பேரறிஞர் அண்ணா நினைவுப்பாடல்
பெரியார் ஆண்டு 134 தொ.ஆ.2877 தி. ஆ.2044 சுறவம் (தை ) 21
பேரரறிஞர் அண்ணாவின் 44ஆவது நினைவுநாள் !
வள்ளுவக் கிழவன் வடித்தெடுத்த
தெள்ளுதமிழ் குறள்போல குள்ளஉருவம்
அள்ளஅள்ளக் குறையா அறிவுப்பெருக்கம்
துள்ளும்தமிழ் பேசும் தூயஉள்ளம்
இமிழ்கடல் சூழ்தமிழினத்தை தமிழ்ப்பகைவர்
உமிழ்கின்ற எச்சிற்கே உரித்தாக்கிட்டார்
சிமிளுயர்த்தும் காளைகளே அமிழ்தினத்தை
அமிழ்த்திட்டோரை அமிழ்த்திட ஆர்த்தெழுகஎன
குமிழ்சிரிப் படக்கிகருத்துதனை கொட்டினாரே
தமிழ்தமிழ் தமிழென்றே தகவுடைத்த
நெகிழ்தமிழ் அண்ணனின் நினைவுநாளின்று
முகிழ்த்த மலரானவனான முன்னவனை
Comments
Post a Comment