Saturday, July 24, 2010

"வாராது வந்த மாமணி' வ.உ.சி!: கலைமாமணி விக்கிரமன்


கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி உலகநாதர்-பரமாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யுடன் பிறந்தவர்கள் அறுவர். வ.உ.சி.யும், சகோதரர் மீனாட்சிசுந்தரமும் எஞ்சியவர்கள். ஒட்டப்பிடாரத்தில் தொடக்கப் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய சிதம்பரனார், திருச்சியில் சட்டம் பயின்று 1894-இல் வழக்குரைஞரானார். 1895-ஆம் ஆண்டு வள்ளியம்மாள் என்பவரை திருமணம் புரிந்துகொண்டார். ஆனால், 1902-இல் வள்ளியம்மாள் மறைந்தார். அக்கால வழக்கப்படி மீனாட்சி என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார்.ஆன்மிகம், இலக்கியம், அறநெறி ஆகியவற்றை வளர்ப்பதற்காகவே "விவேகபானு' என்ற இதழை நண்பர்களின் முயற்சியுடன் தொடங்கினார். இலக்கிய, ஆன்மிக ஈடுபாட்டுடன் திலகரின் கொள்கையில் அவர் ஈர்க்கப்பட்டதால் நாட்டுப் பற்று மிக்கவரானார். "திலக மகரிஷியின் கதைபாடும் - போது சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்' என்று நாமக்கல் கவிஞர் எழுதுகிறார். திலக மகரிஷியைப் பற்றி அரிய நூலொன்றை சிதம்பரனார் இலங்கை வீர கேசரி இதழில் தொடர்ந்து எழுதினார்.மகாகவி பாரதியின் எழுத்துகள் அவரைக் கவர்ந்தன. சென்னையில் பாரதியை முதன் முதலில் சந்தித்தார். அதன் பிறகு அவருக்குச் சுதந்திர வேட்கை அதிகமானது.வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க, மேல்நாட்டுப் பொருள்கள் பகிஷ்காரம், அஹிம்சை வழி ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுதல் தவிர, பொருளாதார ரீதியில் பிரிட்டிஷ் கம்பெனியுடன் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. நாமே ஏன் கப்பல் கம்பெனி ஒன்று தொடங்கி கப்பல் விடக்கூடாது என்ற எண்ணம் சிதம்பரனாருக்கு உதயமானது. வாடகைக் கப்பல் வாங்க, வ.உ.சி. பம்பாய் சென்றார். திலகரின் உதவியுடன் காலியோ, லாவோ என்ற பெயருடைய இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கப்பல் கம்பெனி ஒன்று பதிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டது.தூத்துக்குடியில் "கோரல் மில்' என்ற நூற்பாலை 1888-ஆம் ஆண்டு உருவானது. கடுமையான வேலைப் பளுவாலும், குறைந்த ஊதியத்தாலும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். தொழிலாளர் நலச் சட்டம் இல்லாத காலம். விடுமுறை நாள்களில் சம்பளம் கிடையாது. குறிப்பிட்ட வேலை நேரம் கிடையாது. தவறு செய்யும் தொழிலாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. தொழிலாளர்களால் கொடுமையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. தொழிற்சங்கம் ஏற்படவில்லை.இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சிவா தூத்துக்குடிக்கு வந்தார். அவர் சிறந்த பேச்சாளர், கனல்கக்கப் பேசுபவர். சிதம்பரனாரும் அவரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால்தான், அவர்கள் பிரச்னைதீரும் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுடைய அடிப்படை உரிமையை எடுத்துக் கூறி அவ்வப்போது கூட்டங்கள் நடத்தினர்.இறுதியாக, "கோரல் மில்' தொழிலாளரிடையே சிவாவும், வ.உ.சி.யும் வேலை நிறுத்தம் செய்யுமாறு கனல்வீசச் சொற்பொழிவாற்றினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் போராட்டமாக மாறியது. வேலை நிறுத்தச் செய்தி இந்தியா எங்கும் பரவியது. இந்த வாய்ப்பை, தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைத்தார் வ.உ.சி. தூத்துக்குடி நகரமே குலுங்கியது. நிலைமை மோசமாவதைக் கண்டு மில் முதலாளிகள் பணிந்தனர். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர். போராடினால்தான் வெற்றி பெறுவோம் என்ற வேலை நிறுத்த இயக்கம், மற்ற தொழிலாளர்களிடையே பரவாதிருக்க மற்ற முதலாளிகள் சிலரும் தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்கத் தொடங்கினர். வ.உ.சி.யின் வாழ்க்கையில் தொழிலாளர் போராட்டம் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாடும் கூட்டத்தை நடத்தக்கூடாது என்றும், ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும் தூத்துக்குடி மாஜிதிரேட் தடை உத்தரவு பிறப்பித்தார். வ..உ.சி. உத்தரவை மதிக்கவில்லை. நேரே வந்து சந்திக்குமாறு கலெக்டர் கடிதம் அனுப்பினார். கலெக்டர் விஞ்சுவை வ.உ.சி. நேரே சந்தித்தார். அவருடன் பத்மநாப ஐயங்கார் என்பவரும் சென்றார். சந்திப்பில் விஞ்ச், சிதம்பரனாரை மிரட்டினார். விஞ்ச் - சிதம்பரனாரது இந்த சந்திப்பை பாரதியார் கவிதையாக எழுதினார். அந்தக் கவிதையை இன்றைய தலைமுறையினரும் ஒருமுறை படிக்க வேண்டும்.""சதையைத் துண்டு துண்டாக்கினு முன் எண்ணம்சாயுமோ-ஜீவன் ஓயுமோஇதயத்துள்ளே இலங்கு மகா சக்தியேகுமோ நெஞ்சம் - வேகுமோ''என்று கடைசியில் சிதம்பரனார் பதில் கூறுவதாக அமைந்த கவிதை வரிகள் அஞ்சா நெஞ்சினராய் சிதம்பரனார் கூறும் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.வ.உ.சி. கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி பாரத தேசமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊர்களிலும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.சிதம்பரனாருக்கு மட்டும் ஜாமீன்தர தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் முன்வந்தனர். "சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய இருவருக்கும் ஜாமீன் கொடுத்தால்தான் நான் வெளியே வருவேன்' என்று சிதம்பரனார் தனக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை மறுத்தார். "சிதம்பரம் பிள்ளையின் பெருங்குணம்' என்று அன்றைய ஒரே தேசிய இதழான "சுதேசமித்திரன்' பாராட்டி எழுதியது.சென்னை உயர் நீதிமன்றம் வ.உ.சி., சிவா, பத்மநாபன் மூவரையும் ஜாமீனில் வெளியேவிட உத்தரவிட்டது. ஆனால், வெளியே வந்த சிதம்பரனாரையும், சிவாவையும் சிறை வாயிலிலேயே அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. அவர்கள் மீது ராஜ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.1908-இல் இந்தத் தீர்ப்பு (இரட்டை தண்டனை) வெளியானதைக் கேட்ட அவர் சகோதரர் மீனாட்சிசுந்தரம் மன அதிர்ச்சிக்கு உள்ளானார். 1943-இல் மரணம் அடையும் வரை அவர் மனநிலை சரியாகாமலேயே பித்தராக வாழ்ந்தார். வ.உ.சி. தன் வரலாற்றில் முதல் பகுதியைக் கோவைச் சிறையிலும் இரண்டாம் பகுதியை விடுதலைக்குப் பிறகு சென்னையிலும் எழுதினார். சிறைச்சாலையில் கொடூர தண்டனைக்கு இடையே பல நூல்களை எழுதினார், ஜேம்ஸ் ஆலனின் "அகமேபுறம்' நூலை மொழிபெயர்த்தது வ.உ.சி.யின் சிறந்த சாதனை. பொருளாதாரப் புரட்சியின் மூலம் பிரிட்டிஷ் அரசைப் பணியவைக்கும் நோக்குடன் கப்பல் கம்பெனியைத் தொடங்கியதால் "கப்பலோட்டிய தமிழர்' என்ற பெயர் அவருக்கு நிலைத்தது. சிதம்பரனாருக்குத் திருக்குறளின் மீது பெருமதிப்பும், பக்தியும் உண்டு. மணக்குடவர் உரையின் அறத்துப்பாலை மிக எளிமைப்படுத்தி வெளியிட்டார். தொல்காப்பியத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டால் எழுத்ததிகாரத்தை எழுதி வெளியிட்டார்.மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் எனும் நூல் பதினான்கு மெய்ப்பொருள் நூல்களுள் ஒன்றாகும். திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் எனும் நூல்கள், நீதி நூல்களிலும் சிந்தாந்த நூல்களிலும் வேதாந்த நூல்களிலும் உயர்ந்தவை என்பது சிதம்பரனாரின் கருத்து. "திருக்குறள், சிவஞானபோதம் இவற்றின் உரைகள் கடினமானவை. மக்கள் படிக்கவே அஞ்சினார்கள். எனவே, எளிய நடையில் அவற்றுக்கு உரைகள் எழுத எண்ணினேன்' என்று கூறுகிறார் சிதம்பரனார்."என்று தணியுமிந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியாரின் பாடலைக் கேட்ட வண்ணமே "வாராது வந்த மாமணியாம்' சிதம்பரனார் 1916-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி இரவு உயிர் நீத்தார்.தேசபக்தராகவும், படைப்பிலக்கிய மேதையாகவும், ஒழுக்கக் குன்றாகவும், பாரதம், ராமாயணம் போல் பெருங்காப்பியம் எழுதும் அளவுக்கு காப்பியத் தலைவராகவும் திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் திறமை, பெருமை, அருமை இந்தக் கால, வருங்கால இளைஞர்களுக்குப் புரியும்.
கருத்துக்கள்

V.O.C died on the 18 November 1936 in the Indian National Congress Office at Tuticorin as was his last wish. Wikipedia வ.உ.சி. 1916-ல் இறந்ததாக குறிப்பிட்டுள்ள பிழை திருத்தப் படவேண்டும். கட்டுரை சிற்ப்பாக உள்ளது.
By M.D.Jayabalan
7/7/2010 5:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இந்த வாரம்


பழ.பழனியப்பன், கவிஞர் க.அம்சப்பிரியா
கோவை செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் உமா பதிப்பகத்தாரின் அரங்கில் நுழைந்ததும் கண்ணில் தட்டுப்பட்டது ஒரு புத்தகம். கம்பன் என்று சொன்னாலே எனக்குக் கரும்பு தின்பதுபோல. அதிலும் "கம்பன் அடிசூடி' பழ.பழனியப்பன் எழுதிய "கம்ப நிதி' என்கிற புத்தகம் எனும் போது என்னை அறியாமலேயே காந்தத்தை நோக்கி இழுக்கப்படும் இரும்பாக அந்தப் புத்தகம் ஈர்த்தது. சென்னை கம்பன் கழகத்தின் செயலாளராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் இருந்தவர். இப்போது காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளராக இருந்து "கம்பன் அடிப்பொடி' விட்டுச்சென்ற பணிகளை தொய்வில்லாமல் தொடர்பவர். கம்பனைப் பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர்.கம்பனைப் பற்றிப் பேசுவதற்காகவே பழ.பழனியப்பன் பல இளம் தலைமுறைப் பேச்சாளர்களை இனங்கண்டு வாய்ப்பளித்துப் பிரபலப்படுத்தியவர். இன்று அவர்களில் பலரும் பணத்தாசையால் தங்கள் புகழை விலைபேசத் துணிந்துவிட்டனர் என்பது வேறு விஷயம். ஆனாலும் சற்றும் மனம் தளராமல், ஆண்டுதோறும் அரை டஜன் புதிய பேச்சாளர்களை இலக்கிய மேடைக்கு அறிமுகப்படுத்தும் பழனியப்பனின் அரும்பணி தொடர்கிறது.எல்லோரையும் மேடையேற்றி கம்பன் புகழ் பாடவைக்கும் "கம்பன் அடிசூடி' கம்பனைப் பற்றிப் பேச, அதைநான் கேட்கவேண்டும் என்று எனக்குக் கடந்த சில மாதங்களாகவே இரகசிய ஆவல். ஏனைய கம்பன் கழகத்தார் யாராவது இவரை அழைப்பாளர்களா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நான்.பேசித்தான் கேட்கவில்லை - படித்துத்தான் பார்ப்போமே என்று "கம்ப நிதி'யைப் புரட்டத் தொடங்கினால்,  குகைக்குள் நுழைந்தபோது அலிபாபாவுக்கு ஏற்பட்ட பிரமிப்பும், அளப்பரிய ஆனந்தமும் எனக்குள் ஏற்பட்டது.கம்பராமாயணம் திருமுடிசூட்டுப்படலம் 38வது பாடல், தாங்குதல், ஏந்துதல், களித்தல், பற்றுதல், ஓங்குதல், கொடுத்தல், புனைதல் ஆகிய ஏழு செயல்களை அனுமன், அங்கதன், பரதன், இலக்குவ சத்துருக்கனர், சீதாப்பிராட்டியார், சடையப்பர் மரபினோர், வசிட்டர் ஆகிய எண்மர் செய்வதைக் குறிப்பிடுகிறது.ஒரு அரசு அமைகிறபோதே, அதன் அங்கங்கள் குற்றமற்றவை என்று காட்டினால்தானே, அவ்வரசாட்சி குற்றமற்றதாக நடைபெறும் என்பதற்கு கட்டியம் கூறும் என்பது கம்பநாடன் கருத்து என்று பழனியப்பன் சுட்டிக்காட்டியிருப்பது பளிச்சென்று பதிகிறது.எட்டு அற்புதமான கம்பகாவியம் பற்றிய கருத்துக் கண்ணோட்டமும், "கம்ப நிதி' என்கிற பொதுத் தலைப்பில் ஒன்பது கட்டுரைகளும்... அடடா... பழ.பழனியப்பன் கம்பனைப் பற்றிப் பேசிக் கேட்கவேண்டும் என்கிற ஆவல் மேலும் அதிகரிக்கிறதே...********ஒருசில ஒப்பற்ற தலைவர்களின் பங்களிப்பு முழுமையாக வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல, தீரர் சத்தியமூர்த்தி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்களின் பங்களிப்புகளும் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான் உண்மை. இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.யை சைவ வெள்ளாளராகவும், பெருந்தலைவர் காமராஜை நாடாராகவும், அறிஞர் அண்ணாவை முதலியாராகவும் ஜாதிக் கூண்டில் அடைக்க முற்படும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்த மாபெரும் தவறால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது "பசும்பொன்' தேவரின் புகழ்தான் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் ஒரு மிகப்பெரிய ஜமீன்தார். ஏகப்பட்ட நிலபுலன்கள். 19 வயதே நிரம்பிய முத்துராமலிங்கம் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவர் வந்தது சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரம்.1927-இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை வந்திருந்தார். பிரபல காங்கிரஸ்காரராக இருந்த தேவரின் குடும்ப வழக்கறிஞர் ஸ்ரீநிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கு இணங்க, விருந்தினராக வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸýக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு தேவருக்குக் கிடைத்தது. அன்று அவர்களிடம் ஏற்பட்ட நட்பு குரு-சிஷ்ய மனோபாவம்  கடைசிவரை தொடர்ந்தது என்பதுதான் சரித்திரம்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்கள் ஒருசிலரே. சில மறைக்கப்பட்டன. பல மறக்கடிக்கப்பட்டன. அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், இலக்கியம் என்று தேவரின் ஆளுமை விரிந்து பரந்தது மட்டுமல்ல, ஆழங்கால் பட்டதும்கூட.தமிழக சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரைகளும், அவர் எழுப்பிய கேள்விகளும் நாடாளுமன்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் மேற்கோள் காட்டப்பட வேண்டியவை. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே அமையப்பெற்றதுடன் ஒரு துறவிபோன்று தன்னை முழுமையாக சமுதாயப் பணிக்கு அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பது வெளியில் தெரியாமல் போனதற்கு முக்கியமான காரணம் அவருக்குப் பூசப்பட்ட ஜாதி முலாம்தான் என்று தோன்றுகிறது.ஆர்.சக்திமோகன் நடத்திவந்த "கண்ணகி' இதழில் "பசும்பொன்' தேவர் எழுதிய கட்டுரைகள் கே.ஜீவபாரதியால் தொகுக்கப்பட்டு, "பசும்பொன் தேவரின் கட்டுரைகள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அதில் தேவர் எழுதி இருக்கும் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே நாம் அதிர்ந்துவிடுவோம், பசும்பொன் தேவருக்கு இத்தனை பரிமாணங்களா என்று."பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சி.', "கிழக்காசியாவும் வருங்காலமும்', "காஷ்மீரில் மூன்று பாகிஸ்தான்', "பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள், கொடுத்தவனும் முட்டாள்', "வட அட்லாண்டிக் மாநாடு', "பணவீக்கமும் உணவுக் கொடுமையும்', "ஜெனிவா மாநாடும் மத்தியக் கிழக்கும்', "மாசேதுங்கின் மாஸ்கோ பயணம்' என்று பல கட்டுரைகள். போதாக்குறைக்கு பசும்பொன் தேவரின் நேதாஜி பற்றிய ஒரு பேட்டியும் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தியதற்கு ஜீவபாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழகத்தின் முதல்வராக இருப்பதற்கான எல்லாத் தகுதிகளும் இருந்த மாமனிதர் பசும்பொன் தேவர் என்பதை ஜாதிக் கண்ணாடியை அகற்றிவிட்டு பார்த்தால் மட்டுமே புரியும்!********கவிஞர் க.அம்சப்பிரியா ஒரு பள்ளி ஆசிரியர். இலக்கிய ஆர்வம் இவரை ஒரு சிற்றிதழ் நடத்த வைத்திருக்கிறது. கவிதைகளை எழுதிக் குவிக்கிறார் இந்தப் பொள்ளாச்சிக்காரர்.சமீபத்தில் "இரவுக் காகங்களின் பகல்' என்கிற இவரது கவிதை நூலைப் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து ஒரு கவிதை-நீச்சல் குளத்துச் சிறுமிதவறிப் போனஆற்றின் பேரழகை -புறக்கணிக்கப்பட்டகிணற்றின் சுடர்மிகு ஆழத்தைமறுக்கப்பட்டகுளத்தின் பெரும் அமைதியைதேடித் தேடி நீந்துகிறாள்சுற்றுலாத் தலத்தின்செயற்கை நீச்சல் தொட்டியில்சிறகுகளைக் குறுக்கியபடிஅச் சிறுமியொருத்தி!
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்


ஐம்பெரும் காப்பியங்களுள் கம்பராமாயணம் ஏன் இடம்பெறவில்லை?சமயப் பூசலே காரணம்காப்பியம்' என்பது "காவியம்' என்பதன் வட சொல்லின் திரிபு ஆகும். ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு பிற்காலத்தில் தோன்றியது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசை போல பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கிவரத் தொடங்கியது.வடமொழியில் நைடதம், ரகுவம்சம், குமாரசம்பவம்,, கிராதர்ஜுனியம், சிசுபாலவதம் ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாக விளங்கின. அந்த வடமொழி மரபைப் பின்பற்றியே தமிழில் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் வகைப்படுத்தி உள்ளனர். வடமொழி மரபைப் பின்பற்றி காப்பிய வகைப்பாடு செய்து இருப்பதால் காப்பியத் தகுதி இல்லாத நூல்களையும் காப்பியம் என்று கூறுகிற போக்கைக் காணமுடிகிறது.வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடியொற்றி, கம்பர் ராமாயணத்தை திருந்திய வடிவில், காவிய இன்பத்தோடு வளம் பொருந்தியதாக அமைத்துள்ளதை,""நாரதன் கருப்பஞ் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்பார் அமுது அருந்தப் பஞ்ச தாரையாய்ச் செய்தான் கம்பன்வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருந்தினானே''(மிகை:28)என்ற பாடல் நமக்கு உணர்த்துகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என நாம் கம்பராமாயணத்தின் காலத்தை வரையறுத்தாலும் அதன் வடிவமும், கம்பரின் கவிதை நயமும் எக்காலத்துக்கும் இன்பத்தை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையாகாது.÷கம்பராமாயணம் தோன்றிய காலத்தில் சமண, பெüத்த சமயக் கருத்துகளே மேலோங்கி இருந்தன.  "வீடுபேறு' என்ற தத்துவமே சமயத்தில் சிறப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழில் உள்ள சிலப்பதிகாரம் முதலிய ஆரம்பகாலக் காப்பியங்கள் யாவும் சமண, பெüத்தக் காப்பியங்களாக இருந்ததால் அவை ஐம்பெருங்காப்பியங்களுள்  இடம்பெறத் தகுதியானதாகக் கொள்ளப்பட்டது. மேலும், கம்பரை அவர் வாழ்ந்த காலம் எளிதாக ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழல் இருந்தது. அது அவரைத் தனித்துவப்படுத்தியே காட்டியது. இதுபற்றி கம்பரே வருந்திக் கூறியுள்ளார் என்பதை ராமாவதாரம் தற்சிறப்புப் பாயிரம் எடுத்துக் கூறுகிறது.ஐம்பெருங்காப்பியங்களுள் இருந்து கம்பராமாயணம் புறந்தள்ளப்பட்டதற்கு மேற்சுட்டிய காரணங்களே பொருத்தமாக இருக்கிறது.ஐம்பெருங்காப்பியங்களாக விளங்கக்கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய இவை ஐந்தும் சமண, பெüத்தக் காப்பியங்களாகவே இருக்கின்றன. இதனால், அக்காலத்தில் சமணமும் பெüத்தமும் தழைத்தோங்கியது என்பதை உணரமுடிகிறது. மேலும், கம்பரது வைதீக நெறி கம்பராமாயணத்தில் பிரதிபலித்தது. அதனாலேயே இதைச் சமணர்களும் பெüத்தர்களும் ஏற்கவில்லை. சமயப் பூசல் காரணமாகவே கம்பராமாயணம் ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை.
சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை

First Published : 04 Jul 2010 12:00:00 AM IST


பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும் குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர். அதுபோல வேதாயாதிகள் (உடன் பிறந்தோர்) ஒருவரை ஒருவர் நாடாளும் உரிமைக்காகப் போராடிய வரலாறுகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. அதற்கு எடுத்துக் காட்டாக புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்றை இங்கு காண்போம்.அண்ணன் தம்பிகளான சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் சோழ நாட்டின் இருவேறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது தங்களுக்குள் தொடர்ந்து போர்புரிந்து வந்துள்ளனர். ஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த நெடுங்கிள்ளி, அண்ணன் நலங்கிள்ளியுடன் நடந்த போரில் தோற்று உறையூரில் வந்து தங்குகிறான். அதை அறிந்த நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிடுகிறான். சோழன் குடியைச் சேர்ந்த இருவரும் தம்முள் பகைகொண்டு மாறிமாறிப் போர் செய்துகொண்டு இருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைத்த கோவூர்கிழார் என்னும் புலவர், இருவரையும் சந்து செய்யும் (சமாதானம்) பொருட்டுப் பாடியுள்ள ஒரு பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.""நலங்கிள்ளி! உன்னால் எதிர்க்கப்படுபவன் பனம்பூ மாலையைச் சூடிய சேரனும் அல்லன். வேப்பம்பூ மாலையைச் சூடிய பாண்டியனும் அல்லன். உன்னுடைய மாலையும் ஆத்திப்பூமாலை. உன்னோடு போர் செய்பவன் அணிந்துள்ள மாலையும் ஆத்திப்பூ மாலையே! இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ உமது சோழர் குடியே! உங்கள் இருவருக்கும் நடைபெறும் போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயற்கையில் நடக்கக்கூடிய செயலன்று. அதனால், உம்முடைய செயல் சோழர் குடிக்குத் தகுதியுடைய செயல் அல்ல.நீங்கள் இருவரும் உங்களுக்குள் நிகழ்த்தும் இப்போரைக் கண்ணுறும் உம்மையொத்த அரசர்களுக்கு (சேர, பாண்டியர்க்கு) உடல் குலுங்கும்படியான (உடல் பூரிக்கும்படியான) நகைப்பை உண்டாக்கும். எனவே, உங்களுக்குள் நிகழும் இப்போரை உடனடியாக நிறுத்துங்கள்'' என்று அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் இதுதான்,""இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே, நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றேஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியேஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே - அதனால்குடிப்பொருளன்று நும் செய்தி கொடித்தேர்நும்மோரன்ன வேந்தர்க்குமெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே''(புறம் - 45)
காந்தியக் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை


திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்திஜி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது'' என்று மூதறிஞர் ராஜாஜி பாராட்டியுள்ளார். பாரதி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர் முதலான தமிழ்மொழிக் காவலர்கள் ராஜாஜி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். "நாமக்கல் கவிஞர்' என்று மக்களால் பாராட்டப்பட்ட வெ.இராமலிங்கம் பிள்ளை, மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர் என்று சொல்லலாம். காந்திமகான் மறைந்தவுடன் ஒவ்வொரு வாரமும் தினமணியில் காந்திக்கு அஞ்சலி செலுத்தி 52 வாரங்கள் இசைப்பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய கவிதைத் தொகுதியில் "காந்தி மலர்' என்ற நாற்பது கவிதைகளுக்கு மேல் காந்தியடிகளை வாழ்த்தி எழுதியுள்ளவை தொகுக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில், 1888-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி வெங்கட்ராமன்-அம்மணி அம்மாள் தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்தவர்கள் எழுவரும் பெண் குழந்தைகள். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் இராமலிங்கம். தாயார், கருப்பண்ணன் என்ற பெயரிட்டே அழைத்தார். இவரது குடும்பம் நாமக்கல்லில் வாழ்ந்து வந்ததால், "நாமக்கல் கவிஞர்' என்றே அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.இராமலிங்கத்தின் தாயார் அவருக்குச் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அறிவுரைகள் கூறினார். காந்தியடிகளின் தாயார் காந்தியாரிடம் பெற்ற சத்திய வாக்குகளைப் போல அவை அமைந்தன.""நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால், பொய் மட்டும் சொல்லாதே; போக்கிரி என்று பெயர் எடுக்காதே. இந்த இரண்டைத் தவிர வேறு நீ எது செய்தாலும் பரவாயில்லை'' என்ற முதல் அறிவுரைப்படி இராமலிங்கம் கடைசி வரை செவ்வனே நடந்து கொண்டார்.புலால் உணவில் விருப்பம் கொண்ட கவிஞர், பிற்காலத்தில் திருக்குறளைப் படித்தும், சமயச் சொற்பொழிவுகள் பல கேட்டும் புலால் உண்பதை நிறுத்திக் கொண்டார்.கவிதையில் இயற்கையாகவே நாட்டம் கொண்ட இராமலிங்கம், இளமையிலேயே சித்திரக் கலை கைவரப் பெற்றார். பள்ளியிலும், பொது வாழ்விலும் அவர் நல்ல சித்திரக்காரர் என்றே அறிமுகமானார். பாராட்டுதலையும், பரிசுகளையும் பெற்றார்.தந்தை வெங்கட்ராமன், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பதவி வகித்ததால், தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்ட அவரது எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர், நாடகக் கலையிலும் நாட்டமுடையவர். அப்போது நாமக்கல்லில் வாழ்ந்து வந்த பிரபல நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கவிஞருக்குப் பிள்ளைப் பிராய நண்பர். அவரின் நடிப்பையும், குரல் வளத்தையும் கண்டு வியந்த கவிஞர், நாடகத்தில், எஸ்.ஜி.கிட்டப்பாவுக்குப் பல பாடல்கள் எழுதிக் கொடுத்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகத்தைப் பார்க்கப் பார்க்க இராமலிங்கத்துக்கும் நாட்டு நடப்பில் நாட்டம் ஏற்பட்டது.1904-இல் வைஸ்சிராயாக இருந்த கர்ஸன், வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்தப் பிரிவினை அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த பாரத மக்களைச் சுதந்திர வேட்கை கொள்ளச் செய்தது.அரவிந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெüரோஜி, கோகலே, பாலகங்காதர திலகர் போன்றவர்களின் சொற்பொழிவுகள் பத்திரிகைகளில் வெளிவரும். கவிஞர் அவற்றைப் படித்தார். அவருக்கு நாமக்கல் நாகராஜ ஐயங்கார் என்ற தேசப்பற்றுமிக்கவர் இளமைப் பருவம் முதல் இறுதி வரை உற்ற நண்பராயிருந்தார். இவற்றைப் படித்த இருவரும் முழு மூச்சுடன் தேசத் தொண்டில் இறங்கினர். கவிஞர் பேச்சுத் திறத்தால் திருச்சி மாவட்டத்தில் பிரபலமாகிவிட்டார். திலகரும், காந்தியடிகளும் மக்களிடையே தேசப்பற்றுக் கனலை வளர்க்கத் தொடங்கினர். காந்தியடிகளின் அஹிம்சை, சத்தியாக்கிரகம் என்ற இரு கொள்கைகளும் கவிஞரை ஈர்த்தன. அதுமுதல் முழுக்க முழுக்கக் காந்தியக் கவிஞராக மாறிவிட்டார்.வேதாரண்யம் கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதற்கான பாதயாத்திரையை ராஜாஜி தலைமையில், பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து நடைப்பயணம் சென்றனர். அப்போதுதான் நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் தொண்டர்கள் உற்சாகத்தோடு பாடிக்கொண்டே சென்றனர். பிற்காலத்தில் அந்தப் பாடலை எழுதியவர் மகாகவி பாரதியாரோ என்ற ஐயம் ஏற்படும் அளவுக்கு அந்தப் பாடலும், எழுதிய கவிஞரும் புகழ் பெற்றனர்.1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்'' என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.காங்கிரஸ் இயக்கத்துக்குக் கவிஞரின் கவிதைகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன. காங்கிரஸ் கவிஞர், தேசத் தொண்டர் என்றெல்லாம் தமிழகத் தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட கவிஞருக்கு வாழ்வளித்தது ஓவியக்கலையே. தன் வறுமையை வெளியே புலப்படுத்தாமல் கெüரவமாக வாழ்க்கையைக் கம்பீரமாக நடத்தியவர் கவிஞர். அவர் கவிதையின் பெருமையை உணர்ந்த தேசபக்தர் சின்ன அண்ணாமலை அவருடைய நூல்களை வெளியிடத் தொடங்கிய பிறகுதான் கவிஞர் வாழ்க்கையில் மெல்ல மெல்ல வறுமை விலகத் தொடங்கியது. தேவகோட்டை தியாகி சின்ன அண்ணாமலை, சென்னைக்குக் குடியேறி, "தமிழ்ப்பண்ணை' என்ற புத்தக வெளியீட்டகத்தைத் தொடங்கினார்."அவளும் அவனும்' என்ற சிறு காவியத்தை நாமக்கல் கவிஞர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியாது. காவியம் என்றால் காவியத்துக்கான அமைப்புடன் கடவுள் வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப் படலம் என்ற லட்சணங்களுடன் எல்லாம் அமைய வேண்டும் என்ற காவிய இலக்கணத்தை மீறிய எளிய நடையில் அமைந்த கதைப் பாடல் "அவளும் அவனும்' அந்த நாளில் இளைஞர்களால் பாராட்டப்பட்டது. கவிஞராகவும் ஓவியராகவும் திகழ்ந்த கவிஞர், திருக்குறளுக்குப் புதிய உரை எழுதியவர். பல்சுவைப் பாடல்கள் எழுதியவர். தவிர, அவர் சிறந்த நாவலாசிரியர். அவருடைய தன் வரலாறான "என் கதை'யே நாவல் படிப்பதுபோல் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இவர் எழுதிய "மலைக்கள்ளன்', "மரகதவல்லி', "கற்பகவல்லி', "காதல் திருமணம்' ஆகிய புதினங்கள் வாசகர்களால் ரசித்துப் பாராட்டப்பட்டவை. இவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.1949-ஆம் ஆண்டு கவிஞர், சென்னை மாகாண அரசின் ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கப்பட்டார். 1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது.இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இன்று பெருமையாக முணுமுணுக்காதவர்களே கிடையாது.84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24-ஆம் தேதி சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.
கருத்துக்கள்
நன்னெறி


துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மாமுளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்குவிளைக்கும் வலியனதாம் மென்று. (பாடல்-27)முளைக்கும் பற்கள் தம்முடன் இருக்கும் நாவிற்கு கடினமான தின்பண்டங்களாயினும், மென்று கொடுத்து மிக்க சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்த சான்றோர் பிரதிபலனை எதிர்பாராமல் உடலை வருந்தச் செய்து, தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வார்கள்.
நன்னெறி


துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது உடலின் சிறுமை கண்டு ஒண்புலவர் கல்விக்கடலின் பெருமை கடவார் - மடவரால்கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்விண் அளவாயிற்றோ விளம்பு. (பாடல்-26)இளமையான பெண்ணே! கதிரவனின் ஒளியானது காணும் கண்ணின் அளவோடு நின்றுவிட்டதா? இல்லை, அதன் ஒளி எங்கும் பரவியிருக்கிறது. அதனை வெல்லும் ஒளிவேறில்லை. அதுபோல, கற்றறிந்த புலவர் உருவத்தில் சிறியவராக இருந்தாலும், அவரது கல்வியாகிய கடலின் பெருமையை யாரும் எளிதாக எண்ணமாட்டார்கள்