நல்லுணர்வாளர் இணைப்பு – சுமதிசுடர்
வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க,
நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;
நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்;
நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;
நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்;
மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;
மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.
அன்புடன்
சுமதிசுடர்
Comments
Post a Comment