Skip to main content

தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்


தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்

56manachinnam
 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல்
விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்
 கண்ணின் பார்வை தொலைநோக்கக் 56waterbubble
 காணும்  உலகம் விரிந்தோடத்
 தண்ணீர்  மீதின் காட்சிகள்போல்
 தளிர்ந்து  மனத்தில்சஞ்சரிக்க
 என்னுள்  வாழ்ந்து எழுச்சியுறும்
 இறந்த  கால நினைவுகளே !
பள்ளிப்  பருவ நாளங்கே !
பாடித்  திரியும் நண்பரங்கே !
சொல்ல இயலாச் சிரிப்பங்கே !
துயரம்  தாளா மனதங்கே !
செல்லம் கொடுக்கத்  தாயங்கே !
சிந்தை ஊக்கும் தந்தையங்கே !
 உள்ளம் என்னும் உலகினிலே
உலவித் திரியும் நினைவுகளே !
இன்ப துன்ப நினைவெல்லாம்
56bubbles
 இறந்த  காலமனச்சின்னம் !
 இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை
 எளிதாய்  முடிக்கவழிக்காட்டி !
 என்றும்  வாழ்வுப்பயணத்தில்
இணைந்துச்  செல்லும்வழித்தோழன் !
இன்று  செய்யும்செயல்கள்தான்
 இனிமேல்  மாறும் நினைவுகளாய் !
வாழ்க்கைப் பயணம் உள்ளவரை
வாழும் நினைவோ  பலகோடி !
 சூழும் நினைவில் தத்தளித்துச்
சுழன்று தவிக்கும் நம்மனது !
 வீழ்த்தும் துன்ப நினைவுகளும்
 விரும்பும் இன்ப நினைவுகளும்
ஆழ்த்தும் நம்மைக் கனவுலகில் !
ஆழ்ந்துப்  பார்த்தால் மாயுலகம் !
  thanika_samarasam01

- தணிகா சமரசம்  

- பிரான்சு கம்பன் மகளிரணி வலைப்பூ


அகரமுதல 56

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்