Posts

Showing posts with the label -திருத்துறைக் கிழார்

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         25 December 2025         அ னரமுதல (க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர் மறவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன்  என்பவர். தன்மானமுள்ள தமிழ் இளைஞர், ஆண், பெண் இருபாலரையும் திரட்டி  விடுதலைப் புலிகள்  படை உருவாக்கி,  தமிழ் ஈழம்  தனியாட்சி பெறப் போராடத் தொடங்கினார். தமிழ்மக்கள் பல்லாயிரவர் சிறீலங்காப் படைகளால் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் தளராத...

க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         18 December 2025         அ கரமுதல (கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௬. தமிழர் செய்ய வேண்டுவன? க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தல் ௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம் நடத்தல். ௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல். ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம் நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர் பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன் தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று தமிழக அரசை வற்புறுத்தல். ௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம் வெளியேற்றுமாறும், இனி எவரையும் தமிழ்நாட்டில் குடியமர விடக் கூடாதென்றும் தமிழக அரசை வலியுறுத்திப் போராடல். எ. தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை மேல்குடியினர் வாழுமிடங்களிலும், கோவில்களின் சுற்றுச் சுவர்களிடையிலும் குடியமர்த்துமாறு புரட்சி செய்தல். அ. கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை (பொன், ...