Tuesday, July 29, 2014

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே!

-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
 kurunthokai02
  தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன? தலைவனை அடைவதே. தலைவன் இவளையடைந்து மணம் நிகழ்த்தல் வேண்டும். அல்லது தலைவி தலைவனிடத்திற்குச் சென்று மணக்குமாறு செய்தல் வேண்டும் ஒரு பெண் தன் காதல் மிகுதியால் காதலனை நாடிச்செல்லுதல் மிக அருமை. தன் காதலனை அடைய முடியாத நிலைகள் வீட்டில் ஏற்படுத்தப்படுமாயின், அஃதாவது வேறு ஆடவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்குப் பெற்றோர் முயல்வரேல், அப்பொழுது தலைவி தலைவன் இடத்தைத் தானே நாடிச்செல்வதால் குற்றமில்லை. ஏன்? உயிரினும் சிறந்தது நாணமேயாயினும், நாணத்திலும் சிறந்தது கற்பேயாகும். ஆயினும் இவ்விதம் தலைவி தானே செல்லும் நிலை மிக அரிதே! தலைவன் அத்தகைய நிலையில் விட்டுவைக்கமாட்டான். விட்டுவைப்பின் அவன் ஆற்றலுக்கு இழுக்காகும். வேற்று நாட்டுக்குச் சென்று தொடங்கிய வினை முற்றுப்பெறாது வரக்காலம். தாழ்ப்பின். என் செய்வது? தலைவி தன் துன்ப மிகுதியைத் தன் உயிரினும் சிறந்த தோழிக்குக் கூற விரும்பினான். வெளிப்படையாகக் கூற முடியவில்லை. நாணம் தடுத்தது; ஆயினும் தன் நெஞ்சை நோக்கிக்கூறுவது போலக் கூறினாள். தோழி அறிந்து ஆவன செய்வாள் என்று கருதினாள்.
“இருக்குமிடத்திற்குச் செல்லத்துணிந்து விட்டேன்; அது வேற்று நாடாயினும் அச்சமில்லை. அங்குச் சென்றால் தான், இளைத்து அழுது, உறக்கம் இன்றி உறையும் துன்பத்தினின்று தப்பலாம் என் நெஞ்சே புறப்படு முன்னே” என்று கூறினாள். தோழியினிடத்தில்கூடக் கூறுவதற்கு நாணமுறும் தமிழ்ப் பெண்ணின் நாகரிகக் கற்பு எவ்வளவு உயர்ந்தது.
குல்லை:- வெட்சி; போர்க்காலத்தில், பண்டைத் தமிழர் முறைப்படி ஆநிரையைக் கவரச் செல்வார் அணிந்து கொள்ளும் kullai-poo-1அடையாளப்பூ. ‘குல்லைக் கண்ணி வடுகர்’ என்பதனால் வடுகர் எப்போதும் போர்க்கோலத்திலேயே இருப்பர் என்று அறியலாம்.
குறுந்தொகை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி வாழி, என் நெஞ்சே! –  முனாது
குல்லைக்கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!
            – மாமூலனார்

  இப்பாடல் குறுந்தொகையில் பதினொன்றாவது ஆகச் சேர்க்கப்பட்டுள்ளது. அகப்பொருளைப் பற்றிக் கூறும் பாடல்களுள், நாலடிக்குக் குறையாமல் எட்டடிக்கு மேற்படாமல் உள்ள பாடல்களில் நானூற்றைச் சேர்த்து, குறுந்தொகை நானூறு என்று பெயரிட்டு வழங்கினர் போலும். அடிகளால் மிகுந்த பாடல்களையுடைய அகநானூற்றை நெடுந்தொகை என்றது போல் அடிகளால் குறைந்த பாடல்களையுடைய இதைக் குறுந்தொகை என்றனர் போலும். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இப்பாடல் நீங்கலாக நானூற்று ஒரு பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை யாரோ ஒருவர் பாடிச் சேர்த்துள்ளார். இவ்வாறே பழந்தமிழ் நூல்கள் பலவற்றுள் பழந்தமிழர் கொள்கைக்குப் பொருந்தாதபாடல்களைப் பாடிப் பிற்காலத்தோர் சேர்த்து விட்டார்கள். தொல்காப்பிய இலக்கண நூலில் கூட, மரபியலில் தமிழர்க்குப் பொருந்தாத நால்வகைச் சாதியை அறிவிக்கும் சூத்திரங்கள் பதினைந்தைச் சேர்த்துவிட்டனர். சேர்த்தால் தெரியாது போய்விடுமா? தண்ணீரில் எண்ணெயை விட்டால் மறைந்து போய்விடுமா? அதுபோல தொல்காப்பியர் பாடியன அல்ல என்பதை அவையே தாம் சேர்க்கப்பட்டுள்ள இடத்தால் அறிவிக்கின்றன.
  இந்த நானூறு பாடல்களையும் பாடியவர் இருநூற்றைந்து புலவர்கள் என்றும் இதைத் தொகுத்தவன் ‘பூரிகோ’ என்றும் பழம் சுவடிகளில் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் இப்பொழுது இருநூற்று ஆறு புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.
  இந்நூல் ஒரு பழம் பாட்டில் ‘நல்ல குறுந்தொகை’ என்று சிறப்பிக்கப்படுகின்றது.
  இவற்றுள் முன்னூற்று எண்பது பாடல்களுக்குப் பேராசிரியரும் எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரையெழுதியுள்ளார்கள் எனச் சிலபழம் பாடல்களால் அறியக் கிடக்கின்றது. ஆனால் அப்பழைய உரை நமக்குக் கிடைக்கவில்லை.
 முனைவர் உ.வே. சாமிநாத(ஐயர்) அவர்கள்உரையெழுதிவெளியிட்டுள்ளார்கள். இப்பாடலை அவர்கள் ஒரு வகையாக உரைநடைப்படுத்திப் பொருள் கூறியுள்ளார்கள் நான் வேறு வகையாக உரை நடைப்படுத்திப் பொருள் கூறியுள்ளேன்27 APRIL U VE HOUSE OPEN. உரையிலும் வேறுபாடு உண்டு.நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்


நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்balakumaran-nadukal02

அரசை வலியுறுத்தவேண்டியவை:


  1. மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு ஆகிய பணிகள் பற்றிய குறிப்புரை தயார் செய்து தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர், அரசு செயலர், தலைமைச் செயலர் ஆகியவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரவேண்டும்.
நடுகற்கள், பிற நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க தேவைப்படும் நிதிச் செலவினங்களுக்கு அரசின் நிதி உதவி கோரவேண்டும்.

 2.நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல்:
balakumaran-nadukal01
தமிழ்நாட்டில் இதுவரை கண்டறிப்பட்ட நடுகற்களும் களஆய்வு செய்து புதியதாக கண்டறியப்படும் நடுகற்களும் மாவட்ட வாரியாக பட்டியல் இடப்பட்டு ஒவ்வொன்றுக்குமான குறிப்புரைகளை எழுதியும் நடுகற்களின் சிறப்புகளையும் அவை ஏன் வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்பது பற்றிய முன்மொழிவுகளையும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசு இவ்வினத்தில் தீவிர முயற்சி மேற்கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி நடுகற்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவிக்க உரிய முயற்சி எடுக்க வேண்டும். அரசு இம்முயற்சிக்கு ஆதரவளித்து நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசிதழில்/ நாளிதழில் வெளியிடவேண்டும். அதற்கு வரலாற்று ஆர்வலர்கள் உரிய முன்னெடுப்பு முயற்சி எடுக்கவேண்டும்.
  1. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு – வருவாய்த்துறையின் பங்கு:
balakumaran-nadukal03
  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும் அளவீடு செய்து நிலங்களுக்குப் புல எண் கொடுத்து அவற்றைப் பேணி வருவது வருவாய்த்துறை ஆகும். அத்துறையினரே ஊரில் உள்ள அனைத்து அரசு நிலங்களுக்கும் காவலாகவும் செயல்பட்டு வருகிறது.
  தற்போதைய நடைமுறையில் பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வரக்கூடிய வரலாற்று நினைவுச்சின்னங்களை, குறிப்பிட்ட காலத்தில் புலத்தணிக்கை செய்து பாதுகாத்து வரவேண்டும் என ஊர் ஆட்சியலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரின் கடமை என்று அச்சட்டம் குறிப்பிடுகிறது. இது ஏற்கெனவே அரசால் வரலாற்று நினைவுச்சின்னங்கள் என்று குறிப்பிட்ட இடத்திற்கே பொருந்தும். இது தொடர்பாக ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வருவாய்த் தீர்வாயத்தின் போது வருவாய் தீர்வாய அலுவலரால் இப்பணி நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யப்படுகிறது. நடுகற்களையும் அரசு வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவிப்பு செய்ய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவையும் மேற்கண்ட அலுவலர்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு உட்படும்.
 balakumaran-nadukal04
  வருவாய்த்துறையினரால் பேணப்படும் புலப்படச்சுவடியில் நடுகற்கள் அமைந்துள்ள இடத்தை ஒரு குறியீடு மூலம் நிலஅளவை செய்து சேர்க்க வேண்டும்.   ஊர் ஆட்சியலுவலர் பயன்படுத்தி வரும் அடங்கல் பதிவேடுகளில் நடுகற்கள் அமைந்துள்ள சர்வே எண்ணில் குறிப்புரை கலத்தில் ‘நடுகல்’ என்று எழுதி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் அரசின் நேரடி கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வரும். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து நடுகற்களும்/மரபுச்சின்னங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
balakumaran-nadukal05ச.பாலமுருகன் , துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை
பேசி – 90475 78421 மின்வரி  balu_606902@yahoo.com
(தொடரும்)செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி

செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி37-hycou02

6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன?

  சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன.

  சீன நகரங்களில் குடியிருப்பதற்கு, வெளி நாட்டவர் மட்டுமின்றி உள்நாட்டவர்கள் கூட, இவ்வாறான தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டிலிருந்து இவ்விதி செயல்படுத்தப் படுகின்றது.

37-hycou01  1970களின் பிற்பகுதியில் மாவோ காலவட்டம் முடியும்வரை, சீனாவில் வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. 1980களுக்கு முற்பகுதியில், உலகிலேயே அதிகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது சீனா. வேளாண் விலை நிலங்களைக் கொண்டிருந்த சீன உழவர்கள், தங்கள் குடும்பத்துடன் வேளாண் நிலங்களில் உழைக்க வேண்டுமென்ற விதி ஊர்ப்புறங்களில் பொதுவுடைமைக் கட்சியால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

  ஆனால், பின்னர் வந்த டெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) இது போன்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். 37-hycou03மற்றொருபுறத்தில், வேளாண் உற்பத்தியின் மூலம் கிடைத்த மிகுதியில் பெருமளவு நகரங்களுக்கும், நகரமயமாக்கலுக்கும் செலவிடப்பட்டது. மேலும், சீனப் பொருளியலில் அயலக முதலீடுகள் ஏற்கப்பட்டன. ஊர்ப்புற மக்கள் தொகை சற்றொப்ப 73 இலிருந்து 79 விழுக்காடாக உள்ள சீனாவில், அவர்களது மேம்பாட்டிற்கென 10 விழுக்காட்டிற்கும் குறைவான மிகுதியே செலவிடப்பட்டது என்கிறது அமெரிக்கப் பொருளியல் கழகம் (American Economic Association – AEA).

  இவை போன்ற காரணங்களின் காரணமாக, நகரமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டது. பணம் ஈட்டும் நோக்குடன் பெருமளவிலான உழவர்கள், வேளாண்மையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

  இந்நேரத்தில், தொழில்துறை வளர்ச்சி காரணமாக வேளாண் துறையில் எந்திரங்கள் பெருமளவில் நுழைந்திருந்ததும், 37-hycou05கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் காரணமாக, வேளாண் பணியாட்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. மேலும், கல்வி கற்ற அடுத்த தலைமுறையினர், கல்லூரி – பணி என நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய தேவையும் இருந்தது.

  இப்போக்குகள், ஊர்களை விட்டுவிட்டு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேற உதவின. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 1986ஆம் ஆண்டு நகரங்களில் தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதற்கு, ஃகியூகௌ (Hukou)என்று பெயர். நகரங்களில் மக்கள் குவிவதை இது ஓரளவு தடுக்கிறது எனச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அது நடப்பதில்லை. இன்றைக்கு உலகிலேயே அதிகளவில் மக்கள் குவிந்துள்ள மக்கள் நெருக்கடியான நகரம், சீனாவின் தலைநகரான பெய்கிங் தான்.

  இன்னொருபுறத்தில், 1970களில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய சீனா, அதில் மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கியது. இன்று, வட அமெரிக்கா
  முதலான முன்னணி முதலாளிய நாடுகளில் இருந்து கணிசமான அளவில் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக மாற்றப்பட்டுவிட்டது சீனம். முதலாளிய அறிவியலாளர்கள், இதையும் ‘வளர்ச்சி’ என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! சீனாவில் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமெனில், அவர்களை ‘உழவன்’ என அழைக்கிறார்கள். அந்தளவில்தான், சீன வேளாண்மையின் ‘வளர்ச்சி’ இருக்கிறது.

  சென்னையில் கண்ணகி நகர் – செம்மஞ்சேரி பகுதிகளில் தனிக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு எப்படி குடியமர்த்தப் படுகிறார்களோ, அதே போலவே நகரங்களில் குவிகின்ற சீன மக்கள், பல செயற்கையான வாழ்விடங்கள் 37-hycou04ஏற்படுத்தப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். நகர வீதிகளின் அழுக்கான தெருக்களில் வசித்துக் கொண்டு, வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சாலையோர கையேந்தி உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, அப்படியே வேலைக்குச் சென்றுகொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். நகரத்தில் தற்காலிகக் குடியிருப்பு இசைவு காலவதியாகும் நாட்களில், சம்பாதித்த பணத்தை ஊருக்குக் கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் நகரத்திற்கு வந்து தங்குகிறார்கள்.

  சீனாவில் நகர மக்களுக்கும், ஊர் மக்களுக்கும் இருக்கின்ற இடைவெளி மலை போல உயர்ந்து வருவதாக, மேற்குலக முற்றுரிமை நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி, சீன அரசுத் தலைவர்கள் கூட அவ்வப்போது வெளிப்படுத்தி வரும்37-hycou06 உண்மையாகும். இன்னும் பல நூறு ஊர்களுக்கு, மின்சாரம் – கல்வி முதலான அடிப்படை வசதிகள் அங்குக் கிடைக்காமல் இருப்பது, அவ்வப்போது மேற்குலக நாட்டு ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும்.

  மேற்குலக ஊடகங்களின் நோக்கம், சீனாவில் உள்ள ஊர் மக்களை முன்னேற்றுவது அல்ல. சீனாவின் ஊர்களை இல்லாதொழித்து, உலகமய முதலாளிகளின் முதலீட்டிலான நவீன சீன நகரங்களை உருவாக்குவதுதான்! இதற்கு அவர்கள் வைத்திருக்கும் இன்னொரு பெயர்தான் ‘வளர்ச்சி’ !

  அதிகரித்து வரும் சீனாவின் “வளர்ச்சி”க் குறியீடுகள், அதன் பின் விளைவாக ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் சாதாரணமானவையல்ல.

  வட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முன்னணி முதலாளிய நாடுகளில் காணப்படுவதைப் போலவே, ‘ பொதுவுடைமை’ நாடான சீனாவிலும் மிகப்பெரும் அளவிற்குக் குமுகாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன37-hycou05Deng_Xiaoping01. கார்டியன், நியூயார்க்கு டைம்சு, தி இன்டிபெண்டென்ட்டு என மேற்குலக ஊடகங்கம், சீனாவின் பல அரசுத் தலைவர்களும் இது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். சீனாவின் பொருளியல் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து வரும் பல ஆய்வு நிறுவனங்கள், 1978க்குப் பின் சந்தைப் பொருளியல் அறிமுகமான பின்னரே இந்த நிலை எனப் புள்ளி விவரங்களுடன் கவலைப்படுகின்றனர்.

  ஊரில் இருப்பவரை விட, நகரத்தில் இருப்பவர் 3.33 மடங்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டுகிறார் எனச் சீனாவின் தேசியப் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. அரசுக் கணக்கே இது எனில், உண்மையான கணக்கு இதைவிடப் பல மடங்கு என்பதே உண்மை!
(தொடரும்)arunabharathy01