Thirukkural திருக்குறள் 37
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.
- குறள்: 37, |
அதிகாரம் : அறன் வலியுறுத்தல் ,
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .
|
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப்
போல வாழ்க்கையில் வரும் இன்ப
துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத்
தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி
வாழ்வையே பெரும் சுமையாகக்
கருதுவார்கள்.
|
- கலைஞர் மு. கருணாநிதி
|
Comments
Post a Comment