பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள்.
துறந்தார் என்பதற்கு இளமை வாழ்க்கையைத் துறந்து துறவியாகிறவர்கள் என்றே அனைவரும் பொருள் கூறுகின்றனர். இளமையில் இல்வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வது தமிழர் நெறியல்ல. இல்வாழ்க்கையும் அறவாழ்வுதான் என்பதற்காகத்தான் அதை இல்லறம் என்கின்றனர். சமணர்களில் இளமையில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் துறவு மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அந்தச் சமய வாழ்வைப் பொதுவில் கூறியிருப்பார்கள் என எண்ண முடியவில்லை. இல்லற நிறைவில் துறவு மனப்பான்மையுடன் இல்லறத்திலிருந்தே வாழ்க்கையை நடத்த வேண்டும். குடும்பத்தைக் கைவிட்டுக் காட்டுக்குச் செல்பவன் நல்வினையாளன் அல்லன்.
எனவே, துறந்தார் என்பதற்குத் தீய பழக்க வழக்கங்களைத் துறந்தவர்கள் எனக் கருதுவதே சிறப்பாகும்.
இளமை வேகத்தில் தவறான களியாட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடக் கூடாது. இளமை நிலையற்றது, நாளை நரையும் (நரை முடியும்) வரும், திரையும் (தோல் சுருக்கமும்) வரும் என்பதை உணர்ந்து இளமையிலேயே அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். அறச்செயல்களின் பயன் முதுமையில் கை கொடுக்கும். இல்லையேல் தானாகக் கைத்தடி ஊன்றிக்கொண்டு தடுமாறி நடக்க வேண்டுமே தவிர யாரும் துணைக்கு வரார்.
‘தங்கை’ படத்தில் கண்ணதாசன் “இனியது இனியது உலகம்” பாடலை
நாளை பொழுது யாருக்கென்று
கேள்வி கேட்டுப் பதில் தேடு
என முடித்திருப்பார். நாளைய பொழுது நமதில்லை என்பதை உணர்ந்து இன்றே பிறர் பயனுற வாழ வேண்டும்.
இளமையில் தவறான வழிகளில் மகிழ்ந்து முதுமையில் வருந்தாதே.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment