ஒண்ணும் ஒண்ணும் அழகுதான்
ஒவ்வொண்ணும் அழகுதான்
மண்ணில் விதையும் முளைப்பதால்
மண்ணும் கூட அழகுதான்!
கண்ணில் பார்வை அழகுதான்
கடலில் அலை அழகுதான்
கன்னித் தமிழ் அழகுதான்
கவிதை பாடல் அழகுதான்!
விண்ணைத் தொடும் மரங்களோ
விரிந்தக் காட்டிற்கு அழகுதான்
வியக்கும் மனித நாவுக்கு
உண்மை மட்டும் அழகுதான்!
வண்ண நிலவு குளுமையில்
வாழும் உலகம் அழகுதான்
எண்ண எண்ண அழகுதான்
எதுவும் மனதின் அழகுதான்!
Comments
Post a Comment