ஈழ மண்

ஈழ மண் எங்களின் சொந்த மண்
அதை தன் சொந்தமென்று
யார் சொன்னவன்

நம் மண்ணின் உள்ளே வந்து பார்
வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்

எம் முன்னே காசுக்காய் காட்டியே
கொடுத்தாலும் கடத்தித்தான்
நடு காட்டில் விட்டாலும்
எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும்
எம் மண்ணின் விடுதலை காண்போம்

கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும்
குண்டை மழையாக பொழிந்தாலும்
நம்மை பெற்ற அன்னை மண்னை
நாம் மறந்து போகமாட்டோம்

அமைதியாய் பதுங்குது புலி
அது பாய்ந்திடும் போது தெரியும்
உனக்கு அதன் வீரம்

பாமினி
தமிழா

தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆளவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்

விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்

போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம்
வாழ்கையில் வட்டம் உண்டேல்
அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு

நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு
இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து
வெற்றிகள் உனை வந்து சேரும்
தோல்விகள் தனியென மறையும்
நீயும் இப் பூமியில் வாழவே
தோற்றவனாய் சாவதற்கு அல்ல

பாமினி
கலங்காதே தமிழா

எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும்
கலங்காதே தமிழா
தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு படிக்கல்

உதிர்ந்துதான் போனாய் என்று ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் பாய்ந்தோடும் ஆறாய் சேரும்
வானத்து நீர் வீழ்ந்துதான் பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்

தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும் பறக்க விட்டு விடு உன் புத்தியை

புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்
பயத்தினால் நடுங்கணும் அவர்கள்

தமிழா இரவும் பகலும் உண்டேல் அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால் சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும் அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்

இரை தேடி தோற்ற புலி பசியாலே படுத்து செத்தது உண்டா?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் வெற்றிக்காய் நீ உழைத்தால்
அது உன்னை அரியாசனத்தில் இட்டு மகுங்கள் சூட்டிடும்

நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்

ஓடும் நீருக்கு தடை இட்டால் அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்

தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு

விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்