Posts

Showing posts from March, 2016

மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார்

Image
அகரமுதல 126,   பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார் இலக்குவனார் திருவள்ளுவன்      27 மார்ச்சு 2016       கருத்திற்காக.. மெய்யறம் தமிழறிஞர் செக்கிழுத்த செம்மல் வ. உ.  சிதம்பரனார்(சிதம்பரம்பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல் ‘மெய்யறம்’ என்பதாகும். இந்நூல். மாணவரியல் (30 அதிகாரங்கள்) இல்வாழ்வியல் (30 அதிகாரங்கள்) அரசியல் (50 அதிகாரங்கள்) அந்தணரியல் (10 அதிகாரங்கள்) மெய்யியல் (5 அதிகாரங்கள்) என ஐம்பிரிவுகளையும் 125 அதிகாரங்களையும் உடையது; அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களையும் விளக்கங்களையும் உடையது. அகரமுதல நவம்பர் 22, 2015 இதழில் மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார் என்னும் தலைப்பில் முதல் அதிகாரத்தின் பாடல் வரிகள் மட்டும் பதியப்பட்டு இருந்தன.  நூல் முழுமையும் தொடர்ச்சியாகப்பதியப்போவதால்,  முதல் அதிகாரம் மீண்டும், ஆனால் பொருளுடன் இடம் பெறுகிறது. 1. மாணவர் கடமை மாண்பெற முயல்பவர் மாணவ ராவர். மாணவர் என்பவர் பல்வேறு சிறப்புகளைப் பெறமுயற்சி செய்பவர் ஆவார்.

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி

Image
அகரமுதல 126,   பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி இலக்குவனார் திருவள்ளுவன்      27 மார்ச்சு 2016       கருத்திற்காக.. தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்:  சிவன் , பார்வதி , முருகன் , நந்தி , நாரதர் [ திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது ]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு என்ற அடியால் பிறந்து அறிவு நூல் என்ற பொருள் தரும். தமிழரின் மூலநூல் – முதன்நூல் அறம் , பொருள் , இன்பம் , வீடு பற்றிப் பேசும். இதனையே பழந்தமிழ் இலக்கண ஆசிரியனான தொல்காப்பியன் “ வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முத

வேட்பாளர் மாண்பு – முனைவர் க.தமிழமல்லன்

Image
அகரமுதல 126,   பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 வேட்பாளர் மாண்பு – முனைவர் க.தமிழமல்லன் இலக்குவனார் திருவள்ளுவன்      27 மார்ச்சு 2016       கருத்திற்காக.. வேட்பாளர் மாண்பு தலைவர்: தகுதி என்ன? தலைமைக் கெவ்வளவு மிகுதியாய் நன்கொடை மேல்நீ தருவாய்? வேட்பாளர்: அம்மா வுக்கொன் றளித்துச் சின்ன அம்மா வுக்கும் அளித்து விட்டேன்! அடுத்தத் தலைவர்க் களிக்கும் பெட்டியும் அண்ணிக் கொன்றும் அணியம் ஐயா! தலைவர்: உன்றன் தாய்மொழி என்னவோ உரைப்பாய்? வேட்பாளர்: அன்புத் தமிழ்தான் அகத்தில் வேறு! தலைவர்: தமிழெனச் சொல்லு தமிழெனச் சொல்லு! வேட்பா- தமிழ்தான் தமிழ்தான் தாய்மொழி எனக்கு! தலைவர்: தொகுதி மதிப்பு மிகுதியாய் உண்டா? வேட்பாளர்: தொகுதி முழுவதும் மிகுதியாய் உள்ளவர், நம்சாதி மக்கள்! நம்புவர் என்னை! தெம்பாய்ச் சொல்வேன் தெளிந்தமெய் ஐயா! தலைவர்: ஓகோ ஓகோ உண்மையைச் சொன்னாய்! வாகை கெடுக்கும் பகைவர் உண்டா? வேட்பாளர்: பக்கத்து வீட்டுப் பாவை என்னுடன் படுத்துப் போனாள் பார்த்த மனைவியோ, பகையாய் மாறிப் பழிசெய் கின்றாள்!