Posts

Showing posts from April, 2019

தந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல் ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை   பெரியார் சிந்தனைகள் தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! மாணக்கச் செல்வங்களே! முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘ தந்தை பெரியார் சிந்தனைகள்’  என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என் மாணாக்கர் வாழ்வில்- நான் அறிவியல் மாணாக்கன்- என் சிந்தனையைத் தூண்டியவர்கள் எனக்குக் கணிதம், அறிவியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் (1934-1939) நன்முறையில் அமைந்தமையால் அறிவியலில் முதன் வகுப்பு – கல்லூரியில் முதல்நிலை – மாநிலத்தில் மூன்றாம் நிலையில்- தேர்ச்சியடைய முடிந்தது. ஆன

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் – கவிஞர் நாகூர் காதர் ஒலி

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள் சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று செந்தமிழ்ச் சொல்லாய் சீறும் அனல்காற்று முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று முற்போக்குச் சிந்தையில் வேதியல் வீச்சு வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன் ஆத்திகனாய் முப்பதாண்டு ஆற்றலுடன் வாழ்ந்தவன் நாத்திகம் பேசியே நாத்தழும் பேறியவன்; சமூக நாற்றங்களை நடுத்தெருவில் நிற்கவைத்துச் சாடியவன் வாழ்ந்ததோ எழுபத்து மூன்று ஆண்டுகள் வரைந்ததோ எழுபத்து இரண்டு நூல்கள் வாழ்க்கையில் விளைத்தது அளப்பரிய சான்றுகள்; தமிழர் வாழ்வுக்கு வையத்தில் அவனும் ஓர் ஊன்றுகோல்! கவிஞர் நாகூர் காதர் ஒலி, வைரத்த

தன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. தன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே         தன்னேரிலாத….. முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும்,                                   தன்னேரிலாத….. தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும்,                                தன்னேரிலாத….. ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும்.                                தன்னேரிலாத….. முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம் பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும்,                                தன்னேரிலாத….. புரட்சிக்கவிஞர்

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. சி. இலக்குவனாரின்  தமிழ்ப்பணிகள் –   ஓர்  ஆய்வு 1/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், ‘முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.]       தமிழ் கூறு  நல்லுலகம்  ஈன்றெடுத்த  தவப் புதல்வர்களுள் வாழ்வாங்கு வாழ்ந்து  தமக்கெனத் தனிமுத்திரை பதித்த வித்தகர்  முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.          தோன்றிற்  புகழொடு   தோன்றுக  அஃதிலார்          தோன்றலிற்   தோன்றாமை  நன்று என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்பக் கல்வி உலகில் அழியா