கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
கடைநிலை மாறுமா ?
மது கொடுக்கும் மயக்கத்தால்
மதியிழக்கும் மாக்களெல்லாம்
நிதியிழப்பார் , மன நிம் -
-மதியிழப்பார் ,
குடல் கெட்டு , உடல் கெட்டு
உயிரிழப்பார் .குடும்பத்தார்
கதியிழப்பார் ,
மங்கலப் பெண்டிரெல்லாம்
மங்களம் இழப்பார் ,
மண் கலமாய் உடைந்திடுவார்
மகன்கள் கல்வியிழப்பார் ,
மகள்கள் மணமிழப்பார் .
சந்தடி ஏதுமின்றி
சந்ததியே மறைந்துவிடும்.
இரக்கமின்றி அழிக்கும்
அரக்கன் என்பதனால்தான்
ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘
என்றழைத்தாரோ .
‘குடி குடி கெடுக்கும் ‘ என்று
பொடி எழுத்தில் எழுதிவிட்டு
மடிப்பணத்தை எல்லாம்
நொடிபொழுதில் எடுத்திடும்
தடை செய்ய வேண்டிய அரசே
கடை விரித்து, காசு பார்க்க
மடைதிறந்த வெள்ளமென
மதுவை ஓடவிடும்
கடைநிலை மாறுமா ?
காலம் பதில் கூறுமா ?
சட்டமொன்றும் உதவாது
சாத்திரங்கள் உரைக்காது
சுய ஒழுக்கம் அன்றி வேறு
சூத்திரங்கள் இல்லை.
அவனியெங்கும்
பவனி வந்து
தரணியெங்கும்
பரணி பாடும்
மது ஒழிக்க வாரீர்.
மனது வைத்துப் பாரீர் .- அதன்
மகத்துவத்தைப் பாரீர்!.
nandru
ReplyDelete