுள்ளார். இசையன்பர்கள் தவறவிடக் கூடாத அபூர்வ நூல். 9. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் கோம்பி விருத்தம் (பழைய இலக்கியம்) அகலிகை வெண்பா உள்படப் பல அரிய தமிழ் நூல்களால் இலக்கியத்தை அணி செய்த வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் 150 ம் ஆண்டு இது. 90 ஆண்டுக்கு மேல் வாழ்ந்த அவர், தொழிலால் கால்நடை மருத்துவர். அவர் எழுதிய கம்பராமாயண சாரம் என்ற நூல் கம்பனின் கவிதைகளுக்கு ஓர் ஒளிவிளக்கு. கோம்பி விருத்தம் என்ற விருத்தப் பாக்களால் ஆன ஒரு நூலையும் எழுதியுள்ளார். ஜெ.மெர்ரிக், ஆங்கிலத்தில் எழுதிய புகழ்பெற்ற கேமலியான் (பட்ங் இட்ஹம்ப்ங்ர்ய்) என்ற நூலின் தமிழ்க் கவிதையாக்கம் இது. கிடைக்காமலிருந்த இந்நூல் அண்மையில் மறுபிரசுரம் கண்டுள்ளது. பழந்தமிழன்பர்கள் தவறவிடக் கூடாத நூல். 10. அழகிரிசாமி இலக்கியத் தடம்: தொகுப்பாசிரியர் மு.பரமசிவம். மறக்க முடியாத மாணிக்கங்களில் ஒருவர் கு.அழகிரிசாமி. தன்னடக்கமே வடிவான ஞானி. அவரது எழுத்து குறித்து வல்லிக் கண்ணன், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஆ.மாதவன், மகரிஷி, சா.கந்தசாமி, தீப.நடராஜன், ராஜமார்த்தாண்டன், கல்கி, சிட்டி, வண்ணநிலவன், பிரபஞ்சன், நீலபத்மநாபன், வெங்கட்சாமிநாதன் உள்ளிட்ட பலரது கட்டுரைகளின் தொகுப்பு இது. அழகிரிசாமியின் வாழ்வும் பேசப்படுகிறது. படைப்புகள் விமர்சனப்பூர்வமாகவும் அணுகப்படுகிறது. தொகுப்பாசிரியர் மு.பரமசிவத்தின் கடின உழைப்பால் தமிழுக்குக் கிடைத்த கொடை.
ஆறுதல் பரிசுக் கதை: அப்பாவின் அஞ்சலிஇடைவிடாமல் புலம்பிக்கொண்டிருந்தார் அப்பா. ""ஏண்டா மாரிமுத்து இப்படி நடக்குது?'' எதைப் பற்றிய பேச்சாக இருந்தாலும் இறுதியில் அப்பாவின் புலம்பல் இப்படியாகவே இருக்கிறது. சுப்பண்ணன்கூட இதுபற்றித்தான் நேற்று இவனிடம் விசாரித்தார். தோட்டத்தில் வேலை செய்கிற போதும் இப்படித்தான் புலம்புகிறாராம். ""உன்னோட படிப்பு, கல்யாணம், வேலை... இது பற்றிக்கூட எதுவும் இத்தனை நாள் பேசினதேயில்லைடா... இவரா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு... வயசுக்கு வந்த பொண்ணு வீட்ல காத்திட்டிருக்கா அதப் பத்தியும் கவலையில்லே...'' அம்மாவும் இதைத்தான் கூறுகிறாள். அப்பாவுக்கும் அரசியலுக்கும்கூட அப்படியொன்றும் நெருங்கிய பந்தம் ஒன்றுமில்லை. இவரோடு இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர்கள்தான். சாதிச் சங்கங்கள்கூட அலர்ஜிதான். அது பற்றியும் அம்மா அலுத்துக் கொள்வாள். ""எல்லா மனுசங்களும்தான், திண்ணை, பாலம்னு உக்காந்து நாலு வார்த்தை பேசுதுங்க... நம்ம வூட்டுலயும்தான ஒரு ஆம்பிளை இருக்குதே.. எப்பப்பாரு வூடே கதின்னு கெடக்கு...'' அம்மாவின் பேச்சுக்கு வேணிக்காதான் பதிலடி கொடுப்பாள். ""ஊரு வம்பில்லாம இருக்காகளே... அதுக்கு கோயில் கட்டி கும்பிடணும்... அதது வீட்டுல ஆம்பிளைக வூடே அண்டறதில்லேனு புலம்பலா இருக்கு... நீங்க என்னக்கா இப்படிச் சொல்றீங்க...'' ""ஆமா... உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கணும்'' ""நம்ம பானு புருஷன் கத தெரியும்தானே... அந்தக் காட்டுப் பண்ணாடி புள்ளக்கிட்டே வம்பு பண்ணி பெரும் ரகளையாப் போச்சு.... டேசன் வரை போயிருச்சாம்...'' ""ஊரு கதை நமக்கெதுக்கு...?'' ""இல்லேக்கா... அண்ணனைப் பத்தி நீங்க சொன்னதால நானும் சொன்னேன். நேத்து பேப்பர் படிச்சிட்டு இருந்தவரு பொலபொலன்னு கண்ணீர் வுட ஆரம்பிச்சிட்டாரு... ஏக்கா தெரிஞ்சவங்க யாராச்சும் ஏக்செண்ட் ஆயிட்டாங்களா..?'' ""இல்லேடி.. லெங்கா தேசத்திலே நம்மள மாதிரி தமிழ் ஆளுங்க இருக்காங்களாம்... அவங்களை அங்க இருக்கிற சில பேரு கொல்றாங்களாம்... அதுக்குத்தான் இப்படி அழுதிருக்காரு...'' ""அவங்க நமக்கென்ன தாயா? புள்ளையா? இந்த மனுசன் இப்படியும் அழுவாரா?'' நேற்று அருக்காணி அக்கா போனவுடன் அம்மாவும் இது பற்றித்தான் இவனிடம் நச்சரித்தனர். ""எலக்சன்ல ஜெயிக்கிறதும் சம்பாரிக்கறதுதான் இங்கிருக்கிறவங்களுக்கு பெரிசா போச்சு. நம்மாளுக அடிச்சு கொல்றதைப் பத்தி நம்ம மக்க ஆரும் பேசமாட்டேங்கிறாங்க. சில பேரும்தான் பேசுறாங்களாம்... அதுவும் எலக்சனுக்காகப் பேசுறதாகவும் சொல்றாங்க. எதை நம்பறதும்னும் தெரியல...'' ""ஏம்பா... நீங்க மூணாவதோ, நாலவதோதான படிச்சிருக்கிறதா சொன்னீங்க... அது கூட உங்களுக்கு ஞாபகம் இல்லே. பேப்பரே எழுத்துக்கூட்டித்தான் படிக்கிறீங்க. உங்களுக்கு இலங்கைப் பிரச்னை பத்தி என்ன தெரியும்? நீங்க இப்படி புலம்பி என்ன ஆகப் போகுது? சும்மா இருங்க. வீணா உடம்பக் கெடுக்காதீங்க...'' ""ஏலேய்... ரோசம் கெட்ட பயலே. வெட்கங்கெட்ட மூதி... உங்க ஆத்தால, உங்கப்பனை பக்கத்தூட்டுக்காரன் வந்து அடிச்சுப் போட்டுட்டு போனாலும் இப்படித்தான் பேசுவியாக்கும். உங்க அக்காளை மானக்கேடு படுத்தினா அப்பவும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருப்பாயோ? சும்மா கெடைக்கிற அரிசியைத் தின்னு தின்னு ஊரு சனங்கதான் ரோசம் கெட்டு பேச்சுன்னா நீயுமாடா... போடா போய் கவர்மென்ட்டை நக்கிப் பிழைடா. நீ கவர்மென்ட் வேலைக்காரன் அப்படித்தான் பேசுவே'' அதிர்ந்துவிட்டான் மாரிமுத்து. அப்பாவின் சொற்களே அல்ல இவை. அடி மனசில் வெந்து புலம்பிக் கொண்டிருக்கிற சொற்கள் இவை. எப்படியோ பிறீடுகிறது. ""டேய்... இங்க வாடா'' மறுபடியும் எதற்குக் கூப்பிடுகிறாரென்று அச்சமாயிருந்தது. ""லெங்கை எந்தப் பக்கம் இருக்குனுகூட எனக்குத் தெரியாதுடா. ஆனா நம்ம சனங்க கொத்து கொத்தா சாகறாங்கன்னு அன்னாடும் சொல்றாங்க.. நாம எதுவுமே செய்ய முடியாதாடா...'' ""அதெல்லாம் அரசாங்கம் பாத்துக்கும்... நீங்க அமைதியா இருங்க. அக்காவை அடுத்த வாரம் பொண்ணு பாக்க ஆனைமலைக்காரங்க வரப் போறாங்களாம். அதுக்கு மாமா வூட்டுக்கு நேர்ல போய் சொல்லிட்டு வரணும். நீங்க கொஞ்சம் தயாரா இருங்க...'' ""அரசாங்கம்ங்கிறது நாமதான்டா... அன்னிக்கு நம்ம ராசு தோட்டத்துல பக்கத்து ஊர்க்காரங்க யாருக்கும் தெரியாத செத்த கோழிகளை வீசிட்டுப் போயிட்டாங்க... ஆருன்னு விசாரிச்சு கண்டுபிடிச்சு, ராசு தட்டிக் கேட்டான். கேட்ட பாவத்துக்கு ராசைப் புடிச்சு அடிச்சுப் போட்டாங்க. நம்ம பிரசண்டு சும்மாவா இருந்தாரு. ஊரு சனங்களையெல்லாம் தெரட்டிட்டு நாயம் கேட்கப் போகலையா... இங்க எந்த அரசாங்கத்தை எதிர்பார்த்துட்டு இருந்தோம்..'' ""அது வேற... இது வேறப்பா... இப்படி நீங்க பேசுறத கேட்டால அவங்க ஆளுன்னு போலீஸ் புடிச்சிட்டு போயிடும்'' ""ஏண்டா ஒரு மனுசனோட கஸ்டத்தைப பத்தி இன்னொரு மனுசன் பொறுக்க முடியாம அங்கலாய்ப்பட்டா அது தப்பா? மனுஷத் தன்மை இல்லாதவங்கதான் இப்படியெல்லாம் பேசுவாங்க... அவங்களுக்கு வந்த சாவு. நமக்கு வர எவ்வளவு நேரமாகும். படிச்சவனுங்க இதயெல்லாம் யோசிக்க மாட்டானுங்க போலிருக்கு'' அப்பாவின் கேள்விகளுக்கு தன்னிடம் எந்தப் பதிலுமே இல்லையென்பதை உணர்ந்தபோது அவமானமாக இருப்பதோடு, கையாலாகத்தனமும் சுட்டது. அப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்பதே ஆச்சரியம். வியப்பு! நேற்றைக்கு முந்தைய தினம் குழந்தைகளைப் பற்றி அம்மாவிடம் ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார். கையில் செய்தித்தாள். ""இங்க பாரு காவேரி. இந்தக் கொடுமையை ஸ்கூலு படிக்கிற குழந்தைக மேல குண்டு போடுறாங்க. பிஞ்சுக் குழந்தைக அம்மான்னு கதறுச்சோ... அய்யோன்னு கதறுச்சோ... மனசு கேக்க மாட்டேங்குது... நெஞ்சே அடைச்சிட்ட மாதிரி இருக்குது.'' அன்றிரவு அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்திருந்தது. வாடகை காரில் பொள்ளாச்சிக்கு கொண்டு போக வேண்டியதாயிற்று. போகிறவரை தவிப்பாய் இருந்தது. அப்பாவின் முகம் பரிதாபகரமானதாகவும் எதையோ இழந்ததின் துயரமாகவும் இருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள். ஆனால் மனதில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என்றார்கள். அதிர்ச்சி தரக்கூடிய செய்தி எதையும் பக்குவமாகத்தான் சொல்ல வேண்டுமாம்! மாமா, அத்தை, சித்தப்பா, சித்தியென்று வீடு நிறைந்துவிட்டது. எல்லோரும் இவருக்காக காத்திருக்க, இவர் தொலைக்காட்சியில் இடைவிடாமல் சேனலை மாற்றிக்கொண்டிருந்தார். ""கொஞ்சம் கொஞ்சமா ராணுவம் நெருங்குதாம்... நம்ம நாட்டை ஆள்றவங்க தலையிட்டா போர் நின்னு போயிடுமாம்... டீக்கடையில பேசிட்டாங்க... நாம ஏதாவது செஞ்சாகணும்...'' ""சித்த சும்மாயிருங்க... இப்படி தொணதொணன்னு பேசிட்டு இருந்தா நோவு மறுபடியும் வந்திராதா... யாரு எப்படிப் போனா... நமக்கென்ன... நம்ம கையும் காலும் நல்லாருந்தாதான் நமக்காகும்... தலைக்கு மேலே பொண்ணு காரியமிருக்கு... பையன் ஒருத்தனா என்ன பண்ணமுடியும்? அத பத்தி ஓசிக்காம, அங்க செத்தாக... இங்க செத்தாங்கன்னு...'' அம்மா பேச்சை முடிப்பதற்குள் அப்பாவுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்திருந்தது. கையிலிருந்த ரிமோட்டை ஓங்கி சுவற்றில் அடித்த அடியில் அது நொறுங்கி விழுந்தது. பேசாமல் போய் படுத்துக் கொண்டார். விடிந்ததும், எப்போதும் போகிற டீக்கடைக்குப் போனார். பதறியபடி அதே வேகத்தில் வந்தார். ""இனி அங்க நம்ம ஜனங்க இருக்க வாய்ப்பே இல்லையாம்'' கதறிக் கதறி அழுதார். அம்மாவும், அக்காவும் திகைத்துப் போயிருந்தார்கள். எப்படித் தேற்றுவது. எப்படி ஆறுதல் சொல்வது? புதிராக இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. ""ஏலேய் தண்ணிக்கு தீப்போடு... குளிக்கணும்...'' மடமடவென்று வெளியேறினார். அரை மணி நேரத்தில் அப்பா திரும்பியிருந்தார். அவரின் தோற்றம் பார்த்ததும், அதிர்ச்சியும் திகைப்பாகவும் இருந்தது. மொட்டையடித்திருந்தார். ""அத்தனை சாவுக்கும் எதிரா... என்னை மாதிரி ஆளுங்க எதுவும் செய்ய முடியல... செய்யவும் முடியாதுன்னு தெரியும்... அதாண்டா... இப்படி...'' போனமாதம்தான் தாத்தாவின் மறைவிற்கு மொட்டையடித்திருந்தார் அப்பா. இப்போதும் அதே மொட்டை!
கருத்துக்கள்

பிற பரிசுகள் கதைகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனித நேய உணர்வு எல்லாரிடமும் இருப்பதை இயற்கையாக 'அப்பா' மூலம் விளக்கிய அம்சகோபால் முருகனுக்கு முதல் பரிசே வழங்கலாம். எண்ணற்ற மனிதர்களின் உள்ளக் கிடக்கையை எளிமையாகத் தெரிவித்துள்ளார். இக்கதையை வெளியிட்டதன் மூலம் தினமணிக்கும் பெருமை கிடைததுள்ளது. நாடெங்கும் இத்தகைய 'அப்பாக்கள்' இருப்பினும் பதவி வெறியும் பண வெறியும் அதிகார வெறியும் உள்ளவர்கள் உணரவில்லையே! காலம் உணர்த்தும் முன் எத்தனை உயிர்கள் இன்னும் அழியுமோ? வருத்தத்துடன் இலககுவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/27/2009 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
முகங்கள்: 65 பெண்கள் எழுதும் ஒரு புத்தகம்!சவுதி அரேபியாவில் ரியாத் நகரம். அங்கேயுள்ள எட்டு மாடிக் கட்டிடத்தில் ஒன்று, அல்மார்ஜி பில்டிங். அது 1998 ஆம் ஆண்டு. எங்கும் போர் மேகங்கள் சூழ்ந்த காலம். ஸ்கட் ஏவுகணைகள் குறிபார்த்து ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடியில் எந்த நேரத்தில் ஸ்கட் தாக்குதல் நடக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஒரு தமிழ்க் குடும்பம். அந்த அனுபவம் பின்னர் ஒரு புத்தகமாக வெளிவந்தது "வளைகுடாப் போரில் நான்' என்ற பெயரில். அதை எழுதியவர்: விஜயலட்சுமி மாசிலாமணி. வாழ்வின் அனுபவங்களை உயிரோட்டமான நடையில் எழுதும் விஜயலட்சுமி மாசிலாமணி இதுவரை வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 12. மிக வித்தியாசமான முறையில் பெண்கள் அமைப்பு ஒன்றையும் சென்னை மடிப்பாக்கம் சதாசிவ நகரில் "சூரியத் தென்றல்' என்ற பெயரில் அவர் நடத்தி வருகிறார். "சூரியத் தென்றலின்' நோக்கம், செயல்பாடுகளைப் பற்றி அவர் நம்மிடம் பேசினார். * சென்னையில் உள்ள நீங்கள் சவுதி அரேபியாவில் நடந்த போர் அனுபவங்களை எழுதியது எப்படி?நான் பிறந்தது பழநி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. படித்துவிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவை மற்றும் பேரவைத் துறைகளில் அரசு அலுவலராக 11 ஆண்டுகள் வேலை செய்தேன். கணவர் டாக்டர் வ.மாசிலாமணி ஆராய்ச்சியாளர். இயற்பியல் பேராசிரியர். பணி காரணமாக அவர் சவுதி அரேபியாவில் இருக்கிறார். நானும் அதனால் செüதி அரேபியாவுக்குச் சென்றேன். சென்று கொண்டிருக்கிறேன். அப்போது சதாம் உசேன் ஸ்கட் ஏவுகணைகளை ஏவிவிட்டுக் கொண்டிருந்தார். அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உணர்வலைகளே பின்னர் புத்தகமாக ஆனது. அதைப் படித்த எழுத்தாளர் சிவசங்கரி, "ரொம்ப ஆத்மார்த்தமாக இருக்கிறது' என்று பாராட்டினார். வேறு என்ன எழுதியிருக்கிறீர்கள்? அந்தப் புத்தகம் தவிர சுயமுன்னேற்ற நூல்கள், நாவல், கட்டுரைத் தொகுப்பு என இதுவரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் புத்தகம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது. சமீபத்தில் "அருநெல்லிக்காய்' என்ற புத்தகம் வெளிவந்தது. பல தமிழ் இதழ்களில் எழுதி வருகிறேன். பொதுவாக என்னுடைய கதைகள் என்னைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும். குறிப்பாக பெண்களின் பிரச்னைகளை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய சிறுகதை "அந்த ராத்திரிக்குத் தூக்கமில்லை'யைப் பலரும் பாராட்டினர். அதில் ஒரு பெண்ணுக்கு மார்பில் கட்டி வந்துவிடும். அது என்ன சாதாரண கட்டியா? மார்பகப் புற்றுநோய்க் கட்டியா? என்பதை அறிந்து கொள்ள அவள் டெஸ்ட் எடுத்துவிட்டு வந்திருப்பாள். ரிசல்ட் வந்திருக்காது. புற்றுநோய்க் கட்டியாக அது இருக்குமோ என்ற அவளுடைய பயமும், மன உணர்வுகளையும் சித்திரிக்கும் கதைதான் அது. மகளிருக்கான அமைப்பைத் தொடங்கியது எப்படி? பெண்களின் வாழ்க்கையில் நாற்பது வயதாகிவிட்டால் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிடும். அதுவரை அவர்கள் உலகம் கணவர், குழந்தைகள், வீடு என்று கடிவாளம் போட்டதுபோல இருக்கும். 40 வயது நெருங்கும்போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுடைய தேவையை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதுவரை குடும்பம் என்ற எல்லைக்குள் உழன்று கொண்டு இருந்த பெண் - அதுவரை தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்த பெண் - தன்னைப் பற்றி முதன்முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறாள். தான் கல்லூரியில் படிக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். அந்தச் சந்தோஷம் எல்லாம் எங்கே போனது? நாம் எதைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பிக்கிறாள். அவள் சிறுவயதில் கற்றவை; வளர்த்துக் கொண்ட திறமைகள் எல்லாம் காலப் போக்கில் மங்கி மறைந்து போயிருப்பதைப் பார்க்கிறாள். கடைசியில் அவளுக்கு மிஞ்சுவது மன இறுக்கம். இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சவுதி அரேபியாவில் நான் இருந்த கட்டிடத்தில் உள்ள தமிழ்ப் பெண்களை எல்லாம் இணைத்து முதன்முதலில் "டேஃபடில்ஸ் கலைக் கூடம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். பெண்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், ஒருவர் தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கவும் இந்த அமைப்பு உதவியது. அதுமட்டுமல்ல சுனாமியின்போதும், குஜராத் பூகம்பத்தின் போதும் எங்கள் அமைப்பின் மூலமாக நமது மக்களுக்கு துணிகள், பாத்திரங்கள் உட்பட எங்களால் முடிந்த அனைத்தையும் அங்கிருந்து திரட்டி அனுப்பினோம். அதன் பின்பு சென்னைக்கு வரும்போது இங்குள்ள பெண்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அடிப்படையில் துவக்கப்பட்டதுதான் "சூரியத் தென்றல்' பெண்கள் அமைப்பு. * "சூரியத் தென்றல்' மூலமாக என்னவெல்லாம் செய்கிறீர்கள்? நான் முதலில் சொன்னபடி 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பகுதியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து சூரியத் தென்றலை ஆரம்பித்தோம். முதலில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தாம் சேர்ந்தனர். இப்போது எல்லா வயதினரும் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த அமைப்பில் உள்ள பெண்கள் தங்களுக்குத் தெரிந்ததை பிற பெண்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு பெண் மிக நன்றாக ஓவியம் தீட்டியிருக்கலாம். பாடியிருக்கலாம். கதை, கவிதை எழுதியிருக்கலாம். கோலம் போடுதலில் திறமை காட்டியிருக்கலாம். பிறருக்குத் தெரியாத புதுவிதமான சமையல்முறைகளைத் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னர் இந்தப் பழைய திறமைகள் மங்கி விடுகின்றன. அவளுடைய கவனம் வேறு திசையில் திரும்பிவிடுகிறது. அப்படிப்பட்ட பெண்களை இந்த அமைப்பில் சேர்க்கிறோம். ஓவியத் திறமையுள்ளவர்களை ஓவியம் வரையச் சொல்கிறோம். சமையல் கலையில் தேர்ச்சி உள்ளவர்களை அதைச் செய்யச் சொல்கிறோம். பெண்கள் தங்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகள் எவை என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். "உன்னையே நீ அறிவாய்' என்று அவர்களிடம் சொல்கிறோம். அவர்கள் வரைந்த ஓவியங்கள், செய்த உணவுப் பொருட்கள், ஸ்வீட்கள் போன்றவற்றைப் பிறர் தெரிந்து கொள்ளவும், வாங்கிப் பயன்படுத்தவும் லயன்ஸ் கிளப் மூலமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஸ்டால் ஏற்பாடு செய்து தந்தோம். இதன் மூலம் "சூரியத் தென்றல்' பெண்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தன. பெண்களுக்கும் தன்னம்பிக்கை வளர்கிறது. அவர்களின் மன இறுக்கம் காணாமற் போகிறது. அதுமட்டுமல்ல, இந்தக் குழுவில் உள்ள 65 பெண்கள் சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. "உருளைக் கிழங்கில் 100 வகைச் சமையல்' என்ற அந்தப் புத்தகத்தில் உள்ள சமையல் குறிப்புகளை இந்த 65 பெண்களும் எழுதியிருக்கிறார்கள்.* வேறு என்ன பணிகள் செய்கிறீர்கள்?பெண்களுக்கு வரக் கூடிய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை முகாமை எங்கள் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கீதா, டாக்டர் உமா ஆகியோரின் உதவியுடன் நடத்தினோம். சென்னைத் தொலைக்காட்சி பொதிகையில் "விழித்திடு பெண்ணே விழித்திடு' என்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினோம்.