பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

ஒரு போராளியின்
மகனின் மரணத்தை
மற்றொரு பதிப்பாக
கண்ட கோலம் ...

நெஞ்சுக்குள்
எரிமலையை வெடிக்கச் செய்தது.

மனிதநேயம் செத்தவர்கள்
செய்கின்ற படுகொலைகளில்
இதுதாம் உச்சகட்டம்.

போகட்டும்.

அணையப் போகும் விளக்கு
பிரகாசமாகத்தானே எரியும்?

தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கெல்லாம்
நிச்சயம் பதிலடி உண்டு.

ஒரு பாலகனை அழைத்து
வைத்துக்கொண்டு
உணவுகொடுத்து
நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு
எப்படி மனம் வந்தது?

மிருகம் கூட
அப்படி எண்ணாதே?

சிறிது நேரத்தில்
தாம் கொல்லப்படுவோம் என
அறியாது
பசியாறிக்கொண்டிருக்கும்
அந்தப் பிஞ்சைக் கொல்ல
எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது?

மனிதனுக்குப் பிறந்தவர்
செய்கிற காரியமா இது?

இந்திய தூக்குத் தண்டனைக்
குற்றவாளிகளுக்குக் கூட
கடைசி நிமிடம்
ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்
அதிர்ஷ்டம் கிட்டுமே?

அச்சிறுவன் என்ன
குற்றம் செய்தான்?

ஒரு போராளிக்கு மகனாய்ப்
பிறந்தது குற்றமா?

கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்ட இனப் படுகொலைகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து
பாதுகாத்து வந்தது
ஒரு போராளியின் குற்றமா?

குடும்பத்தில் ஒன்றுவிடாமல்
அழிப்பதுதாம் வீரமா
கோழைகளே...

தமிழன் மீது
வெளிநாட்டான் கொண்டிருக்கும்
பற்றில் கால்வாசி கூட
இந்தியா வைக்கவில்லையா?

அந்தக் கொலையாளிகள்
நாட்டுக்குள் பதவியோடு
வருவார்கள்
இவர்கள் மாலை மரியாதை செய்து
உணவுபோட்டு அனுப்புவார்கள்.

இது எத்தனை நாட்களுக்கு?

பூனையும் ஒருநாள்
புலியாக மாறும் என்பது
தெரியாதா?

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்