பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 15– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 15
அங்கம் : அருண் மொழி, பூங்குயில்
இடம் : அருண்மொழி இல்லம்
நிலைமை : (கூடலுக்காக முற்றம் வந்தும்
கூடிட அவளோ இல்லாததாலே
ஊடல் அருணை வாட்டிடச் செய்ய!
தேடியே குயிலை அலைகின்றான்
தன்னுரையாக மனத்தில் எழுந்த
எண்ணத்தை இங்கே உரைக்கின்றான்!)
அருண் : வெள்ளி நிலா முற்றத்திலே
பள்ளி கொள்ளவந்தால் நான்!
கள்ளியவள் மறைந்தெங்கோ!
தள்ளியயன்னைச் சென்றாளோ!
மையிருட்டே! உன்னையவள்!
பொய்யிருட்டாய் ஆக்கிடுவாள்!
கைசுருட்டி ஓடி விடு!
மெய்யுருட்டிச் சொல்லுகிறேன்!
படுத்துறங்கும் வேளையிலே
உடுத்தியவள் வருவாளோ?
பால்பொழிய வெண்ணிலவு
பாலெடுக்கச் சென்றாளோ?
எண்ணி! எண்ணி! நிற்கின்றேன்!
தூங்காது விழித்திருக்க
பூங்காற்று வருகுதுபார்!
ஏங்காற்றே! என்றிட்டால்!
ஏங்காதே! என்று விடும்!
ஆ!
நூலாடும் இடைநோவ
வேலாடும் விழிபாவ
மேலோடும் பொருள் எண்ணிப்
பாலோடும் வருகின்றாள்! பார்!
அங்கம் : அருண் மொழி, பூங்குயில்
இடம் : அருண்மொழி இல்லம்
நிலைமை : (கூடலுக்காக முற்றம் வந்தும்
கூடிட அவளோ இல்லாததாலே
ஊடல் அருணை வாட்டிடச் செய்ய!
தேடியே குயிலை அலைகின்றான்
தன்னுரையாக மனத்தில் எழுந்த
எண்ணத்தை இங்கே உரைக்கின்றான்!)
அருண் : வெள்ளி நிலா முற்றத்திலே
பள்ளி கொள்ளவந்தால் நான்!
கள்ளியவள் மறைந்தெங்கோ!
தள்ளியயன்னைச் சென்றாளோ!
மையிருட்டே! உன்னையவள்!
பொய்யிருட்டாய் ஆக்கிடுவாள்!
கைசுருட்டி ஓடி விடு!
மெய்யுருட்டிச் சொல்லுகிறேன்!
படுத்துறங்கும் வேளையிலே
உடுத்தியவள் வருவாளோ?
பால்பொழிய வெண்ணிலவு
பாலெடுக்கச் சென்றாளோ?
பொங்கிவரும் புதுவெள்ளம்
தங்கமனம் குளிராதோ?
கன்னியவள் வரவைத்தாள்எண்ணி! எண்ணி! நிற்கின்றேன்!
தூங்காது விழித்திருக்க
பூங்காற்று வருகுதுபார்!
ஏங்காற்றே! என்றிட்டால்!
ஏங்காதே! என்று விடும்!
ஆ!
நூலாடும் இடைநோவ
வேலாடும் விழிபாவ
மேலோடும் பொருள் எண்ணிப்
பாலோடும் வருகின்றாள்! பார்!
(காட்சி முடிவு)
Comments
Post a Comment