Saturday, September 19, 2009
"அருள்மொழி அரசு' என்றும் "திருப்புகழ் ஜோதி' என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் தேவாரம், நளவெண்பா, ஒüவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அதுதான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி' பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர்.சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு ""இதுகாறும் இதனை அறிந்திலமே'' என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள். ""வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன."ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார்.20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, கதை, காவியம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர். மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும் உபந்யாசங்களும்கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.
கலித்தொகையில் வாழ்வியல் பண்புகள்""கல்வி வலார் கண்ட கலி'' எனப் பாராட்டப்படும் கலித்தொகையில் பல்வேறு வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன.""பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்'' என்பது பலராலும், பல நேரங்களிலும் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தொடர் எங்கிருந்து எடுத்தாளப்படுகிறது என்பதைப் பலர் அறிந்திருக்கலாம்; சிலர் அறியாமலும் இருக்கலாம். ஆயினும், இக் கருத்து, இன்று மிகப்பெரிய ""மக்கட் பண்பு என்று சொல்லப்படுவது - உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாகும்'', என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார் (கலி.133). இத்தொடர் நெய்தற்கலியில் (133) இடம் பெற்றுள்ளது. இதைத்தவிர, பல அரிய செய்திகளும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.இக்கலிப்பாவில் (133) ஒன்பது கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இல்வாழ்க்கை நடத்துதல் என்று சொல்வது வறியவர்க்கு உதவுதலாம். ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாது இருத்தலாம். அன்பெனச் சொல்லப்படுவது தன் சுற்றத்தாரைப் பேணிக்காத்தலாம். அறிவெனக் கூறப்படுவது அறியாதார் கூறும் சொல்லையும் பொறுத்துக் கொள்ளுதலாம். ஒருவரோடு ஒருவர்க்குள்ள உறவென்பது கூறிய சொல்லை மறுக்காமல் காத்தலாகும். நிறையென்று சொல்லப்படுவது, மறைவான செயலைப் பிறர் அறியாது ஒழுகுதலாகும். முறையென்று சொல்லப்படுவது நம்மவரெனக் கண்ணோடாது குற்றத்திற்கேற்பத் தண்டனை வழங்குதலாகும். பொறுமையெனச் சொல்லப்படுவது பகைவரைக் காலம் வரும்வரையில் பொறுத்துக் கொள்ளுதலாகும். மேலே கூறிய கருத்துகளை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தல் நலம். "ஆற்றுத லென்பது அலந்தவர்க் குதவுதல்'; இதனை,""துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை'' (42)எனத் திருக்குறள் தெளிவுற வழிகாட்டியுள்ளது. "போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை'; இத்தொடரின் கருத்தினைக்,""செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை'' என்ற பிரிவாற்றாமையில் அமைந்துள்ள குறள் தெளிவு படுத்துதலை அறியலாம். பிரிவு இன்னாதது என்பதனை, இன்னா தினியார்ப் பிரிவு (1158) என்ற வள்ளுவம் தெளிவாக உரைக்கும். "பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்'; இதனைத் திருவள்ளுவர்,""நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை'' (998) என எடுத்தோதுவார். "அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை'; இக்கருத்தினை உள்வாங்கிக்கொண்ட வள்ளுவப் பேராசான், உறவினரைத் தழுவி வாழும் வழியாகப்,""பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையர் மாநலத் தில்'' (526) என எடுத்துரைப்பார். இதனையடுத்து, "அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்'; எனச் சுட்டும் கலி. இக்கருத்தினை,""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு'' (423) என வழிமொழிந்துரைப்பார் வள்ளுவர். "தெளிவெனப் படுவது கூறியது மறாஅமை'; என்ற கலித்தொகைச் செய்யுள் கருத்தை, ""நின்ற சொல்லர்'' (நற்றிணை:1) எனக் கபிலர் கூறுவார். இக் கருத்தினை,""உழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்'' எனத் குறள் சுட்டுகிறது. "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை'; என்ற கருத்தைக் காமத்துப் பாலில், நிறையழிதல் என்னும் அதிகாரத்தில் தலைவி கூற்றாக வள்ளுவர்,""நிறையுடோன் என்பேன்யன் யானோ வென்காமம்மறையிறந்து மன்று படும்'' (1254) "முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வெüவல்' இதனைச் செங்கோன்மை அதிகாரத்தில்,""ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை'' (541) என்ற குறட்பாவால் குறிப்பிடுகிறார். இறுதியாகப் "பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்' என்னும் கருத்தினைக் கலித்தொகை கூறும். இதனைப் பொறையுடைமையின் முதல் குறட்பா மிகத் தெளிவாகச் சுட்டுதலைக் காணலாம். அக்குறட்பா,""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார் பொறுத்தல் தலை'' (151) என்பதாகும். மேலும், "வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை' எனவும் திருவள்ளுவர் கூறுவார். நாலடியாரும் "எல்லாம், ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை' எனப் பொறைக்கு இலக்கணம் வகுப்பார். இவ்வாறு, வாழ்வியல் நெறிகளுக்கான பண்புகளைத் தொகுத்துச் சுட்டியுள்ளார் நெய்தற்கலி ஆசிரியர் நல்லத்துவனார். அவரது பாடலுக்கு திருக்குறள் வழி விளக்கம் கண்டோம். அப்பாடல் வருமாறு:""ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைபண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமைஅறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்செறிவெனப் படுவது கூறியது மறாஅமைநிறையெனப் படுவது மறைபிற ரறியாமைமுறையெனப் படுவது கண்ணோடா துயிர்வெüவல்பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்''(கலி.133)மேலே காட்டிய ஒன்பான் செய்திகளும் ஒன்பான் மணிகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியன. இத்தகைய நற்கருத்துகள் நம் தமிழிலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இம்மாமணிகளை ஓதியுணர்ந்து நல்வாழ்வை மேம்பாடுறச் செய்வோமாக!
அழகர் குறவஞ்சிநாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும்.பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர். தலைவன் நாடெங்கும் பவனி வருதல், தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல், விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல், குறத்தி வருதல், தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல், தலைவி தலைவனோடு சேருதல் - இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள்.குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன. திருக்குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, விராலிமலை குறவஞ்சி. இவைகளில், குற்றாலக் குறவஞ்சியில் இலக்கியச் செறிவும், சரபேந்திர பூபால குறவஞ்சியில் இசை உயர்வும், அழகர் குறவஞ்சியில் இலக்கியம், இசை இணைந்த அமைப்பும், விராலிமலை குறவஞ்சியில் நடனக் கலையின் நளினமும் பிரகாசமாகக் காணப்படும்.அழகர் குறவஞ்சியில் பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர், தலைவி மோகனவல்லி. "கருமுகில்மால் அழகராதி; மோகினியை மணந்த கதை' என்ற அடியால் இதனை உணரலாம். இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிக்குஞ்சர பாரதி. சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீதியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்த்ரிகள் ஆகியோரின் சமகாலத்தவர்.இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெüரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்' என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது. இக்குறவஞ்சி வெண்பா, விருத்தம், கீர்த்தனம், சிந்து, திபதை, அடிமடக்குத்திபதை, கும்மிக்கண்ணிகள், ஓரடி கீர்த்தனம் முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன. சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.""மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும்கொண்டைச் சொருக்கினாள்''""துயிலும் இல்லை பசியும் இல்லைபசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை''""தவளநிறக் கருங்கூந்தல்பவளச்செவ்வாய்க் கலைமகள்''""அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம்சிங்கம் தெலுங்கம்''என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள் பிரகாசிக்கின்றன.""உருகு பெருகு கோடையில்நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்''""புயல் கண்ட மயில்போல''""கிணற்று நீரைக் கொண்டு போமோ?''""கல்லினும் நார் உரிப்பேன்மணலையும் கயிரெனத் திரிப்பேன்''இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்' ராகத்தில் "ஸôமி மயூரகிரி வடிவேலா' என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத லயவேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.கட்டியக்காரன் வருகையை,""தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச்சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாகப்பையிலே துயின்ற திருவழகர்'' என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார். சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும் சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி ராகத்தில்,""சோலைமலைச் சிங்கனும் வந்தான்சிங்கியைத் தேடி'' என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு. விறுக்கி, முறுக்கி, யுறுக்கி, வீக்கி என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான வீணை, மத்தளம், தாளம், துந்தி, தம்புரு, மேளம், பேரி, முரசு, டமாரம், உடுக்கு, வேய், துடி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. நாட்டுப்பாடல் இசையான நொண்டிச் சிந்து, கும்மி, திபதை முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.இம் மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா!
இந்த வாரம் கலாரசிகன்பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!'"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.ஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும்? இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.எழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.அந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். "பாஹே' என்கிற புனைப்பெயரில்தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் "ராமஜெயம்' எழுதுகிறார்கள் என்றால், இவர் "ஹேமஜெயம்' என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம்தான் ரசனை இருக்கும். ரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!******வரலாறு என்பது ஒருதலைப் பட்சமாகவே இருந்து வருகிறது. வரலாறை எழுதி வைக்கும் காலம், நபர், அன்றைய சூழல் போன்றவை கூட வரலாற்றில் பல தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான இந்திய தேசிய உணர்வு, ஒரு சில ஆட்சி எதிர்ப்பாளர்களின் நிறைகளையும், நல்ல பல செய்கைகளையும் ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு ஓர் உதாரணம் எட்டயபுரம் சமஸ்தானம்.எட்டயபுரம் பற்றிய வரலாற்றையும், கணிப்பையும் நாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருடனும், வீரபாண்டிய கட்டபொம்முவின் வீர மரணத்துடனும் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கலாகாது, மதிப்பிடலாகாது. எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கலை மற்றும் இலக்கியம் சார்ந்த முகமும். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போலவே, எட்டயபுரம் சமஸ்தானத்தினரும் தமிழ்ப் புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரிப்பதில் முன்னிலை வகித்தனர்.1868-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி முதல் 1878-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான எட்டயபுரம் சமஸ்தானத்தின் சரித்திரத்தை "வம்சமணி தீபிகை' என்கிற பெயரில் அன்றைய சமஸ்தான அதிபதி ஜெகவீரராம குமார எட்டப்பரின் விருப்பப்படி, அப்போதைய சமஸ்தான சம்ஸ்கிருதப் பண்டிதர் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் எழுதி இருக்கிறார். இதில் பாஞ்சாலங்குறிச்சிப் போர், வீரபாண்டிய கட்டபொம்மு ஜாக்சன் துரையையும், பானர்ஜி துரையையும் எதிர்கொண்ட விவரங்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. எட்டயபுரம் ஜமீனுக்கு கும்பெனி கவர்னர் மற்றும் துரையிடமிருந்து வந்த செய்திகள், உத்தரவுகள், மானியங்கள் போன்றவை கூடக் குறிப்பிடப்படுகின்றன.1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதி எட்டப்ப நாயக்கருக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறார். ""முன்பு கவிகேசரி ஸ்ரீஸ்வாமி தீக்ஷிதரால் எழுதப்பட்ட "வம்சமணி தீபிகை' என்ற எட்டயபுரத்து ராஜவம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடன் இருப்பது சன்னிதானத்துக்குத் தெரிந்த விஷயமே. அதைத் திருத்தி நல்ல, இனிய, தெரிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். இதனால் ராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும், தமிழ் மொழிக்கொரு மேன்மை பொருந்திய சரித்திர நூலும் அமையும்'' என்பது பாரதியாரின் விருப்பம்.பாரதி பதிப்பிக்க நினைத்த அந்த நூலை, இளசை மணியன், தொ.மு.சி.ரகுநாதனின் அறிவுரைப்படி எந்தவிதத் திருத்தமும் செய்யாமல் அப்படியே மூலத்தை வெளியிட்டிருக்கிறார். எத்தனையோ சரித்திர நாவல்கள் படித்திருக்கிறோம். இது நாவல் அல்ல. சரித்திரம். நிஜக் கதையைவிட சுவாரசிமானது.ஆ.சிவசுப்பிரமணியன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, முற்றிலும் ஜமீன் சார்புடன் இந்நூல் எழுதப்படிருந்தாலும், இதிலுள்ள செய்திகள் வரலாற்று ஆவணங்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டப்பனின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மு வித்தியாசமாக அல்லவா தெரிகிறார்?******அழகான நெருப்பு என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். "அழுக்கான நெருப்பு' கேட்டிருக்கிறோமா? நெருப்புக்கு அழுக்கா? அது எப்படி? ""செருப்பால் அடித்தாலும் புத்தி வராது'' என்று இனி நான் சொல்லவே மாட்டேன். ""செருப்பு என்ன போதி மரமா புத்தி தர?'' என்கிற கவிதா குமாரின் கேள்விதான் காரணம். அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் "அழுக்கான நெருப்பு'.அதில் "நாரைகள் ஊருக்குப் போய்விட்டன' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்.

Wednesday, September 16, 2009

Chiththirameazhi

Know the Etymology: 136
Place Name of the Day: Wednesday, 09 September 2009


Chiththirameazhi

சித்திரமேழி
Cittiramēḻi

Chiththira+meazhi

(The village of) the guild of agriculturists whose totem symbol was the 'magnificent plough'

Chiththira-meazhi The magnificent plough, the symbol of agriculturists, the totem deity of agriculturists (Tamil inscription, 1300 CE, Glossary of Tamil Inscriptions, Santi Sadhana); Chiththira-meazhip-periya-naadu, Chiththara-meazhip-periya-naadu, Chithra-mea'lip-perukkaa'lar: Chiththira-mezhi-thammam: The code of conduct of the guild of agriculturists whose totem symbol was the magnificent plough (Tamil inscription 1057 CE, GTI); Chiththira-meazhi-vi'n'nakar: The Vishnu temple of the guild of agriculturists whose totem symbol was the magnificent plough (Tamil inscription, 1421 CE, GTI); Meazhi: Changkam and literary Tamil); Meazhiyar: Cultivators, traders of agricultural produce (Old Tamil Lexicons); Chiththira: Chitra) Beautiful, elegant, magnificent, exquisite, ornamental etc. The grand guild of agriculturists whose totem symbol was the magnificent plough (Tamil inscriptions, 1057 CE, 1300 CE, GTI); Plough ( (adjective, cognate of Sanskrit


Chiththira-meazhi is the name of a village in I'lavaalai, Jaffna peninsula, inhabited by a unique clan of people.

Meazhi means a plough in Changkam Tamil diction as well as in subsequent Tamil literature:

”வினைப்பகடு ஏற்ற மேழி” “Vinaip-pakadu eatta meazhi” (the plough fixed with labouring oxen, Pu'ranaanoo'ru“Kodu-meazhi nasai uzhavar” (The tipped plough loved by cultivators, Paddinappaalai

"மேழி பிடிக்கும் கை, வேல் வேந்தர் வணங்கும் கை" “Meazhi pidikkum kai, veal veanthar va'nangkum kai” (the hand that holds the plough is the hand that is worshipped by spear-holding kings, Thirukkaivazhakkam)

The phrase Chiththira-meazhi literally means 'the magnificent plough.'

But from Tamil inscriptions we come to know that it was the name of a guild of agriculturists that had taken the plough as its symbol as well as its totem deity. “செங்கோலே முன்னாகவும், சித்திரமேழியே தெய்வமாகவும்” “Chengkoalea munnaakavum, Chiththira-meazhiyea theyvamaakavum” (sceptre / unbiased rule as priority and the magnificent plough as deity, 1300 CE, South Indian Inscriptions VII, 129)

Such guilds issued edicts of their own and the earliest reference to the Chiththira-meazhi guild comes from one of its own inscriptions dated to 1057 CE, of the times of the imperial Cholas (Glossary of Tamil Inscriptions, p 243)

As the Pingkalam Lexicon of the times of the Cholas note Meazhiyar as people of cultivation lands as well as traders of earth-produce (Poo-vaisiyar), the guild was either engaged in cultivation or in the trade of agricultural produce or both.

In later inscriptions the guild titled itself as Chiththira-meazhip-periya-naadu, meaning that it was a grand guild or arch body of several guilds or clans (Periya-naadu). Many inscriptions of the guild record its charities.

The Tamil origins of this guild and its affiliation to the Chola Empire are also evident in the inscriptions:

“Uththama nithi, uyar perung keerththi, muththamizh maalai muzhuvathum u'narntha Chiththira meazhip periya naaddoam”

”உத்தம நிதி, உயர் பெருங் கீர்த்தி, முத்தமிழ் மாலை முழுவதும் உணர்ந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோம்”

(“We, the grand guild of Chiththira-meazhi, well versed in the three components of Tamil, i.e., literature, music and theatre, and who posses honest wealth and high prestige,” 1300 CE, South Indian Inscriptions VII 129)

“Chiththira meazhi thammam inithu nadaaththukin'ra S'ree Raajeanthra Chiththira-mea'lip perukkaa'laroam,”

“சித்திரமேழி தம்மம் இனிது நடாத்துகின்ற ஸ்ரீ ராஜேந்த்ர சித்திரமேளிப் பெருக்காளரோம்,”

(“We, the prosperous producers of 'Sri Rajendra Chiththira-mezhi,' who smoothly conduct the righteous affairs of the guild,” 1057 CE, GTI p 243.)

The guild at this time adopted the name of the Chola emperor Rajendra (1014-1044), to mean that it was a chartered guild.

Groups of members of such guilds were known for migrations far and wide in historical times, but wherever settled they were bound by a common code of conduct. Their identity with the guild was stronger than the identity with the land. (See column on
388:11); "கொடுமேழி நசை உழவர்" 205) Chea'niya-theru)

It is not known when and why members of this guild settled in the said locality Chiththira-meazhi in Jaffna peninsula or whether it was a parallel formation of the guild in the island. There were parallel guilds in South India and in the island of Sri Lanka such as Then-ilangkai-valagnchiyar.

The location of Chiththira-meazhi is not a potential agricultural tract. Perhaps the guild settled here was engaged in the trade of agricultural produce. The other probabilities are that their cultivation lands were lying elsewhere or the settlement was a result of secondary migration.

What so ever, quite typical of the attributes of such ancient and medieval guilds, the clan of the place Chiththira-meazhi in Jaffna maintained its identity, even though the original economic activity and pre-eminence were lost. Known as Chiththira-meazhiyaar

Chiththira-meazhi is a small village or locality that now comes under the larger village I'lavaalai of Valikaamam Southwest Division of Jaffna district.

First published: Wednesday, 09 September 2009, 23:01

(people of Chiththira-meazhi), the people of the locality are vegetarians and do not partake of food or water even from other agricultural communities.
Previous columns:

Latest 15 Reports


Saturday, September 5, 2009

நச்சினார்க்கினியரின் உவமைத்திறன்தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெருமக்களில் நச்சினார்க்கினியர் குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பிய நூலில் உள்ள எழுத்ததிகாரம், பொருளதிகாரம் இரண்டுக்குமே உரை எழுதியுள்ளார்.


பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் எனும் ஆறு இயல்களும் எழுதப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியரின் உரையானது இளம்பூரணர் உரைக்கும் பேராசிரியர் உரைக்கும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது.


புலவர்கள் தாங்கள் கூறவந்த கருத்துகளைத் தெளிவாக விளக்குவதற்கு உவமைகளைக் கையாள்வது தொன்றுதொட்டு வரும் மரபாகும். பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர் பயன்படுத்தியுள்ள சில உவமைகள் இந்த உரையாசிரியரின் கற்பனை நயத்துக்கும், இவரது எழுத்து ஆளுமைக்கும் உவமையாக இருக்கிறது.


நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்திற்கு அப்பெயர் ஏன் வந்தது என்பதை பின்வருமாறி விளக்குகிறார். அப்போது, "நாண்மீனின் பெயர், நாளிற்குப் பெயராகினாற் போல' என்ற உவமையைக் காட்டுகிறார்.


கார்த்திகை என்பது ஒரு நாள்மீனின் பெயராகும். கார்த்திகை மீனின் ஆட்சிக்குரிய நாளுக்கு கார்த்திகை எனும் பெயரே ஆகிவந்து ஆகுபெயராக நிற்கிறது. அதுபோல, "பொருள்' எனும் பெயரானது அப்பொருளின் இலக்கணத்தை உணர்த்தும் அதிகாரத்திற்குப் பெயராக வந்துள்ளது என்பது நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்.


கலித்தொகையில், ""கொடிமிசை மையறு மண்டிலம்'' எனும் தொடர் காணப்படுகிறது. இத்தொடரில் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்பது பொருளாகும்.

""கொடிநிலை கந்தழி வள்ளி என்ற


வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்


கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே''

என்ற நூற்பாவின் பொருளைக்கூற வரும் நச்சினார்க்கினியர் கலித்தொடரின் தொடரை உவமையாக்குகிறார். ""கொடிமிசை மையறு மண்டிலம் என்றாற்போல'' என்பது அவர் காட்டும் உவமையாகும்.


அதாவது, கலித்தொகையில் கொடி எனும் சொல் கீழ்த்திசை எனும் பொருள்தருவதுபோல இந்நூற்பாவிலும் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்று பொருள் கொள்ள வேண்டும். அப்போது ""கொடிநிலை என்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் சூரியன் எனும் பொருளைத்தரும்'' என்பது இதன் விளக்கம்.


அடுத்து, உள்ளங்கை, புறங்கை எனும் இரண்டையும் உவமையாக நச்சினார்க்கினியர் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்கு இருக்க முடியாது.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை பெருந்திணை எனப்படும் ஏழும் அகத்திணையில் வருகின்றன. பன்னிரு படலத்தாரும், வெண்பாமாலை ஆசிரியரும் புறத்திணை பன்னிரண்டு என வகுத்துள்ளனர். ஆனால் நச்சினார்க்கினியரோ, ""அங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காவது இரண்டாயவாறு போல'' எனும் உவமையைக் கூறி, அகத்திணை ஏழுவகை என்றால் புறத்திணையும் ஏழுவகையாகத்தான் இருக்க முடியும். பன்னிரண்டாக இருக்க முடியாது என்று விளக்குகிறார்.


பொதுவாக ஒருவரை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்களில் யார் உயர்ந்தவர் என்பது உலக வழக்காகும். ஆனால் அறிவர், தாபதர் முதலியவர்களைப் பிறரோடு ஒப்பிட்டுப் பாராமலேயே அவர்தம் உயர்வை எண்ணி அவரை மேம்பட்டவர் என்று வாகைத்திணையில் காட்டப்படுகிறது.


இதற்கு உவமை கூறவந்த நச்சினார்க்கினியர் ""ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற் போல'' எனக் காட்டுகிறார். உலகில் மாணிக்கத்தை வேறு பொருளுடன் ஒப்பிட்டுப் பாராமலேயே அதன் உயர்ச்சி கருதி பாராட்டுகின்றனர். அதுபோல அறிவர் முதலானவர்களையும் உயர்வாகக் கருதுவர் என்பது இதனால் விளக்கப்படுகிறது.


ஒன்றே வேறே எனும் நூற்பாவில் "உயர்ந்த பால்' என்பது உயர்தற்குக் காரணமாகிய பால் எனப் பொருள் விரியும். இதை விளக்க நச்சினார்க்கினியர், "நோய் தீர்ந்த மருந்து' என்ற உவமையைக் கையாள்கிறார். நோய் தீர்ந்த மருந்து என்பது, நோய் தீர்வதற்குக் காரணமாகிய மருந்து என்று பொருள் விரியும். எனவே இவ்வுவமை மிகவும் பொருத்தமானதாகும்.


""மிக்கோனாயினும் கடிவரையின்றே'' எனும் நூற்பாவில் மிகுதல் என்பது இரட்டித்தல் எனும் பொருளைத் தருகிறது. இதை விளக்க, ""வல்லெழுத்து மிகுதல் என்றாற்போல'' என்று நச்சினார்க்கினியர் உவமை கூறுகிறார். புணர்ச்சி இலக்கணத்தில் வல்லெழுத்து மிக்கது என்றால் அங்குள்ள ஒரு வல்லொற்று இரட்டித்தலைக் குறிக்கும். அதுபோலவே இந்நூற்பாவிலும் பொருள்காண வேண்டும் என்று உவமை காட்டுகிறது.


இதுபோல தொல்காப்பியப் பொருளதிகார உரையில், தான் கூற வந்த விளக்கத்துக்கு அரண் சேர்த்துப் பெருமை சேர்க்கப் பல உவமைகளை நச்சினார்க்கினியர் கையாண்டுள்ள உவமைத்திறன் படித்து இன்புறத்தக்கது

Friday, September 4, 2009

அழகுதான்!
ஒண்ணும் ஒண்ணும் அழகுதான்
ஒவ்வொண்ணும் அழகுதான்
மண்ணில் விதையும் முளைப்பதால்
மண்ணும் கூட அழகுதான்!

கண்ணில் பார்வை அழகுதான்
கடலில் அலை அழகுதான்
கன்னித் தமிழ் அழகுதான்
கவிதை பாடல் அழகுதான்!

விண்ணைத் தொடும் மரங்களோ
விரிந்தக் காட்டிற்கு அழகுதான்
வியக்கும் மனித நாவுக்கு
உண்மை மட்டும் அழகுதான்!

வண்ண நிலவு குளுமையில்
வாழும் உலகம் அழகுதான்
எண்ண எண்ண அழகுதான்
எதுவும் மனதின் அழகுதான்!