நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி ..

நாம் தாயக விடுதலைக்கு ஆற்றியது என்ன என்பதை நாமே உணர்ந்து நம்பிக்கையுடன் துணை புரிந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும். தமிழீழம் உருவாகும்...

நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி இதை தற்போது வாழ்பவர்களும் செல்லியுள்ளார்கள் நன்றாக வாழ்ந்து முடிந்தவர்கள் மற்றும் வறுமையுடன் வாழ்க்கையைமுடித்தவர்கள் கூட அதிகம் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.சிறியவர்கள் கூட பலர் நம்பிக்கைபற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.

நம்பிக்கை என்பது என்ன அர்த்தத்தினை உள்ளடக்கியது என்னும் கேள்ளி பலரிடம் இன்று காணப்படுகின்றது.குறிப்பாக இன்று தமிழ் மக்கள் குறிப்பாக புலம் பெயர் உறவுகள் ஆகிய நாங்கள் நம்பிக்கை பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டிய காலம் பற்றி புரிந்துகொண்டுள்ளது எந்த அளவு என்னும் ஒரு விடைகாண முடியா வின ஒன்று தோன்றியுள்ளது.ஆனால் அதற்கு விடைகாண எம்மால் மாத்திரம் தான் முடியும் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாது.

எம்மில் நம்பிக்கை அற்றவர்கள் எவரிலும் நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது பலஇடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அவதானிக்கப்பட்டும் உள்ளது நாமும் அவதானித்துள்ளளோம்.தம்மில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் எவருக்கும் பணிந்து போகமாட்டார்கள் என்பது நாங்கள் எங்கள் வாழ்க்கையூடாகதெரிந்துவைத்துள்ளது.இதற்கு நல்ல உதாரணங்களை நாம் தாயகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் இன்றும் பெற்றுக் கொண்டுள்ளோம் இனியும் பெற்றுக் கொள்வோம்.அதாவது தன் நம்பிக்கை உள்ள ஒருவனை இலகுவில் பிறர் தம் வசப்படுத்தி விடமுடியாது என்னும் உண்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் உணர்ந்து கொண்டுள்ளோம் உணராதவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.நம்பிக்கை பற்றிய அதாவது தன்நம்பிக்கை பற்றி தெளிவான படம் எப்போதும் ஒரு இக்கட்டான காலநிலையில் தான் தெளிவாகப்புலப்படும் அதுவரை அது புலப்படாது மறைந்து தான் காணப்படும்.

அதை நாம் கடந்த மாதங்களில் நன்றாக உணரக்கூடியதாக உள்ளது.அந்ந வகையில் தாயகம் இன்று மிகப் பெரும் நெருக்கடியில் உள்ளபோது அவர்களின் தன் நம்பிக்கை தமது இலட்சியத்தின் மீதான தளராத நம்பிக்கை என்பனவற்றினை வெளிச்சம் போட்டு வெளியுலகுக்கு காட்டியுள்ளது.அதாவது தன்னம்பிக்கை உள்ள அவர்களை நெருப்பில் வறுத்தும் சிலவற்றை அடைய முடியாது தவிக்கின்றனர் சிறீலங்கா படைகளுக்கும் அரசுக்கும் ஏன்இந்திய சில வெளிநாட்டு அரசுகளுக்கும் இது விரும்பத்தகாத அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது.பற்ருறுதி என்னும் பொருளுக்கு உதாரணங்களுடன் கூடிய விளக்கங்களை தந்தும் நிற்கின்றது. எமது தாயகமமும் அதன் விடுதலைப்போராட்டம் மற்றும் மக்கள் சக்தி.

தன்நம்பிக்கை உள்ள ஒருவன் இலகுவில் பிறர் வசப்படமாட்டான் என்பதற்கு அமைய அவர்கள் பிறர் கருத்துக்களை அதிகம் பொருட்படுத்தார்.ஆக்கபூர்வமானவற்றினை மட்டும உள்வாங்கி மற்றவற்றினை கருத்தாளர் வெளியேற முன்னர் விட்டு விடுவார்கள் அது போலதான் நல்ல நம்பிக்கை உள்ளவர் இலகுவில் தளர்ந்து துவண்டு போகார். எவ் துன்பம் வரினும் அவர்களில் ஒரு வேகம் தெரியும் புது வியூகங்கள் புலப்படும் இறுதிவரை துன்பத்தில் இருந்து மீள உழைக்கும் வெறி அவர்களிடத்தில் இருக்கும் இதுவும் இன்று தாயகத்தில் நேரடியாக நாம் காணக்கிடைக்கின்ற அரிய காட்சிகள். அதாவது தன்நம்பிக்கை எம்முள் அடங்கியுள்ள முழு சக்தியையும் ஆட்சி செய்யும் ஒரு மிகப் பெரிய சக்தி என்பது உணர முடிகின்றது.

வாழ்க்கையில் வென்றவர்ளும் சரி உலக அரங்கில் உள்ள பல்வேறு துறைகளில் வென்றவர்களும் சரி நம்பிக்கை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நம்பிக்கை மூலம் தாம் தெரிந்து கொண்டது உணர்ந்து கொண்டது அறுவடை செய்தது என்பன பற்றி அடிக்கடி கூறுவதை நாம் கேட்டுள்ளோம்.குறிப்பாக தமது வெற்றிக்குப்பின்னால் உள்ள காரணிகள் பலவற்றில் எல்லோரும் பொதுவாகச் சொல்லும் காரணி தன்னநம்பிக்கை.ஏனவே வெற்றிக்கனியை பறிக்க ஆசைப்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியது தன்நம்பிக்கை என்பது தெளிவு.

இதில் அடுத்து தமிழர் என்னும் வகைக்குள் அடங்கும் எங்களின் இன்றைய நிலை என்ன எம்மில் இன்று இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் என்ன.அதாவது நாமும் ஒரு வேட்கையை சுமந்துள்ளவர்கள் இவ்வளவு காலமும் சுமந்து வந்தவர்கள் இனியும் சுமக்கவுள்ளவர்கள் அதாவது எமது அந்த வேட்கையின் இறுதி வடிவத்தினை காணும் வரைக்கும் அந்த வேட்கையை சுமக்க வேண்டியவர்கள் சுமக்க ஆசைப்பட்டவர்கள்.அதாவது இறுதி வெற்றி வரைக்கும் அந்த வேட்கையை அடைவதற்கான பாதையில் இருந்து விலகாது எம்மை எமது பாதையில் செலுத்துவதற்கு நாம் கொடிருக்க வேண்டியது என்ன என்பது பலருக்கு புரிந்துள்ளது ஆனால் இன்னும் சிலருக்கு புரியவில்லை.

அதாவது இன்றைய தாயகத்தின் போக்கு அல்லது தாயகத்துக்கான தமிழர் போராட்டம் என்பன இன்று நேற்று துளிர் விட்டதல்ல இது ஒரு தொடர் பேராட்டம் இரு சந்ததிகள் கடந்து விட்ட போராட்டம்.உலக நியதிகளுக்கு அமைய வெற்றி தோல்விகளை கண்டு அதில் இருந்து மீண்டெழுந்த போராட்டம்.பல களங்கள் கண்டு அதில் தம்மை ஈடுபடுத்தி புடம் போட்டு பட்டை தீட்டி செதுக்கி எடுத்து வழர்ந்துள்ள போராட்டம்.எவரின் உதவியின்றி தானாக வழரும் காட்டு மரம் போல் வழர்ந்த போராட்டம். சிலர் உரிமை கோராலாம் அதாவது நடக்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு நடைபயில கற்றுக் கொடுத்தவர்கள் அந்த குழந்தையின் வாழ்க்கை பணயம் முழுவதும் தாம் உதவியதாக கூறுதலுக்கு ஒப்பானதே அவர்களின் கூற்று அதாவது ஆரம்பத்தில் கூப்பிட்டு உதவி செய்து விட்டு இறுதிவரை உதவி செய்துள்ளதாக கூறுவது இதில் அடங்கும்.அவர்கள் செய்துள்ள உதவி கடா வளர்த்து பலி கொடுப்பதற்கு ஒப்பானது இது பலருக்கு ஏன் எமக்கும் கூட பிந்தித்தான் புலப்பட்டது. அதாவது தான் சண்டியன் எனக்காட்ட காசுகொடுத்து ஆளை அடிப்பதற்கு ஒப்பானது.அவர்கள் எமக்கு செய்த உதவி.

இவ்வாறு விதைப்பது எல்லோரும் செய்யலாம் அதை வளர்ப்பவர்தான் விவசாயி அவ்வாறு வளர்ந்து நிற்கின்ற மரம் கனி தரும் என்று எவ்வாறு நம்புகின்றோமோ அது போலத்தான் இன்றெமது விடுதலைப்போராட்டமும் மெல்ல மெல்ல நடைபயிலும் குழந்தை போல நடந்து இன்று ஓட்ட வீரன் குசைன் போல் போன்று நிற்கின்றது.மற்றவர்களுக்கு விலைபோகாது மற்றவர்கள் எங்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தாது பன்படுத்த அனுமதியாது நிற்கும் எமது போராட்டத்தினை விற்றுவிடவும் அதை தமக்கும் தமது நலனுக்காக உருட்டும் பகடைக்குமாக வேண்டிவிடத்துடிப்பவர்கள் மத்தியில் இன்று எமது போராட்டம் சிக்கி நிற்கின்றது.

அவர்களின் செயற்பாடுகளால் தாயகம் இரத்ததில் உறைந்துள்ள நிலையில் எம்மவர்கள் அதாவது புலம் பெயர் வர்க்கத்துள் அடக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அமெரிக்க ஆசிய மற்றும் ஆபிரிக்க அவுஸ்ரேலியக்கண்டத்தினுள்ள அடங்கியுள்ள எம்மவர்கள் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர்களின் எதிர் காலம் தங்கியுள்ளது என்னும் நிலைக்குள் வந்து நிற்கின்றது.இந்தச்சந்தர்ப்பத்தில் எம்மில் பலரின் கருத்துக்கள் சமர்களத்தில் உள்ள எமது மக்களை போரளிகளை செந்தணலில் இடுவது போன்று உள்ளது.குறிப்பாக போராட்டத்தினை விமர்சிப்பதும் அதன் நியாயத் தன்மையை கேள்விக்குரியாக்குவதற்கு உதவவுதாக உள்ளது.

அதாவது இன்றுவரை போராட்டத்தினை நேசித்தவர்கள் மற்றும் நேசித்ததாக காட்டி கொண்டவர்கள் பலர் போராட்டத்தினை விமர்சிப்பது எதிரிக்கும் எதிரிக்கு ஊதுகுழலாக தொழிற்படும் புல்லுருவிகளுக்கும் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு நாளும் போராட்ட ஆதரவாளியாக கருத்து தெரிவித்து வந்தவர்கள் கட்சிதாவுவது போன்று தாவிக் கொண்டுள்ளதும் சிங்கள பேரினவாதத்தின் கருத்துக்கள் சிலவற்றினை மட்டும் உள்வாங்கி அவற்றினை ஊதிப் பெருப்பித்து கொள்கை அற்று அலைபவர்கள் கருத்துக்ககளை முதன்மை படுத்துவதுதான் இதில் முக்கியமானது.போராட்டத்திற்கு காலக்கெடு வைப்பது இதில் கடந்த சில நாட்களாக நோக்கப்பட்டு வரும் மிக முக்கிய விடயம்.அதாவது தமிழீழ விடுதலைப்போராட்டம் 30 வருடத்தினை எட்டி விட்டதாகவும் எவ்வளவு காலத்துக்கு இன்னும் நீடிக்க போகின்றது என்னும் கவலையில் உள்ளதாக காட்டிக் கொள்பவர்கள் இதில் முக்கியமானவர்கள் உண்மையில் யுத்தப்பகுதியில் தமது உறவுகள் சிக்கி நிலை தெரியாது உள்ளவர்கள் இவ்வாறு எண்ணுவது இயல்பானது ஆனால் வேறு சிலருக்கு இந்தக்கவலை ஏன்வந்தது என்றால் அவர்கள் அதிகரித்துள்ள சிறீலங்காவின் பரப்புரை மற்றும் கருத்து சிதைவு யுக்திகள் தான்.

அடுத்து போராட்டம் மீதும் தாயகக்கோட்பாடு மீதும் சுய நிர்ணய உரிமை மீதும் அவர்கள் கொண்டுள்ள விளக்க குறைவு மற்றும் கருத்து சிதைவு என்பன பலரை இன்று பலவாறு சிந்திக்க வைத்துள்ளது.எனது வீடு எனது நிலம் எனது வயல் எனது குழந்தை எனச்சிந்திக்க முயல்பவர்கள் எமது மண் எமது தாயகம் எமது இனம் எமது உறவுகள் என சிந்திக்க மறுப்பதும் அவர்களை சிந்திக்க விடாது தடுப்பதும் தான் இன்று;எம்மவர் தளம்பல் நிலைக்கு காரணம ஒரு கருவுற்ற பெண் தன் குழந்தையை காண 10 மாதம் காத்திருக்கின்றாள் யானை அதை விடக்கூட வேறு சிறு மிருகங்கள் குறைவு பறைவைகள் பொதுவாக 40 நாள்.இங்கு எல்லாம் இனவிருத்தி தான் செய்கின்றது. ஆனால் அவற்றின் நிறையுடலி உருவாக எடுக்கும் காலம் வேறு வேறு .இதைப்போன்றது தான் எமது போராட்டமும்.நாமும் விடுதலைப்போராட்டம் தான் செய்கின்றோம் இதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள்.எமது இனமும் விடுதலைக்குத்தான் போராடுகின்றது.

விடுதலையின் இறுதியில் எமக்கென்று ஒரு தனித் தாயகத்தினை பிரசவிப்பதற்காக போராடுகின்றோம். புதிய தமிழ் ஈழத்தினை பிரசவிக்க போராடுகின்றோம். ஆனால் ஒருவரையும் சாயாமல் ஒருவர் கையையும் பாராமல் நமக்கு நாம் உதவி இறப்பிலும் சரி பிறப்பிலும் சரி நாம் தாம் நமக்கு என்னும் வகையில் நமது போராட்டம் நகர்கின்றது.இதை நாம் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

அதாவது உலகின் பதிய உயிர் ஒன்று பிறப்பதற்கே காலங்கள் வேறு அதன் தேவைகள் வேறு ஆகின்றபோது ஒரு நாடு பிறக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என சிந்திக்க வேண்டும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.ஒரு பிரசவத்துக்கு 10 மாதங்கள் எடுக்கும் அந்த பிரசவத்தில் ஒரு தாய் 80 வீதம் செத்துப்பிளைக்கின்றாள் என்பது வைத்தியர்கள் கூறுவது. அப்படியான ஒன்றைச் செய்யும் தமிழ் தாய்மார்களே.அதாவது தாய்மை என்னும் பேற்றை அடைய புதியதொரு தமிழ் தலை முறையைஉருவாக்க உயிர் கொடுக்க உங்களின் உயிரை பணயம் வைக்க துணியும் 10 மாதம் காத்திருக்கும் வேதனைகள் மற்றும் வலிகளைச் சுமக்கும் உங்களுக்கு தெரியும் புதிய பிரசவம் எவ்வளவு வலிகள் தடைகள் நிறைந்தது என்று அதற்கு நீங்கள் கூறும் காரணம் அவ்வாறு வலிகள் தடைகள் தாண்டி வருவதால் தான் எமக்கு குழந்தைகளில் பாசம் அதிகம் என்று ஏன் எங்கள் போராட்டமும் வலிகள் தடைகள் கண்டு நிற்கும் போது உங்களுக்கு அதன் மீதான நேசமும் பாசம் மற்றும் நம்பிக்கை கூடக்கூடாது..

இன்று தீபெத் போராட்டத்தினை பாருங்கள் கடந்த 1959ஆண்டுதொலைத்துவிட்ட தமது சுய நிர்ணயத்தினை இன்றும் அவர்கள் பெறவில்லை அவர்கள் அதை பெற தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் மட்டுமல்லாது அண்மைய நாட்களில் குறிப்பாக சீனாவின் ஒலிம்பிக் நாட்களில் அவர்கள் காட்டிய வேகம் பற்றி சிந்திக்க வேண்டும்.தூங்கியவர் மாதிரி இருந்த அவர்கள் திடீர் என்று விழித்து சீனாவுக்கு தலையிடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.இதில் இருந்து ஒன்று புரிதல் இலகு விடுதலைக்கு கால அவகாசம் கிடையாது விலை கிடையாது. இன்று அவர்கள் சாத்வீக வழியில் மட்டும் போராடி வருகின்றார்கள் இயலாத போக அவர்களும் ஆயுத வழியில் இறங்கிவிடத்தயாராகின்றார்கள்..

13 வருடம் கடுமையாக போராடித்தான் அமெரிக்கா கூட தனது சுதந்திரத்தின் முதல் அத்தியாயத்தினை அடைய முடிந்தது.அதாவது 1775 முதல் 1788 போராடித்தான் அவர்கள் அதை அடைந்தார்கள்.இந்த சண்டையில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உதவியது ஆ.னால் எமது போராட்டத்தினை எண்ணிப்பாருங்கள். எமது போராட்டத்துக்கு யார் உதவி? சரி இன்று அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு உதவியவர் நிலை என்ன அவர்கள் இந்தியா போன்று இருந்திருந்தால் இன்றைய அமெரிக்கரிகளின் நிலை என்ன.அப்போது அதாவது அமெரிக்க சுதந்திர போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மகுட வாக்கியத்தில் ஒன்று சுதந்திரம் என்பது இலகுவாகவோ அன்றி உடனடியாகவோ கிடைப்பதில்லை என்பதாகும்.
இது அவர்கள் அன்றுஅனுபவித்து சொன்னது அதனால் தான் இன்று அவர்கள் உலகை ஆழும் வர்கத்தினுள் தம்மை அடக்கியுள்ளார்கள்..

இது எதைக்காட்டுகின்றது அமெரிக்கர்களின் தன்நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இல்லையா இன்றும் அவர்களிடத்pல் உள்ள அமெரிக்கர் என்னும் வெறி. இதே போல் இன்று எம்மில் பலர் தெரிந்து வைத்துள்ள மேற்கு கரை கிளர்ச்சி எத்தனை வருடங்களாக எத்தனை தலைவர்களை கண்டு நடந்து வருகின்றது.1950 க்கு முன்னர் ஆரம்பித்து இன்றுவரை அது தொடர்கின்றது தாக்குவதும் பின்னர் சமாதானம் எனக் காலம் களிப்பதுமாக அவர்கள் இன்னும் சோராமல் இருக்கின்றார்கள்.இதே போல்தான் எதியோப்பிய எரித்திரிய யுத்தம் பல ஆண்டு காலம் நடந்துள்ளது இறுதியில் 1998 முதல் 2000 வரைக்கும்; அவர்கள் எல்லையில் மோதினார்கள் அவர்களின் 70000 பேர் இறந்துள்ளார்கள்.இவ்வாறு சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் பெற்றுக் கொள்ள முடியாதது.

காலணித்துவத்தில் இருந்து ஏன் எம் முன்னோர்கள் உடனடியாக விடுதலை அடையவில்லை.அதாவது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியை விடுவோம் பிரித்தானியர்கள் வந்தது 1795 இல் வந்திறங்கியவுடன் எம் முன்னோர் போராடி நாட்டை காலணி ஆதிக்கத்தில் இருந்து மீட்கவில்லை.அங்கும் தப்பான புரிந்துணர்வுகள் விலைபோகல்கள் இருந்துள்ளது.இது ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான சிந்தையை மழுங்கடித்திருந்தது இது ஏறத்தாள ஒரு நூற்றாண்டு நீடித்தது பின்னர் இந்தியாவில் புரட்சிகள் வீறு கொள்ள அது இலங்கையையும் பாதித்தது.அதனால் தான் விடுதலைக்காக சற்றேனும் உழைக்க வேண்டும் என்னும் எண்ணம் எம் முன்னவருக்கு வந்துள்ளதை யாலும் மறுக்க முடியாது.

அது போலத்தான் இன்றும் எமது விடுதலையில் விலைபோகல்கள் தவறான புரிதல்கள் தளம்பல்கள் தொடர்வதால் விடுதலை பற்றிய வேட்கை இன்னமும் முற்று முழுதாக நிரம்பல் அடையவில்லை. அது நிரம்பல் அடையும் போது இறப்புக்கள் இழப்புக்கள் ஒருவர் கண்ணுக்கும் அதாவது விடுதலை வேட்கையில் நிரம்பல் அடைந்தவர்கள் கண்ணுக்கு பொரிதாக தெரியாது அது தான் தபயகத்திற்கும் புலம் பெயர் எங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு.அவர்கள் இழப்புக்கள் வரினும் ஈழம் அடைந்தால் அதுக்காக நாம் உழைக்க தயார் என்னும் நிலைக்கு சென்று விட்டார்கள் அதாவது கிட்டத்தட்ட விடுதலை முக்தி நிலைக்கு அவர்கள் சென்று விட்டடார்கள்.

அவர்கள் இதை எட்டக்காரணம் சிறீலங்கா அரசின் அட்டூளியங்கள். நாம் ஏன் இன்னும் அதை அடையவில்லை அதாவது புலம் பெயர் நாங்கள் ஏன் இன்னும் அடையவில்லை என்றால் நாம் அதை நேரடியாக அனுபவிக்கவில்லை அல்லது முன்னர் அனுபவித்த அனைத்தையும் நாம் மறந்து விட்டோம் அல்லது மறக்க தூண்டப்பட்டுள்ளளோம்.அதாவது எம்மில் எம் இனத்தில் போராட்டத்தில் போராளிகளில் மீதான எமது நம்பிக்கையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்பயணத்தில் நம்பிக்கை மிக முக்கியமானது. தலைவர் மற்றும் தளபதிகளுக்கு நம்பிக்கை தளபதிகள் மீத போராளிகளுக்கு நம்பிக்கை போராளிகள் மற்றும் அனைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை.மக்கள் மீது ஒட்டு மொத்த போராளிகளுக்கும் நம்பிக்கை என்னும் ஒரு வட்த்தில் இது காணப்பட வேண்டும்.இல்லையேல் போராட்டம் முழுமையடையாது.

இன்று புலம் பெயர் எம்மில் பலரிடம் இந்த நம்பிக்கை தளர்வுற்றுள்ளதை காணலாம் இது திட்டமிட்ட சிறீலங்காவின் நடவடிக்கைகள் மற்றும் பரப்புரைகள் என்பனவற்றின் விழைவுகள் என்பது மறுக்க முடியாதது.புலம் பெயர் நம்மில் பலர் அதாவது 90 வீதமானவர்கள் அன்றும் சரி இன்றும் சரி எமது உயிரை பணயம் வைத்து உடைமைகளை அடவு வைத்து காடு கடந்து பல நாடு கடந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் புகலிடம் தருவார்கள் என்னும் நம்பிக்கையில் புலம் பெயர்ந்து வந்துள்ளவர்கள்.அந்த நம்பிக்கையின் அறுவடையை இன்று அனுபவித்துக் கொண்டுள்ளவர்கள்.இவ்வாறு ஒரு இனம் தெரியாத் தைரியத்துடனும் கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலையிலும் இங்கு வந்த நாங்கள் இன்று தாயகத்தினை நம்ப போராளிகளை நம்ப போராட்டத்தினை நம்ப ஏன் தயங்குகின்றோம் என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது.சமாதானம் பேசும் போது நம்பிநோம் யுத்தத்தின் ஆரம்பத்திலும் நம்பினோம் கிளிநொச்சி வீழும் வரை நம்பினோம் தற்போது சற்று துவள்கின்றோம் காரணம் பல கூறப்படலாம். ஆனால் தன்நம்பிக்கை அதாவது எமது பேராட்டத்துக்கு நாம் உதவுவோம் இறுதிவரை நாம் கைகொடுப்போம் முடியுமான வரை உதவுவோம் என்னும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் எவரும் எதையும் சாட்டை செய்யது தமது காரியங்களில் கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள் அதாவது தாயக சுதந்திரத்தினையும் சுய நிர்ணய உரிமையையும் நிலைநாட்ட அதை உலகிற்கு புரியவைக்க புரிந்துணர்வுடன் அவர்கள் கடமையாற்றிக் கொண்டுள்ளார்கள்.இதன் ஊடாக அவர்கள் தமிழ் சமூகத்துக்கே நன்மை செய்கின்றார்கள் இது மட்டுமல்ல மொத்த துன்பமும் சூழ்ந்து நிற்க தாயகத்தில் எம்மவர்கள் களமாடுபவர் களமாட பின்களத்தில் நிற்பவர் நிற்க சாவிலும் நாம் வாழ்வோம் என் தமது வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள்.அதாவது இடுக்கண்ணுக்கு அஞ்சாது நிற்கின்றார்கள்.முயற்சியே கண்ணாக கொண்டு நிற்கின்றார்கள்..இதை வள்ளுவர் குறள்களில் கூறுகின்றார்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர். அதாவது துன்பத்தை கண்டு அஞ்சாதவர்கள் துன்பங்களுக்கே துன்பத்தை கொடுப்பர் ஏன்று 2000 வருடங்களுக்கு முன்னர் வள்ளுவர் கூறிச் சென்றிருக்கின்றார்.எனவே நாமும் அவர்களுடன் கை கோர்ப்போம் அவர்களை ஊக்கப்படுத்துவோம்.துன்பத்தில் இருந்து மீண்டு அவர்கள் துன்பற்களுக்கு துன்பம் கொடுக்க ஒரு நாள் ஏற்படுத்திக் கொள்ள உழைப்போம்உலகில் அநீதிகளும் அநியாயங்களும் என்றும் வென்று வந்தால் இன்று உலகம் இருக்காது.இவற்றிக்கு அமைய நாம் தொடர்ந்து தாயகத்திற்கு கை கொடுத்து விடுதலையின் அறுவடைக்கு உதவ வேண்டும்.இடையில் கைவிட்டு அவர்களை தவிக்க விடாது தொடர்வோம் எம் பணியை வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. அதாவதுஒரு செயலை அரைகுறையாக விட்டவரை உலகம் கைவிடும். எனவே ஒரு செயலை செய்யும் போது அச் செயலை தொடர்ந்து செய்யாது தவிர்த்தலை தவிர்த்து அதில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.இதனை புரிந்து நேற்று வரை நாம் தாயக விடுதலைக்கு ஆற்றியது என்ன என்பதை நாமே உணர்ந்து இன்னும் பல மடங்கில் நாம் துணை புரிந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும். தமிழீழம் உருவாகும்.


பாமினி


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue