பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)
காட்சி –3
அங்கம் : கவிஞர், அன்பரசன்,
இடம் : கவிஞரது குடில்
நிலைமை :
(கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!
வீரிய நெஞ்சாம்! அன்பரசன்தனக்குத்தானே குடில் முன்னே!
மனக்குறையோடு உரைக்கின்றான்!)
அன்ப : காலம் உணர்ந்த கவிஞருக்கு
ஞாலப்பரிசு ஒரு குடிலோ;
வணக்கம் புலவரே! வணக்கம்!
மனநிறைவான வணக்கம்!
கவி : யாரது? ஓகோ! வா! வா! தம்பி
அன்ப : பார்த்து நாட்கள் ஆன தென?
கவி : பார்க்க வந்தீர்! நலந்தானே!
அன்ப : பார்க்க நலமே! நீவீர் நலமா?
கவி : நலமே! நலமே! உடலும் உள்ளமும்
வலிமையாய் உள்ளதால்! நலமே! நலமே!
அன்ப : நாடகம் பார்க்க அழைத்ததால்! என்னை
ஓடோடி வந்தேன்! உம் சொல் எண்ணி!
கவி : அறிவேன் ஆமாம்! குடிலின் வாசலில்
சிறிதே அமர்ந்து நாடகம் காண்போம்!
அன்ப : தெருவின் கோடியில் இருக்கும் நமக்கும்
உருவம் தெரியும் வகையினில் பெரிய
மேடை அமைத்தே உள்ளார்! இதனால்
பாடம் நமக்கும் தெளிவாய் கேட்கும்!
கவி : கட்டிலை வீட்டு வாசலில் போட்டே
செட்டாய் அமர்ந்தே நாமும் காண்போம்!
(காட்சி முடிவு)
(பாடும்)
Comments
Post a Comment