அண்ணா
தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளையே
தமிழ் மக்களுக்காக வந்துதித்த கடவுளே
வழிகாட்டி எமையிணைத்த அண்ணனே
ஈழத்தை உயிராய் நினைத்த எம்தலைவனே

ஈழம் மலருமுன் உன்னுயிர் போகுமா?
சுதந்திரக்காற்றை சுவாசிக்காது போவாயா?
மக்கள்துயர் துடைக்காது விட்டுப்பிரிவாயா?
தீர்வு காணாமல் ஈழப்போர்தான் முடியுமா?

கடவுளுக்கு வயதுண்டா?
கடவுளுக்கு அழிவுண்டா?
கடவுளுக்கு எமனுண்டா?
எம்கடவுள் உனக்கு சாவுண்டா?

மிருகவம்சப்பேய்கள் கத்துகின்றன!
சாத்தானின் வாரிசுகள் ஆடகின்றன!
உனையழித்து வென்றதென துள்ளுகின்றன!
வரவிருக்கும் இழப்பைப்புரியாமல் கொண்டாடுகின்றன!

நீ இருக்கிறாய் என்பதுதான் உண்மை
உனையாறவிட்டு எழுவதே மக்களின் கடமை
எதிர்காலத்தில் அழியும் எம்மவரின் வறுமை
மறவோம் ஒன்றே எமது தலைமை

"போராட்ட வடிவங்கள் மாறலாம் எனினும் இலட்சியம் மாறாது�
என்ற உன் சிந்தனையை நாம் மறக்கவில்லை!
எம்மிடம் தந்த இப்பணியை நாம் மறுக்கவில்லை!
களத்தில் ஓய்வெடுக்க புலத்தில் நாம் எழுகிறோம்!
உம்முடன் சேர்ந்து உம்பணியில் இணைகிறோம்!

எதிரியின் வாயை அடக்க
அயல் நாட்டின் வாயைப் பிழக்க
தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்க
உன்பேச்சை எதிர்பார்த்து நிற்கின்றோம்!
ஆறதலைக்கேட்க உன்மக்கள் காத்திருப்போம்!!!







வைசுணவி
இணைப்பு: Nila
24 Aug 2009

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்