திருக்குறள் Thirukkural 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
நண்ணாரும் உட்குமென் பீடு.
(குறள்எண்:1088)
குறள் விளக்கம்
மு.வ : போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
சாலமன் பாப்பையா : களத்தில்
முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம்,
அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.
Thirukural » Kamam
|
Comments
Post a Comment