Posts

Showing posts from March, 2015

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      29 March 2015       No Comment (பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு)   “கையேட்டின் அமைப்பு”   போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது.  கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்.  நிற்க.  பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில் புழங்கிய தமிழைப் படித்துத் தான் புரிந்துகொண்டபடி அந்தத் தமிழைப் பிற பாதிரிமாருக்கு விளக்க வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இடையில் ஒரு பொதுக்களம் அமையவேண்டும். பொதுவான விளக்கமுறையும் தேவை. அதற்காக, இலத்தீன் மொழியின் இலக்கணம் இவருக்கு உதவுகிறது. இலத்தீன் இலக்கணக் கூறுகளின் வழியாகத் தமிழை விளக்குகிறார்.  தமிழ் எழுத்தும் ஒலிக்கும் முறையும், பெயர்ச்சொற்கள், பண்புப் பெயர்கள், வினைச்ச

தமிழ் அன்னை- – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      29 March 2015       No Comment தமிழ் அன்னை அன்புருவான தமிழ் அன்னை மொழி அரசியான தமிழ் அன்னை இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் – இயல் அழகு சொட்டும் பசு வளர்த்தாள் வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் – ஞான வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள் - கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார் - அகரமுதல 72: பங்குனி 15, 2046 / மார்ச்சு 29,2015

இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      29 March 2015       No Comment உள்ள வெள்ளம்   ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ பாட்டைக் .. கொன்றிடல் இயல்பு தானோ? (2)  ஆழ்கடற் குடித்த நீரை .. அணைத்திடும் முகில் போன்றே வாழ்வியல் பயிற்றும் பாடம் .. வகைபல, வாங்கிச் சேர்த்து மூழ்கியே அதனுள் முத்தை .. முனைப்புடன் நாடித் தேர்வேன், சூழ்ந்தஇவ் வரங்கச் சான்றோர் .. சொல்கவென் தவற னைத்தும் (3)  கரைவழி எங்கும் தோன்றும் .. கண்வழிக் காட்சி நெஞ்சில் வரைந்திடும் ஓவி யத்தை .. வண்ணமும் நனவும் சேர்த்து; நுரைத்திடும் நெஞ்சில் நின்று .. நுண்ணிய கனவே சொல்லால் உரைத்திடும் கவியாய் மாறும், .. உணர்வது கவிதை தானே (4)   மோதிடும் உணர்வா