
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. (பா-16)கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் தண்ணீரின் தன்மை நல்ல நிலத்தாலும், நல்லவர்கள் பண்பு ஈகையாலும், கண்களின் தன்மை மாறாத கருணையாலும், பெண்களின் தன்மை மாறாத கற்பின் வலிமையினாலும் விளங்குவது வியக்கத்தக்கச் சிறப்பு என்பதை நீ அறிவாயாக!
Comments
Post a Comment