திருக்குறள் Thirukkural 525
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
சுற்றத்தாற் சுற்றப் படும்.
(குறள்எண்:525)
குறள் விளக்கம்
மு.வ : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
சாலமன் பாப்பையா : ஒருவன்
தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச்
சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
Thirukural » Porul
|
Comments
Post a Comment