பாம்பன் சுவாமிகளின் கொடை!
- Get link
- X
- Other Apps
தமிழ் - பக்தி இலக்கியத்திற்குப் பாம்பன் சுவாமிகளின் கொடை!
முருகப்பெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக
வழிபட்ட அருளாளர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் (1850-1929).
முருகனைக் கனவிலும் நனவிலும் பலமுறை கண்டு தரிசித்தவர். அகத்தியர்,
அருணகிரிநாதரை அடுத்து முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்ற மகா ஞானி பாம்பன்
சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் சீடரான "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.,
""வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன்'' என்று
போற்றிப் புகழ்ந்துள்ளார்.
பாம்பன் சுவாமிகள் இயல் தமிழிலும், இசைத் தமிழிலும் சிறந்து விளங்கியவர். தமிழ்பற்று மிக்கவர். தமிழ் பக்தி இலக்கியத்திற்கு இவர் வழங்கிய கொடை ஏராளம்...ஏராளம்... வடமொழியே கலவாத தூய தமிழில் "சேந்தன் செந்தமிழ்' என்ற நூலை இயற்றியுள்ளார். மக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் தமிழ்க்கொடையாக வழங்கியுள்ளார். இவர் இயற்றியவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சிந்தாந்த சாத்திரம், தோத்திரம் முதலியவைகளின் நுட்பங்களை விளக்குபவையாக உள்ளன.
திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் பலவற்றை இயற்றியுள்ளார். சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளையும் பாடுவதில் வித்தகர். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி, இரண்டரைக் கடிகைக்குள் "பஞ்சவிம் சதி அதிக சதிபங்கி'யை அருளினார். இவருடைய பாடல்கள் 20-க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திரசக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலிவும், காவியச் சுவையும் மிக்கவை. தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவத்துக்கும், சாத்திரத்துக்கும் தோத்திரத்துக்குமாக பல பாக்களை இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய "சண்முகக் கவசம்' மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கவசத்தைத் தொடர்ந்து ஓதியதன் மூலம், மயில் வாகனத்தில் வந்த முருகன் தரிசனம் கண்டு, அவன் அருளால் சுவாமிகளின் உடைந்த கால் எலும்புகள் ஒன்று சேர்ந்துள்ளன. அந்நாள் ஆண்டுதோறும் "மயூரவாக சேவன விழா'வாக மார்கழி மாதத்தில் திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் சமாதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் தமிழ்மொழிக்கு அளித்துள்ள கொடைகளாவன: உயிரெழுத்தில் (அ முதல் ஒü வரை) தொடங்கி, மெய்யெழுத்துகள் (க முதல் ன வரை) முடிய அமையப்பெற்ற சண்முகக் கவசம் முப்பது பாடல்கள், பஞ்சாமிர்தவர்ணம், திருவலங்கற்றிரட்டு, திருப்பா, சீவயாதனா வியாசம், அட்டாட்ட விக்கிரகலீலை, பத்து பிரபந்தம், பரிபூரணானந்த போதம், செக்கர்வேள் செம்மாப்பு, செக்கர்வேள் இறுமாப்பு, தகராலய ரகசியம், குமாரவேள் பதிற்றுப்பத்தந்தாதி, சேந்தன் செந்தமிழ், சித்திரக் கவிகள் (ஏகபாதம், மாலைமாற்று, எழுகூற்றிருக்கை, ரதபந்தம், மயூரபந்தம், கமலபந்தம், துவிதநாகபந்தம், சஸ்திர பந்தம், காதை கரப்பு, சதுரங்க பந்தம், கோமூத்திரி, நாற்கூற்றிருக்கை, சருப்பதோ பத்திரம், ஒற்றிலாச் சுழிகுளம் ஆகியவை), ஆனந்தக் களிப்பு, குமாரஸ்தவம், சமாதான சங்கீதம், திருநெல்வேலி கோயில் பதிகம், திருக்கயிலாய திருவிளையாடல், வேற்குழலி வேட்கை, சரவணப் பொய்கை திருவிளையாடல், பகைகடிதல் போன்றவை. இத்தகைய பக்திப் பனுவல்களின் மூலம் தமிழ் மொழிக்குப் பல வகையான பா வகைகளை வழங்கி பக்தி இலக்கியச் செழுமைக்கும் இலக்கண வளமைக்கும் ஏற்றம் தந்தவர். அவர் இயற்றிய சித்திரக் கவிகளில் ஒன்றிரண்டைக் காண்போம்:
கமலபந்தம்
வரவிதி திருவ வருதிபொ னரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.
இப்பாடலைப் பாடுவதால், தியான யோகமும், சிந்தை வலுவும் பெறுவதோடு, இ(ரு)தயம் தொடர்பான நோயும், பதற்றமும் நீங்கப் பெறலாம் என்று பாடலின் பயன் கூறப்பட்டுள்ளது.
மயூரபந்தம்
வரதந திபநக ரசுமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபுர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி.
இப்பாடலைப் பாடுவதால், வினைப்பகை விலகும், மந்திர, தந்திர, பில்லி சூனிய ஏவல் பிணி நீங்கப் பெறும் என்று பயன் கூறப்பட்டுள்ளது.
இரதபந்தம்
இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ
டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்
இப்பாடலைப் பாடுவதால், உண்டாகும் பயன்: வாகன விபத்துகள், விபத்துகள் பற்றிய பயம் தவிர்க்கவும், பயணத்தின் போது பாராயணம் செய்யவும் ஏற்றது.
இவ்வாறு பாம்பன் சுவாமிகள் தமிழ்மொழிக்கு வழங்கிய இலக்கிய - இலக்கணக் கொடையைத் தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது.
நேற்றும் இன்றும்: "தமிழ்ப் பொழிலான' பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் மயில்மீது காட்சிதந்த "மயூரவாக சேவன' விழா!

(எழுத்து 56; சித்தரம் -25)

(எழுத்து 100; சித்திரம் - 64)

Comments
Post a Comment