Friday, February 22, 2013

பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

ஒரு போராளியின்
மகனின் மரணத்தை
மற்றொரு பதிப்பாக
கண்ட கோலம் ...

நெஞ்சுக்குள்
எரிமலையை வெடிக்கச் செய்தது.

மனிதநேயம் செத்தவர்கள்
செய்கின்ற படுகொலைகளில்
இதுதாம் உச்சகட்டம்.

போகட்டும்.

அணையப் போகும் விளக்கு
பிரகாசமாகத்தானே எரியும்?

தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கெல்லாம்
நிச்சயம் பதிலடி உண்டு.

ஒரு பாலகனை அழைத்து
வைத்துக்கொண்டு
உணவுகொடுத்து
நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு
எப்படி மனம் வந்தது?

மிருகம் கூட
அப்படி எண்ணாதே?

சிறிது நேரத்தில்
தாம் கொல்லப்படுவோம் என
அறியாது
பசியாறிக்கொண்டிருக்கும்
அந்தப் பிஞ்சைக் கொல்ல
எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது?

மனிதனுக்குப் பிறந்தவர்
செய்கிற காரியமா இது?

இந்திய தூக்குத் தண்டனைக்
குற்றவாளிகளுக்குக் கூட
கடைசி நிமிடம்
ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்
அதிர்ஷ்டம் கிட்டுமே?

அச்சிறுவன் என்ன
குற்றம் செய்தான்?

ஒரு போராளிக்கு மகனாய்ப்
பிறந்தது குற்றமா?

கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்ட இனப் படுகொலைகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து
பாதுகாத்து வந்தது
ஒரு போராளியின் குற்றமா?

குடும்பத்தில் ஒன்றுவிடாமல்
அழிப்பதுதாம் வீரமா
கோழைகளே...

தமிழன் மீது
வெளிநாட்டான் கொண்டிருக்கும்
பற்றில் கால்வாசி கூட
இந்தியா வைக்கவில்லையா?

அந்தக் கொலையாளிகள்
நாட்டுக்குள் பதவியோடு
வருவார்கள்
இவர்கள் மாலை மரியாதை செய்து
உணவுபோட்டு அனுப்புவார்கள்.

இது எத்தனை நாட்களுக்கு?

பூனையும் ஒருநாள்
புலியாக மாறும் என்பது
தெரியாதா?

Tuesday, February 19, 2013

இளையநிலவைச்சிதைத்த பாவிகள்

இளையநிலவைச்சிதைத்த பாவிகள் அவர்கள்!இன விடுதலையை எண்ணாத பாவிகள் நாம்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கொஞ்சி விளையாடிய
குழந்தைமுகம் கண்டும்
துவக்கு கொண்டு
துடிதுடிக்கக் கொல்லத்
துணிந்தனரே!
பால்வடியும் முகத்தைப்
பார்த்தவர்க்குக் கண்ணில்லையா?
பச்சைப் பசுந்தளிரைப்
பழிகாரப் பாவிகள்
பதைக்கப் பதைக்கக்
கொன்றனரே!
பிஞ்சுமனம் துவண்டவிதம்
அறிவோமா நாம்?
கறைபடிந்த காந்தியும்
புனிதம் தொலைந்த புத்தரும்
வரலாற்றின் ஏடுகளில்
வாழ்விழந்து போயினரே!
நெட்டைமரமென நின்றுபுலம்புகிறோம்!
வெற்றுப் புலம்பல்
விடியலைத் தந்திடுமோ?


Saturday, February 16, 2013

அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன்

அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன்


ஒரு முறை அதிமதுரகவி, மூச்சுவிடும் முன்பே 300, 400 எனப் பாடல்களைப் பாடுவதாகப் பெருமை பேசினார். அதைக்கேட்ட காளமேகப் புலவர், ""பிள்ளாய் இம்மென்னும் முன்னே 700, 800 பாடல்களைப் பாடுவேன்; அம்மென்றால் ஆயிரம் பாட்டுகளைப் பாடுவேன்; சும்மா இருந்தால் இருப்பேன்; வெகுண்டெழுந்தால், யானையின் துதிக்கையைப் போலப் பெரிய தாரைகளாகப் பொழியும் மேகம் நான் என்று நினைப்பாயாக'' என்றார்.
இப்பாட்டைக் கேட்ட அதிமதுரகவி இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் மெய், பொய் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரியப்போகிறது என்று நினைத்துக் கொண்டு காளமேகப் புலவரை நோக்கி, ""கூர் அம்பாயினும் வீரியம் பேசேல் என்பதை அறியாயோ? நீ இவ்வளவு வீரியம் பேசுகிறாயே, அரிகண்டம் பாடு, பார்ப்போம்'' என்றார்.
காளமேகம், ""அரிகண்டம் என்றால் என்ன?'' என்று வினவினார்.
அதைக்கேட்ட அதிமதுரகவி, ""கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்கும் பொருளுக்கு ஏற்பப் பாடுவதுதான்'' என்றார். அப்படிப் பாடும்போது ஏதாவது தவறினால் அந்தக் கத்தியாலேயே வெட்ட வேண்டி வரும்.
இதைக்கேட்ட காளமேகம், கைகொட்டிச் சிரித்து, ""இதுதானா அரிகண்டம் என்பது?  இத்தனை சுலபமானதை ஒரு விஷயமாகத் தேடிச் சொல்ல வந்தீரே; இதில் என்ன அருமை இருக்கிறது? யமகண்டம் பாடுவதல்லவா மிகக் கடினம்? அதைப் பற்றிப் பேசுவதுதானே பெருமை?'' என்றார்.
இதைக் கேட்ட மதுரகவி ""யமகண்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அஃது எப்படிப்பட்டது?'' என்றார்.
பூமியில் 16 அடி நீளம், 16 அடி அகலம், 16 அடி ஆழமாக சதுரத்திற்குச் சதுரம் ஒரு பெரிய குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் 16 அடி இரும்புக் கம்பங்கள் நட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு சட்டமும், நடுவே ஒரு சட்டமும் அமைக்க வேண்டும். நடுக்கட்டத்தில் உறிகட்ட வேண்டும். குழியினுள் பழுத்த புளியங்கொம்புகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பை மூட்டி அது கனன்று எரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்நெருப்பில் ஆள் உயரமான இரும்புக் கொப்பறை வைத்து, கொப்பறை நிறைய எண்ணெய் விட்டு அதில் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணிகளை நிரப்பி அவை நன்றாய்க் காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். நான்கு யானைகளைப் பாகர்கள் மதமேற்றிக் கொண்டு வந்து கம்பத்திற்கு ஒவ்வொன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைக்க வேண்டும். பின்புறத்தில் வளையம் வைத்து வளையத்தில் சங்கிலி கோர்த்து, எஃகினால் கூர்மையாக உருவாக்கிப் பளபளவென்று மின்னும்படி சாணை பிடித்த எட்டுக் கத்திகளைக் கழுத்தில் நாலும் அரையில் நாலுமாகக் கட்ட வேண்டும்.
கத்திகளின் புறத்திலுள்ள சங்கிலிகளை மேற்படி யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைக்க வேண்டும். தான் கொப்பறைக்கு நடுவாகத் தொங்குகின்ற உறி நடுவில், ஏறியிருந்து பாட வேண்டும். எவரெவர் என்னென்ன பொருள் கொடுத்தாலும் அவற்றை அந்நொடியில் தானே தடையின்றிக் குறித்த கருத்தின்படி இசைத்துப் பாட வேண்டும். அவ்வாறு பாடும்போது சிறிதளவு வழுவினாலும் பாடச் சொன்னவர்கள் யானைப் பாகர்களுக்குக் கண் சைகை காட்டுவர். அவர்கள் யானைகளை மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்டுவர். அந்த யானைகள் துதிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் இழுக்கும். இழுத்தவுடனே புலவனின் கழுத்தும் இடுப்பும் கத்திகளால் துண்டிக்கப்படும். தலையொரு துண்டமும் இடுப்பு முதல் காலளவும் ஒரு துண்டமுமாகி, அந்த எண்ணெய்க் கொப்பறையில் விழுந்துவிடும். இதுதான் யமகண்டம்'' என்று விளக்கம் தந்தார் காளமேகப் புலவர்.
யமகண்டத்திலிருந்து எழுபது புலவர்கள் கேட்கப் பாடிய புலவர் "காளமேகம்' மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

Wednesday, February 13, 2013

பாட்டிசைப்போம் 8 உலகே காலடியில் - Paattisaippoam 8

Saturday, February 2, 2013

திருக்குறள் Thirukkural 644

சொல்வன்மை

  
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
- (குறள் : 644)
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும். அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

திருக்குறள் Thirukkural 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

- குறள்: 128, 

அதிகாரம் : அடக்கம் உடைமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .    

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
- கலைஞர் மு. கருணாநிதி

திருக்குறள் Thirukkural 525

 
 
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
(குறள்எண்:525)
குறள் விளக்கம் 
 
 
மு.வ : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
சாலமன் பாப்பையா : ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
 
Thirukural » Porul
எழுத்தின் அளவு:        
Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.

( Kural No : 525 )
 
Kural Explanation: He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
 

பேரறிஞர் அண்ணா நினைவுப்பாடல்


பெரியார் ஆண்டு 134  தொ.ஆ.2877 தி. ஆ.2044 சுறவம் (தை ) 21  
                             
        [ 03 - 02 - 2013 ]

               பேரரறிஞர்  அண்ணாவின்  44ஆவது  நினைவுநாள் !

                      வள்ளுவக்  கிழவன்  வடித்தெடுத்த   
                           தெள்ளுதமிழ்  குறள்போல  குள்ளஉருவம்
                     அள்ளஅள்ளக்  குறையா  அறிவுப்பெருக்கம்
                            துள்ளும்தமிழ்  பேசும்  தூயஉள்ளம்
                      இமிழ்கடல்  சூழ்தமிழினத்தை தமிழ்ப்பகைவர்
                            உமிழ்கின்ற  எச்சிற்கே  உரித்தாக்கிட்டார்
                       சிமிளுயர்த்தும்  காளைகளே  அமிழ்தினத்தை
                             அமிழ்த்திட்டோரை அமிழ்த்திட ஆர்த்தெழுகஎன
                       குமிழ்சிரிப்  படக்கிகருத்துதனை கொட்டினாரே
                            தமிழ்தமிழ் தமிழென்றே  தகவுடைத்த
                       நெகிழ்தமிழ் அண்ணனின்  நினைவுநாளின்று 
                            முகிழ்த்த  மலரானவனான  முன்னவனை
                                  நினைவு  கொள்வோம்  நெஞ்சத்தில் !
                                            
                                                       அன்புடன்
                                                   மா. கந்தையா - செயம்
                                                              மதுரை.

இலக்கியம் இனிதே 8 - எண்ணம்போல் கடவுள் Inidhea Ilakkiyam 8

திருக்குறள் Thirukkural 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.


- குறள்: 138,

அதிகாரம் : ஒழுக்கம் உடைமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .    
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
- கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural 736 திருக்குறள்

திருக்குறள்


கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை 

 கேடுகள் இல்லாததாக, கெட்டுப்போக நேர்ந்தாலும் வளம் குன்றாத நாடு, எல்லா நாடுகளுக்கும் தலையானது 

திருக்குறள் (எண்: 736) 

அதிகாரம்: நாடு

 

Friday, February 1, 2013

திருக்குறள் Thirukkural 803

பழைமை

திருக்குறள் - Thirukkural

  
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.
 
- (குறள் : 803)

பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோலவே கருதி உடன்படாவிட்டால் அவரிடம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

Thirukkural திருக்குறள் 490,

குறள் அமுதம்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

( குறள் எண் : 490 )
மு.வ : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Thirukural » Porul
      
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

( Kural No : 490 )
 
Kural Explanation: At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

இனிதே இலக்கியம் 7 - அன்பே கடவுள் : Inidhea Ilakkiyam 7

Thirukkural திருக்குறள் 614

திருக்குறள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும் 

 முயற்சி இல்லாதவன் செய்யும் பேருதவி, கோழை ஒரு கத்தியை எடுத்து வீரம் காட்டுவது போல ( வீண்செயலாக) முடிந்துபோகும்.

திருக்குறள் (எண்: 614) 

அதிகாரம்: ஆள்வினைஉடைமை