தேடுகின்றேன் நான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உடலில் பாதியைத் தேடுகின்றேன் நான்
உளத்தில் பாதியைத் தேடுகின்றேன் நான்
கண்ணின் ஒளியைத் தேடுகின்றேன் நான்
கருத்தின் எழுச்சியைத் தேடுகின்றேன் நான்
பார்வையின் கனிவைத் தேடுகின்றேன் நான்
ஆர்வத்தின் தொடக்கத்தைத் தேடுகின்றேன் நான்
பேச்சின் சுவையைத் தேடுகின்றேன் நான்
மூச்சி்ன் மூலத்தைத் தேடுகின்றேன் நான்
இளமையின் பொலிவைத் தேடுகின்றேன் நான்
பழமையின் வலிவைத் தேடுகின்றேன் நான்
அமிழ்தின் இனிமையைத் தேடுகின்றேன் நான்
அழகின் இயற்கையைத் தேடுகின்றேன் நான்
தாயின் பரிவைத் தேடுகின்றேன் நான்
சேயின் மழலையைத் தேடுகின்றேன் நான்
உன்னிடம் மட்டும் காணுகின்றேன் நான்
தமிழே உன்னை நாடுகின்றேன் நான்!
– இலக்குவனார் திருவள்ளுவன் (1973)
Comments
Post a Comment