Skip to main content

செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி

செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி

5.   சீனப் பொருளியலின் “வளர்ச்சி”

HTDZ-home02
   ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியைமட்டும் அதிகரிக்கும்நாடுதான், ‘வளர்ச்சி’ பெறும்நாடு என உலகமயப்பொருளியல் உருவாக்கியிருக்கும் கருத்து நிலையை, அப்படியே உள் வாங்கிக்கொண்டுவிட்டதுசீனப் பொதுவுடைமைக் கட்சி. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி அதன் உபரியைக் கொண்டு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டிய சீனப் “பொதுவுடைமை” அரசு, ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியிலும், அதன் ‘வளர்ச்சி’ விகிதத்திலும்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றது.
 HTDZ-home01
  உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, 1991ஆம்ஆண்டு, நான் வந்திறங்கியுள்ள சியான்நகரில் சியான்உயர்தகவல்வளர்ச்சிமண்டலம் (Xi’an Hi-tech Development Zone) என்றஅமைப்புஏற்படுத்தப்பட்டது. நம் ஊரில் ஏற்படுத்தப்படும் சிப்காட் பகுதிகளைப் போல, இது தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கான தொழிற்பூங்கா என்ற அளவில் தொடங்கப்பட்டது. பின்னர், பல வட அமெரிக்க மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இஙகு தங்கள் தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. பின்னர், 1998ஆம்ஆண்டு சியான்கணிய(மென்பொருள்)பூங்கா (Xian software Park) அமைக்கப்பட்டது.
 HTDZ-home09
இவ்வமைப்புகளின் மூலம், வடஅமெரிக்கா முதலான உலகின் பல்வேறு முதலாளிய நாடுகளின் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் சற்றொப்ப 800 நிறுவனங்கள் சியான் நகரில் தமது அலுவலகங்களைத் திறந்துள்ளன. இது மட்டுமின்றி, பெய்சிங் முதலான சீனாவின் பல முதன்மை நகரங்களில் ஆயிரக்கணக்கான கணினி நிறுவனங்கள் முளைத்தன. அதிக எண்ணிக்கையிலான சீனாவின் மக்கள் தொகையில், குறைந்த கூலியில் பணிபுரியும் கணினிப் பொறியாளர்கள் கிடைக்கத் தொடங்கியதும் இதற்கொரு காரணம்.
HTDZ-home08
  2,210,000,000,000 தாலர்($)– இதுதான் ஓராண்டிற்கு, சீனா செய்யும் கணிய(மென்பொருள்) ஏற்றுமதியின் மொத்தமதிப்பு. கணிய(மென்பொருள்) நிறுவன ஏற்றுமதியில் உலகின் முதலிடம் வகிப்பதும் சீனாவே! வடஅமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவுக்குப் பின்னால்தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 HTDZ-home07 HTDZ-home06
  சென்னை, கோவை, பெங்களுரு, மும்பை, புனே என இந்தியாவெங்கும் கணிய(மென்பொருள்) நிறுவனங்கள் இருந்தும்கூட, இந்தியா இதில் 17ஆவது இடத்தில்தான் இருக்கிறது எனில், சீனாவின் இடத்தை ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த ஏற்றுமதி தொகைஎண்ணிக்கையை உலகறிய அறிவிக்கும் சீனா, அதனை மிகப் பெரும் ‘வளர்ச்சி’யின் குறியீடாகக் காண்கிறது. சீனா ‘முன்னேறி’விட்டதாகக் கூறிக் கொள்கிறது.
 HTDZ-home04HTDZ-home05
 இந்தியாவில் எப்படி உலகமய முதலாளிய நிறுவனங்களின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதனை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக நிறுவுகிறார்களோ, அதேபோலத்தான் சீனாவிலும் நடக்கிறது. இந்த 800 நிறுவனங்களின் வளர்ச்சியே, சீனமக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி என அந்நாட்டரசு நினைக்கிறது. ஒரே வேறுபாடு, இங்கு அது பொதுவுடைமைக்கொள்கையின் பேரில் நடக்கிறது அவ்வளவே!HTDZ-home03
arunabharathy01 (தொடரும்)
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்