நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 3 : ச.பாலமுருகன்
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)
3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து
நினைவுச்சின்னங்களும் பேணப்பட, முதலில் அவை பற்றிய தகவல் தொகுப்பு
உருவாக்கவேண்டும். பிறகு அந்நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன்
கட்டாயத்தை உள்ளூர் மக்களிடம் தெரிவிக்கவேண்டும்.
உள்ளூர் மக்களுக்கு முதலில் அவர்கள்
ஊரைப்பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒன்று/இரண்டு
முறை மாவட்ட அளவில் ஒரு கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தப்படவேண்டும். அதில்
பள்ளி/கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், உள்ளாட்சிச் சார்பாளர்கள்
ஆகியவர்களையும் பங்கேற்கச் செய்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி
நினைவுச்சின்னங்களைப் பேண வேண்டும்.
மாவட்டந்தோறும் அமைந்துள்ள நடுகற்களை
பற்றிய கணக்கெடுப்பு செய்து ஒவ்வொன்றைப்பற்றியும் போதுமான தகவல்களைத்
திரட்டி, ஒளிப்படம், உள்ளூர் வழக்காறு ஆகியவற்றை ஊர், வட்ட அளவில் தொகுத்து
தனிப்புத்தகமாக வெளியிட வேண்டும்.
இவற்றுடன் மாவட்டந்தோறும் ஆண்டுக்கொரு
முறை பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்பெறும் வண்ணம்
வரலாற்றுக் கண்காட்சி நடத்தப்படவேண்டும். அதில் ஒளிப்படப்போட்டி,
ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தி மாணாக்கர்களை ஊக்குவிக்க வேண்டும்.
5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல்.
நடுகற்கள் – வரலாற்று நினைவுச்சின்னங்கள்
தொடர்பாக தொகுக்கப்பட்ட தகவல்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு தனி
வலைத்தளம், முகநூல், வலைப்பூ ஆகியவற்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் உலக
அளவில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிக்கொணவும், புதிய
ஆர்வலர்களைக் கண்டறியவும் பெரிதும் வாய்ப்பு ஏற்படும்.
ச.பாலமுருகன்
துணை வட்டாட்சியர்
மாவட்ட ஆட்சியகம்,
திருவண்ணாமலை
கைபேசி – 9047578421 மின்வரி balu_606902@yahoo.com
(தொடரும்)
Comments
Post a Comment