Posts

Showing posts from April, 2020

புதை நூல் – தமிழரசி இளங்கோவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 April 2020         No Comment புதை நூல்             “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது.      ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா,  கமலா  அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது.      செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா!”, என்று அழைத்தார். தோழியோடு முகநூலில் அளவளாளவுவதாக இருந்த கமலா அப்பாவின் குரல் கேட்டு வெளியேறும்போது ‘சதக்’ என்று தனது காலின் சுண்டுவிரலை இடித்துக் கொண்டாள். வலியோடு வரவேற்பறையின் வழிக்கு வந்து நின்றாள், “சொல்லுங்க, அப்பா”, என்று கூறியவாறே! “உட்காருமா’, என்று அப்பா கூற, “பரவாயில்லை அப்பா. சொல்லுங்கள் அப்பா”, என்று மிகவும் பணிவாக வலியுடனே கேட்டாள். “முகநூலில் சற்று கவனமம்மா. முகம் தெரியாத”, என்று கூறி முடிப்பதற்குள், “முகம் தெரியாத நிறைய பேர் முகநூலில் இருக்கின்றன

கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 April 2020         No Comment கனலே சொரியும் கவியே!  பாவேந்தர் மெய்ப்புகழ் வண்ணம் தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனதனனே அனலே பொழியும் மொழியே இதழில் உளதோ எனயெம் உளமே வியக்க வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே இனமே உயர எழிலே உலவ கனலே சொரியும் கவியே தமிழில் தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம் புயமே துடிக்கும் படிநீ வடித்த கவியே தமிழின் முடியே எனயாம் திளைத்தனமே வளமே தமிழர் நலமே வியையுன் கவியே சுவைநிறை மதுவோ? தமிழர் மறமோ? குளிரும் புனலோ? எது வென் றறிந்திலமே! அரிஅரவேலன் யரலவழள (பாவேந்தர் நூற்றாண்டில் எழுதிய செய்யுள்)

மரம் தான் காற்றின் தாய்! – வித்தியாசாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         20 April 2020         No Comment மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும் மனத்தின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்குத் தெரியுமா மரங்கள் தான் நமக்கு முன்னோர் மரம் தான் நமக்குக் கூடு மரம் தான் மேசை மரம் தான் ஆடை மரம் தான் பாடையும்; நமக்கு முதலெழுத்தும் கடையெழுத்தும் மரம் தான் மரம் தான் நமக்கு எல்லாம் மரம் தான் வீடு மரம் தான் மேளம் மரத்தால் தான் நமக்குக் கவிதையும் வாசிக்கக் கிடைக்கிறது, உயிரென்பது காற்று எனில் மரம் தான் காற்றின் தாய் எனவே மரத்தைக் காப்போம் தோழர்களே நாளுக்கொரு மரம் நடாவிட்டால் பரவாயில்லை  வெட்டாதிருங்கள் போதும்!   வித் தி யாசாகர் பகிரி :  09840502376 ;  பேசி:  +965 97604989

காலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2020          No Comment (காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 11.ஆட்சி 1.அறியாமைத் தீவளர்த்து ஆதிக்கம் புரிவார்   புரியாமல் வாழ்வாய்நீ வீண். 2.மக்களைப் பேணாமல் மாக்களைப் பேணுதல்   மக்களாட்சி என்னல் இழிவு. 3.வெள்ளையர் கொள்ளையர் செய்த உடன்படிக்கை   மக்களாட்சி மாற்றுப் பெயர். 4.உணவுஇடம் ஓர்ஆடை இல்லார் இருப்பை   உணராத ஆட்சி எதற்கு.    5.கெடுதலைச் செய்யும் அரசின்கீழ் வாழ்ந்தால்   விடுதலை மாந்தரா நாம்.       6.இப்பொறுப்பால் தான்வாழ எண்ணான் எனத்தெளிந்து   அப்பொறுப்பில் நீயமர்த்து வாய். 7.இடித்துரைப்பார் சொல்வதை ஏற்றிடும் ஆட்சி   கெடுத்துரைக்க வல்லவன் யார்.                                    8.தலையாட்டும் பொம்மையாய் வாழும் அமைச்சர்   நிலைமாற்றும் நின்மாற்றம் தான்.    9.சூழ்ச்சி புரிவோர் வீழ்ச்சியுறச் செய்தபின்   ஆட்சி அமைப்பவர் யாம். 10.திராவிடம் என்பது சூத்திரன் பார்ப்பான்    இராவிடம் என்பது தான். ( தொடரும் ) ச . ச . வே

மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 April 2020         No Comment மணம் ஆகாமலே மணவிலக்கு! நினைவுகளைக் காவலுக்கு வைத்துவிட்டு நீயெங்கு சென்றாயடி…….? நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளால் உழலுகிறேன் நீங்காது….. காவல் காக்கும்  உன் நினைவுகள் கல்லறை வரை காத்திருக்கின்றன மீட்க வரவில்லை மீளாத்துயரில் ஆழ்கின்றன! நினைவுகளை அடைமானம் வைத்து விட்டு வெகுமானம் தேடி நீ சென்றது  காதலுக்கு அவமானம! நினைவுப் பிள்ளையோடு கைம்பெண்ணாய் காத்திருக்கிறேன் மணம் ஆகாமலே மணவிலக்கு பெற்ற நீ விரும்பிய காதலன்!. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114

எழுக தமிழா! – கருங்கல் கி. கண்ணன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 April 2020         No Comment எழுக தமிழா! எங்கே தமிழா! உன் தமிழ் எங்கே! உன் முன்னெழுத்து எங்கே! உன் வீரம் எங்கே! உன் விவேகம் எங்கே! உன் பண்பாடு எங்கே! உன் பழக்கவழக்கம் எங்கே! இனிக்கும் தமிழ் வார்த்தை எங்கே! மயக்கும் தமிழ் எழுத்துகள் எங்கே! தமிழனின் இலக்கணப் பெட்டகங்கள் எங்கே! அங்கிருந்த எம் தாத்தன் நூல்கள் எங்கே! கலாச்சாரத்தைச் சாற்றும் உடை எங்கே! காதலைக் கூறும் முறை எங்கே!… கழனியில் உழவுசெய்யும் வேளாண்மை எங்கே? காற்றை அறிந்து கலம் செலுத்திய உத்தி எங்கே? மங்கையரை வணங்கிய பாங்கு எங்கே? மணம் முடித்த வீரம் எங்கே? பெற்றவரை, ஆசானை வணங்கிய பக்தி எங்கே? இயற்கையைத் தொழுத இறைமை எங்கே? சிற்பத்தை வடித்த கலை எங்கே? சித்தர்கள் தந்த மருத்துவம் எங்கே? தேடிப்பார்! உனக்குள் நீ கேட்டுப்பார்! உன் இதயத்தைத் தட்டிப்பார்!… அடிமையானாய் அதனால் மடமையானாய்! வீரத்தை மறந்தாய் அனைத்தும் துறந்தாய்! உன் நிலத்தையும் கொடுத்தாய்! இது மட்டுமா? இசையைக் கொடுத்தாய்! கர்நாடக சங்கீதம் என்றாய்! தெலுங்கு கீ

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 April 2020         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 தொடர்ச்சி) அகல் விளக்கு : 8 வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே, ஓரமாக ஒதுங்கினேன். ஒதுங்கியபோது காற்றாடியைப் பார்க்கவில்லை. அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் புறத்தில் உள்ளது. அங்குத்தான் புதிதாக வந்தவர்கள் இருந்தார்கள். திகைத்துக் கொண்டிருந்தபோது, முன் கண்ட அந்தப் பையன் வெளியே வந்து “காற்றாடியா? கிளையில் அகப்பட்டுக் கொண்டதா?” என்று சொல்லிக்கொண்டே சிறிதும் தயங்காமல் என்னைக் கேட்கவும் கேட்காமல், என் கையில் இருந்த நூலைப் பற்றி வெட