திருக்குறள் பொதுநூல்

திருக்குறள் பொதுநூல்

வடமொழியில் வழங்கும் நீதி நூல்களுக்கும் வள்ளுவர் நீதி நூலுக்கும் பெரிதும் வேற்றுமை காணப்படுகின்றது. வடமொழி நீதி நூல்கள் பெரும்பாலும் சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு, தண்டம் முதலிய துறைகளில் ஒரு சாதிக்கொரு நீதியாகவும், ஒரு குலத்துக்கொரு நீதியாகவும் அமைத்துக் கூறுகின்றன. அறங்கூறவையத் தலைவனான நீதியாளன், குற்றம் செய்தான் ஒருவனது குலத்தை அறிந்தே அதற்கேற்ற தண்டனை விதிக்க வேண்டும். ஒரு குற்றத்தை உயர்குலத்தானொருவன் செய்தால் எளிய தண்டனையும், தாழ்குலத்தானொருவன் செய்தால் கடிய தண்டனையும் விதிக்கப்பட்டிருத்தலை மனுநீதி முதலாய நீதி நூல்களிற் காணலாம். ஆனால், திருவள்ளுவர் நீதி நூலில் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற நடுநிலை வழுவாத பொதுநீதியே போற்றப்பட்டுள்ளது.
""வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி''!
டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின், "திருவள்ளுவர் நூல் நய'த்திலிருந்து..

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue