செய்மதி தந்த சவக்குழிகள்


உலக நிலை சொல்லும் செய்மதியே
உயர் வான் நின்று
நீ தந்த வன்னிச் சவக்குழிகளில்
மலையளவு மனித உயிர்
உரிமை மீறலில் வீழ்ந்தும்
தினையளவே என்கிறது
ஐ.நாவின் கண்ணும்

கல்மனச் சிங்களர் காலடி கிடந்தே
கானகம் நிலைகொண்டோம்
போர்க்களம் வென்ற வேலனின் மகனால்
ஊர்மனை ஆண்டிருந்தோம்

யார் கண் பட்டதோ ராசா
ஊர்க் கண்ணும் கெட்டதே லேசா
முதலை ஆத்திலே மூழ்கி அழிகின்றோம்
முடிவுரை என் நாளோ


வாழ்விடம் இழந்தோம் வதிவிடம் இழந்தோம்
உயிலையும் மாற்றி எழுதுகிறார்
உயிர்காப்பு வளையமென
ஊரையே அழைத்து
சவக்குழி அகழ்வில் மூடுகிறார்

எண்ணிக்கை யற்று லச்சம் உயிர்கள்
எம் மண்ணில் வீழ்ந்தாலும்
வீழ்ந்த பிணங்களை எண்ணிய பாங்கிமூன்
ஏழாயிரம் என்கிறாரே

செய்மதி தந்த படங்களினாலே
பொய்யுரை கிளிந்தபின்னும்
உள் நுழைவு வாசலில்
உலக உரிமை மீறல் காப்பகமும்
வலுவிழந்து கிடப்பதேன்

சொல்லு பல்லக்கும் தம்பி கால்நடையெனும்
பழமொழி பொய்க்கவில்லை
கால காலத்திற்கும் நகருதிங்கே
கடவுச் சீட்டுக்கள்தானே.






வல்வை சுஜேன்.
இணைப்பு: Nila
25 Aug 2009

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue