திருக்குறள் Thirukkural 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
அற்றே தவத்திற் குரு.
(குறள்எண்:261)
குறள் விளக்கம்
மு.வ : தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
சாலமன் பாப்பையா : பிறரால்
தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம்
செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன்
இலக்கணம்.
Thirukural » Aram
|
Comments
Post a Comment