lankasri

கவிதைகள்


www.lankasripoems.com

Home | Science and Technology

உங்களுடைய கவிதைகளை அனுப்ப - poem@lankasri.com

ஒன்று சேரட்டும் - கரங்கள்
ஒன்று சேரட்டும்.
ஒன்றாய் உயரட்டும் - குரல்கள்
ஒன்றாய் உயரட்டும்.

தமிழன் என்ற ஒருமைப் பாட்டை
தமிழர் என்று பன்மையாக மாற்றிவோம்.
அணி திரள்வோம்......அலை அலையாய்......
அரவணைப்போம்....... என் தாயாக உறவுகளை.

அடுத்த நாட்டுப் பிரச்சனையைக்
கேட்கவில்லை நாங்கள்.
அடுத்த நாட்டு அரசியலில்
நுழையவில்லை நாங்கள்.

அமைதிப் பூங்காவில்.....உறங்கிக்
கொண்டிருந்த எம் உறவுகள்.- இன்று
உண்ண உணவின்றி...உடுக்க உடையின்றி...
உறங்க உறைவிடமின்றி...உதவ உறவுகளின்றி...
அகதியாய்... அனாதையாய்...அரக்கன் பிடியில்.

பாரதமே படுத்து உறங்காதே. - எம்
பாதி உறவு உன்னிடம்.
மீதி உறவு கண்ணீருடன்
இன்று எமக்கு இன்நிலை.
நாளை உனக்கும் அதே நிலை...

அந்த நேரம் குரல் கொடு.
மறவர் படை மார்வுகள்
மானம் காக்க...
திசை திரும்பும் உன் வாசம்

ஈழம் கடுகுபோல் சிறிது. ஆனால்
ஈகை கடலைப்போல் பெரிது.
தஞ்சம் என்று வந்தால்...
தாங்கும் எம் நெஞ்சங்கள்.

வல்லரசே.... உன்னிடம்
வார்த்தை இல்லையா...?
வாய் கிழிய எம்மினம்
வருந்திக் கதறுகிறதே...- நீயொரு
வார்த்தை சொன்னால்...
உயிர் பெறும் தமிழீழம்.

இல்லையெனில்...
வல்லாதிக்க அரசே.....
இனிவரும் முடிவில் - உன்
பேச்சுக்கு இடமே இல்லை.

தமிழுக்கு தலை வணங்கும்
நாடுகள் எதுவோ...
உங்கள் அபயக் குரலுக்கு
உயிர் கொடுப்போம் நாங்கள்







அபிசேகா.
இணைப்பு: Nila
24 Aug 2009

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்