Posts

Showing posts from December, 2012

Thirukkural திருக்குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். - குறள்: 30,    அதிகாரம் : நீத்தார் பெருமை , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் . அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural திருக்குறள் 400

குறள் அமுதம்     கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (குறள்எண்:400) குறள் விளக்கம்      மு.வ : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. சாலமன் பாப்பையா : கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.   English Version Thirukural » Porul          Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy. ( Kural No : 400 )   Kural Explanation: Learning is the true imperishable riches; all other things are not riches.  

Thirukkural திருக்குறள் 270

Image
திருக்குறள் இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்   (நல்லவர்களாகவும் நெறியோடும்) இல்லாதவர்கள் பெரும்பாலோராக இருக்கக் காரணம், (ஒழுக்கக் கட்டுப்பாடு களுடன் வாழ்வைத்) தவமாகக் கொள்வோர் சிலர், தவமாகக் கொள்ளாமல் (மனம்போனபடி) வாழ்பவர் பலர்.  திருக்குறள் (எண்: 270)  அதிகாரம்: தவம்  

திருக்குறள் Thirukkural 1312

புலவி நுணுக்கம் திருக்குறள் - Thirukkural    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. - (குறள் : 1312 ) காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

திருக்குறள் Thirukkural 1033

உழவு திருக்குறள் - Thirukkural    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.   - (குறள் : 1033 ) உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றோர் எல்லாரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

Thirukkural திருக்குறள் 145

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. - குறள்: 145, அதிகாரம் : பிறனில் விழையாமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் . எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural திருக்குறள் 242

குறள் அமுதம்       நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.   (குறள்எண்:242) குறள் விளக்கம்    மு.வ : நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். சாலமன் பாப்பையா : நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.     English Version   Thirukural » Aram           The law of ‘grace’ fulfil, by methods good due trial made,,, Though many systems you explore, this is your only aid. ( Kural No : 242 )   Kural Explanation: Stand) in the good pat...

திருக்குறள் Thirukkural 290

கள்ளாமை திருக்குறள் - Thirukkural    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. - (குறள் : 290 ) களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும்; களவு செய்யாமல் வாழ்வோருக்கு தேவருலக வாழ்வும் வாய்க்கத் தவறாது.

Thirukkural திருக்குறள் 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. - குறள்: 153 , அதிகாரம் : பொறையுடைமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் . வறுமையிலும் கொடிய வறுமை , வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural திருக்குறள் 96

குறள் அமுதம்     அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்   (குறள்எண்:96) குறள் விளக்கம்       மு.வ : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். English Version   Thirukural » Aram            Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow. ( Kural No : 96 )   Kural Explanation: If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will dimini...