நல்வழி



செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம் - வையத்துஅறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கின்றுவெறும்பானை பொங்குமோ மேல். (பா-17)இவ்வுலகில் அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து, செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில், அடுப்பிலேற்றிய வெறும் பானை பொங்காதது போல, தாம் முன்னர் அறம் செய்யாத தீவினைப் பயனே காரணம் என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் பெருஞ் செல்வம் வந்து சேராது.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue