மெய்
முள்ளி வாய்க்காலில்
அள்ளி வைத்த கொள்ளியில்
ஆங்காங்காய் அவிந்து போன
தேசமக்கள் தீர்வொன்றும் அற்றும்
தேடுவாரற்று செத்துப் போனீர்கள்

சாவடைந்த நீங்கள்
சரிந்து ஒரு நாளில்
மீதியான நாம்
சாவு வரும் வரை
நோவுள்ளோம் நொந்துள்ளோம்

விழிக்குள்ளிருக்கும் பூவல்
தூர்ந்து தொலைந்ததாக
மொழிக்குள் முனுகல்
முழு நீள பொருளாச்சு !

எங்களுக்குள்ளிருந்து
எல்லாமே வெளிப்போனதாக
எப்போதும் சொல்கிறது
இதுபோல சோகம்
இன்னொன்றிருந்திடுமா ?

இங்கே ஜடங்களாக
இறப்பற்றுக் கிடக்கின்றோம்
திறப்பதற்கு சாவிகள்
தோதற்று போனாச்சு
காரியங்கள் யாவுமே
காணாத்து போயிற்று

இந்த யுகத்தில்---என்ன
ஒர் இருக்கையைத் தேடலில்.
இத்தனை விலையா ?
இருக்குமா இம்மட்டும்

வளமாக வாழ்ந்து
வாரியிறைத்த வன்னியரே
வாழ்ந்த தரை தேட
காத்திருக்கும் காட்சி
காணவா ? காலமெல்லாம்
கணங் கணமாய் பார்த்திருந்தோம் !

மண்ணை நோக்கின்றோம்,
மறு விநாடி மெய்யுணர
விண்ணைப் பார்க்கின்றோம்
மனதை எங்கிலுமே -மாறி
ஒட்டிவிடச் செய்கின்றோம்
ஒட்டாது தள்ளுவன
ஓடோடி வந்தொட்ட
கரைகடந்து நெஞ்சழவே
முகம் பார்த்து பேச்செழா
வித்தைக்குள் வாழ்வானோம் !







- கோசல்யா -
இணைப்பு: Nila
24 Aug 2009

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue