Thirukkural திருக்குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
ஆற்றாதார் இன்னா செயல்.
(குறள்எண்:894)
குறள் விளக்கம்
மு.வ : ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா : அறிவு,
செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர்
முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
Thirukural » Porul
|
Comments
Post a Comment