உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்!
பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று
சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ்
அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும்
அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ்
இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள்
கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ்
கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம்
கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ்
இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு-எங்கும்
தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை
தமிழ்த்தாய்க்குப் புகழ்சேர்க்கும் பதினெண்கீழ்க்கணக்கு-நித்தம்
தமிழ்மொழியும் வளர்கிறது குறுந்தொகையால்!
இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால்-இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
இவ்வுலகம் போற்று மின்னாநாற்பது-தமிழ்
இன்பத்தேனாய் இனிக்கிறது இனியவைநாற்பதால்
ஏற்றம்பெற்றாள் தமிழ்த்தாயும் ஏழுசீரால் -குறளுடன்
எட்டாவது அதிசயமே தமிழில்தானே!
இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால்-இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
– குறள்நதி
திருவேற்காடு
பேசி 9941648450
தரவு : முதுவை இதயத்து
Comments
Post a Comment