இளையநிலவைச்சிதைத்த பாவிகள்
இளையநிலவைச்சிதைத்த
பாவிகள் அவர்கள்!இன விடுதலையை எண்ணாத பாவிகள் நாம்! வேதனையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கொஞ்சி விளையாடிய
குழந்தைமுகம் கண்டும்
துவக்கு கொண்டு
துடிதுடிக்கக் கொல்லத்
துணிந்தனரே!
பால்வடியும் முகத்தைப்
பார்த்தவர்க்குக் கண்ணில்லையா?
பச்சைப் பசுந்தளிரைப்
பழிகாரப் பாவிகள்
பதைக்கப் பதைக்கக்
கொன்றனரே!
பிஞ்சுமனம் துவண்டவிதம்
அறிவோமா நாம்?
கறைபடிந்த காந்தியும்
புனிதம் தொலைந்த புத்தரும்
வரலாற்றின் ஏடுகளில்
வாழ்விழந்து போயினரே!
நெட்டைமரமென நின்றுபுலம்புகிறோம்!
வெற்றுப் புலம்பல்
விடியலைத் தந்திடுமோ?
Comments
Post a Comment