மார்ட்டின் லூதர் கிங் தென் இந்தியாவிற்கு வந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் அங்கிருந்த சிற்பங்களையும் பார்த்து வியந்து போனார். இந்தியாவில் அவரை மிகவும் கவர்ந்த தலைவர் காந்தி. மகாத்மா காந்தி உயிரோடு இல்லையென்றாலும் அவர் வாழ்ந்த இடங்களையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மார்ட்டினுக்கு இருந்தது.
மார்ச் 1-ம் தேதி அம்னியாபாத் ஆஸ்ரமத்துக்கு வந்தார் மார்ட்டின். அன்றையப் பொழுது முழுவதையும் ஆஸ்ரமத்திலேயே கழித்தார். அங்கிருந்துதான் காந்தி தம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். காந்தி அங்கிருந்து 218 மைல்கள் நடந்து பம்பி வரை போயிருந்தார். காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியபோது அவருடன் வந்தவர்கள் வெறும் எட்டுப்பேர். காந்தியுடன் சேர்ந்து நடந்த மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் அந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார்கள். காந்தி ஒரு கைப்பிடி உப்பை அள்ளி ஏகாதிபத்திய அரசின் கொள்கைகளை உடைத்தார்... இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட மார்ட்டின், உலகில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அஹிம்சையைத் தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார்.
- பாலு சத்யா எழுதிய "மார்ட்டின் லூதர் கிங்- கறுப்பு வெள்ளை' நூல்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.
Comments
Post a Comment