பூவைப் போன்றது பூவேதான்
பூவும் குழந்தையும் ஒன்றேதான்
குழந்தை என்றால் குழந்தைதான்
குழந்தை போன்றெதுவும் இல்லைதான்!
கள்ளம் இல்லா உள்ளம்தான்
கடவுள் வாழும் இல்லம்தான்
பிள்ளை மனமும் வெள்ளைதான்
பேசும் தெய்வம் பிள்ளைதான்!
அசையும் குழந்தை மழலைதான்
அமுதம் ஊறும் குழலேதான்
இதனில் சிறந்தது யாழேதான்
என்பார் செவிகள் பாழேதான்!
நடக்கும் குழந்தையொரு அன்னம்தான்
நடந்தால் மகிழ்வாள் அன்னைதான்
சிரிக்கும் குழந்தை கன்னம்தான்
சின்னத் தங்கக் கிண்ணம்தான்!
கருத்துக்கள்
Children Literature in Tamil is very very small in size. I wish more Children Songs and Stories to be published in Tamil.
By kala
8/3/2009 10:20:00 PM
8/3/2009 10:20:00 PM