lankasri
கவிதைகள்
www.lankasripoems.com
Home | Science and Technology
உங்களுடைய கவிதைகளை அனுப்ப - poem@lankasri.com
இனமொன்று அழிவதைஏற்கின்ற
இவ்வுலகின் முன் எவன்தான்
மனம்திறந்து பேச முன்வருவான்?
இயலுமா? சாத்தியம்தான் ஆகுமா ?
வனவேடர் கையில்புறாவாக
வதைபடும் தமிழர்நிலை புரியாத உலகே
தினம்ஓன்று தான் நீ தாங்குவாயா
எம்மினம்படும் துயரம்தனை?
கனவல்ல கதையல்ல காட்சியல்ல
கற்பனையல்ல சொல்வது நிஜம்
புனைகதையென்று எண்ணாதே
போய்ப்பார் எம்மவர்படும் துயரமதை
சேற்றிலே கால்வைத்து பலபேரை
சோற்றிலே கைவைக்க உதவியவர்
ஆற்றிட தேற்றிட யாருமின்றி அடுத்தவரிடம்
சோற்றுக்காய் கையேந்தி சோரம்போகலாமா?
வேற்றுமனத்துடன் எமை என்றுமே பார்த்துபார்த்து
வேதனைகள் பல தந்து தினம் வருத்திவருத்தி
மாற்றான் தாய்மக்களாகய் நினைக்கும் அரசா
மறுவாழ்வோ புணர்வாழ்வோ தரும் தமிழருக்கு?
இனக்கலவரம் என்றுசொல்லி சொல்லி எத்தனைதடவை
இனவழிப்பையே செய்யும் ஈனர்களின் இயக்கர்களின்
மனக்கணக்கு இன்னும் புரியல்லையோ உலகே?
உனக்கும் ஆதாயம் இருந்தால்தான் நீயும் கண்திறப்பாயோ?
தனக்குத்தனக்கு என்றால்தான் சுளகு படக்குபடக்கு எனுமென எம்மினசனத்தைக் காக்காத உனைப்போன்றோர்க்குத்தானோ
சொன்னார் எம் முன்னோர்? என்செய்வோம் ?-தமிழினத்தில்
கனக்கப்படித்த கறுப்புச்சட்டைகள் பலவிருந்தும் -காலாகாலத்தில்
தம் இனத்தைக்காக்க இதுவரையில் யாராலும் முடியல்லையே
அவர்கள் கையிலேந்திய சட்டப்பொத்தகத்தாலும்……………
ம்ம்……?
இனஅறுப்புச் செய்வோருடன் இனியிருத்தல் இயலாதெனும் எம்மவர்
எம்மிறமைபோற்றிட திறமைகாட்டி வறுமைபோக்கி உரிமைநிலைநாட்டிட
உலகே உன்கண்ணும் மனமும் வாயும் திறவாயோ?
மனித உரிமை உணர்வு நேயம்கொண்ட
தமிழர் உயிர்களை வாழவையாயோ ?
கவிவன்
நெதர்லாந்து
இணைப்பு: Nila
25 Aug 2009

Comments
Post a Comment