Thirukkural திருக்குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
வேண்டாது சாலப் படும்.
(குறள்எண்:1037)
குறள் விளக்கம்
மு.வ : ஒரு பலம் புழுதி கால்பலம்
ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில்
பயிர் செலுத்தி செழித்து விளையும்.
சாலமன் பாப்பையா :
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய
விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட
அந்தப் பயிர் அதிகம் விளையும்.
Thirukural » Porul
|
Comments
Post a Comment